“Ennaththe” Kannaiah

“Ennaththe” Kannaiah- The famous Thamizh Comedian, Charector, Villain Artist.

என்னத்தே கன்னையா அவர்களைப் பற்றிய மேலும் சில விவரங்கள் இங்கே தருகிறேன். கன்னையா என்பது இவரது பெயர். 1967 ஆம் ஆண்டு காலஞ்சென்ற நடிகர் ரவிச்சந்திரன் – ஜெயலலிதா நடித்து ராமண்ணா இயக்கி 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா படமான “ நான் ” என்ற படத்தில் இவர் எதற்கெடுத்தாலும் என்னத்தே வந்து, போயி……. என்று அடிக்கடி இந்த சொல்லைக் கூறிக்கொண்டேயிருப்பார். அது மிக பிரபலமாகவே அதன் பின்னர் என்னத்தே என்பது அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது. இவர் நகைச்சுவை வேடங்களில் மட்டுமின்றி, வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இவர் கடந்த 7.8.2012 அன்று தனது 87-ஆவது வயதில் நெஞ்சுவலியினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சைப் பலனின்றி மரணமடைந்தார். அவரது சொந்த ஊர் மதுரை. அவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். இவர் நடித்த மேலும் சில படங்கள் பின் வருமாறு:-
1.    நான்
2.    மூன்றெழுத்து (வில்லனாக)
3.    கருப்புப்பணம்
4.    முத்துச்சிப்பி
5.    பணத்துக்காக
6.    இரவும் பகலும்
7.    தெய்வ சங்கல்பம்
8.    பெருமைக்குரியவள்
9.    ஹலோ பார்ட்னர்
10.    தம்பிக்கு எந்த ஊரு
11.    வாழ்ந்து காட்டுகிறேன்
12.    வீட்டுக்கு ஒரு பிள்ளை
13.    நாலும் தெரிந்தவன்
14.    சீதா
15.    மிடில் கிளாஸ் மாதவன்
16.    ஐம்பதிலும் ஆசை வரும்
17.    எனக்கொரு மகன் பிறப்பான்
18.    அருணகிரி நாதர்
19.    வாழ்வு என் பக்கம்
20.    வைராக்கியம்
21.    கடவுள் மாமா
22.    வசந்த காலம்
23.    ராஜா வீட்டுப் பிள்ளை
24.    நம்நாடு
25.    தொட்டால் பூ மலரும்.

இந்த பாணியை மாற்ற வேண்டாம் என்றார் எம்.ஜி.ஆர் ! – ‘என்னத்தே’ கன்னையா

By DIN  |   Published on : 11th November 2016 12:00 AM

மதுரை மாவட்டம் அய்யாபட்டி என்ற கிராமத்தில் பிறந்த கன்னையா ஆரம்பத்தில் வைரம் நாடக குழுவில் நடித்து வந்தார்.

40 ஆண்டு காலமாக கலை  உலகில்  பணியாற்றி வரும் கன்னையா தனது அனுபவங்களை நினைவு கூறுகிறார்.

32 ஆண்டுகளுக்கு முன்பு வைரம் நாடகக்குழுவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது பக்ஷிராஜா படக் கம்பெனியார்  என்னை மூன்று ஆண்டு காலத்திற்கு ‘காண்ட்ராக்ட்’ போட்டு மாதச் சம்பளம் கொடுத்து அவர்கள் படங்களில் நடிக்க வைத்தனர்.

மாதச் சம்பளத்திற்கு நடித்ததால் ஒரு படத்திலேயே பல்வேறு சிறிய பாத்திரங்களை ஏற்று நடித்தேன். முதல் படமான ‘ஏழை படும் பாட்டில்’  நான்கு சிறிய வேடங்களில் நடித்தேன். அதன் பிறகு மதுரையில் இருந்து கோவை சென்று அங்கு நாடகங்களில் நடித்தேன்.

1955-ஆம் வருடம் சென்னைக்கு வந்து  நிரந்தரமாக தங்கினேன்.  தூக்குத் தூக்கி, சதாரம் போன்ற படங்களில் நடித்தேன். முதலாளி படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. அதுவரை அசோசியேட் டைரக்டராக இருந்த சீனிவாசன் (முக்தா) இந்தப்படத்தின் மூலம் டைரக்ட்டரானார். இந்த படத்திற்கு பிறகு எல்லோரும் என்னை ‘முதலாளி’ கன்னையா என்றே அழைத்தார்கள்.  1967-ஆம் ஆண்டு எனது திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

ராமண்ணா தயாரித்து டைரக்ட் செய்த ‘நான்’ படத்தில் நான் ஏற்று நடித்த வேடம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதில் அடிக்கடி ‘என்னாத்தே’ என்ற வார்த்தையை உபயோகிப்பேன். அன்று முதல் என்னை ‘என்னாத்தே’ கன்னையா என்றே அழைத்தனர்.

