Jikki [Playback Singer]

ஜிக்கி [பின்னணிப் பாடகி]

தமிழ்த் திரைப்பட இசையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகித் தனது வசீகரக் குரலினிமையினால் இலட்சக்கணக்கான கலையுள்ளங்களை ஈர்த்துக்கொண்டவர் ஜிக்கி.
உற்சாகம் நிறைந்த துள்ளலும், துரிதமும், பாவமும் பரிமளிக்கும் ஜிக்கியின் பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் தனது கணீரென்ற குரலினால் ஜிக்கி சாதனை படைத்துள்ளார். “தந்தானைத் துதிப்போமே” முதலான கிறிஸ்தவ கீதங்களையும் பாடியுள் ளார். “அருள்தாரும் தேவமாதாவே”, “ஆசைநிலா சென்றதே”, “ஜீவிதமே சபலமோ”, “கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்”, “கள்ளங்கபடம் தெரியாதவனே”, “காதல் வியாதி பொல்லாதது”, “ஊரெங்கும் தேடினேன்”, “துள்ளாத மனமும் துள்ளும்”, “நான் வாழ்ந்ததும் உன்னாலே”, “பச்சைக்கிளி பாடுது”, “வண்ண வண்ணச் சொல்லெடுத்து” போன்ற ஆயிரக்கணக்கான ஜிக்கியின் திரையிசைப் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.
 
பி.ஜி. கிருஷ்ணவேணி (பிள்ளைவாள்ளு  கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி) என்ற இயற்பெயரைவிட, செல்லப் பெயரான ஜிக்கி என்பதே பெருவழக்குப் பெறுவதாயிற்று. ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர்தான் ஜிக்கி. சென்னையில் பிறந்து வளர்ந்து, ஆறுவயதில் சங்கீத ஆர்வமுற்று, தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி (1948) திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி “அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே”என்பதைத் தனது 11ஆவது வயதில் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகைய்யா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக்கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக்கேட்ட பிரபல இசைமேதை ஜி.இராமநாதன் அவர்கள், பலரது மறுப்பையும் பொருட்படுத்தாது ஜிக்கியின் 13ஆவது வயதில் (1950இல்) மொடேர்ன் தியேட்டர்ஸாரின் ‘மந்திரி குமாரி’  திரைப்படத்தில் “வாராய் நீ வாராய்”, “உலவும் தென்றல் காற்றினிலே” முதலிய டூயட் பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது, 1950-1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.

1952இல் கே.வி. மகாதேவன் இசையமைத்த ‘குமாரி’ படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ.எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். தொடர்ந்து ராஜா – ஜிக்கி பாடிய நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் மறக்கமுடியாதவைகளாகத் தமிழ்த் திரையிசையுலகை ஆக்கிரமித்துள்ளன. பிரபல வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ‘ஆஹ’ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ‘அவன்’ என்பதில் இந்த ஜோடி இனிய பாடல்களைத் தந்தது. “கண்காணாததும்”, “கல்யாண ஊர்வலம்வரும்”, “ஆகா நானின்று அறிந்து கொண்டேன்”, “உன் பேரைக்கேட்டேன்”,“ஏகாந்தமாம் இம்மாலையில்” முதலான இனிய பாடல்கள் அவனில் ஜிக்கியின் குரலில் ஒலித்தன. பல்வேறு பின்னணிப் பாடகர் – பாடகிகளுடனும் அக்காலத்தில் ஜிக்கி பாடினார். 1955ஆம் ஆண்டு ‘மகேஸ்வரி’ படத்தில் “அழகு நிலாவின் பவனியிலே” பாடலின் ஒத்திகை இடைவேளை யின்போது, ஏ.எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். 1958இல் பெற்றோர் ஆசியுடன் ராஜா-ஜிக்கி திருமணம் நடந்தது.

