“Friend” Ramasamy

ஃபிரண்ட் ராமசாமி

பிரண்ட் என்பது அவரது பெயரோடு ஒட்டிக்கொண்ட ஒரு கதாபாத்திரம். தமிழில் ஒரு வார்த்தையான “Friend” மற்றும் “Front” என்று ஒலித்து மாறுபட்ட இரு வார்த்தைகளுக்குத் தாயாகிறது. ஒரு வகையில் இந்த இரண்டுமே இவருக்குப் பொருந்துகிறது. திரையுலகில் அனைவரின் மதிப்பையும் பெற்ற வகையில் “Friend” என்ற வார்த்தையும் திரைப்பட நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் முன்னணிப் பட்டியலில் இருந்த வகையில் “Front” என்ற வார்த்தையும் இவருக்குப் பொருத்தமாகவே இருக்கின்றன.

ரி.கே.எஸ். சகோதரர்கள் 1949-ஆம் ஆண்டு சென்னையில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தினர். இதில் “மனிதன்” என்ற நாடகத்தில் ராமசாமி “பிரண்ட்” “Friend” என்ற பாத்திரத்தில் எல்லோருக்கும் நல்ல ”நண்பராக” வந்து சக்கைப்போடு போட்டார். இந்த நாடகத்தின் வசூலில் கம்பெனி திக்கும்காடிவிட்டது. இந்த பாத்திரத்தைத் துவைத்தெடுத்துவிட்ட கே.ராமசாமியை எல்லோரும் “பிரண்ட்” என்றே அழைக்க ஆரம்பிக்க இந்த பெயரே இவருடன் இணைந்து பிரிக்க முடியாத நண்பனாயிற்று.

கேரளாவில் கொச்சி சமஸ்தானத்தில் மட்டஞ்சேரிக்கும் எர்ணாகுளத்திற்கும் இடையே அமைந்துள்ள  கொடுங்கல்லூர். இங்கு ஓரளவு வசதியாக விவசாயம் செய்து வந்த கிருஷ்ணன் மேனனுக்கும் கல்யாணி அம்மாளுக்கும் நான்காவது மகனாக பிறந்தவர் தான் ஃபிரண்ட் ராமசாமி. 10.4.1914 அன்று பிறந்தார். 9-ஆவது வயதில் சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்தார். ஒன்றரை ஆண்டு காலம் சர்க்கஸில் இருந்தார். பின்னர் 1925-இல் ரி.கே.எஸ் நாடகக்குழுவில் சேர்ந்தார். இவர் நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது அங்கே கலைவாணர், எம்.ஆர்.சுவாமிநாதன், சுந்தரய்யர் போன்றவர்கள் நகைச்சுவை நடிகர்களாக இருந்தனர். இவரது முதல் படம் 1935-இல் வெளிவந்த மேனகா.

இவரது மனைவி பெயர் காமாட்சி. படத்தயாரிப்பாளராகவும் இருந்து 1960-ஆம் ஆண்டு “ தங்கம் மனசு தங்கம் “ என்ற படத்தையும் தயாரித்துள்ளார். பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்தது இப்படம். இவருக்கு காஞ்சனா, கனகா, ரத்னா என்ற 3 பெண்கள். 23.11.1971 அன்று தனது 57-ஆவது வயதில் காலமானார்.

இவர் நடித்த படங்களின் பட்டியல்:-

வாழ்க்கை [1949], ஓர் இரவு [1951], ஔவையார் [1953], ஆசை மகன் [1953], பெண்ணின் பெருமை [1956], கண் திறந்தது [1959], மாதர் குல மாணிக்கம் [1956], ராஜ ராஜன் [1957], அடுத்த வீட்டுப் பெண் [1960], கல்லும் கனியாகும் [1968], ”போன மச்சான் திரும்பி வந்தான்” [1954]

நன்றி:- “ நிழல் “ இரு மாத இதழ்.

“Friend” Ramasamy- The best Comedian, Charactor Actor in Thamizh and Malayalam Movies.