பார்வதி பி .ஏ நாடகத்திற்கு தலைமை  வகித்த எம்.ஜி.ஆர் என்னை பாராட்டி பேசினார்.  அந்த நாடகத்தில் நான் நடித்த வேலைக்காரன் வேடத்தை குறிப்பிட்ட அவர், ‘வேலைக்காரர் வேடத்தில் இன்று கன்னையா நடித்த அளவிற்கு இன்று பிரபலமாக உள்ள நடிகர்கள் கூட நடித்திருக்க முடியாது. ஏனென்றால் நட்சத்திர நடிகர்கள் தங்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை முன்னால்  வைத்து, தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை பின்னால் தள்ளி வைத்து நடிப்பார்கள்.ஆனால் கன்னையாவோ தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து நடித்தார். இந்த பாணியை மாற்ற வேண்டாம் என குறிப்பிட்டு வாழ்த்தினார். இது என்னால் மறக்க முடியாத சம்பவம் என்றார் கன்னையா.

http://www.dinamani.com/specials/cinemaexpress/2016/nov/11/

சிக்காம்ஸ் வலைத்தளத்தில் காணப்பெற்ற செய்தி [நாள்.9.8.2012]
நா‌ன்‌, முன்‌றெ‌ழுத்‌து உட்‌பட 250க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட படங்‌களி‌ல்‌ நடி‌த்‌தவருக்கு, பெரும் புகழ் கிடைத்தது.பிரபல நடிகர் என்னத்தே கண்ணையா நேற்று பிற்பகல் இயற்கை எய்திவிட்டார். அவருக்கு வயது 87.
1950ம்‌ ஆண்‌டி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன நா‌கை‌யா‌ நடி‌த்‌த ‘ஏழை‌படும்‌ பா‌டு’ படத்‌தி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌ நடி‌கராக அறி‌முகமா‌னவர்‌ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா. தொ‌டர்‌ந்‌து எம்ஜிஆருடன் நம்‌நா‌டு படத்தில் ரங்காராவின் உதவியாளராக நடித்திருந்தார்.
வடிவேலுவுடன் அவர் நடித்த தொட்டால் பூ மலரும் படத்தின் ‘வரும் ஆனா வராது’ நகைச்சுவை பிரபலமானது.
‘தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரியே தகதகன்னு மின்றீங்க’, என அவர் வடிவேலுவைப் பார்த்து சொல்லும் வசனம் இன்றும் பலரால் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வயதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்து வந்தார் கண்ணையா. தனது தள்ளாத வயதிலும் கூட, பல படங்களில் நடித்து வந்தார்.
வசனம் பேசும்போது, அடிக்கடி என்னத்தே என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது இவரது பாணி. அதனால் இவர் பெயருடன் அந்த என்னத்தே-வும் ஒட்டிக் கொண்டது.
இந்‌த வயதி‌லும்‌ நகை‌ச்‌சுவை‌யா‌க பே‌சி சி‌ரி‌க்‌க வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருந்‌தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் சா‌ப்‌பி‌ட்‌டு படுத்‌தவர் மா‌லை‌‌ 4 மணி‌க்‌கு காலமாகிவிட்டார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
கடந்‌த நா‌ன்‌கு வருடத்‌தி‌ற்‌கு முன்‌பு‌ அவரது மனை‌வி‌ ரா‌ஜம்‌ கா‌லமா‌னா‌ர். இவர்‌களுக்கு அசோ‌கன்‌, சா‌ய்‌கணே‌ஷ்‌ என இரு மகன்‌களும்‌, அமுதா‌, தனலட்‌சுமி‌, மகே‌ஸ்‌வரி‌, சண்‌முகப்‌பி‌ரி‌யா‌ என நா‌ன்‌கு மகள்களும்‌ உள்‌ளனர். அனை‌வருக்‌கும்‌ தி‌ருமணம்‌ செய்து வைத்துவிட்டார்.
ரா‌யப்‌பே‌ட்‌டை‌ ரா‌யி‌ட்‌ கா‌லனி‌யி‌ல்‌ உள்‌ள அவர் வீ‌ட்‌டி‌ல்‌ உடல் வை‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது. இன்று மா‌லை‌ 4 மணி‌க்‌கு அவரது இறுதி‌ ஊர்‌வலம்‌ நடை‌பெ‌றுகி‌றது.அவரது ஆன்மா சாந்தி அடைய சிக்காம்ஸ் சார்பில் பிராத்திக்கிறோம்.
“ஏழை படும் பாடு” 1950 படத்தில்  என்னத்தே கே.எஸ்.கன்னையா
Ennathe K.S.Kannaiah-Ezhai Padum Paadu 1950-1Ennathe K.S.Kannaiah-Ezhai Padum Paadu 1950-Ennathe K.S.Kannaiah-V.Nagaiah-Ezhai Padum Paadu 1950-
 ’நான்’ [1967] படத்தில் என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-Naan

