” Pasi ” Sathya

’பசி’ சத்யா

மேடை நாடக நடிகையாக இருந்தவர்.  சத்யா அறிமுகமான படம் ‘நேற்று இன்று நாளை’. இப்படம் வெளியானது 1974-இல்.  1979-ஆம் ஆண்டு ‘பசி’ என்ற படமே இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. ’பசி’ திரைப்படத்தின் நினைவைக் கொஞ்சமும் அழிக்க முடியாதபடி தன் பெயருடனேயே அது ஒட்டிக் கொண்டிருப்பதைப் பெருமையாகவே நினைக்கிறார், ‘பசி’ சத்யா. இந்தப் படத்தில் ‘செல்லமக்கா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இக்கதாபாத்திரம் வெகுவாகப் பேசப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகை என்ற விருதும் கிடைத்தது.

இவரது சொந்த ஊர் மதுரை. திருமணம் சென்னையைச் சேர்ந்தவருடன் நடைபெற்றது. ’அன்பே சிவம்’, ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘முந்தானை முடிச்சு’, தூங்காதே தம்பி தூங்காதே’, ’மகளிர் மட்டும்’, ’வீடு’, “படிக்காத பண்ணையார்”, ‘வீரன் வேலுத்தம்பி’, ‘காதலில் விழுந்தேன்’ போன்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். “அழகான ராட்சசி” என்று திரை வட்டாரத்தில் இவரை அழைப்பதுண்டு. இவரது நடிப்பை ரசித்து அனுபவித்த மூத்த நடிகை இப்பெயரை இவருக்குச் சூட்டினார். அம்முன்னணி நடிகை பி.பானுமதி ராமகிருஷ்ணா.

தற்போது இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கியிருக்கிறது. நடிகர் சங்கம் இவருக்கு “கலைச்செல்வம்” என்ற விருதை வழங்கியது.

வெளியிடப்பட்ட நேரம்:16:01 (04/10/2018)

“மாலையில் வெற்றி விழா… மதியம் ஷோபாவின் மரணச்செய்தி இடியா ஒலிச்சுது!” `பசி’ சத்யா

“`பசி’ படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா, 1980 மே 1-ம் தேதி மாலையில் நடக்கிறதா இருந்துச்சு. அன்றைக்கு மதியம் ஷோபா தற்கொலை செய்துகிட்டார். அந்த நிகழ்ச்சிக்குக் கிளம்ப இருந்தப்போ, ஷோபாவின் மறைவுச் செய்தி இடியாக ஒலிச்சது.”

மிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம் ஈர்த்தவர், `பசி’ சத்யா. திறமையான கலைஞராக இருந்தும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாதவர். தன் வாழ்க்கைப் பயணம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.p2_13447

“மதுரை என் பூர்வீகம். அம்மா, சங்கீத வித்வான். அப்பா, மத்திய அரசு ஊழியர். சினிமாவுக்கும் எனக்கும் வெகுதூரம். எதேச்சையா வாய்ப்பு கிடைச்சது. `பவளக்கொடி’ நாடகத்தின் மூலம் நடிப்புப் பயணம் ஆரம்பிச்சது. ஸ்கூல் படிச்சுக்கிட்டே பல நாடகங்களில் நடிச்சேன். பிறகு சென்னைக்கு வந்து நாடகங்களில் கவனம் செலுத்தினேன். 9 ம் வகுப்புக்குப் பிறகு படிக்கலை. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பெரிய நடிகர்களின் முன்னிலையில் பல நாடகங்களில் நடிச்சேன். அப்போ ஓரளவுக்குப் புகழுடன் இருந்தேன்” என்கிற சத்யா, 2,000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்.

