Beeli Sivam

பீலி சிவம்

பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி பிறந்தார். இளமையில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் முன் நாடகங்களிலும் நடத்துள்ளார். 1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியுள்ளது.

இவர் 2009 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர். 1995ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு நாடகத்துறையில் சிறந்த நடிகர் என்ற கலைமாமணி பட்டத்தை அளித்துள்ளது.

பழம்பெரும் திரைப்பட, நாடக மற்றும் சின்னத்திரை நடிகர். மல்லிகைப்பூ [1973], தர்மபுரி, முந்தானை முடிச்சு [1983], மாரியாத்தா மனசு வச்சா [1983] ,வெற்றி விநாயகர் [1996] போன்ற 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் மற்றும் துணக்கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் நெடுந்தொடர்களில் நடித்து வருகிறார்.

சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம், வேலூரில் சி.எம்சி-யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 25.9.2017 அன்று தனது 79-ஆவது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இறையருட்செல்வர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த “வெற்றி விநாயகர்” படத்தில் இவர் தேவேந்திரனாக வேடமேற்று சிறப்பித்திருந்தார்.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

முகம்மது பின் துக்ளக் [1971], எடுப்பார் கைப்பிள்ளை [1975], குமார விஜயம் [1976],     அனிச்சமலர் [1981], சமயபுரத்தாளே சாட்சி [1983], நான் மகான் அல்ல [1984], பொய் சாட்சி [1982], அழகன் [1991], நினைவுகள் [1984]

வெற்றி விநாயகர் படத்தில் ஒரு காட்சி. விநாயகருக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்த கௌண்டில்ய மாமுனிவரிடம் [ஷண்முக சுந்தரம்] அவரது மனைவி ஆசிரியையிடம் [சங்கீதா ] அவரது தோழியர் சக்கரவர்த்தி சோமசுந்தரரின் வேள்வியை நடத்தி வைத்ததற்காக  அரண்மனையில் தந்த காணிக்கைகள் என்று தாங்கள் பெற்று வந்த பரிசுப் பொருட்களைச் சுட்டிக்காட்டி தங்களது கணவரும் சக்கரவர்த்தியின் வேள்வியை நடத்தி வைத்திருந்தால் இவையெல்லாம் உங்களுக்கும் கிடைத்திருக்குமே என்பார்கள். அத்துடன் அவர்தான் நாள் தோறும் 108 அருகம் புற்களைப் போட்டு  விநாயகருக்கு பூஜைகள் நடத்தி வைக்கிறாரே, அவர் எங்கே  இதையெல்லாம் நடத்தி வைக்கப் போகிறார் என்பார்கள்.

ஆசிரியை உன் முகத்தில் ஏதோ குழப்பம் தெரிகிறதே? என்று கௌண்டில்ய முனிவர் தனது மனைவி ஆசிரியையிடம் கேட்பார். அவர் ஒன்றும் இல்லை என்பார். பெண்கள் ஒன்றுமில்லை என்று சொன்னாலேயே ஏதோ விவகாரம் தொடங்கிவிட்டது என்றுதானே பொருள். அது என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா என்று மீண்டும் கேட்க, நீ விரும்பியதைக் கேள் என்று சொல்ல, சுவாமி மன்னர்களை நாடிச்செல்லும் முனிவர்கள் எல்லாம்  பொன்னும் பொருளும் பெற்றுச் செல்கிறார்கள். நாமும் மன்னர்களிடம் சென்று……என்று ஆசிரியை இழுக்க மண்ணை ஆளும் இந்த மன்னர்களிடமா…? விண்ணுல வேந்தன், முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன் அந்த தேவேந்திரனிடமே சென்று கேட்கலாமே என கௌண்டில்ய முனிவர் கேட்டு என் யோக சக்தியால் நான் அந்த இந்திர லோகத்திற்கே உன்னை அனுப்புகிறேன் வா என்று சொல்லி தனது மனைவியை அழைத்துச் சென்று ஒரு அருகம்புல்லைக் கிள்ளி இந்த அருகம்புல்லின் எடைக்கு எவ்வளவு செல்வம் கிடைக்குமோ அதை மட்டும் பெற்றுக்கொண்டு வா என்பார் கௌண்டில்ய முனிவர். அவ்வண்ணமே அவரும் இந்திர லோகம் செல்வார்.

