Sundaramoorthy [Actor & Make-up Man]

சுந்தரமூர்த்தி [நடிகர் மற்றும் ஒப்பனைக் கலைஞர்]

இவர் எடுத்த எடுப்பில் எதிர்பாராத விபத்தாக திரையுலகிற்கு வந்தவரல்ல. இவரது அப்பா ஏ.வி.ராமசுந்தரம் பீம்சிங், தேவர் குழுவில் ஆஸ்தான ஒப்பனையாளராக இருந்தவர். ஜே.பி.சந்திரபாபுவின் தனிப்பட்ட ஒப்பனையாளராகவும் பணியாற்றியவர்.

‘சாது மிரண்டால்’ படத்தில் அப்பாவுக்கு உதவியாளராக திரையுலகிற்கு வந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது அப்பாவுடன் இவர் பணியாற்றிய இரண்டாவது படம் ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’. அதில் ஏகப்பட்ட நடிகர்கள். இதனால் இவருக்கு தனித்து இயங்கும் வாய்ப்பு அந்தப் படத்தில் தானாகவே அமைந்தது. ‘பட்டத்து ராணி’ படத்தில் நான் பணிபுரிந்தபோது, ஜெமினிகணேசனுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் இவரை ‘டச்-அப்’ பையனாக சேர்த்துக் கொண்டார். அவருக்கு ஒப்பனையாளராக இருந்து வந்த பீதாம்பரம் வெளியிட படப்பிடிப்புகளுக்கு போகமாட்டார். இதனால் வெளியிட படப்பிடிப்புகளில் இவரே ஆஸ்தான ஒப்பனையாளராக ஆகிவிட்டார்.

ஜெமினிகணேசன் நடித்த ‘தாமரை நெஞ்சம்’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வெள்ளி விழா’ ஆகிய படங்களின் மூலம் இயக்குநர் கே.பாலசந்தருடன் நெருக்கமான அறிமுகம் கிடைத்தது. அவரது படங்களுக்கு ஒப்பனையாளராகப் பணியாற்ற ஆரம்ப்பித்தார்.

சாந்தி நிலையம் படம் தான் இவர் பணியாற்றிய முதல் வண்ணப்படம்.

1968-ஆம் ஆண்டு வெளிவந்த “தாமரை நெஞ்சம்” என்ற தமிழ்ப் படத்தில் சுந்தரமூர்த்தி என்ற இளைஞனை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நடிக்க வைத்தார். அதே படத்தைக் கன்னடத்திலும் எடுத்தார் கே.பாலசந்தர். அப்பொழுது தமிழில் நடித்த அதே வேடத்தில் சுந்தரமூர்த்தியைக் கன்னடத்திலும் நடிக்க வைத்தார். நான் நடிகனாக அறிமுகப்படுத்தி நடிப்புத் துறையில் பிரபலமாகாத ஒரே ஆள் நீதான் என்று சிரித்துக் கொண்டே கூறுவாராம் கே.பாலசந்தர். அந்த நடிகர் வேறு யாருமல்ல சரிதா, தியாகராஜன், முரளி போன்ற பலருக்கு ஒப்பனைக் கலைஞராக இருந்த சுந்தரமூர்த்தி தான்.

இவர் பாலசந்தரின் இயக்கத்தில் உருவாகும் வேறு படங்களிலும், கவிதாலயாவின் தயாரிப்பில் உருவாகும் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். அவ்வாறு அவர் நடித்த படங்களுள் ஒன்று “புதியவன்”. மற்றொன்று “சிந்து பைரவி”.

ரஜினிகாந்திற்கு ‘அபூர்வராகங்கள்’ படத்தில் முதன் முதலாக ஒப்பனை செய்தவர் இவர்தான். ரஜினிகாந்தின் நூறாவது படத்தில் அவரை ‘ஸ்ரீ ராகவேந்திரராக’ மாற்றியவரும் இதே சுந்தரமூர்த்திதான். ரஜனிகாந்திற்கு சுமார் 30 படங்களில் இவர் ஒப்பனையாளராகப் பணியாற்றியுள்ளார். அதே அளவுக்கு கமலஹாசனுக்கும் போட்டுள்ளார்.

அக்டோபர் 1984-”பொம்மை” திரை இதழிலிருந்தும், 2.9.2009 ‘துக்ளக்’ இதழிலிருந்தும்  விவரங்கள் எடுக்கப்பட்டது.

Sundaramoorthi -Makeup Man -Bommai Oct 1984(2) Sundarmoorthy - Make-up Man 2.9.2009 Thuklag-RE

“புதியவன்” [1984] படத்தில் சுந்தரமூர்த்தி  Sundara Moorthy-Puthiyavan 1984-Sundara Moorthy-Puthiyavan 1984-1Sundara Moorthy-Puthiyavan 1984-2Sundara Moorthy-Puthiyavan 1984-3Sundara Moorthy-Puthiyavan 1984-4

‘நான் அவனில்லை’ 1974 படத்தில் பின்னால் லட்சுமியுடன் சுந்தரமூர்த்திSundaramoorthi-Lakshmi-Naan Avanillai 1974-

5 comments on “Sundaramoorthy [Actor & Make-up Man]

  1. படங்களில் நடித்திருப்பது அறிவேன். தொடர்களில் நடித்திருந்தது நினைவில் இல்லை. தகவலுக்கு நன்றி.

  2. Mr Ferdinand LACOUR இவ்வலைப்பூவில் எழுதப்படும் ஒவ்வொரு கட்டுரையின் கீழும் அது எங்கேயிருந்து கிடைக்கப்பெற்றது, அல்லது எங்கேயிருந்து தேடி எடுக்கப்பட்டது என்பது குறித்து அந்தக் கலைஞரின் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் அல்லது மையப் பகுதியில் தவறாமல் சுட்டிக்காட்டி வருகிறேன். இதை நீங்கள் இதுவரையிலும் பார்த்ததில்லையா? பார்க்காமலிருந்தால் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

Leave a comment