 ’நான்’ [1967] படத்தில் சுருளிராஜனுடன் என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-Suruli Rajan-Naan Ennathe Kannaiah-Suruli Rajan-Naan-2

 ’நான்’ [1967] படத்தில் ரி.எம்.சாமிக்கண்ணுவுடன் என்னத்தே கன்னையாSamikkanu-Ennathe Kannaiah-Naan

 ’நான்’ [1967] படத்தில் குட்டி பத்மினி, ரி.பி.முத்துலக்ஷ்மி, ரி.எம்.சாமிக்கண்ணு மற்றும் சுருளிராஜனுடன் என்னத்தே கன்னையாSamikkanu-Ennathe Kannaiah-Suruli Rajan-TP.Muthulakshmi-Kutty Padmini-Naan.1jpg Samikkanu-Ennathe Kannaiah-Suruli Rajan-TP.Muthulakshmi-Kutty Padmini-Naan.jpg

 ’நான்’ [1967] படத்தில் குட்டி பத்மினி, ரி.பி.முத்துலக்ஷ்மி, ரி.எம்.சாமிக்கண்ணு,திருச்சி சௌந்தரராஜன், ஜெயலலிதா மற்றும் சுருளிராஜனுடன் என்னத்தே கன்னையா

Samikkanu-Ennathe Kannaiah-Suruli Rajan-TP.Muthulakshmi-Trichy Saundarrajan-Jayalalitha-Kutty Padmini-Naan

’நான்’ [1967] படத்தில் ரி.பி.முத்துலக்ஷ்மி, ரி.எம்.சாமிக்கண்ணுவுடன் என்னத்தே கன்னையா

 Samikkanu-Ennathe Kannaiah-TP.Muthulakshmi-Naan-2 Samikkanu-Ennathe Kannaiah-TP.Muthulakshmi-Naan-5

ENNATHE KANNAIAH-ANANTHU-Thenkinnam-1

ENNATHE KANNAIAH-ANANTHU-ThenkinnamENNATHE KANNAIAH-ThenkinnamENNATHE-KADAVUL MAMA-1974-1-RE

உலகம் சிரிக்கிறது படத்தில்  காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.ஆர்.ராதாவுடனும் தனித்தும் “முதலாளி” கன்னையா

Ennathe Muthalali Kannaiah-KV.Santhi-Ulagam Sirikkirathu Ennathe Muthalali Kannaiah-Ulagam Sirikkirathu Ennathe Muthalali Kannaiah-Ulagam Sirikkirathu-1Kaakkaa Radhakrishnan-Ennathe -Ulagam Sirikkirathu

2010–இல் தொலைக்காட்சியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் பேட்டியளித்த போது என்னத்தே கன்னையா                                          Ennathe KannaiahEnnathe Kannaiah-1Ennathe Kannaiah-2

தூக்குத் தூக்கி [1954] படத்தில் நடிகர் திலகத்துடன் என்னத்தே கன்னையாEnnathe Kannaiah-Thookku Thookki-

ரகசிய போலீஸ் 115 படத்தில் தனித்தும் நாகேஷுடனும் என்னத்தே கன்னையாEnnathe Kannaiah-Nagesh-Ragasiya Police 115-Ennathe Kannaiah-Ragasiya Police 115-

ஏன் ? [1977] படத்தில் என்னத்தே கன்னையாவுடன்  ‘அம்முகுட்டி’ புஷ்பமாலா

Ennathe Kannaiah-Ammukutty-En 1974-

ஏன் ? [1977] படத்தில் என்னத்தே கன்னையாவுடன்  வெள்ளை சுப்பையா

Ennathe Kannaiah-Vellai Subbaiah-En 1974-Ennathe Kannaiah-Vellai Subbaiah-En 1974-1

ஏன் ? [1977] படத்தில் என்னத்தே கன்னையாவுடன்  ‘அம்முகுட்டி’ புஷ்பமாலா

Ammukutty Pushpamala-Ennathe Kannaiah-En 1974-1

ஏன் ? [1977] படத்தில் மாஸ்ரர் ஆதிநாராயணன், லட்சுமி, என்னத்தே கன்னையாவுடன்  ‘அம்முகுட்டி’ புஷ்பமாலா

Ammukutty Pushpamala-Ennathe Kannaiah-En 1974-Ammukutty Pushpamala-Ennathe Kannaiah-Adi-Lakshmi-En 1974-

தூக்கு தூக்கி [1954] படத்தில் சிவாஜிகணேசனுடன் என்னத்தே கன்னையா Ennathe Kannaiah-Sivaji-Thookku Thookki 1954-