திருமணத்தையடுத்து 1959இல் ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ படம் பெருவெற்றி பெற்றதுடன், சிறந்த இசையமைப்பாளர் விருதையும் ராஜாவுக்கு ஈட்டிக் கொடுத்தது. தொடர்ந்து ‘தேன்நிலவு’ (1961) வசூலில் தோல்விப் படமானாலும் பாடல்கள் வெற்றிகண்டு ராஜாவின் புகழைக் கூட்டின. எனினும் ஸ்ரீதருடனான ராஜாவின் மனமுறிவு, திரையுலகிலிருந்து தங்களை ஒதுக்கச் சிலர் விரும்புவதாகக் கருதச்செய்தது. ஜிக்கி திரையில் பாடுவதை ராஜா விரும்பவில்லை. இதனால் உடலும் உள்ளமும் வேதனையினால் வருந்த ஜிக்கி குடும்பத்துடன் ஒதுங்கிக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே அவரது சில பாடல்கள் வெளிவந்தன. கணவருடன் இசைநிகழ்ச்சிகளை நடத்திவந்தார். 70களில் சில படங்களில் மீண்டும் ராஜா-ஜிக்கி இணை பாடியது. 1989ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இசைநிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புகைவண்டியில் செல்லும்போது, வள்ளியூருக்கு அருகில் உள்ள நிலையத்தில் இறங்கிய ராஜா, புகைவண்டி புறப்பட்டுவிட்ட அவசரத்தில் வேகமாக ஓடினார். படாதஇடத்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இத்துயர நினைவு ஜிக்கியின் நெஞ்சில் படமாக நிலைத்துவிட்டது. நான்கு பெண்கள் (இருவர் மணமுடித்துவிட்டனர்) இரு ஆண்கள் என ஆறுபிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக மீண்டும் மேடையேறினார். தனது இரு மகன்களான சந்திரசேகர், மகேஸ்குமார் ஆகியோருடன் இசைநிகழ்ச்சிகளில் பாடத்தொடங்கினார்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் பழைய பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்வித்தார். “காதலெனும் கோயில்” (வட்டத்துக்குள் சதுரம் 1978), “ராத்திரி பூத்தது காட்டுரோஜா” (தாயம் ஒண்ணு 1988), “நினைத்தது யாரோ” (பாட்டுக்கொரு தலைவன்), “வண்ண வண்ண சொல்லெடுத்து” (செந்தமிழ்ப் பாட்டு 1994) ஆகிய பாடல்கள் திரையில் ஜிக்கி பாடிய இறுதிப்பாடல்களாகும். 1948-1994 ஆண்டுகள் வரை ஜிக்கியின் திரையிசை வாழ்வுப் பயணம் விட்டுவிட்டுத் தொடர்ந்தது.“அழகோடையில் நீந்தும் அன்னம்”, “நாடகமெல்லாம் கண்டேன்”, “பூவாமரமும் பூத்ததே”, “உள்ளம் ரெண்டும் ஒன்று”, “இன்று நமதுள்ளமே”, “கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே”, “சின்னப்பெண்ணான போதிலே”, “கண்களால் காதல்காவியம்”, “யாரடி நீ மோகினி”, “பேசும்யாழே பெண்மானே”, “அன்பே என்றன் முன்னாலே”, “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ” முதலான பலநூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ்த் திரையுலகில் ஜிக்கியின் புகழை நிலைநிறுத்திக் காட்டுவனவாகும். 

1937ஆம் ஆண்டு பிறந்த இந்த இசைக்குயில், கடந்த சில ஆண்டுகளாக மார்புப் புற்றுநோயினால் வருந்தியது. ஆயிரமாயிரம் இசை ரசிகர் உள்ளங்களைத் தனது இனிய குரலினால் கட்டிப் போட்ட ஜீவநாதம், 16.08.2004 அன்று அதிகாலை அடங்கிற்று. 

Source:-http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=212&Itemid=53

Jikki

Your heart will really ‘thullum’ when you hear the old song ‘Thulladha Manamum Thullum…’ (film – Kalyana Parisu). The singer who gave life to this song with her beautiful voice is no more. ‘Jikki’ – as she was popularly known – died of liver cancer recently in Chennai.

By the way, Jikki’s real name was P G Krishnaveni.

Jikki has sung nearly 10,000 songs in Tamil, Telugu, Kannada,MalayalamHindi and Sinhala language during her career spanning over five decades.

Born to Gajapathi Naidu and Rajakanthamma at Chittoor in Andhra Pradesh, she started her film career as a child artiste at the age of seven in the Telugu movie ‘Pandallama’. Her role was that of a little learning a song from the heroine. She switched over to actual singing at the age of 16.

Music ran in Jikki’s blood. Her uncle Devaraja Naidu was an assistant with famous Kannada music director Gubbi Veeranna.

In 1946, she once again hit the silver screen with the movie ‘Mangalasutram’, the remake of an English movie called ‘Excuse Me’. She slowly started penetrating the Tamil film industry. In 1948, she got a chance to sing for the Tamil movie ‘Gnanasoundari’. This was the turning point in her life. Jikki sang for the heroine, when she was young, and was played by Baby Rajamani, the song ‘Arultharum Devamatha’, which was a big hit: This changed actress Jikki into playback singer Jikki.

There was no stopping her after this. She got several chances to sing playback in all southern languages. She has sung many songs with P Leela, another famous playback singer of yesteryear. The song which they sang together and nobody can forget is ‘Kannum Kannum Kalandu Sondham Kondaduthey’ in the Gemini-starrer ‘Vanji Kottai Valiban’.

Another turning point in Jikki’s life was her marriage to playback singer and music director A M Raja. A M Raja-Jikki duets have been super-duper hits. The Tamil movie ‘Then Nilavu’ was a big hit also because of these two all-time great singers.

Jikki has also sung many songs in her husband’s music direction – songs that still play inradio stations.

A mother of six children, Jikki lost her husband in a train mishap. He slipped and fell between the tracks while boarding a train even as Jikki sat inside and watched helplessly. This was one incident that she could never forget.

After her husband’s death Jikki stopped singing for sometime. Then she came out of her retirement and sang for Ilayaraja. She also started a music troupe with her two daughters and performed in many countries.

Tamil Nadu Chief Minister J Jayalalithaa had granted Jikki of Rs 1 lakh from the Dr MGR Trust after hearing about her illness and her difficulty to meet the treatment expenses.

The singer with whom she had “sariyana potti” – P Leela – turned very emotional on learning about Jikki’s death. She said though they were contemporaries there was no carping. They were like “sisters”. Leela stayed in touch with Jikki till her death.

It is only the physical frame of Jikki that has left the world. We have captured her very breath, her sweet music, in so many records, cassettes and discs. Jikki’s songs will “inba theninum vellum”.
Source:-http://web.archive.org/web/20100327041422/http://archives.chennaionline.com/chennaicitizen/2004/08jikki.asp

G.Krishnaveni alias Jikki-Manamagal 1951-1

Leave a comment