Leo Prabhu

லியோ பிரபு

இவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். “பாலன் கே.நாயர் ‘ஈ நாடு’ படத்தில் ஏற்று நடித்த வேடத்தில் தமிழில் “இது எங்க நாடு” படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இவர். இவரது நடிப்பைப் பார்த்து வியந்த இயக்குநர் இராம நாராயணன் இவர் புதுமுகமாக இருந்த பின்னரும் “இது எங்க நாடு” படத்தின் டைட்டிலில் இவர் பெயருக்காக மட்டுமே. ஒரு தனி கார்டு போட்டார்.

இவர் பள்ளி நாட்களிலிருந்தே சினிமா, நாடகம் இரண்டிலும் பெரிய பிடிப்பு இவருக்கு ஏற்பட்டுவிட்டது. பழம்பெரும் நடிகர் சகஸ்ரநாமம் நடத்தி வந்த “சேவா ஸ்டேஜ்” குழுவில் சேர்ந்து, நடிப்புக் கலையைப் பயின்றார். “லிட்டில் ஸ்டேஜ்” நாடகக்குழு, அப்போது ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, டைப்பிஸ்ட் கோபு போன்றவர்களை நடிக்க வைத்து, நாடகங்களை நடத்திக்கொண்டிருந்தது.

லியோ பிரபு இந்த நாடகக்குழுவில் சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார். பின்னர் ரி.எஸ்.சேஷாத்திரியின் சாந்தி நிகேதனில் சேர்ந்து, ‘சத்திய சோதனை’ நாடகத்தில் நடித்தார்.

மேடையில் அவரது நடிப்புத் திறமையைக் கண்ட ஒய்.ஜி.பார்த்தசாரதி தமது யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழுவில் வந்து சேர்ந்துகொள்ளும்படி இவரை அழைத்தார்.

நாடகங்களில் நடித்து வந்ததோடு, கூடவே நாடகங்களை எழுதித் தயாரித்து நடிக்க வேண்டுமென்ற ஆர்வமும் இவரிடம் தலையெடுக்க ஆரம்பித்தது. அதற்கு வசதியாக, தனியே நாடகக்குழுவை ஆரம்பித்து நடத்தினால்தான் முடியும் என்ற முடிவுக்கு வந்த லியோ பிரபு, “ஸ்டேஜ் இமேஜ்” என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார்.

புரட்சியும், புதுமையும் கொண்ட தனது நாடகங்களை இவர் இதன் மூலம் அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். பதின் மூன்று நாடகங்களைச் சொந்தமாக எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கவும் செய்தியிருக்கிறார் லியோ பிரபு.

“நான் மகான் அல்ல” போன்ற பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஏப்ரல் 1983 பொம்மை இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

தமிழ்த் திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மற்றொரு மரணம்! பழம்பெரும் நடிகர் லியோ பிரபு காலமானார்.!

Dec 30, 2023, 7:53 PM IST

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் இன்று மாலை காலமானார். இந்த தகவல் திரையுலகைச் சேர்ந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில், சிறந்த எழுத்தாளர், மேடை நாடக ஆசிரியர், இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என்று பன்முகத் திறமை படைத்தவர் லியோ பிரபு. 1933 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில்பிறந்த இவர், பள்ளி நாட்களிலே சினிமா மற்றும் நாடகம் போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். பழம் பெரும் நடிகர் சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜ் நாடக குழுவில் சேர்ந்து, நடிப்புக் கலையைப் பயின்றார்.

லிட்டில் ஸ்டேஜ் நாடகக் குழு, அப்போது ஏவி.எம். ராஜன், புஷ்பலதா, டைப்பிஸ்ட் கோபு போன்றவர்களை நடிக்க வைத்து நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தது. லியோ பிரபு இந்த நாடகக் குழுக்களில் சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார். பின்னர் சேஷாத்ரியின் சாந்தி நிகேதனில் சேர்ந்து சத்திய சோதனை நாடகத்தில் நடித்தார். மேடையில் அவரது நடிப்புட்த் திறமையைக் கண்ட ஒய் ஜி பார்த்தசாரதி, தமது யுனைடெட் அமைச்சூர் ஆர்டிஸ்ட் குழுவில் வந்து சேர்ந்து கொள்ளும்படி இவரை அழைத்தார்.