“1970-களில் நாடகங்களுக்குத் தனி வரவேற்பு இருந்துச்சு. அதில் புகழ்பெற்றவங்க சினிமாவுக்குப் போனாங்க. ஹைட், வொயிட், வெயிட்னு சினிமாவில் பிரதானமா எதிர்பார்க்கப்படும் மூணு விஷயங்களிலும் நான் பின்தங்கியிருந்தேன். அதனால், பெரிசா சினிமா ஆசையில்லை. `முயலுக்கு மூணு கால்’ படத்தில் சைக்கிள் ஓட்டும் பெண் ரோலில் நடிக்க எந்த நடிகையும் முன்வரலை. அந்த கேரக்டர்படி, என்னைவிட வயசுல மூத்த மனோரமாவுக்கு அம்மாவா நடிச்சேன். நீண்ட காலத்துக்குப் பிறகு, `அண்ணாமலை’ சீரியலில், என்னைவிட வயதில் மூத்த சிவக்குமார் சாருக்குப் பாட்டியாக நடிச்சேன். என் கேரக்டர் பற்றிக் கவலைப்பட மாட்டேன். நடிப்பை மட்டும்தான் பார்ப்பேன். அதனால், எந்தக் கூச்சமும் பார்க்காமல் நடிச்சேன். `பசி’ மற்றும் `வீடு’ உள்ளிட்ட சில படங்கள் எனக்கு நல்ல அடையாளம் கொடுத்துச்சு. `வீடு’ படம், டம்மி செங்கற்கள் இல்லாமல் நிஜமாக ஒரு வீடு கட்டுற மாதிரிதான் எடுக்கப்பட்டது. அதில் நிஜ சித்தாளாகவே வாழ்ந்தேன்.
என் சினிமா பயணத்தில் ஒரு விஷயம் எப்போதும் மறக்கமுடியாது. `பசி’ படத்தில் நடிக்கும்போது, சினிமாவுக்குப் புதிதாக வந்த சின்ன நடிகையா இருந்ததால், பெரிய ஆர்ட்டிஸ்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பேன். அப்போ பெரிய புகழுடன் இருந்த ஷோபா, என் மேல் தனி அக்கறை காட்டினாங்க. தன் காரிலேயே என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. அவங்களோடு சேர்ந்து சாப்பிடுவேன். அந்தப் படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா, 1980 மே 1-ம் தேதி மாலையில் நடக்கிறதா இருந்துச்சு. அன்றைக்கு மதியம் ஷோபா தற்கொலை செய்துகிட்டார். அந்த நிகழ்ச்சிக்குக் கிளம்ப இருந்தப்போ, ஷோபாவின் மறைவுச் செய்தி இடியாக ஒலிச்சது. தனிப்பட்ட முறையில் பெரிய வலியையும் வேதனையையும் உண்டாக்கிச்சு. அன்றைய வெற்றி விழா நிகழ்வும் நடக்கலை. `பசி’ படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவங்களுக்குக் கிடைச்சது. அதையெல்லாம் அனுபவிக்காமல் 17 வயசுல இறந்துட்டது பெரிய சோகம். இப்போ வரை ஷோபாவை நினைச்சுட்டே இருக்கேன்” என்கிறவர் வார்த்தைகளில் வலி கூடுகிறது. p3_13278
“சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிடுச்சு. 250 படங்களில் நடிச்சுட்டேன். இன்னும் நிறைவு கிடைக்கலை. அதேநேரம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருப்பதால், எனக்குப் பெரிய வாய்ப்புகள் வரலையேனு வருத்தமும் இல்லை. என்னை நம்பிவரும் சினிமா, சீரியல்களை ஏத்துக்கறேன். நடிக்க ஆரம்பிச்ச காலத்திலிருந்து இப்போது வரை, எனக்குள்ளும் கவலைகள் நிறைய இருந்திருக்கு. அதை எப்போதும் வெளிக்காட்டிக்கிறதில்லை. வயசாகிட்டே இருக்குதே. 2015-ம் ஆண்டு, திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டுச்சு. ஒட்டுமொத்தக் குடும்பமும் தவிச்சுட்டாங்க. என் உடல்நிலை மேலே கூடுதல் அக்கறை செலுத்த ஆரம்பிச்சேன். என் கணவர் மத்திய அரசு ஊழியரா பணியாற்றி ஓய்வுபெற்றவர். இரண்டு பிள்ளைகள். நல்ல வேலையில் இருக்காங்க. நடிப்புதான் என் வாழ்க்கைனு மாறிடுச்சு. வருமானத்துக்கான தேவை இருக்கவே செய்யுது. ஆனாலும், அதைப் பற்றி பெரிசா கவலைப்படாமல் அமைதியா நடிச்சுட்டிருக்கேன்” எனப் புன்னகைக்கிறார், `பசி’ சத்யா.
https://cinema.vikatan.com/tamil-cinema/interview/138797-actress-pasi-sathya-talks-about-her-acting-career-and-actress-shobha-memories.html இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.
நன்றி:- சினிமா விகடன்