‘பணத்துக்காக’ [1974] படத்தில் என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-Panathukkaga 1974-3Ennathe Kannaiah-Panathukkaga 1974-5Ennathe Kannaiah-Panathukkaga 1974-Ennathe Kannaiah-Panathukkaga 1974-1

‘பணத்துக்காக’ [1974] படத்தில் ஏ.சகுந்தலாவுடன் என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-A.Sagunthala-Panathukkaga 1974-Ennathe Kannaiah-A.Sakunthala-Panathukkaga 1974-

‘பணத்துக்காக’ [1974] படத்தில் கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியாவுடன்  என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-Kamalahassan-Panathukkaga 1974-Ennathe Kannaiah-Sreepriya-kamal-Panathukkaga 1974-

‘என்னைப் போல் ஒருவன்’ [1976] படத்தில் டைப்பிஸ்ட் கோபு, என்னத்தே கன்னையாவுடன் செஞ்சி கிருஷ்ணன்                                        Sencjhi Krishnan-Ennai Pol Oruvan 1976-

‘பாக்தாத் பேரழகி’ [1953] படத்தில் என்னத்தே கன்னையா

Ennathe-Baghdad Perazhagi 1973-

‘பாக்தாத் பேரழகி’ [1953] படத்தில் டைப்பிஸ்ட் கோபு, அசோகனுடன் என்னத்தே கன்னையா          

Ennathe Kannaiah-SA.Ashokan-Typist Gopu-Baghdad Perazhagi 1973-

‘பாக்தாத் பேரழகி’ [1953] படத்தில் எஸ்.ஏ.அசோகனுடன் என்னத்தே கன்னையாEnnathe Kannaiah-SA.Ashokan-Baghdad Perazhagi 1973-Ennathe-SA.Asokan-Baghdad Perazhagi 1973-

’அருட்பெருஞ்சோதி’ [1971] படத்தில் மச்சக்காளை என்ற கதாபாத்திரத்தில் என்னத்தே கன்னையாவும் டணால் கே.ஏ.தங்கவேலுவும்                 Ennathe Kannaiah as Machakkaalai-KA.Thangavelu-Arut perunjothi 1971-Ennathe Kannaiah-KA.Thangavelu-Arut perunjothi 1971-Ennathe Kannaiah-KA.Thangavelu-Arut perunjothi 1971-1Ennathe Kannaiah-KA.Thangavelu-Arut perunjothi 1971-250

’அருட்பெருஞ்சோதி’ [1971] படத்தில் பாலையாவும் என்னத்தே கன்னையாவும்Ennathe Kannaiah-TS.Balaiah-Arut perunjothi 1971-

‘மக்கள் என் பக்கம்’ [1987] படத்தில் என்னத்தே கன்னையாவும் ஒரு விரல் கிருஷ்ணாராவும்Ennathe-Oruviral -Makkal Enn Pakkam 1987-Oruviral - Ennathe-Makkal Enn Pakkam 1987-Oruviral - Ennathe-Makkal Enn Pakkam 1987-1Oruviral - Ennathe-Makkal Enn Pakkam 1987-2

’மருமகள்’ [1986] படத்தில் என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-Marumagal 1986-1Ennathe Kannaiah-Marumagal 1986-2

’மருமகள்’ [1986] படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரத்துடன் என்னத்தே கன்னையாEnnathe Kannaiah-Kallappetti-Marumagal 1986-Ennathe Kannaiah-Kallappetti-Marumagal 1986-1

’மருமகள்’ [1986] படத்தில் நடிகர் திலகத்துடன் என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-Sivaji-Marumagal 1986-

’மருமகள்’ [1986] படத்தில் சுரேஷ், ஒய்.ஜி.மகேந்திரனுடன் என்னத்தே கன்னையாEnnathe-Suresh-YG.Mahendra-Marumagal 1986-1

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் ”சோ” வுடன் என்னத்தே கன்னையா Cho-Ennathe-Naan Mahan Alla 1984-Cho-Ennathe-Naan Mahan Alla 1984-1Cho-Ennathe-Naan Mahan Alla 1984-2

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் ”சோ” வுடன், என்னத்தே கன்னையா, ஸ்ரீலேகா  

Cho-Ennathe-Sreelekha-Naan Mahan Alla 1984-

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் என்னத்தே கன்னையாவுடன் ”சோ”, ரஜினிகாந்த், பீலிசிவம்

Cho-Ennathe-Beelisivam-Rajinikanth-Naan Mahan Alla 1984-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில்  என்னத்தே கன்னையாவுடன் எம்.ஆர்.ஆர்.வாசு  

MRR.Vasu-Ennathe-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் என்னத்தே கன்னையாவுடன் எம்.ஆர்.ஆர்.வாசு , எம்.எஸ்.சுந்தரிபாய். MRR.Vasu-Ennathe-MSS-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் ஜி..வரலட்சுமியுடன் என்னத்தே கன்னையா

