Famous Choreographer Sarojkan dies of a heart attack.

தமிழில் தாய்வீடு, இருவர் ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்துள்ள நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 71.

இந்தி திரைப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
புகழ் பெற்ற இந்தி திரைப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் மூச்சுத் திணறல் காரணமாக மும்பையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லையென்பது உறுதியானது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு சரோஜ்கான் மரணமடைந்தார். அவருக்கு வயது 71. சிறுவயதில் திரைப்படங்களில் நடித்த சரோஜ்கான் தனது 13-வது வயதில் 41 வயது நடன இயக்குனர் சோஹன்லாலை திருமணம் செய்து கொண்டார்.
அவரிடம் நடனம் கற்று நடன உதவி இயக்குனரானார். 1974-இல் ‘கீதா மேரா நாம்’ என்ற இந்தி படத்தின் மூலம் நடன இயக்குனர் ஆனார். 1987-இல் வெளியான மிஸ்டர் இந்தியா படத்தில் இடம் பெற்ற ஹவா ஹவா பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
1980 மற்றும் 90-களில் இந்திப் படவுலகில் புகழ்பெற்ற நடன இயக்குனராக வலம் வந்தார். 40 வருடங்களாக நடன இயக்குனராக பணியாற்றி வந்தார்.
தேஜாப் படத்தில் இடம்பெற்ற ஏக் தோ தீன் பாடல் காட்சியில் மாதுரி தீட்சித் ஆடிய நடனம் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இந்த பாடலுக்கு சரோஜ்கான்தான் நடனம் அமைத்திருந்தார், தாக் தாக், தம்மா தம்மா உள்பட பல பாடல்கள் இவரது நடனத்தில் புகழ் பெற்றன. நடிகை மாதுரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் பல படங்களுக்கு இவர்தான் நடன இயக்குனர்.
தமிழில் தாய்வீடு, இருவர் ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். 2 ஆயிரம் பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். சரோஜ்கான் மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர்.
நன்றி:-https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/04123907/Famous-ChoreographerSarojkan-dies-of-a-heart-attack.vpf

புகழ்பெற்ற நடன இயக்குநர் மரணம்!

Published on 03/07/2020 (10:13) | Edited on 03/07/2020 (10:32)

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ் கான், இன்று மாரடைப்பால் காலமானார்.

சரோஜ் கான் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை அன்று மும்பை குருநானக் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார். சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

நன்றி:-https://www.nakkheeran.in/cinema/cinema-news/famous-dance-choreographer-passed-away

9 comments on “Famous Choreographer Sarojkan dies of a heart attack.

 1. அன்புள்ள அன்று கண்டமுகம் குழுவில் உள்ள அனைவருக்கும் சகோதரர்கள் செந்தில் மற்றும் சகாதேவன் மற்றும் சேதுராமன் சார் சகோதரிகள் மாலா மற்றும் காயத்ரி அவர்களுக்கும் என் தாழ்மையான வணக்கங்கள். சரோஜ் கான் பற்றிய ஒரு காணொளியை என் கணவர் பாபுவின் சிநேகிதர் வெங்கட் பிரபு அனுப்பியிருந்தார். அதை நாங்கள் பார்த்த பின்பு இரண்டு நாட்களுக்கு சாப்பிடவே முடியவில்லை, திரைத்துறையில் பணியாற்றிய ஒரு நடன இயக்குனருக்கு இவ்வளவு சோகமா…அதுவும் உலகப்புகழ் பெற்ற பாடல்களை திறம்பட நடன இயக்கம் செய்தவருக்கு வாழ்க்கை என்பதே எதிர் நீச்சல் ஆகி விட்டது.
  தமிழில் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு மற்றும் மனோரமாவின் மகன் பூபதி குடித்து குடித்தே நாசமா போனார்கள். ஆனந்த் பாபுவிற்கு போதை மருந்து பழக்கம் வேறு.நாகேஷும் அவர் மனைவியும் செய்த கொலையின் பின்விளைவுகள் தான் இது என்று கோலிவுட் வட்டாரம் கிசுகிசுத்துக்கொண்டு இருந்ததென்னவோ வாஸ்தவம் தான்.
  ஆனால் உழைப்பினையும் வறுமையையும் தவிர ஒன்றுமே தெரியாதவர் சரோஜ். பத்து வயதிலே திரைப்படத் துறைக்கு தள்ளப்பட்டு நடனத்தின் மேல் உள்ள அதீத காதலால் முன்னுக்கு வந்தவர். கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை உதறித்தள்ளி விட்டு இயக்குனராக தனது பரிணாமத்தை வெளிப்படுத்தியவர்.

  எவ்வாறு இவரது திறமை அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது
  இவரது திருமண வாழ்வில் ஏன் இத்தனை சோகம்

  – தொடர்வேன்..

