Master Prabhagar

மாஸ்டர் பிரபாகர்.ஏராளமான தமிழ், தெலுங்குப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பாமா விஜயம், திருமலை-தென்குமரி, மூன்றெழுத்து, வா ராஜா வா, அன்பு வழி, வாலிப விருந்து, எங்க பாப்பா, சாது மிரண்டால், எங்க மாமா, சித்தி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வா ராஜா வா திரைப்படத்தின் கதாநாயகனே இவர் தான். இப்படம் தெலுங்கில் பால ராஜு கதா என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இவர் மதுரையைச் சார்ந்தவர். தற்போது இவர் ஸ்வஸ்த்தி ஜெராக்ஸ் என்னும் கடையை சென்னை, கோடம்பாக்கத்தில் நடத்தி வருகிறார்.

சென்னையிலேயே கலர் ஜெராக்ஸ் நிறுவனத்தை முதன் முதலில் அமைத்தவர் பிரபாகர். இவர் மொத்தம் 172 படங்களில் நடித்துள்ளார். சௌராஸ்டிரா வகுப்பைச் சார்ந்த நடிகர்களுள் இவரும் ஒருவர். இவரது குடும்பத்தார் குஜராத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவரது தங்கை பேபி சுமதி. இவர் திருமணத்திற்குப்பின் கனடாவில் வசித்து வருகிறார். சுமதிக்கு இரு குழந்தைகள். இவரது தந்தை ஒரு புகைப்பட நிபுணர். இவருடன் சேர்த்து இவரது குடும்பத்தில் மொத்தம் பதினொரு குழந்தைகள். தண்டாயுதபாணி பிலிம்ஸ் ‘நேர்வழி’ என்ற படத்தில் குதிரை சவாரி காட்சியில் பிரம்மாதமாக நடித்து தேவரிடமே பாராட்டு பெற்றவர். திருவருட்செல்வர் படத்தில் சிவாஜிகணேசன் அவர்களுக்கு இணையாக நடித்து நடிகர் திலகத்திடமே சபாஷ் பெற்றவர்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

இரு கோடுகள் [1969]  தங்கைக்காக [1972], கண்ணா நலமா [1972], அன்னமிட்ட கை [1972], அனாதை ஆனந்தன் [1970], ராமன் எத்தனை ராமனடி [1970], குருதட்சணை [1969], வாலிப விருந்து [1967], ’பிராயச்சித்தம்’ [1974], சிசீந்திரி சிட்டிபாபு [1971] [தெலுங்கு]

மூன்றெழுத்து(1968) படத்தில் 

Image

 வா ராஜா வா படத்தில்  மாஸ்டர் பிரபாகரன்

 MASTER PRABAKARAN-VAA RAJA VAA-1969 MASTER PRABHAKARAN-VAA RAJA VAA-1969 MASTER PRABHAKARAN-VAA RAJA VAA-1969-1 MASTER PRABHAKARAN-VAA RAJA VAA-1969-2 MASTER PRABHAKARAN-VAA RAJA VAA-1969-3

வா ராஜா வா படத்தில் அமரர் சுருளிராஜன் அவர்களுடன் மாஸ்டர் பிரபாகரன்SURULI-VAA RAJA VAA-1969

பாலராஜு கதா தெலுங்குப் படத்திலிருந்துMaster Prabhakar-Balaraju Katha Master Prabhakar-Balaraju Katha-1 Master Prabhakar-Balaraju Katha-2

அன்பு வழி படத்தில் பண்டரிபாய், வி.எஸ்.இராகவன் மற்றும் சுருளிராஜனுடன் மாஸ்ரர் பிரபாகர்MASTER PRABHAGAR-ANBU VAZHI-1 MASTER PRABHAGAR-PANDARIBHAI-ANBU VAZHI- MASTER PRABHAGAR-PANDARIBHAI-VS.RAGHAVAN-ANBU VAZHI- MASTER PRABHAGAR-SURULI-ANBU VAZHI-