“பசி’’ 1979 படத்தில் ஷோபாவுடன் சத்யாpasi-sathya-pasi-1979-1pasi-sathya-pasi-1979pasi-sathya-shobha-pasi-1979pasi-sathya-shobha-pasi-1979-1

“பசி’’ 1979 படத்தில் விஜயனுடன் சத்யாpasi-sathya-vijayan-pasi-1979

“படிக்காத பண்ணையார்” [1985] படத்தில் சத்யா

Pasi Sathya-Padikkatha Pannaiyar 1985- Pasi Sathya-Padikkatha Pannaiyar 1985-1 Pasi Sathya-Padikkatha Pannaiyar 1985-2 Pasi Sathya-Padikkatha Pannaiyar 1985-3 Pasi Sathya-Padikkatha Pannaiyar 1985-4 Pasi Sathya-Periyar Rajavelu-Padikkatha Pannaiyar 1985- (2) Pasi Sathya-Periyar Rajavelu-Padikkatha Pannaiyar 1985- Pasi Sathya Dt 12-08-14- Pasi Sathya Dt 12-08-14-1 Pasi Sathya Dt 12-08-14-2

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் நளினியுடன் சத்யா Pasi Sathya-Samayapurathale Satchi 1985-Pasi Sathya-Samayapurathale Satchi 1985-2Pasi Sathya-Samayapurathale Satchi 1985-1Pasi Sathya-Nalini-Samayapurathale Satchi 1985-Pasi Sathya-Nalini-Samayapurathale Satchi 1985-1

“குடும்பம்” 1984 படத்தில் சத்யாவுடன் கல்லாபெட்டி சிங்காரம் Pasi Sathya-Kallappetti-Kudumbam 1984-

“வீட்டுக்கு ஒரு கண்ணகி” 1981 படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் பசி சத்யா pasi-sathya-veettuku-oru-kannagi-1981-1pasi-sathya-veettuku-oru-kannagi-1981pasi-sathya-ygm-veettuku-oru-kannagi-1984pasi-sathya-ygm-veettuku-oru-kannagi-1984-1

“ஆயிரம் முத்தங்கள்” 1982 படத்தில் லூஸ் மோகன் ராதாவுடன் பசி சத்யாpasi-sathya-radha-ayiram-muthangal-1982-1pasi-sathya-loose-mohan-ayiram-muthangal-1982pasi-sathya-radha-ayiram-muthangal-1982pasi-sathya-loose-mohan-radha-ayiram-muthangal-1982loose-mohan-pasi-sathya-radha-ayiram-muthangal-1982

“சீறி வரும் காளை” 2001 படத்தில் ராமராஜனுடன் பசி சத்யா pasi-sathya-seerivarum-kaalai-2001-2pasi-sathya-ramarajan-seerivarum-kaalai-2001pasi-sathya-seerivarum-kaalai-2001pasi-sathya-seerivarum-kaalai-2001-1pasi-sathya-seerivarum-kaalai-2001-1apasi-sathya-ramarajan-seerivarum-kaalai-2001

”நான் பாடும் பாடல்” 1984 படத்தில் சத்யாPasi Sathya-Naan Paadum Paadal 1984-

”எங்கள் தாய்க்குலமே வருக” 1986 படத்தில் ஜீவிதாவுடன் சத்யாPasi Sathya-Jeevitha-Engal Thaikulame Varuga 1986-1Pasi Sathya-Jeevitha-Engal Thaikulame Varuga 1986-Pasi Sathya-Engal Thaikulame Varuga 1986-

”காதோடுதான் நான் பேசுவேன்” 1981 படத்தில் என்னத்தே கன்னையா, ஐ.எஸ்.ஆருடன் பசி சத்யா

