Actor Thennavan is in critical situation at the hospital

பேட்ட, ஜெமினி, சுந்தர பாண்டியன் போன்ற பல படங்களில் நடித்த நடிகர் தென்னவன்.. கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிட்சைப் பிரிவில் தொடர் தீவிர சிகிச்சையில்!

சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தென்னவனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் தென்னவன் இயக்குநர் பாரதிராஜாவின் என்னுயிர் தோழன் என்ற படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். விருமாண்டி, வாகை சூடவா, சண்டக்கோழி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் தென்னவன்.அது மட்டுமின்றி சன்டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வருகிறார் தென்னவன்.

52 வயதிலும் தொடர்ந்து ஓய்வில்லாது நடித்து வந்தார் தென்னவன். எந்த உடல்நிலைப் பாதிப்புமில்லாத தென்னவன், கடந்த வியாக்கிழமை திடீரென பயங்கர தலைவலியால் பாதிக்கப்பட்டார்.

தென்னவனை நல்லபடியாக காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். தென்னவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Source:- https://tamil.filmibeat.com/news/actor-thennavan-is-in-critical-situation-at-the-hospital/articlecontent-pf114161-064862.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

திடீர் தலைவலியால் பாதிக்கப்பட்ட நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்!

By DIN  |   Published on : 11th November 2019 09:45 AM

இயக்குனர் பாரதிராஜாவின் ‘என்னுயிர் தோழன்’ படத்தில் அறிமுகமானவர் நடிகர் தென்னவன். தொடர்ந்து விருமாண்டி, வாகை சூடவா, சண்டக்கோழி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நெடுந்தொடரான ‘ராசாத்தி’யில் நடித்து வருகிறார்.

வில்லன், குணசித்திரம் என எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டாலும், தனது எதார்த்த நடிப்பால் சிறப்பாக நடிக்கக் கூடியவர் தென்னவன். நல்ல உடல் நலத்துடன் இருந்த இவர், கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட தலைவலி தீவிரமான காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரசப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளையில் கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.

ஐசியூவில் தொடர்ந்து தென்னவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. தென்னவனைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடிவருகின்றனர். ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றனர். இந்தச் செய்தி அவரது ரசிகர்களுக்கும், திரைத் துறையினருக்கும் மனவருத்தத்தை அளித்துள்ளது.

https://www.dinamani.com/cinema/cinema-news/2019/nov/10/actor-thennavan-hospitalised-and-serious-3276289.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s