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் பிரபாகர்

Master Prabhagar-Sadhu Mirandal 1966-

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் குட்டி பத்மினியுடன் மாஸ்டர் பிரபாகர்Kutty Padmini-Prabhagar-Sadhu Mirandal 1966-1 Kutty Padmini-Prabhagar-Sadhu Mirandal 1966-

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் ரி.ஆர்.ராமச்சதிரன் மற்றும் எஸ்.ஆர்.ஜானகியுடன் மாஸ்ரர்  பிரபாகர் Kutty Padmini-Prabhagar-TRR-SR.Janaki-Sadhu Mirandal 1966-

1966-இல் வெளிவந்த “சாது மிரண்டால்” படத்தில் பிரபாகர் கல்பனா, குட்டி பத்மினியுடன்Kalpana-Kutty Padmini-Prabhagar-Sadhu Mirandal 1966-1

திருமலை-தென்குமரி [1970] படத்தில் மாஸ்ரர் பிரபாகருடன் காந்திமதிMaster Prabhagar-Kanthimathi-Thirumalai Thenkumari 1970-2Master Prabhagar-Kanthimathi-Thirumalai Thenkumari 1970-1Master Prabhagar-Kanthimathi-Thirumalai Thenkumari 1970-

”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில் மாஸ்டர் பிரபாகர்  Master Prabhagar-B.S-Thamarai Nenjam 1968-2Master Prabhagar-Thamarai Nenjam 1968-

”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில் மாஸ்டர் பிரபாகருடன் சரோஜாதேவிMaster Prabhagar-B.S-Thamarai Nenjam 1968-1Master Prabhagar-B.S-Thamarai Nenjam 1968-

”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில் பேபி ராஜி, ஜெய கௌசல்யாவுடன் மாஸ்டர் பிரபாகர்

Jaya Gowsalya-Baby Raji-Master Prabhagar-Thamarai Nenjam 1968-

”தாமரை நெஞ்சம்” [1968] படத்தில் சரோஜாதேவி,  ஜெய கௌசல்யா, பேபி ராஜியுடன் மாஸ்டர் பிரபாகர்

Jaya Gowsalya-Baby Raji-Master Prabhagar-B.Sarojadevi-Thamarai Nenjam 1968-

“நான்கு சுவர்கள்” [1971] படத்தில்  மாஸ்டர் பிரபாகருடன் மாஸ்டர் ஆதி நாராயணன்  Master ADI NARAYANAN-PRABHAGAR-Nangu Suvargal 1971-

தங்கைக்காக [1972] படத்தில் பேபி சுமதியுடன் பிரபாகர்Master Prabhagar-Thangaikkaga 1970-Master Prabhagar-Thangaikkaga 1970-1Baby Sumathi-Prabhagar-Thangaikkaga 1970-

“கண்ணா நலமா” [1972] படத்தில் மாஸ்டர் பிரபாகருடன் மாஸ்டர் ராமு Master Prabhakar-Kanna Nalama 1972-1Master Prabhakar-Kanna Nalama 1972-Master Prabhakar-Ramu-Kanna Nalama 1972-

“கண்ணா நலமா” [1972] படத்தில் மாஸ்டர் பிரபாகருடன் குமாரி பத்மினி, மாஸ்டர் ராமு Master Prabhakar-Kumari Padmini-Ramu-Kanna Nalama 1972-

‘அன்னமிட்ட கை’ 1972 படத்தில் பண்டரிபாயுடன் மாஸ்டர் பிரபாகர்Master Prabhagar-Annamitta Kai 1972-Master Prabhagar-Pandaribai-Annamitta Kai 1972-Master Prabhagar-Pandaribai-Muthaiah-Annamitta Kai 1972-

“இரு கோடுகள்’’ 1969 படத்தில் மாஸ்டர் பிரபாகர்Master Prabhagar-Iru Kodugal 1969-Master Prabhagar-Iru Kodugal 1969-1Master Prabhagar-Iru Kodugal 1969-2Master Prabhagar-Iru Kodugal 1969-3