மகாராஜா பூலோகத்திலிருந்து யாரோ ஒரு ரிஷி பத்தினி வந்திருக்கிறார் என்பார் அரண்மனை ஏவலன்.

தேவேந்திரன்: முனிவரின் பத்தினியை அழைத்து வாருங்கள்.

நாரதர்: தேவேந்திரா வந்திருப்பவர் சாதாரணப் பெண்மணி அல்ல, வனம், வாக்கு,

காயங்களால் கணபதியைத் துதிக்கும் கௌண்டில்யனின் பத்தினி ஆசிரியை.

தேவேந்திரன்: (அதைப் பொருட்படுத்தாமல்) அப்படியா? வாருங்கள் எவருமே வர

முடியாத இந்திர லோகத்திற்கு தாங்கள் வந்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.

ஆசிரியை: தேவர் தலைவா… இந்திர சபைக்கு வந்து தங்களைத் தரிசிக்க

முடியுமென்று இன்று வரை நானும் நினைத்ததில்லை. என் சுவாமியின்

யோக சக்தியால் இப்படி ஒரு பாக்கியம் எனக்குக் கிட்டியது.

தேவேந்திரன்: ம்ஹும் தாங்கள் வந்த காரியத்தை நான் அறிந்து கொள்ளலாமா?

ஆசிரியை: அது அது……

தேவேந்திரன்: ம் சொல்லுங்கள்

ஆசிரியை: தயக்கமாக இருக்கிறது.

நாரதர்:கௌண்டில்ய முனிவர் இங்கு எதற்கு அனுப்பினாரோ அதைச்சொல்லிவிடேன்

ஆசிரியை: நினைந்த பொருளைப் பெறவேண்டுமெனதான் வந்தேன். ஆனால்….

தேவேந்திரன்: என்ன?

ஆசிரியை: ஒரு நிபந்தனை.

தேவேந்திரன்: நிபந்தனையா? இந்த இந்திரனுக்கா?

ஆசிரியை: தங்களுக்கல்ல…. எனக்கு……

தேவேந்திரன்: ஓ எதுவாயினும் கேளுங்கள்

ஆசிரியை: இந்த அருகம்புல்லின் எடைக்கு என்ன கிடைக்குமோ அதை மட்டும்

பெற்றுக்கொண்டு வரவேண்டுமென்று என் சுவாமி கூறியிருக்கிறார்.

தேவேந்திரன்: அருகம் புல் எடைக்குப் பொருளா? ஹ ஹா….. திருமகளின் அருள்

நிறைந்திருக்கும் இந்த அவையில் நின்று கொண்டு இந்த அருகம் புல்

எடைக்குப் பொருள் கேட்கிறார் இந்த அம்மையார். ஹ ஹா ஹா….

அவையோர் அனைவரும் சிரிக்கின்றனர். இந்தச் சிரிப்பு கௌண்டில்ய முனிவருக்குக் கேட்கிறது.

தேவேந்திரன்: அற்புத சக்தி வாய்ந்த கற்பக விருட்சத்திற்கு அதிபதி நான். எதைக்

கேட்டாலும் கொடுப்பதற்குக் காமதேனு என் ஏவலுக்காகக் காத்திருக்கிறது.

என்னிடம் இந்த அருகம்புல்லை அனுப்பிவைத்து ஏளனம் செய்கிறாரா

தங்கள் கணவர்? ஆ…. தங்களுக்கு என்னவேண்டும் சொல்லுங்கள்?

ஆசிரியை: மன்னிக்க வேண்டும் மகாதேவா… என் சுவாமியின் சொல்லுக்கு மாறுபட்டு

நான் நடந்துகொள்ளமாட்டேன். சரியோ தவறோ குறையோ நிறையோ…

அந்த அருகம்புல்லின் எடைக்கு என்ன கிடைக்குமோ அதை மட்டும்

கொடுத்தால் போதும்.

நாரதர்: இந்திரா கொடுப்பவர் கொடுத்தாலும் அவரவரின் கொடுப்பினைபடிதானே தங்கும்.

அப்படியே செய்துவிடு.

