Parvathamma Rajkumar dead, wife of late actor Rajkumar was 78

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவியும், ஸ்டூடியோ அதிபரும், 80 படங்களுக்கும் மேல் தயாரித்துள்ள தயாரிப்பாளருமான பர்வதம்மா நேற்று [31.5.2017] அதிகாலை பெங்களூருவில் மரணமடைந்தார். அன்னாரது வயது 78.  Continue reading

Telugu director Dasari Narayana Rao dead, he was 75

பிரபல தெலுங்கு இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், கதை-வசனகர்த்தா, அரசியல்வாதியாக திகழ்ந்த தாசரி நாராயணராவ் நேற்று [30.5.2017] ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார். அன்னாருக்கு வயது 75. இவர் 151 படங்களை இயக்கியுள்ளார். 53 படங்களைத் தயாரித்துள்ளார். 150 படங்களுக்கு கதை,வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஸ்ரீப்ரியாவின் சொந்தப்படமான “நட்சத்திரம்” என்ற படத்தினையும் ‘பொக்கிஷம்” படத்தையும் இவர்தான் இயக்கினார். Continue reading

Poet & Lyricist Na.Kamarasan Passes Away

600–க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் சென்னையில் நேற்று [24.5.2017] இரவு மரணமடைந்தார். அன்னாருக்கு வயது 75. அவருடைய இறுதிச்சடங்கு இன்று [25.5.2017] நடக்கிறது.

Continue reading

Popular Tamil Actor Vinuchakravarthy Passes Away

கதை, வசனகர்த்தா, குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் 1003 படங்களில் நடித்த வினுச்சக்கரவர்த்தி 27.4.2017 (நேற்று) அன்று தனது 72 ஆவது வயதில் உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை, சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலேயே இரவு 07.00 மணியளவில் காலமானார். இறுதிச் சடங்குகள் லண்டனிருக்கும் அவரது மகன் சரவணன் வருகைக்குப் பின் இன்று (28.4.2017) மாலை 4 மணியளவில் நடைபெறவிருக்கிறது. Continue reading

Cinematographer, Director N.K. Viswanathan Dies

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான என்.கே.விஸ்வநாதன், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. Continue reading

Kamalahaasan’s brother and producer Chandrahaasan dead in U.K.

நடிகர் கமலஹாசனின் அண்ணனும், தயாரிப்பாளருமான சந்திரஹாசன் தனது 82-ஆவது வயதில் இலண்டனில் தனது மகள் அனுஹாசனுடன் தங்கியிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன் தினம் [18.3.2017] மரணமடைந்தார். இவர் ராஜபார்வை படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்திருக்கிறார்.

Continue reading

Tamil-Telugu actress Jayasudha’s producer husband Nitin Kapoor found dead, suicide suspected

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ்  கபூர் [வயது 58]  நேற்று [14.3.2017] மும்பையிலுள்ள தனது குடியிருப்புப் பகுதியின் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Continue reading

Director Cheyyar Ravi Passes Away!

இயக்குநர் செய்யாறு ரவி மரணம்… அரிச்சந்திரா, தர்மசீலன் படங்களை இயக்கியவர்!

இயக்குநர் செய்யாறு ரவி இன்று சென்னையில் காலமானார். இவர் தர்ம சீலன், அரிச்சந்திரா, தர்மயுத்தா (சிங்களம்) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற பிரபலமான தொடர்களையும் இயக்கியுள்ளார். தர்மயுத்தா படம், மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆகும். விரைவில் வெளியாக உள்ளது.
Continue reading

Comedy Actor “Thavakkalai” Chittibabu Passes Away

முந்தானை முடிச்சு படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் தவக்களை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 42. தொடர்ந்து ஓசை, என் இரத்தத்தின் இரத்தமே,  நீங்கள் கேட்டவை, தங்கமடி தங்கம், நாலு பேருக்கு நன்றி, பொண்ணு பிடிச்சிருக்கு, நேரம் நல்ல நேரம், ஆத்தோர ஆத்தா, மணந்தால் மஹாதேவன் போன்ற தமிழ்ப் படங்கள் உள்ளிட்ட 496 படங்களில் நடித்தவர் தவக்களை சிட்டிபாபு. தவக்களையின் இறுதிச்சடங்கு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வடபழனி ஏ.வி.எம். மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading

Cho Ramaswamy dies in Chennai hospital after heart attack

பிரபல நகைச்சுவை நடிகரும், எழுத்தாளரும், பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான “சோ” ராமசாமி அவர்கள் இன்று அதிகாலை 3.58 அளவில் தனது 82-ஆவது வயதில் காலமானார். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த “சோ” சில தினங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிட்சை பலனின்றி இன்று 7.12.2016 காலமாகிவிட்டார். Continue reading