G.Varalakshmi-Ennathe-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷுடன் என்னத்தே கன்னையா 

Nagesh-Ennathe-Veettukku Oru Pillai 1971-Nagesh-MRR.Vasu-Ennathe-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் நாகேஷ், சசிகுமாருடன் என்னத்தே கன்னையா

Nagesh-Sasikumar-Ennathe-Veettukku Oru Pillai 1971-

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” [1971] படத்தில் என்னத்தே கன்னையாவுடன்  டைப்பிஸ்ட் கோபு 

Typist Gopu-Ennathe-Veettukku Oru Pillai 1971-”தெய்வசங்கல்பம்” [1972] படத்தில் என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-Deiva Sankalpam 1972-1Ennathe Kannaiah-Deiva Sankalpam 1972-75 ”தெய்வசங்கல்பம்” [1972] படத்தில் கலாவதியுடன் என்னத்தே கன்னையாEnnathe Kannaiah-Kalavathi-Deiva Sankalpam 1972-1Ennathe Kannaiah-Kalavathi-Deiva Sankalpam 1972-Ennathe Kannaiah-Kalavathi-Deiva Sankalpam 1972-2”தெய்வசங்கல்பம்” [1972] படத்தில் சோ, சச்சு, கலாவதியுடன் என்னத்தே கன்னையாEnnathe Kannaiah-Kalavathi-Cho-Sachu-Deiva Sankalpam 1972-

“நவக்கிரஹ நாயகி” [1985] படத்தில் ஓமக்குச்சி நரசிம்மனுடன் என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-Omakuchi Narasimhan-Navagraha Nayagi 1985-Ennathe Kannaiah-Omakuchi Narasimhan-Navagraha Nayagi 1985-2Ennathe Kannaiah-Omakuchi Narasimhan-Navagraha Nayagi 1985-1

நிரபராதி [1984] படத்தில் மனோரமாவுடன் என்னத்தே கன்னையாEnnathe-Nirabarathi 1984-Ennathe-Manorama -Nirabarathi 1984-Ennathe Manorama -Nirabarathi 1984-Ennathe Manorama Duglus Kannaiah-Nirabarathi 1984-2Ennathe Manorama Duglus Kannaiah-Nirabarathi 1984-1Ennathe Manorama Duglus Kannaiah-Nirabarathi 1984-

”காத்தவராயன்” [1958] படத்தில் என்னத்தே கன்னையா Ennathe Kannaiah-Kaathavaraayan 1958-

”காத்தவராயன்” [1958] படத்தில் ஜே.பி.சந்திரபாபுவுடன் என்னத்தே கன்னையா Ennathe Kannaiah-JP.Chandrababu-Kaathavaraayan 1958-190Ennathe Kannaiah-JP.Chandrababu-Kaathavaraayan 1958-Ennathe Kannaiah-JP.Chandrababu-Balaiah-Kaathavaraayan 1958-1Ennathe Kannaiah-JP.Chandrababu-Balaiah-Kaathavaraayan 1958-

”காத்தவராயன்” [1958] படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் என்னத்தே கன்னையா Ennathe Kannaiah-KA.Thangavelu-Kaathavaraayan 1958-

“ஒளி விளக்கு” 1968 படத்தில் எம்.ஜி.ஆருடன் என்னத்தே கன்னையாEnnathe Kannaiah-Oli Vilakku 1968-1Ennathe Kannaiah-Oli Vilakku 1968-Ennathe Kannaiah-MGR-Oli Vilakku 1968-1Ennathe Kannaiah-MGR-Oli Vilakku 1968-

“ஒளி விளக்கு” 1968 படத்தில் ரி.பி.முத்துலட்சுமியுடன் என்னத்தே கன்னையா

Ennathe Kannaiah-TP.Muthulakshmi-Oli Vilakku 1968-Ennathe Kannaiah-TP.Muthulakshmi-Oli Vilakku 1968-1100Ennathe Kannaiah-TP.Muthulakshmi-Oli Vilakku 1968-1A

’’வைராக்கியம்” படத்தில் ராதாவுடன் என்னத்தே கன்னையாEnnathe Kanniah-Vairagyam 1982-Ennathe Kanniah-Radha-Vairagyam 1982-

’’வைராக்கியம்” படத்தில் பிரபுவுடன் என்னத்தே கன்னையாEnnathe Kanniah-Prabhu-Vairagyam 1982-

’’வைராக்கியம்” படத்தில் லூஸ்மோகனுடன் என்னத்தே கன்னையாEnnathe Kanniah-Loose Mohan-Vairagyam 1982-105

”பொன்னி” 1953 படத்தில் ஸ்ரீராமுடன் என்னத்தே கன்னையாEnnatha Kannaiya-Sriram-Ponni 1953-2Ennatha Kannaiya-Sriram-Ponni 1953-1Ennatha Kannaiya-Sriram-Ponni 1953-