தேவேந்திரன்: நல்லது.தங்களின் விருப்பப்படியே நடக்கட்டும். குபேந்திரா இந்த ரிக்ஷி

பத்தினியின் விருப்பப்படி இந்த அருகம் புல்லை துலாக்கோலில் இட்டு

இதற்கு எவ்வளவு தரமுடியுமோ அதைக்கொடுத்தனுப்பு. (ஏழனத்துடன்)

துலாக்கோலில் அருகம்புல் வைக்கப்படுகிறது. எனினும் எத்தனையோ துலாக்கோலில் வைத்த பின்னரும் அருகம்புல்லிற்கு ஈடாகவில்லை. தனது கிரீடத்தைக்கூட வைத்த பின்னரும் நிகராகாததால் விழி பிதுங்கி நின்ற தேவேந்திரன் நாரதரிடம் இனி செய்ய வேண்டுமென கேட்கிறார். இதைக்கொடுத்தனுப்பிய கௌண்டில்ய முனிவருக்கு நீங்கள் எல்லோரும் அடிமை என நாரதர் சொல்ல, அப்போதுதான் தன் தவறை உணர்ந்து தேவேந்திரன் ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்கிறார். தயவு செய்து கௌண்டில்ய முனிவரிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள் தாயே என கேட்க எல்லோரும் கௌண்டில்ய முனிவரைச் சந்தித்து மன்னிப்பு கேட்க அவரும் மன்னிக்கிறார்.

கோவை கொண்டுவரப்பட்டது மறைந்த நடிகர் பீலிசிவம் உடல்…பொதுமக்கள் அஞ்சலி!

Updated: Tuesday, September 26, 2017, 8:20 [IST]

மதுரை : பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பிறந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இளமையில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் முன் நாடகங்களிலும் நடத்துள்ளார். 1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியுள்ளது. தூரத்து இடி முழக்கம்’ படம் மூலம் அறிமுகமானவர் பீலி சிவம். இப்படத்திற்கு நடிகர் விஜயகாந்துடன் விருத்தகிரி வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகர் முகமது பின் துக்ளக், அபிமன்யு, தங்க பாப்பா போன்ற பழைய ஹிட் படங்களில் நடித்த இவர் பிற்காலத்தில் சின்னத்திரையிலும் வலம் வந்தார். உறவுகள் போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் நடித்துள்ளார். குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் இவர் 2009 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர். 1995ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு நாடகத்துறையில் சிறந்த நடிகர் என்ற கலைமாமணி பட்டத்தை அளித்துள்ளது.

வேலூரில் மரணம் சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம், வேலூரில் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

சொந்த ஊரில் அஞ்சலி இந்நிலையில் இறந்த பீலிசிவத்தின் உடல் வேலூரில் இருந்து இன்று அதிகாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

x26-1506394146-veteran-actor-peeli-sivam-was-passed-away3.jpg.pagespeed.ic.rp-_3Mx8W0x26-1506394154-veteran-actor-peeli-sivam-was-passed-away1.jpg.pagespeed.ic.PrkwIPixTZ

“வெற்றி விநாயகர்” [1996] படத்தில் பீலிசிவம்

BeeliSivam-Vetri Vinayagar 1996- BeeliSivam as DevEndran -Vetri Vinayagar 1996-BeeliSivam-Vetri Vinayagar 1996-1

“வெற்றி விநாயகர்” [1996] படத்தில் ஷண்முக சுந்தரத்துடன் பீலிசிவம்BeeliSivam-Shunmugasundaram-Vetri Vinayagar 1996-

“வெற்றி விநாயகர்” [1996] படத்தில் சங்கீதாவுடன் பீலிசிவம்Beeli sivam-Sangeetha-Vetri Vinayagar 1996-

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் பீலிசிவம் Beeli Sivam-Naan Mahan Alla 1984-Beeli Sivam-Naan Mahan Alla 1984-2Beeli Sivam-Naan Mahan Alla 1984-3Beeli Sivam-Naan Mahan Alla 1984-4

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் செந்தாமரையுடன் பீலிசிவம் Beeli Sivam-Senthamarai-Naan Mahan Alla 1984-

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் ”சோ” வுடன் பீலிசிவம் Beeli Sivam-CHO-Naan Mahan Alla 1984-

”நான் மகான் அல்ல” [1984] படத்தில் ரஜினிகாந்துடன் பீலிசிவம் Beeli Sivam-Naan Mahan Alla 1984-1

