Kalpana [Chinna Veedu Kalpana]

கல்பனா [சின்ன வீடு]

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவருடைய இளைய சகோதரிகளான ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோரும் திரைப்பட நடிகைகளாக இருந்து வருகிறார்கள்.

மலையாளத்தில் 1983-ஆம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் இயக்கத்தில்  ‘மஞ்ஞு’ என்ற படத்தில் இவர் அறிமுகம் ஆனார். அதற்கு முன் 1970-களிலேயே குழந்தை நட்சத்திரமாக ”விடருந்ந மொட்டுக்கள்” என்ற படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பாக்யராஜ் நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 1995-ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்றது.அதையடுத்து பம்மல் கே.சம்பந்தம் படத்தில் நடித்தார். மாதவனுடன் ‘டும் டும் டும்’ படத்தில் நடித்தார். சமீபத்தில் சிவ கார்த்திகேயனுடன் ‘காக்கிச் சட்டை’ படத்தில் நடித்திருந்தார். 

விசுவின் இயக்கத்தில் திருமதி ஒரு வெகுமதி, சிந்து நதிப்பூ, லூட்டி, வீட்டோட மாப்பிள்ளை, ஆளுக்கொரு ஆசை, இதயத்திருடன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

பழைய படங்களில் கதாநாயகியாக நடித்துவந்தாலும், வயதானவுடன் கதாநாயகர்களுக்கு அம்மா வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மா வேடத்தில் கல்பனா நடித்திருந்தார். தமிழில் அவருடைய நடிப்பில் வெளியான கடைசி படமாக ‘காக்கி சட்டை’ அமைந்தது. நகைச்சுவையுடன் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

இவரது பெற்றோர் வி.பி.நாயர்-விஜயலட்சுமி. இவ்விருவரும் நாடக நடிகர்களாக இருந்தனர். கல்பனா மலையாள இயக்குநர் அனில் குமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்கட்கு ஸ்ரீமயி [வயது 15] என்ற ஒரே மகள். 2012-ஆம் ஆண்டு கல்பனா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

1965-ஆம் ஆண்டு பிறந்த கல்பனாவுக்கு வயது 51. இவர் தெலுங்குப் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றிருந்தபோது 25.1.2016 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

தி இந்து தமிழ், தினத்தந்தி இதழ்களிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

“சதி லீலாவதி” [1995] படத்தில் கல்பனாKalpana-Sathi.Leelavathi 1995- Kalpana-Sathi.Leelavathi 1995-1

“சதி லீலாவதி” [1995] படத்தில் ஜானகி, ரா.சங்கரனுடன் கல்பனாKalpana-Janaki-Sathi.Leelavathi 1995- Kalpana-Ra.Sankaran-Sathi.Leelavathi 1995-

നടി കൽപ്പന അന്തരിച്ചു

Monday 25 January 2016 09:24 AM IST by സ്വന്തം ലേഖകൻ…

ഹൈദരാബാദ് ∙ പ്രശസ്ത സിനിമാ താരം കൽപ്പന അന്തരിച്ചു. ഹൈദരാബാദിൽ വച്ചാണ് മരണം. മുന്നൂറിലേറെ സിനിമകളിൽ അ…
മുന്നൂറിലേറെ സിനിമകളിൽ അഭിനയിച്ചിട്ടുണ്ട്. ഇന്നു പുലർച്ചെ ആശുപത്രിയിൽ എത്തിച്ചെങ്കിലും അതിനു മുൻപ് മരണം നടന്നിരുന്നുവെന്നാണ് ആശുപത്രി അധികൃതർ അറിയിച്ചത്. എന്താണ് മരണ കാരണം എന്ന് വ്യക്തമല്ല. ഹൈദരാബാദിലെ അപ്പോളോ ആശുപത്രിയിലാണ് മൃതദേഹം സൂക്ഷിച്ചിരിക്കുന്നത്….

ബാലതാരമായാണ് സിനിമയിൽ എത്തിയത്. നാടകപ്രവർത്തകരായ വി.പി.നായരുടെയും വിജയലക്ഷ്മിയുടേയും മകളാണ് കൽപ്പന. മികച്ച സഹനടിക്കുള്ള ദേശീയപുരസ്കാരം ലഭിച്ചിട്ടുണ്ട്. നടിമാരായ കലാരഞ്ജിനിയും ഉർവശിയും സഹോദരിമാരാണ്. എം.ടി.യുടെ മഞ്ഞ്, അരവിന്ദന്റെ പോക്കുവെയിൽ തുടങ്ങിയ സിനിമകളിൽ പതിമൂന്ന് വയസ്സുള്ളപ്പോൾ അഭിനയിച്ചു.

https://web.archive.org/web/20160125040602/http://www.manoramaonline.com/news/just-in/actress-kalpana-passed-away.html

Leave a comment