”பொன்னி” 1953 படத்தில் பி.சாந்தகுமாரியுடன் என்னத்தே கன்னையாEnnatha Kannaiya-P.Santha Kumari-Ponni 1953-109

”சுமங்கலி” 1983 படத்தில் சிவாஜி கணேசன், கீதாவுடன் என்னத்தே கன்னையாEnnathe Kannaiah-Sumangali 1983-1Ennathe Kannaiah-Sumangali 1983-Ennathe Kannaiah-Sivaji Ganesan-Sumangali 1983-Ennathe Kannaiah-Geetha-Sumangali 1983-113

நகரம் மறுபக்கம் 2010  படத்தில் லாரி ஓட்டுநராக என்னத்தே கன்னையாEnnathe Kannaiah-Nagaram Marupakkam 2010-01Ennathe Kannaiah-Nagaram Marupakkam 2010-115

’குமரிப்பெண்’ 1966 படத்தில் சேதுபதியுடன் என்னத்தே கன்னையாSethupathi-Ennathe-Kumari Penn 1966-

’குமரிப்பெண்’ 1966 படத்தில் சி.கே.சரஸ்வதி, சீதாலட்சுமியுடன் என்னத்தே கன்னையாEnnathe-PS.Seethalakshmi-Kumari Penn 1966-Ennathe-PS.Seethalakshmi-CK.Saraswathi-Kumari Penn 1966-

’குமரிப்பெண்’ 1966 படத்தில் குணாளன், ஆர்.எஸ்.மனோகருடன் என்னத்தே கன்னையாGunalan-Ennathe-RS.Manokar-Kumari Penn 1966-119

 

5 comments on ““Ennaththe” Kannaiah

  1. உங்களுக்கு இவர் நடித்த பல படங்களில் இவர் கதாபாத்திரம் பற்றி தெரியும் ஆனால் எங்களுக்கு இந்த தலைமுறைக்கு இவரை பார்த்தால் ” வரும் ஆனா வராது” இந்த வசனம்தான் இவர் வடிவேலுடன் ஓரு நகைச்சுவை காட்சியில் வருவது தெரியும்.

    • அருண்….. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. என்னத்தே கன்னையா அவர்களைப் பற்றிய மேலும் சில விவரங்கள் இங்கே தருகிறேன். கன்னையா என்பது இவரது பெயர். 1967 ஆம் ஆண்டு காலஞ்சென்ற நடிகர் ரவிச்சந்திரன் – ஜெயலலிதா நடித்து ராமண்ணா இயக்கி 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா படமான “ நான் ” என்ற படத்தில் இவர் எதற்கெடுத்தாலும் என்னத்தே வந்து, போயி……. என்று அடிக்கடி இந்த சொல்லைக் கூறிக்கொண்டேயிருப்பார். அது மிக பிரபலமாகவே அதன் பின்னர் என்னத்தே என்பது அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது. இவர் நகைச்சுவை வேடங்களில் மட்டுமின்றி, வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இவர் கடந்த 7.8.2012 அன்று தனது 87-ஆவது வயதில் நெஞ்சுவலியினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சைப் பலனின்றி மரணமடைந்தார். அவரது சொந்த ஊர் மதுரை. அவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். இவர் நடித்த மேலும் சில படங்கள் பின் வருமாறு:-
      1. நான்
      2. மூன்றெழுத்து (வில்லனாக)
      3. கருப்புப்பணம்
      4. முத்துச்சிப்பி
      5. பணத்துக்காக
      6. இரவும் பகலும்
      7. தெய்வ சங்கல்பம்
      8. பெருமைக்குரியவள்
      9. ஹலோ பார்ட்னர்
      10. தம்பிக்கு எந்த ஊரு
      11. வாழ்ந்து காட்டுகிறேன்
      12. வீட்டுக்கு ஒரு பிள்ளை
      13. நாலும் தெரிந்தவன்
      14. சீதா
      15. மிடில் கிளாஸ் மாதவன்
      16. ஐம்பதிலும் ஆசை வரும்
      17. எனக்கொரு மகன் பிறப்பான்
      18. அருணகிரி நாதர்
      19. வாழ்வு என் பக்கம்
      20. வைராக்கியம்
      21. கடவுள் மாமா
      22. வசந்த காலம்
      23. ராஜா வீட்டுப் பிள்ளை
      24. நம்நாடு
      25. தொட்டால் பூ மரும்.

      • Ariya thagavalkalukku mikka nantri sir. Nanbar Arun kooriyathu pola ivarathu ‘varum aana varathu’ dialoge mattume ninaivirukkirathu. Avarathu mulu vazhkai varalarayum theriyapatuthiya ungalukku nantri. Innum ithu pola nalla pala kazhaignarkalin padankalayum avarkalai patriya thagaval kalayum ethirparkirom…

  2. R P ராஜநாயஹம்

    என்னத்தை கன்னையா “முதலாளி ” படத்தில் ஒரு பிரதான பாத்திரத்தில்
    (வேலைக்காரனாக!) நடித்தார். அதனால் ஆரம்ப காலங்களில் ‘முதலாளி ‘ கன்னையா என அறியப்பட்டிருந்தார்.