“குமாரவிஜயம்” [1976] படத்தில் பீலி சிவம்Beeli Sivam-Kumara Vijayam 1976-Beeli Sivam-Kumara Vijayam 1976-2Beeli Sivam-Kumara Vijayam 1976-3Beeli Sivam-Kumara Vijayam 1976-1

“குமாரவிஜயம்” [1976] படத்தில் வி.கே.ராமசாமியுடன் பீலி சிவம்Beeli Sivam-VKR-Kumara Vijayam 1976-1Beeli Sivam-VKR-Kumara Vijayam 1976-

“குமாரவிஜயம்” [1976] படத்தில் கமலஹாசன், ஜெய்சித்ரா, வி.கே.ராமசாமியுடன் பீலி சிவம்

Beeli Sivam-VKR-Kamalahassan-Jayachithra-Kumara Vijayam 1976-Beeli Sivam-VKR-Kamalahassan-Jayachithra-Kumara Vijayam 1976-1

“முகம்மது பின் துக்ளக்” [1971] படத்தில் சோவுடன் பீலி சிவம் Beeli Sivam-Mohammed Bin Tughlaq 1971-1Beeli Sivam-Mohammed Bin Tughlaq 1971-Beeli Sivam-Cho-Mohammed Bin Tughlaq 1971-Beeli Sivam-Cho-Mohammed Bin Tughlaq 1971-1

“எடுப்பார் கைப்பிள்ளை” [1975] படத்தில் நீலு, மனோரமாவுடன் பீலிசிவம் Beelisivam-Neelu-Manorama-Eduppar Kai Pillai 1975-Beelisivam-Neelu-Manorama-Eduppar Kai Pillai 1975-1

‘சமயபுரத்தாளே சாட்சி” [1983] படத்தில் இளவரசியுடன் பீலிசிவம் Beelisivam-Samayapurathale Satchi 1985-1Beelisivam-Samayapurathale Satchi 1985-2Beelisivam-Samayapurathale Satchi 1985-Beelisivam-Elavarasi-Samayapurathale Satchi 1985-1

“இமைகள்” [1983] படத்தில் சுதர்ஸனுடன் பீலிசிவம் Beelisivam-Emaigal 1983-1Beelisivam-Emaigal 1983-Beelisivam-Sudarsan-Emaigal 1983-1Beelisivam-Sudarsan-Emaigal 1983-

“அனிச்ச மலர்” 1981 படத்தில் எஸ்.ரஜினியுடன் பீலி சிவம்Beeli Sivam-Anitcha Malar 1981-2Beeli Sivam-Anitcha Malar 1981-Beeli Sivam-Anitcha Malar 1981-1Beeli Sivam-Anitcha Malar 1981-3Beeli Sivam-Rajani-Anitcha Malar 1981-

“அனிச்ச மலர்” 1981 படத்தில் சத்யப்ரியாவுடன் பீலி சிவம்Beeli Sivam-Sathya Priya-Anitcha Malar 1981-

”தூரத்து இடிமுழக்கம்’’ 1980 படத்தில் பூர்ணிமாவுடன் பீலிசிவம்Beeli Sivam-Dhoorathu Idi Muzhakkam 1980-3Beeli Sivam-Dhoorathu Idi Muzhakkam 1980-2Beeli Sivam-Dhoorathu Idi Muzhakkam 1980-1Beeli Sivam-Dhoorathu Idi Muzhakkam 1980-Beeli Sivam-Poornima-Dhoorathu Idi Muzhakkam 1980-Beeli Sivam-Poornima-Dhoorathu Idi Muzhakkam 1980-1

“பொய் சாட்சி” 1982 படத்தில் பீலி சிவம்Beeli Sivam-POI SATCHI 1982 -1Beeli Sivam-POI SATCHI 1982 -Beeli Sivam-POI SATCHI 1982 -2

“அழகன்” 1991 படத்தில் பீலிசிவத்துடன் மம்முட்டிbeelisivam-azhagan-1991beelisivam-mammootty-azhagan-1991beelisivam-mammootty-azhagan-1991-152

“நினைவுகள்”1984 படத்தில் ஸ்ரீப்ரியாவுடன் பீலி சிவம்beeli-sivam-ninaivugal-1984-1beeli-sivam-ninaivugal-1984beelisivam-sreepriya-ninaivugal-1984beelisivam-sreepriya-ninaivugal-1984-1