  நன்றி

  சம்யுக்தா பாபு
  மகாலிங்கபுரம்
  சென்னை

  • சம்யுக்தா பாபு கொலை வழக்கில் சிக்கி கைதாகி சிறை சென்று மூன்று வருடகாலம் தண்டனையை அனுபவித்தவர் நாகேஷ் அவர்களின் மனைவி ரெஜினா. நாகேஷுக்கும் வழக்கிற்கும் தொடர்பிருந்ததாக எங்குமே படிக்கவோ, கேள்விப்படவோ இல்லை. அவ்வாறிருக்க திரு.நாகேஷ் அவர்களின் பெயருக்கு, அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து ஏன் களங்கம் கற்பிக்க வேண்டும். வாய் புளித்ததோ, மாங்கா புளித்ததோ என்று எதையாவதைப் பதிவிடுவதை இங்குத் தவிர்க்கலாமே.

 2. திரு.சகாதேவன் விஜயகுமார் அவர்களே,

  வாசகர்கள் அனுப்புகின்ற பதிவுகளில் ஏதாவது தவறாக தெரிந்தால்……
  இந்த வலைதளத்தின் அட்மின் என்ற முறையில் அந்தப் பதிவை நீங்களே delete செய்து விடலாமே……..

  • நான் பதிவை நீக்குவது என்பது மிகவும் எளிது திரு.சேதுராமன். தவறைச் சுட்டிக்காட்டுவது தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் சுட்டிக்காட்டினேன். சம்யுக்தா பாபு நாகேஷ் அவர்கள் குறித்து மேலே இரண்டு விடையங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்விரண்டுமே நானும் அறிந்ததுதான். அதில் ஒரு சிறு திருத்தம் கே.பாலசந்தர் ஒரு படத்திற்காக நாகேஷை மிகவும் எதிர்பார்த்தபோது எம்.ஜி.ஆர். படத்தைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர். படம் பெரிதா, பாலசந்தர் படம் பெரிதா என்று பாலசந்தரின் மனம் புண்படும்படியாக பேசியதால் சுமார் 4 வருடங்கள் கே.பாலசந்தரின் படங்களில் நாகேஷுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அதன்பின்னர் பலருடைய முயுற்சியால் மீண்டும் இருவரும் இணைந்தனர். வலைத்தளங்களில் பலரும் பலவிதமாக பதிவிடுவர். அவையனைத்தும் உண்மையாகிவிடுவதில்லை. அதையே பின்பற்றி இதுவரைக் கேள்வியுறாத தகவலைப் பதிவிடுவது உகந்ததாக இருக்காது. அதனால் தான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

 3. சகோதரர் சகாதேவன் அவர்களே

  உங்கள் கூற்றை ஒத்து கொள்கிறேன். நான் எழுதியதை நீங்கள் delete செய்தாலும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன்..எனக்கு அறிந்ததை நான் எழுதினேன் . அதில் தவறு ஏதேனும் தென்பட்டால் தயை கூறி என் பதிப்பை வெளியிட வேண்டாம். ஆனால் நாகேஷின் வாழ்க்கையில் நிறைய பிரச்னைகள் இருந்தது என்பது வலைத்தளங்களில் பதிவாகி உள்ளது. எம்ஜிஆர் அவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டது என்று படித்த ஞாபகம் .. பின்னர் கே பாலச்சந்தருடன் கூட நாகேஷுக்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பேசாமல் சிறிது நாட்கள் இருந்தார்கள் என்றும் காணொளி ஒன்றைக்கண்டேன்.

  சகோதரர் சகாதேவன் அவர்களே இது உங்களது வலை தளம். நான் ஒரு மெம்பெர்..அவ்வளவு தான். உங்களுக்கு தான் முழு உரிமையும்… நீங்கள் செய்து வரும் சேவை மகத்தானது …உங்கள் மனம் புண்படும் படி எதுவும் எழுதி உங்களை வருத்தப்படுத்துவதில் பயன் ஏதும் இல்லை. அதற்கு நானே ஒதுங்கி கொள்வது தான் சிறப்பு. எனது பதிவுகள் சரியாக இல்லா விட்டால் நானே விலகிக்கொள்கிறேன்…அது தான் நியாயம்

  மறுபடியும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…

  மற்ற படி நாகேஷ் ஒரு தலை சிறந்த நடிகர் என்பதை மறுப்பதற்கு இல்லை,

  நன்றி

  சம்யுக்தா பாபு

  Gayatri – thanks sister for your appreciation. I am producing the next part on Saroj Khan below…

  • சகோதரி சம்யுக்தா பாபு அவர்களுக்கு,

   நமது .சகோதரர் திரு.சகாதேவன் விஜயகுமார் அவர்கள் சுட்டிக்காட்டிய தவறுகளுக்காக, நீங்கள் நமது வாசகர் வட்டத்தில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை…

   உங்களது பல பதிவுகள் எங்கள் மனதைக் கவர்ந்தன…

   எப்போதும்போல உங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பதிவிடுங்கள்…

   பதிவிடுவதற்கு முன்அந்த தகவல் சரிதானா..?? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்..