ImageImage

1951-இல் வெளிவந்த ஓர் இரவு படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் பிரண்ட் ராமசாமி

Friend Ramasamy-TS.Balaiah-Ore Iravu 1951 Friend Ramasamy-TS.Balaiah-Ore Iravu 1951-1

கண் திறந்தது(1959) படத்தில் தனித்தும் ஏ.கருணாநிதி மற்றும் ராமனாதனுடன்A.Karunanidhi-Ramanathan-Friend Ramasamy-Kan Thiranthathu - 1959Friend Ramasamy-Kan Thiranthathu - 1959

ரகசியம் [1969] மலையாளப்படத்தில் ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramasamy-Rahasyam 1969-1

1949-இல் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய ஏவி.எம்மின் ‘வாழ்க்கை’ படத்தில் தனித்தும் பி.ஏ.சுப்பையாபிள்ளையுடனும் வீராச்சாமி என்ற கதாபாத்திரத்தில் ஃபிரண்ட் ராமசாமி

Friend K.Ramasamy As Veerasamy-VAAZHKAI-1Friend K.Ramasamy As Veerasamy-VAAZHKAI-3Friend K.Ramasamy As Veerasamy-PA.SUBBAIAPILLAI AS VELAYUDHAN PILLAI- VAAZHKAI-Friend K.Ramasamy As Veerasamy-PA.SUBBAIAPILLAI AS VELAYUDHAN PILLAI- VAAZHKAI-1

‘ஔவையார்’ [1953] படத்தில் ஃபிரண்ட் ராமசாமி புலவர் என்ற கதாபாத்திரத்தில்   Friend Ramasami as Pulavar-Avvaiyar 1953-

‘ஔவையார்’ [1953] படத்தில் ஃபிரண்ட் ராமசாமியுடன் டி.பாலசுப்பிரமணியம்    Friend Ramasami as Pulavar-D.Balasubramoniyam as Paanar-Avvaiyar 1953-Friend Ramasami as Pulavar-D.Balasubramoniyam as Paanar-Avvaiyar 1953-1

‘ஔவையார்’ [1953] படத்தில் ஃபிரண்ட் ராமசாமியுடன் பேபி சச்சுவுடன் டி.பாலசுப்பிரமணியம்    Friend Ramasami as Pulavar-D.Balasubramoniyam as Paanar-Baby Sachu as Avvai-Avvaiyar 1953-

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் ஃபிரண்ட் ராமசாமி Friend Ramasami-Mathar Kula Manickam 1956-Friend Ramasami-Mathar Kula Manickam 1956-1Friend Ramasami-Mathar Kula Manickam 1956-2Friend Ramasami-Mathar Kula Manickam 1956-3

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் கணபதி பட்டுடன் ஃபிரண்ட் ராமசாமி Ganapathi Pat-Friend Ramasami-Mathar Kula Manickam 1956-

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் கே.ஆர்.செல்லத்துடன் ஃபிரண்ட் ராமசாமி Friend Ramasami-KR.Chellam-Mathar Kula Manickam 1956-Friend Ramasami-KR.Chellam-Mathar Kula Manickam 1956-1Friend Ramasami-KR.Chellam-Mathar Kula Manickam 1956-2Friend Ramasami-KR.Chellam-Mathar Kula Manickam 1956-3

“மாதர் குல மாணிக்கம்” [1956] படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் ஃபிரண்ட் ராமசாமி Friend Ramasami-KA.Thangavelu-Mathar Kula Manickam 1956-

”அடுத்த வீட்டுப் பெண் [1960] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramasamy-Sattampillai KN.Vengkataraman-Adutha Veetu Penn 1960- Friend Ramasamy-Sattampillai KN.Vengkataraman-Adutha Veetu Penn 1960-1

”அடுத்த வீட்டுப் பெண் [1960] படத்தில் கே.ஏ.தங்கவேலு, ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramasamy-TRR-Thangavelu-Adutha Veetu Penn 1960- Friend Ramasamy-TRR-Thangavelu-Adutha Veetu Penn 1960-1 Friend Ramasamy-TRR-Thangavelu-Adutha Veetu Penn 1960-2