“இரு கோடுகள்’’ 1969 படத்தில்  மாஸ்டர் பிரபாகர்  சௌகார் ஜானகியுடன் மாஸ்டர் ஆதி நாராயணன்  

Master Adinarayanan-Prabhagar-Sowkar Janaki-Iru Kodugal 1969-

“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் பிரபாகருடன் மாஸ்டர் சேகர்master-prabhagar-anathai-ananthan-1970master-sekar-master-prabhagar-anathai-ananthan-1970master-prabhagar-master-sekar-anathai-ananthan-1970master-prabhagar-master-sekar-anathai-ananthan-1970-1

“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் பிரபாகருடன் ஆர்.பக்கிரிசாமி, மாஸ்டர் சேகர்

r-pakkirisamy-master-prabhagar-master-sekar-anathai-ananthan-1970

“அனாதை ஆனந்தன்” 1970 படத்தில் பிரபாகருடன் ஜெயலலிதா, ஏவி.எம்.ராஜன், மாஸ்டர் சேகர்

master-prabhagar-master-sekar-avm-rajan-jayalalitha-anathai-ananthan-197050

 “கல்லும் கனியாகும்” 1968 படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன் மாஸ்டர் பிரபாகர்

Master Prabhakar-Kallum Kaniyagum 1968-Master Prabhakar-TMS-Kallum Kaniyagum 1968-1Master Prabhakar-TMS-Kallum Kaniyagum 1968-53

மாஸ்டர் பிரபாகரன், படம்:- சீதா [1967]

Master Prabhagar-Seetha 1967-54

ராமன் எத்தனை ராமனடி 1970 படத்தில் நடிகர் திலகத்துடன் மாஸ்டர் பிரபாகர்Master Prabhagar-Raman Ethanai Ramanadi 1970-Master Prabhagar-Sivaji-Raman Ethanai Ramanadi 1970-

ராமன் எத்தனை ராமனடி 1970 படத்தில் கே.ஆர்.விஜயா, நடிகர் திலகத்துடன் மாஸ்டர் பிரபாகர்Master Prabhagar-Sivaji-KR.Vijaya-Raman Ethanai Ramanadi 1970-

ராமன் எத்தனை ராமனடி 1970 படத்தில் எஸ்.என்.லட்சுமி, நடிகர் திலகத்துடன் மாஸ்டர் பிரபாகர்Master Prabhagar-Sivaji-SN.Lakshmi-Raman Ethanai Ramanadi 1970-

ராமன் எத்தனை ராமனடி 1970 படத்தில் சதன், நடிகர் திலகத்துடன் மாஸ்டர் பிரபாகர்Master Prabhagar-Sadhan-Sivaji-Raman Ethanai Ramanadi 1970-

‘குருதட்சணை’ 1969 படத்தில் மாஸ்டர் பிரபாகருடன் சிவாஜிகணேசன்Master Prabhagar-Guru Dhatchanai 1969-Master Prabhagar-Sivaji-Guru Dhatchanai 1969-01Master Prabhagar-Sivaji-Guru Dhatchanai 1969-

‘குருதட்சணை’ 1969 படத்தில் மாஸ்டர் பிரபாகருடன் பேபி சுமதிBaby Sumathi-Master Prabhagar-Guru Dhatchanai 1969-01

‘குருதட்சணை’ 1969 படத்தில்  சிவாஜிகணேசன், பக்கோடா காதருடன் மாஸ்டர் பிரபாகர்Master Prabhagar-Sivaji-Pakkoda-Guru Dhatchanai 1969-64

‘வாலிப விருந்து’ 1967 படத்தில் மாஸ்டர் பிரபாகர்Master Prabhagar-Valiba Virundhu 1967-01Master Prabhagar-Valiba Virundhu 1967-66

’முத்துச்சிப்பி’ 1966 படத்தில் மாஸ்டர் பிரபாகர்Master Prabhagar-Muthuchippi 1966-01Master Prabhagar-Muthuchippi 1966-Master Prabhagar-Baby Vijaya-Muthuchippi 1966-69

