Kothamangalam Seenu

கொத்தமங்கலம் சீனு

முதல் சூப்பர் ஸ்ரார்கள் என்று கூறப்படும் பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜபாகவதர் போன்றோர் பாட்டாலா, நடிப்பாலா ரசிகர்களைக் கவர்ந்தார்கள் என்று கூறுவது கடினம். இவர்களைப் போலவே இவர்களது காலத்தில் இரண்டு விதங்களிலும் ரசிகர்களைக் கவர்ந்த இன்னொருவர் கொத்தமங்கலம் சீனு.

நாடக மேடை புகழ் பெற்று விளங்கிய காலத்தில் அதில் பயின்று திரைத்துறைக்கு வந்தவர் கொத்தமங்கலம் சீனு. 1935-ஆம் ஆண்டில் ‘சாரங்கதாரா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பாடல்களாலும், நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்துகொண்டார். சாரங்கதாராவைத் தொடர்ந்து, பட்டினத்தார், விப்ரநாராயணா, சுகுண சரஸா, மீரா பாய், படங்கள் கொத்தமங்கலம் சீனுவின் பெயரை வெளிச்சம் போட்டு காட்டின. 1939-ஆம் ஆண்டில் வெளிவந்த “சாந்தா சக்குபாய்” திரைப்படத்தில் கதாகாலட்சேபம் செய்பவராக கொத்தமங்கலம் சீனு நடித்துப் பாடிய பாடல்கள் பிரபலமானவை. சாந்தா சக்குபாய் படத்தைத் தொடர்ந்து 1940-ஆம் ஆண்டு வெளிவந்த “திருமங்கை ஆழ்வார்” படத்தில் திருமங்கை ஆழ்வாராக கதாநாயகனாக நடித்தார் கொத்தமங்கலம் சீனு. அதிலும் அவரது குரல் இனிமையாக இருந்ததனால் பாடல்கள் பிரபலமாயின. கனவுக்கன்னி ரி.ஆர்.ராஜகுமாரி கதாநாயகியாக நடித்த “கச்சதேவயானி” [1941] படத்தில் இவர் கதாநாயகனாக நடித்துப் பாடிய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்து கொண்டன. ”கச்சதேவயானி”யின் வெற்றியைத் தொடர்ந்து ரி.ஆர்.ராஜகுமாரியுடன் இணைந்து ”சூரியபுத்திரி” என்ற படத்திலும், 1942-இல் வெளிவந்த “கிருஷ்ணப்பிடாரன்” திரைப்படத்திலும் கொத்தமங்கலம் சீனுவின் பாடல்கள் வெற்றி பெற்றன.

வற்றாயிருப்பு என்ற ஊரைச் சார்ந்த சுப்பிரமணிய அய்யரின் மகானான சீனிவாசன் பின்னர் தான் வாழ்ந்த ‘கொத்தமங்கலம்’ என்ற ஊரோடு சேர்ந்து கொத்தமங்கலம் சீனுவாகப் பிரபலமானார். 1944-ஆம் ஆண்டு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் கொத்தமங்கலம் சுப்புவின் கதை, வசனம், பாடல்களுடன் வெளிவந்த ”தாசி அபரஞ்சி” என்ற திரைப்படம் பெரும் வெற்றிபெற்று கதாநாயகனாக நடித்த கொத்தமங்கலம் சீனுவுக்கு நல்ல புகழையும் பெற்றுத்தந்தது. 1946-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் வி.என்.ஜானகியுடன் சேர்ந்து நடித்த “சகடயோகம்” வெளிவந்தது. 1947-ஆம் ஆண்டு ”ஏகாம்பவாணன்” என்ற படத்தில் பிரபல பின்னணிப்பாடகி பி.ஏ.பெரிய நாயகியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 1947-ஆம் ஆண்டு ”பொன்னருவி”, ‘மகாத்மா உதாங்கர்”, ”துளசி ஜலந்தர்” போன்ற படங்களோடு திரைப்படங்களிலிருந்து விலகிய கொத்தமங்கலம் சீனு நினைக்கப்படவேண்டிய 91 வயது வரை வாழ்ந்து மறைந்த ஒரு மூத்த கலைஞர்.

நன்றி:- எஸ்பிஎஸ்.காம்.ஆஸ்திரேலியா மற்றும் திருமலை மூர்த்தி அவர்கள்.  

http://www.sbs.com.au/yourlanguage/content/nttippum-paattlum-ivrinnn-tnnnimuttirai?language=ta

Kothamangalam Seenu

சாந்த சக்குபாய்’ 1939 படத்தில் அஸ்வத்தம்மாவுடன் தாசரி என்ற கதாபாத்திரத்தில் கொத்தமங்கலம் சீனுKothamangalam Seenu as Dhasari-Santha Sakkubai 1939-Kothamangalam Seenu as Dhasari-Santha Sakkubai 1939-01Kothamangalam Seenu as Dhasari-Aswaththamma-Santha Sakkubai 1939-

 

2 comments on “Kothamangalam Seenu

Leave a comment