நாடகங்களில் நடித்து வந்ததோடு கூடவே நாடகங்களை எழுதித் தயாரித்து, நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இவரிடம் உருவாக ஆரம்பித்தது. அதற்கு வசதியாக தனியே நாடகக்குழுவை ஆரம்பித்து நடத்தினால் தான் முடியும் என்ற எண்ணத்திற்கு வந்த லியோ பிரபு, ஸ்டேஜ் இமேஜ் என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார். புரட்சியும் புதுமையும் கொண்ட தனது நாடகங்களை அதன் மூலம் அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். 13 நாடகங்களை சொந்தமாக எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கவும் செய்திருக்கிறார் லியோ பிரபு.

மேலும் நான் மகான் அல்ல, பருவ காலம், புதிர், பேர் சொல்லும் பிள்ளை, இரண்டும் இரண்டும் அஞ்சு, இது எங்க நாடு, அண்ணே அண்ணே போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் பாலன் கே நாயரின், ஈநாடு படத்தில் ஏற்று நடித்த வேடத்தில், தமிழில் இது எங்க நாடு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவரது நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் ராமநாராயணன், அப்போது லியோ பிரபு புது முகமாக இருந்த போதிலும்  இது எங்க நாடு படத்தின் டைட்டில் கார்டில் இவர் பெயருக்காக மட்டுமே தனியாக ஒரு டைட்டில் கார்டை  திரையில் காண்பித்தாராம்.

தமிழ் நாடகத் துறைக்கு இவரின் பங்களிப்பானது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர் மிகச்சிறந்த நடிகர், எழுத்தாளர் மற்றும் பல்துறை நாடக கலைஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மேலும் 1990 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு தமிழக அரசின் மிக உயர்ந்த மாநில விருதான கலை மாமணி விருதை வழங்கியது. மேடை நாடகம், எழுத்து, திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி திரு லியோ பிரபு அவர்கள் சிறந்த ஊடகவியலாளராகவும், புனைவு எழுத்தாளராகவும், புதினங்கள் மற்றும் நாவல் ஆசிரியர் ஆகவும் அறியப்பட்டவர். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும் இயக்கவும் செய்திருக்கிறார்.

வயது மூப்பு காரணமாக தன்னுடைய பிள்ளைகளுடன் மதுரையில் வசித்து வந்த லியோ பிரபு, தன்னுடைய  90-ஆவது வயதில், இன்று மாலை 6 மணி அளவில் காலமானார். இவரது மரணம் திரையுலகைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவரது இறுதி சடங்குகள் 31.12.2023 நாளை காலை 9 மணிக்கு மேல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் மகான் அல்ல [1984] படத்தில் லியோ பிரபு

Leo Prabhu-Naan Mahan Alla 1984- Leo Prabhu-Naan Mahan Alla 1984-1 Leo Prabhu-Naan Mahan Alla 1984-2

நான் மகான் அல்ல [1984] படத்தில் ரஜினிகாந்துடன்  லியோ பிரபுLeo Prabhu-Rajanikanth-Naan Mahan Alla 1984- Leo Prabhu-Rajanikanth-Naan Mahan Alla 1984-1Untitled-2-aUntitled-3a

’பருவ காலம்’ 1974 படத்தில் சுதர்ஸனுடன் லியோ பிரபு

Leo Prabhu-Paruva Kaaalam 1974-Leo Prabhu-Paruva Kaaalam 1974-01Leo Prabhu-Sudharsan-Paruva Kaaalam 1974-

’பருவ காலம்’ 1974 படத்தில் ஸ்ரீகாந்த், சுதர்ஸனுடன் லியோ பிரபுLeo Prabhu-Sudharsan-Sreekanth -Paruva Kaaalam 1974-

’பருவ காலம்’ 1974 படத்தில் லியோ பிரபுவுடன் ஸ்ரீகாந்த், சுதர்சன் Sudharsan-Sreekanth -Paruva Kaaalam 1974-

’பருவ காலம்’ 1974 படத்தில் லியோ பிரபுவுடன் சசிகுமார்,  பிரமீளா, ரோஜா ரமணி, சுதர்சன்Sudharsan-Sasikumar.A-Prameela-Roja Ramani-Paruva Kaaalam 1974-

Leave a comment