’பிராயச்சித்தம்’ 1974 படத்தில் ஷேஷாத்திரியுடன் பிரபாகர்Master Prabhakar-Prayaschitham 1974-Master Prabhakar-Prayaschitham 1974-01TS.Seshathri-Master Prabhakar-Prayaschitham 1974-

’பிராயச்சித்தம்’ 1974 படத்தில் பேபி ராணியுடன் பிரபாகர்Baby Rani-Master Prabhakar-Prayaschitham 1974-73

‘சிஷீந்திரி சிட்டிபாபு’ 1971 தெலுங்குப் படத்தில் மாஸ்டர் பிரபாகருடன் ஷோபன் பாபு, நாகேஷ்Master Prabhagar-Sisindri Chittibabu 1971-01Master Prabhagar-Sisindri Chittibabu 1971-Master Prabhagar-Sobhan Babu-Sisindri Chittibabu 1971-Master Prabhagar-CK.Nagesh-Sisindri Chittibabu 1971-77

10 comments on “Master Prabhagar

  1. மாஸ்டர் பிரபாகரன் வாகன உதிரி பாகங்கள் கடையை நடத்தி வருகிறார் என்பது தவறான செய்தி. இவர் தற்போது தி.நகரில் வண்ணப் பிரதி எடுக்கும் (Digital Colour Printing Center) நிலையத்தை நடத்தி வருகிறார்.

    • நண்பரே இதற்கு முன் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி மாஸ்டர் பிரபாகரன் வாகன உதிரி பாகங்கள் தொடர்பான ஸ்தாபனம் நடத்தி வருகிறார் என்பதன் படி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாங்கள் புதியதாக ஒரு தகவலைப் பதிவு செய்துள்ளீர்கள். அதற்கான ஆதாரங்கள் மேலும் உங்களிடமிருந்து கிடைக்குமாயின் அதுவும் இணைத்துக் கொள்ளப்படும். முதன் முதலாக இவ்வலைப்பூவில் இணைந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்கவேண்டுமென்பது எமது அவா. நன்றி.

  2. இணைப்புக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி கணபதி கிருஷ்ணன். நீண்ட நாட்களாக இவ்வலைப்பூ பக்கமே காணவில்லையே ஏன்.?

  3. மாஸ்டர் பிரபாகர்
    – R.P.ராஜநாயஹம்

    தேவாலயம் என்பது படப்பெயர். எஸ்.எஸ்.ஆர், கே.ஆர் விஜயா நடித்தார்கள். இது கே.ஆர்.விஜயாவுக்கு முதல் படம் என்று சொன்னால் ’ச்சீ தப்பு..கற்பகம் தான்’ என்பீர்கள். ஆனால் இந்தப்படத்தில் தான் கே.ஆர்.விஜயா முதலில் நடித்தார். படம் முடிக்கப்படவுமில்லை. அதனால் ரிலீஸ் ஆகவுமில்லை. இந்த தேவாலயம் தான் மாஸ்டர் பிரபாகருக்கும் முதல் படம்.
    All great performances have a ridiculous beginning.

    மதுரை சௌராஷ்ட்ரா குடும்பம். பதினொரு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் நான்காவதாக பிறந்தவர்.

    கே.எஸ்.ஜி இயக்கி பத்மினி நடித்த ’சித்தி’ தான் பிரபாகருக்கு முதல் படம். ’சித்தி கொடுமை பண்ணுவா’ என்று சுந்தரி பாய் பயமுறுத்தியதை நம்பி சித்தி பத்மினியை பார்த்ததும் நடுங்கும் குழந்தைகளில் பிரபாகரும் ஒருவர்.

    சாது மிரண்டால் நாகேஷுடனும் குட்டி பத்மினியுடனும் “ A for apple, B for Biscuit,”
    டி.ஆர்.ராமச்சந்திரனுடன் “ அருள்வாயே, நீ அருள்வாயே”( பாலமுரளி கிருஷ்ணா பாடல்.