”அடுத்த வீட்டுப் பெண் [1960] படத்தில் ஏ.கருணாநிதி மற்றும் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramasamy-A.Karunanidhi-SV.Vengkataraman-Adutha Veetu Penn 1960- Friend Ramasamy-A.Karunanidhi-SV.Vengkataraman-Adutha Veetu Penn 1960-1

”அடுத்த வீட்டுப் பெண் [1960] படத்தில் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனுடன் ஏ.கருணாநிதிகே.ஏ.தங்கவேலு, ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ஃபிரண்ட் ராமசாமிSattampillai KN.Vengkataraman-Friend Ramasamy-A.Karunanidhi-KA.Thangavelu-Adutha Veetu Penn 1960-Sattampillai KN.Vengkataraman-Friend Ramasamy-A.Karunanidhi-KA.Thangavelu-TRR-Adutha Veetu Penn 1960-

”ஜீவித யாத்ரா”[1965] படத்தில் ஃபிரண்ட் ராமசாமி Friend Ramaswamy-Jeevitha Yathra 1965-Friend Ramaswamy-Jeevitha Yathra 1965-2Friend Ramaswamy-Jeevitha Yathra 1965-1

”ஜீவித யாத்ரா”[1965] படத்தில் அன்றைய சோபாவுடன் ஃபிரண்ட் ராமசாமி Friend Ramaswamy-Shoba [Old]-Jeevitha Yathra 1965-

”ஜீவித யாத்ரா”[1965] படத்தில் பகதூருடன் ஃபிரண்ட் ராமசாமி Friend Ramaswamy as Menon-Bahadoor-Jeevitha Yathra 1965-

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் ஃபிரண்ட் ராமசாமி, கே.ஏ.தங்கவேலுவுடன் Friend Ramasamy- KA.Thangavelu-Gomathiyin Kathalan 1955-Friend Ramasamy- KA.Thangavelu-Gomathiyin Kathalan 1955-1

”கோமதியின் காதலன்” [1955] படத்தில் ஃபிரண்ட் ராமசாமி, கே.ஏ.தங்கவேலுவுடன் டி.பாலசுப்பிரமணியம்Friend Ramasamy- KA.Thangavelu-D.Balasubramaniyam-Gomathiyin Kathalan 1955-D.Balasubramaniam-KA.Thangavelu-Friend Ramasamy-Gomathiyin Kathalan 1955-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் ஃபிரண்ட் ராமசாமி Friend Ramaswamy-Pennin Perumai 1956-Friend Ramaswamy-Pennin Perumai 1956-1

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் சிவாஜிகணேசனுடன் ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramaswamy-Sivaji-Pennin Perumai 1956-1

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் எம்.என்.ராஜத்துடன் ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramaswamy-MN.Rajam-Pennin Perumai 1956-

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் ரி.என்.சிவதாணுவுடன்  ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramaswamy-TN.Sivathanu-Pennin Perumai 1956-Friend Ramaswamy-TN.Sivathanu-Pennin Perumai 1956-1

“பெண்ணின் பெருமை” [1956] படத்தில் சிவாஜிகணேசன், பி.எஸ்.ஞானத்துடன் ஃபிரண்ட் ராமசாமி

Friend Ramaswamy-PS.Gnanam-Sivaji-Pennin Perumai 1956-1Friend Ramaswamy-PS.Gnanam-Sivaji-Pennin Perumai 1956-

“ராஜ ராஜன்” 1957 படத்தில் பிரண்ட் ராமசாமி.Friend Ramaswamy-Raja Rajan 1957-2Friend Ramaswamy-Raja Rajan 1957-1Friend Ramaswamy-Raja Rajan 1957-

“ராஜ ராஜன்” 1957 படத்தில் எஸ்.எம்.திருப்பதிசாமியுடன் பிரண்ட் ராமசாமி.Friend Ramaswamy-SM.Thiruppathisami-Raja Rajan 1957-

“ராஜ ராஜன்” 1957 படத்தில் எம்.ஜி.ஆர், எஸ்.எம்.திருப்பதிசாமியுடன் பிரண்ட் ராமசாமி.