“நினைவுகள்”1984 படத்தில் வெண்ணிற  ஆடை மூர்த்தியுடன் பீலி சிவம்beeli-sivam-va-murthi-ninaivugal-1984

“நினைவுகள்”1984 படத்தில் சரத்பாபு, ஸ்ரீப்ரியாவுடன் பீலி சிவம்beelisivam-sarathbabu-sreepriya-ninaivugal-198458

”சின்னக்குயில் பாடுது” 1987 படத்தில் சோவுடன் பீலிசிவம்Beeli Sivam-Cho-ChinnaKuil Paduthu 1987-Beeli Sivam-Cho-ChinnaKuil Paduthu 1987-160

8 comments on “Beeli Sivam

  1. நினைத்ததை முடிப்பவன் கமிஷனர் வேடம் ,துரத்து இடிமுழக்கம் இணை கதாநாயகன். திறமை இருந்தும் அதிர்ஷடம் இல்லை

  2. பழம்பெரும் நடிகர் பீலி சிவம் மதுரையில் காலமானார்

    From dinamalar

    Message shared by Mr.Sethuraman

  3. ‘கலைமாமணி’ பீலி சிவம் காலமானார்
    பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம் 80 வயதில் இன்று காலமானார்.

    பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பிறந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

    முகமது பின் துக்ளக், அபிமன்யு, தங்க பாப்பா போன்ற பழைய ஹிட் படங்களில் நடித்த இவர் பிற்காலத்தில் சின்னத்திரையிலும் வலம் வந்தார். உறவுகள் போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் நடித்துள்ளார். குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

    இளமையில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் முன் நாடகங்களிலும் நடத்துள்ளார். 1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியுள்ளது.

    வேலூரில் மரணம் சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம், வேலூரில் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

  4. i forgot the dd chennai serial name that was aired in 1990s. it was about the plight of salt factory workers… (manapadu sea shore)..in that he played villain role, other artists i remembered were actress balambiga and kambar jayaram…please let me know the serial name…

  5. பீலிசிவம் அவர்களை நான் எனது சொந்த ஊரான மேட்டுப்பாளையம் அருகே உள்ள வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே நடைபெற்ற பொய் சாட்சி படப்பிடிப்பின் போது பார்த்திருக்கிறேன்….அப்போது இவர் பெயர் பீலிசிவம என்பதெல்லாம் தெரியாது… படத்தில் சுமித்ராவின் கணவராக நடித்திருப்பார்… சுமித்ரா பாக்யராஜுக்கு அக்காவாக நடித்திருப்பார்…படத்தை டைரக்ட்செய்தது பாக்கியராஜ்தான்… சுமித்ரா எதிர்பாரா சிக்கலில் மாட்டிக் கொண்ட கணவரை நினைத்து கடவுளிடம் வருத்தப்பட்டு வேண்டிக் கொள்ளும் காட்சியை படமாக்கினார் பாக்கியராஜ்..கேமராவிற்கு பின்பு நின்றபடி சுமித்ராவிற்கு கட்டளை பிறப்பித்தபடியிருந்தார்.. ஆனால் என்ன காரணத்தாலோ படம் வெளியான போது இயக்குனர் என்று வேறொருவர் பெயரை போட்டிருந்தனர் என நினைக்கிறேன்.
    .அதே போல் பீலிசிவம்- சுமித்ரா மகளாக நடித்த அனுராதா, தன் தம்பி காஜா செரீப் மற்றும் சிறு தங்கையுடன் கோயில் திருவிழாவில் பொங்கலிடுவது போன்ற காட்சியையும் படமாக்கினார் பாக்கியராஜ். அனுராதா படு கவர்ச்சியாக பாவாடை தாவணியில் காட்சியளித்தார்.. மாராப்பை படு கவனமாக நடுவில் போட்டிருந்தார்…. இந்த படப்பிடிப்பு முழுக்க முடியும் முன்னரே தனது காதலர் சதீஷ் என்பவருடன் கொல்கத்தா சென்றுவிட்டார்… பின்னர் நடிகை உமாவை போட்டு படத்தை முடித்தனர்.. இந்த பீலிசிவம் எனது ஊர்க்காரர் என்று இந்த பக்கத்தை பார்த்த பின்னரே தெரிந்தது.
    பின்னர் பல படங்களில் இவரை பார்த்திருக்கிறேன்.

Leave a comment