Pasi Sathya-Kathoduthan Naan Pesuven 1981-Pasi Sathya-Kathoduthan Naan Pesuven 1981-1Pasi Sathya-Ennathe-Kathoduthan Naan Pesuven 1981-Pasi Sathya-Ennathe-ISR-Kathoduthan Naan Pesuven 1981-

”அம்பிகை நேரில் வந்தாள்’’ 1984 படத்தில் மோகனுடன் சத்யாPasi Sathya-Ambigai Neril Vanthaal 1984-Pasi Sathya-Mohan-Ambigai Neril Vanthaal 1984-

“கரிமேடு கரிவாயன்” 1985 படத்தில் விஜயகாந்துடன் பசி சத்யாPasi Sathya-Vijayakanth-Karimedu Karuvayan 1985-

“கரிமேடு கரிவாயன்” 1985 படத்தில் வினுசக்கரவர்த்தியுடன் பசி சத்யாPasi Sathya-Vinu Chakravarthi-Karimedu Karuvayan 1985-

“கரிமேடு கரிவாயன்” 1985 படத்தில் நளினி, எம்.என்.நம்பியாருடன் பசி சத்யாPasi Sathya-MN.Nambiar-Nalini-Karimedu Karuvayan 1985-

”மகளிர் மட்டும்” 1994 படத்தில் நாசர், ரோஹிணி, ரேவதியுடன் ’பசி’ சத்யாPasi Sathya-Magalir Mattum 1994-

50

Pasi Sathya-Nassar -Magalir Mattum 1994-Pasi Sathya-Nassar -Magalir Mattum 1994-1 in Pasi Sathya-Rohini-Revathi-Magalir Mattum 1994-

Pasi Sathya and SS.Chandran in “Chinnanchirusugal” 1982 Tamil Movie

Pasi Sathya-SS.Chandran-Chinnanchirusugal 1982-

‘வைகறை பூக்கள்’ 1995 படத்தில் ’பசி’ சத்யாPasi Sathya-Vaigarai Pookal 1995-0155

’ஒண்ணும் தெரியாத பாப்பா’ 1991 படத்தில் சிந்துவுடன் பசி சத்யா

Pasi Sathya-Onnum Theriyatha Papa 1991-01Pasi Sathya-Onnum Theriyatha Papa 1991-Pasi Sathya-Sindhu -Onnum Theriyatha Paapa 1991-

’ஒண்ணும் தெரியாத பாப்பா’ 1991 படத்தில்  சந்தானபாரதியுடன் பசி சத்யாPasi Sathya-Santhanabharathi-Onnum Theriyatha Papa 1991-

’மே மாதம்’ 1994 படத்தில் பசி சத்யாPasi SATHYA-May Maadham 1994-

’முயலுக்கு மூணு கால்’ 1979 படத்தில் வி.கே.ராமசாமியுடன் பசி சத்யாPasi Sathya-VKR-Muyalukku Moonu Kaalu 1979-

’மீனாட்சித் திருவிளையாடல்’ 1989 படத்தில் மனோரமாவுடன் பசி சத்யாPasi Sathya-Manorama-Meenakshi Thiruvilayadal 1989-Pasi Sathya-Manorama-Meenakshi Thiruvilayadal 1989-01

2 comments on “” Pasi ” Sathya

  1. பதிவு செய்த நேரம்:2013-12-11 16:00:48

    முதல் திரைப்படத்தின் நினைவை கொஞ்சமும் அழிக்க முடியாதபடி தன் பெயருடனேயே அது ஒட்டிக் கொண்டிருப்பதை பெருமையாகவே நினைக்கிறார், ‘பசி’ சத்யா. தன் கலைப் பணியில் தன் உழைப்புக்கேற்ற வருமானம் பெற்று தன் குடும்பத்துப் பசி போக்க அருள் புரிவது இறைவன்தான் என்பது மறுக்க முடியாத உண்மை என்கிறார். வயிற்றுப் பசி என்பது தினந்தோறும் ஒருவருக்கு ஏற்படும் பிணிதான் என்று சொல்லும் இவர், ஆன்மிகப் பசி மட்டும் உள்ளத்தையும் உடலையும் மனதையும் உருக்குலைக்காமல் இருக்கும் அதிசயத்தில் மூழ்கிப் போகிறார்.