Friend Ramaswamy-MGR-Raja Rajan 1957-Friend Ramaswamy-SM.Thiruppathisami-MGR-Raja Rajan 1957-57

 “கல்லும் கனியாகும்” 1968 படத்தில் நாகேஷுடன் பிரண்ட் ராமசாமியும் உசிலைமணீயும்

Friend Ramasamy-Nagesh-Usilai Moni-Kallum Kaniyagum 1968-

 “கல்லும் கனியாகும்” 1968 படத்தில் சச்சு , டைப்பிஸ்ட் கோபியுடன் பிரண்ட் ராமசாமி

Friend Ramasamy-Sachu-Typist Gopu-Kallum Kaniyagum 1968-

“கல்லும் கனியாகும்” 1968 படத்தில் சச்சு , டைப்பிஸ்ட் கோபியுடன் பிரண்ட் ராமசாமி

Friend Ramasamy-Sachu-Typist Gopu-Kallum Kaniyagum 1968-1Friend Ramasamy-Sachu-Typist Gopu-Kallum Kaniyagum 1968-261

”போன மச்சான் திரும்பி வந்தான்” [1954] படத்தில் கே.எஸ்.அங்கமுத்துவுடன் பிரண்ட் ராமசாமிFriend Ramasamy-Pona Machaan Thirumbi Vanthaan 1954-1Friend Ramasamy-Pona Machaan Thirumbi Vanthaan 1954-Friend Ramasamy-K.S.Angamuthu-Pona Machaan Thirumbi Vanthaan 1954-Friend Ramasamy-K.S.Angamuthu-Pona Machaan Thirumbi Vanthaan 1954-165

”ஆசை மகன்” 1953 படத்தில் ஜெமினி கணேசனுடன் ஃபிரண்ட் ராமசாமிFriend Ramasamy-Aasai Magan 1953-3AFriend Ramasamy-Aasai Magan 1953-2Friend Ramasamy-Aasai Magan 1953-1Friend Ramasamy-Gemini-Aasai Magan 1953-1”ஆசை மகன்” 1953 படத்தில் பங்கஜவல்லியுடன் ஃபிரண்ட் ராமசாமிFriend Ramasamy-Pankajavalli-Aasai Magan 1953-Friend Ramasamy-Pankajavalli-Aasai Magan 1953-171

’லங்காதனம்’ 1971 மலையாளப் படத்தில் கதீஜாவுடன் ஃபிரண்ட் ராமசாமிFriend Ramaswamy-Lankadahanam 1971-Friend Ramaswamy-Lankadahanam 1971-01

’லங்காதனம்’ 1971 மலையாளப் படத்தில் அடூர்பாசியுடன் ஃபிரண்ட் ராமசாமிFriend Ramaswamy-Adoor Bhasi-Lankadahanam 1971-

’லங்காதனம்’ 1971 மலையாளப் படத்தில் பிரேம் நசீர், அடூர்பாசி, ஜோஸ் பிரகாஷ், ராகினியுடன் ஃபிரண்ட் ராமசாமிFriend Ramaswamy-Prem Nazir-Adoor Bhasi-Jose Prakash-Ragini-Lankadahanam 1971-

’லங்காதனம்’ 1971 மலையாளப் படத்தில் விஜயஸ்ரீ, அடூர்பாசி, உம்மர், கதீஜாவுடன் ஃபிரண்ட் ராமசாமிFriend Ramaswamy-Vijayasree-Adoor Bhasi-Khadeeja-Ummer-Lankadahanam 1971-76

பிரண்ட் ராமசாமி குறித்த முழு விவரங்கள் அறிய

Nizhal Nov-Dec 2008

7 comments on ““Friend” Ramasamy

  1. Inspite of malayalam was his mother tonque a better ‘uccharippu in tamil’ than tamil actors. Another one of the great comedians of tamil films unsung hero.

  2. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மகாலிங்கம் அவர்களே!

  3. 1955ல் வெளிவந்த கணவனே கண்கண்ட தெய்வம் படத்திலும் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் வந்தார். நல்ல நடிகர்

    • நிச்சயமாக. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

Leave a comment