   உங்களது சகோதரர்
   சேதுராமன்

 4. சரோஜ் கான் ஹிந்து மதத்தை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் தோன்றியும் உள்ளார். பதிமூன்று வயதில் தன்னை விட 28 வயது மூத்தவரான டான்ஸ் மாஸ்டர் சோஹன்லால் அவர்களை மணம் புரிந்தார் சரோஜ். இந்த இளம் பெண்ணுக்கு தனது டான்ஸ் குருவின் மீது உள்ள குரு பக்தி எப்பொழுது காதலாக மாறியது என்றே தெரியவில்லை. சோஹன்லால் அவர்களின் சகோதரரும் நடன இயக்குனர் தான். ஒரு நாள் சோஹன்லால் சிறிய பெண்ணான சரோஜினி கழுத்தில் ஒரு கருப்பு கயிற்றைக்கட்டி “நீ தான் என் மனைவி” என்கிறார். அதுவே சரோஜின் திருமண வாழ்க்கை. தனது பதினான்கு வயதில் ஹமீத் கான் என்ற பிள்ளையை பெற்று எடுத்தார். முதல் மகனுக்கு பெயர் வைத்தது ராஜு என்று… ஆனால் மூன்று வருடங்கள் கழித்து சரோஜ் கானும் சோஹன்லாலும் பிரிந்து விட்டனர். ராஜு கானுக்கு பிறகு பிறந்த அவரது பெண் குழந்தை சீக்கிரமே இறந்தும் விட்டது.
  எதனால் சரோஜ் கணவருடன் பிரிந்தார் என்பது தெளிவாக தெரிய வில்லை. ஆனால் வெகுளிப்பெண்ணாக இருந்த சரோஜ் சோஹன்லாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உண்டு என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின் சரோஜ் கான் என்னும் முஸ்லீம் நபரை மணம் புரிந்தார். அதிலும் அவர் வாழ்க்கை நிம்மதியாக இல்லை. 1970 ல் அவருக்கு ஒரு மகள் பிறந்து அவரும் நோய் வாய்ப்பட்டு 2011 (என்று நினைக்கிறன்..சரியாக தெரியவில்லை) இறந்து விட்டார். பெண் சிங்கம் போல் தோன்றும் சரோஜ் கான் நொடிந்து போய் விட்டார். இந்த அதிர்ச்சியால் அவரது வாழ்க்கையே சூன்யமாகிப்போனது.

  சரோஜ் கான் ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட் டான்ஸ் மாஸ்டர். கோபம் வந்து விட்டால் கண்ணும் தெரியாது மண்ணும் தெரியாது அவருக்கு. பெண்டு நிமிர்த்தி விடுவார். ஸ்ரீதேவியும் மாதுரியும் அவரது மனம் புரிந்து நடனத்தில் உழைத்தார்கள். சரோஜ் கான் இவர்களுடன் நல்ல நட்பு உறவு பாராட்டி வந்தார். சரோஜ் கான் தேங்காய் மாதிரி. வெளியே கரடு முரடு ஆக தெரியும் அவரது குணாதீசியங்கள் அவரது குழந்தை உள்ளத்தை மறைத்து விட்டது.

  சோஹன்லால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது சரோஜ் அவரை மன்னித்து குரு என்ற ஹோதாவில் அவரைப்பார்க்கச் சென்றார். நடனத்துக்காக தனது வாழ்க்கையை அர்பணித்தவர் சரோஜ் கான். கோபக்காரி என்று பெயர் வாங்கினாலும் அவர் மேல் சினிமா உலகத்துக்கு நன்-மதிப்பு இருந்தது என்னவோ நிஜம்… அவரது ஒரே பலவீனம் … கோபத்தில் வார்த்தைகளை அமிலமாக கொட்டுவது..

  வைஜயந்திமாலாவிற்கு “ப்யார் ஹி ப்யார்” படத்தில் நடனம் கற்றுக்கொடுத்தவர் சரோஜ் கான் தான். இவர் இயக்கிய கவ்வாலி ” நிகாஹ்ன் மிலனே கோ ஜி சாகாத ஹை” காலத்தால் அழிக்க முடியாத காவியம் என்றால் அது மிகை இல்லை.

  ஒரு உபரித்தகவல்…

  ஒரு கவ்வாலியின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது…அந்த நடனத்தில் சரோஜ் கான் துணை டான்சர் …அப்பொழுது என்ன நடந்தது? நடன இயக்குனர் கவலை அடைந்தார்..அது என்?

  சொல்கிறேன்…

 5. நடனத்தில் இரண்டாவது வரிசையில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு இருந்தார் சரோஜ் கான். முன் வரிசையில் கதாநாயகி …அவரது பாவனைகள் சரியாகவே அமையவில்லை .. சரோஜ் கான் இரண்டாவது வரிசையில் அமர்ந்தால் அவர் தான் ரசிகர்களுக்கு தென்படுவார் என்று எண்ணிய நடன இயக்குனர் சரோஜ் அவர்களை பின்புறம் அமரச் செய்து விட்டார்,… திரைப்படத்துறையில் இது தான் சில சமயங்களில் திறமைக்கு கிடைக்கும் மதிப்பு…

  Thanks to all of you for your encouragement, support and kind words…

  It was a pleasure interacting with all of you…

  Best of Luck to all of you..

  Cheers..

  Samyukta Babu
  Mahalingapuram
  Chennai.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s