    குழந்தை நட்சத்திரங்களில் படு பிசியானவர் பிரபாகர். பால்ய காலம் முழுக்க சினிமாவுலகம் தான்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஏன் இந்திபடங்களில் கூட நடித்த பால நடிகர்.

    மறக்கமுடியுமா? மறக்க முடியாத காட்சிகள். காகித ஓடம், கடலலை மேலே மறக்க முடியாத பாடல்.

    திருவருட்செல்வரில் திருஞானசம்பந்தர் பாத்திரம் பிரமாதமானது.

    மாஸ்டர் பிரபாகரை பயன்படுத்திய முக்கிய இயக்குனர்கள் என்றால் ஏ.பி.நாகராஜனும், கே.பாலச்சந்தரும் தான்.

    ஸ்டைல் காட்டி நடித்த சுட்டிப்பையன் மாஸ்டர் பிரபாகர்.
    பாமாவிஜயம் “வரவு எட்டணா, செலவு பத்தணா” பாடலில் டான்ஸ்.

    இருகோடுகள் படத்தில் புத்திசாலி சுட்டியாக துறுதுறு தனத்துடன்.

    ’புன்னகை மன்னன், பூவிழி கண்ணன் பாட்டின்’ பல்லவி ஆரம்பிக்கு முன் பாலகிருஷ்ணனை வா வா என்று வரவேற்று அழைத்து வரும் அழகு.

    தேவரின் ’நேர் வழி’யில் கௌபாய் குதிரை சவாரி, சிங்கத்தின் மீதே உட்கார்ந்த காட்சிகள்.

    ’வா ராஜா வா’ இன்று உள்ள குழந்தைகளுக்கு கூட பிடித்த படம். மஹாபலிபுரம் பார்க்க போகிறவர்கள் இந்த வா ராஜா வா நினைவில் மூழ்காமல் இருக்கமாட்டார்கள். அதில் கதாநாயகனாக பிரபாகரை நடிக்க வைத்தார் ஏ.பி.நாகராஜன்.

    ’ராமன் எத்தனை ராமனடி’யில் சிவாஜியை “டேய் சாப்பாட்டு ராமா” என்று கூப்பிடும் சிறுவன். அன்று இது கண்டு பிரமிக்காதவர்கள் கிடையாது.

    ’எங்க மாமா’ குழந்தைகள் செல்லக்கிளிகளில் ஒன்றாக.

    திருமலை தென்குமரியிலும் பிரபாகர் உண்டு.

    இளைஞனாக மலையாளப்படம் ’ஈநாடு’.

    2009ல் வந்த ’ஈரம்’ த்ரில்லர் படம் தான் அவர் கடைசியாக நடித்த படம்.

    இன்று சொன்னால் ஆச்சரியம். மொத்தம் 185 படங்கள்.
    ஆனால் ஒரு சிறுவனாக ரொம்ப ரசித்து சந்தோஷமாகத் தான் இத்தனை படங்களிலும் அனுபவித்து நடித்திருக்கிறார்.

    தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய ரோல் மாடலாக மாஸ்டர் பிரபாகரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாக்யராஜின் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கதாநாயகியாக நடித்த இவருடைய தங்கை சுமதி இன்று கனடாவில் இருக்கிறார்.

    இன்று வடக்கு உஸ்மான் ரோட்டில் மாஸ்டர் ராஜ்குமார் (ராமு) வீட்டிற்கடுத்த க்ரீன் ஹோமில் பெரிய ஜெராக்ஸ் கடையை நடத்திக்கொண்டிருக்கிறார்.

  4. நான் மாஸ்டர் ப்ரபாகரின்பரம ரசிகன் . அவர் என்னுடைய சம வயதினர். மேற்கண்ட தகவல்களுக்கு மிக்க நன்றி

  5. மாஸ்டர் ப்ரபாகரின் குழந்தை நடிகர் காலத்துப்பரம ரஸீகன் நான். அவர் எனது சம வயதினர். மேற்கூறிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

    அவருடன் நான் நேரடித்தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கிடைக்குமா ?

Leave a comment