    “பாசம் ” படத்தில் இவர் வசன உச்சரிப்பு ‘ப’கரம்வார்த்தைகளை F ல் உச்சரிப்பார் . என்ன அன்பு !என்ன பாசம் !என்ன பரிவு !என்ன பக்தி! ‘ இதை ” என்ன அன் Fu! என்ன Faசம்! என்ன Faரிவு! என்ன Fuckதி !” எம் ஆர் ராதாவை பார்த்து பிரமித்து இப்படி சொல்வார்!

    கண்ணதாசனின் ‘கருப்பு பணம் ‘ படத்தில் படதயாரிப்பாளர்.நொடித்து போனவுடன் தன் பட இயக்குனரை ஒரு பஸ் ஸ்டாப்பி்ல் பார்ப்பார. அவர் அங்கே சைட் அடித்துக்கொண்டிருப்பார் . இவர் அவரை அப்ரோச் செய்யும் போது அவர் Don’t disturb me . I am enjoying the beauty! என இவரை உதாசீனம் செய்வார் . கன்னையா You are enjoying the beauty. But I’m in Poverty! என சோகமாக சொல்வார். ஆங்கிலம் அறிந்தவர் அல்ல . ஆனால் ஆங்கில டயலாக் நன்றாக உச்சரிப்பார்.

    “நான் “படத்தில் நடித்த பின் தான் ” என்னத்தை கன்னையா” ஆனார் . விரக்தியான மனநிலையில் படம் முழுவதும் வந்தார்.
    ராமண்ணா அடுத்த ‘ மூன்றெழுத்து ‘ படத்தில் இவரை வில்லன் ஆக்கினார்!
    ‘ ஐஸ் வச்சு கொன்னுடு ‘ என்று அலட்சியமா வசனம் பேசுவார்!

    ‘சொர்க்கம்’ படத்தில் நாகேஷ் இவருக்கு சொன்ன ஜோதிடம் பலித்து இவர் கோடீஸ்வரன் ஆகி நாகேஷை தேடி வருவார். ஏற்கனவே நாகேஷ் ஒரு முரடனுக்கு ஜோசியம் சொல்லி அது பலிக்காமல் அந்த முரடன் இவரை தேடி வந்து அடி வெளுத்து விட்டு போயிருப்பார. அந்த சூழலில் கன்னையா ‘ எங்கையா ஜோதி! மனுஷனா அவன்!” என்று நாகேஷின் ஜோதிட நிலையத்திற்குள் வரவும் நாகேஷ் ஒளிந்து கொள்வார.
    கன்னையா தொடர்ந்து ‘ மனுஷனா அவன்! தெய்வம்! கண் கண்ட தெய்வம்!கை கொடுத்த தெய்வம்! ” என்று புகழ ஆரம்பிக்கவும் நாகேஷ் மேசைக்கடியில் இருந்து சந்தோசமாக எழுந்திருப்பார்.
    கன்னையா ஆச்சரியத்துடன் ” ஆஹா ! நான் பார்த்த படத்திலேயும் படிச்ச புராணத்திலேயும் தெய்வம் மேலே இருந்து வரும்! ஆனா இங்கே கீழே இருந்து வருதே! ஜோதி நீ சொன்னது பலிச்சிடுச்சு. வாங்க வீட்டுக்கு. இம்பாலா கார் காத்திருக்கு .” என அவரை அழைப்பார். ” வாங்க வீட்டுக்கு். இம்பாலா காத்திருக்கு ” என்ற இந்த வசனத்தை பலமுறை சொல்வார் .
    நாகேஷ் சலித்து ” யோவ் நீ எப்ப இம்பாலா கார் வாங்கின.”
    கன்னையா ” இன்னைக்கு தான்.”
    நாகேஷ் ” அதான் வார்த்தைக்கு வார்த்தை இம்பாலா இம்பாலான்னு
    சொல்றே ”

    ‘நம் நாடு’ படத்தில் வில்லன் ரங்காராவுக்கு அசிஸ்டன்ட் . நாகையா கன்னைய்யாவிடம் ‘ என் வீட்டிலே பசி ஒன்னை தவிர வேறு எதுவுமே இல்லை ‘ எனும்போது கன்னைய்யா சொல்வார் ” இருக்குன்னு சொல்ல அது ஒன்னாவுது இருக்குல்லே !போய்யா ”