    ‘‘நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு எனும் வாக்கியத்தை நான் மனமாற நம்பறேன். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு முருகன்னா ரொம்ப பிடிக்கும். முருகன் கோயில்களை தரிசனம் பண்ணிக்கிட்டே இருப்பேன். மலேசியாவில உள்ள பத்துமலை முருகனையும் லண்டன் முருகனையும் தரிசிக்க வேண்டும் என்று தீராத ஆவல். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டிருந்தேன். திடீரென குடும்ப நண்பர் ஒருவர் மூலம் அந்த இரு கோயில்களையும் தரிசிச்சது என் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம். இமயம் முதல் குமரி வரை அனேகமா எல்லா ஆலயங்களையும் தரிசனம் பண்ணியிருக்கேன்.

    காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பெற்ற விஸ்வநாதர் படம், ஸ்படிக மாலை, ருத்ராட்சமாலை, என் அம்மா பூஜையறையில் வைத்து வழிபட்ட அஷ்டலட்சுமி படம், நடிகை நளினி தந்த நேபாள சாளக்ராமம் போன்றவை என் பூஜையறை பொக்கிஷங்கள். என் பூஜையறையில சுருட்டப்பள்ளி தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, திருப்பதி பெருமாள், ஆலங்குடி பெருமாள், சத்யநாராயணர், கிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, திருப்பட்டூர் பிரம்மா போன்றோர் அருள் புரியறாங்க. என் கணவர் திருமண ஆண்டுவிழாவிற்கு பரிசாகத் தந்த வெள்ளி வெங்கடாஜலபதியும் இங்கே அமர்ந்து என் கவலைகளை ஆற்றுகிறார். காசியில் 10 நாட்கள் தங்கியிருந்தபோது சத்யா என்பது வெறும் உடல்.

    அதில் உறையும் ஆத்மா வேறு என்பதை அனுபவபூர்வமா உணர்ந்தேன். அந்த 10 நாட்களிலும் நான் நானாகவே இல்லை என்பது அனுபவபூர்வமான உண்மை. திருப்பதி எனக்கு மிகவும் பிடித்த தலம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அங்கே நான் போய்விடுவேன். பெருமாளுக்கு எத்தனை உற்சவங்கள் உண்டோ அத்தனையையும் செய்து, மனம் நெகிழ்ந்திருக்கேன். மலையேறி நடந்து வந்து விரதம் இருந்து வரிசையில் நின்று பொறுமையாக அந்த கோவிந்தனை தரிசிக்கும் ஏழைகளின் பக்திக்கு ஈடு இணை ஏதும் இல்லை. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் முழுவதும் அவருக்கு என் வீட்டில் விசேஷ பூஜைகள் செய்வது என் வழக்கம். நவராத்திரியையும் விமரிசையாகக் கொண்டாடுவேன். வரலட்சுமி விரதத்தை விடாமல் கடைப்பிடித்து வருகிறேன்.

    ‘‘கடவுளிடம் நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் தான்னு வேண்டிக்க மாட்டேன். வயசானா நோய்கள் வரத்தான் செய்யும். செல்வமும் வளரும், தேயும். அது அவரவர் கர்மவினை. அதைத் தாங்கிக்கற சக்தியைத் தான்னுதான் பிரார்த்தனை செய்வேன். என் கலைப் பணி சிறப்பாக அமையணும், பேரும் புகழும் நிலைக்கணும்னும் வேண்டிப்பேன். பிறருக்கு உதவி செய்யற மனம் வேணுங்கற பிரார்த்தனை கட்டாயம் உண்டு. எனக்கு ஆன்மிகம் பிடிக்கும்; டாம்பீகம் பிடிக்காது. நல்லாசி வழங்கும் பெரியவர்களை வணங்கி அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதே இறையருள்தான் என்பது என்னோட அசைக்க முடியாத நம்பிக்கை.’’

    நன்றி தினகரன் நாள் இதழ் – பசி சத்யா அவர்களின் ஆன்மீக பேட்டி

  2. தற்போதைய தெனிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியில் நீடிக்கின்றார்.தேர்தலிலும் போட்டி இடுகிறார்

Leave a comment