    1970களின் முன்பகுதியில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு கலைவிழா. அன்று கமலும் என்னத்தை கன்னையாவும் நடித்த ஓரங்க நாடகம். கன்னையா மகளை கமல் ஹாசன் காதலித்து கடத்துவார். கன்னையா வீட்டு மெயினில் இருந்து ஃப்யூஸ் கட்டையை உருவி விட்டு அவருடைய காதலியை கடத்துவார் கமல். மேடையில் இருட்டு. கமல் ‘இந்தாங்க. இதெ மெயின்ல சொருகுங்க’என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆகும்போது கன்னையாவின்வெள்ளந்தியான குரல் இருட்டான மேடையில்” ஏன் தம்பி..சொருகுனா எரியுமா?”
    தமுக்கம் மைதானமே அதிர்ந்தது!
    கமல் ஹாசன் அப்போது கன்னையாவின் அந்த டைம் சென்ஸ் குறித்து ரொம்ப பாராட்டியிருக்கிறார்.இதை கன்னையாவே என்னிடம் சொன்னார். ஆனால் கமல் ஏன் கன்னையாவை தன் படங்களில் சரியான வாய்ப்பு கொடுத்து பயன்படுத்திக்கொள்ளவேயில்லை.

    பாரதி ராஜா , மகேந்திரன் , பாக்கியராஜ் எஸ் பி முத்துராமன் போன்றவர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் இவர் இருபத்தைந்து வருடம் முன் மீண்டும் ஒரு நல்ல ரவுண்டு வந்திருப்பார் . கல்லாப்பட்டி சிங்காரம், கே கே சௌந்தர் போன்றவர்கள் போல. ஆனால் இவர் ஏனோ இவர்கள் கண்ணில் படவில்லை. கொஞ்சம் தெரியற மாதிரி போலிஸ் ரோல்’ சட்டம் ஒரு இருட்டறை ‘யில் செய்தார்.

    தி நகர் ரோகினி இன்டர்நேஷனல் லாட்ஜில் பெருமாள் நாயுடு என்ற மீடியேட்டர் இவரிடம் என்னை அறிமுகம் செய்த போது கன்னையா வின் பழைய பட வசனங்களை நான் படபடவென்று அவரிடமே பேசிக்காட்டிய போது அசந்து போனார்.
    உசிலை மணியிடம் ” அழைத்தால் வருவேன் ” படப்பிடிப்பின் போது ஒப்பனை அறையில் என்னைப்பற்றி ரொம்ப உயர்வாக சொன்னார் . ” இந்த ராஜநாயஹம்! இவரை பார்க்கும்போது தான் எனக்கு உயிர் வாழ்வது பற்றி ஒரு நம்பிக்கைபிடிப்பு வருகிறது .”

    நாகேஷ் போல இவர் ஸ்பாட் டயலாக் ஷூட்டிங் போது அடிக்கும் திறமை உள்ளவர். சுருளி ராஜன் இவர் அப்படி பேசும் வசனங்களை ‘வேண்டாம் ‘ என ஒதுக்கும் போது என்னிடம் வேதனையுடன் ” பாருங்க தம்பி . நல்ல வசனம் அவனை வெட்டி நான் பேசுனா ஒத்துக்க மாட்டேங்கிறான் ” என்று அப்போது அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

    அந்த காலங்களில் ஒரு சின்ன சிவப்பு வெள்ளை வலை குல்லாயுடன் அடிக்கடி டவுன் பஸ்சில் இவரை பார்க்க முடியும்.
    தி நகர் பனகல் பார்க் அருகில் ஒரு முறை நடந்து வரும்போது நானும் கன்னையாவும் சந்தித்து கொண்டபோது அவர் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது .” உங்க பெயர் ‘ராஜநாயஹம் ‘நல்லா இருக்கு தம்பி ! இந்த பெயரை சினிமாவுக்காக மாத்திராதீங்க ”

    எம்ஜியார் படங்களில் எல்லாம் என்னத்தை கன்னையாவை பார்க்க முடியும் .
    எம்ஜியார் முதல்வர் ஆகிய பின் இவருக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டபோது எம்ஜியார் இவரை பார்த்து ” இப்பவும் என்னத்தை கன்னையா தானா! எப்போ ஓஹோ கன்னையா ஆவது !?” என்று மேடையில் இவரிடம் கேட்டார்.
    ஓஹோ வென்று கன்னையாவால் ஆகவே முடியவில்லை.

    எம்ஜியார் இறந்து இத்தனை வருடம் கழிந்த பின் வடிவேலுவுடன் கன்னையா கலக்கி இருக்கிறார்.
    ” வரும்! ஆனா வராது. “

  3. some rare information…he acted excellent role in the film ulagam sirikirathu as lunatic, but unfortunately i afraid his talent was noticed by film historians in any review or blogger. Also, his first debut came as uncredited role in rathnakumar (1949) not even any dialogue in that movie, just casted in one and only one scene.

Leave a comment