Veteran Actor | Screenplay Writer Crazy Mohan Passed Away at 67

தமிழ் சினிமாவில் பல படங்களில் கதாசிரியகராக, நடிகராகப் பணியாற்றிய கிரேஸி மோகன் இன்று (10.6.2019)  மதியம் 2 மணியளவில் காலமானார்.மாரடைப்பு காரணமாக இன்று காலை 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார் கிரேஸி மோகன். 

நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார்!

‘தமிழ் சினிமா தவிர்க்க முடியாத கலைஞர் கிரேஸி மோகன். மேடை நாடகங்களில் ஆரம்பித்து பல படங்களுக்கு கதையும் வசனமும் எழுதியுள்ளார். முக்கியமாக கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். உடல்நலக் குறைவால் இன்று காலை 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி மதியம் 2 மணியளவில் காலமானார்.

பள்ளியில் படிக்கும்போதே நாடகங்களில் அதீத ஆர்வம் கொண்டவர், கிரேஸி மோகன். பல நாடகங்களை இயக்கி நடித்திருக்கிறார். அதன் பிறகு திரைத்திரையிலும் கால் பதித்த கிரேஸி மோகன், பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கிறார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஆரம்பித்து, ‘மைக்கேல் மதனகாமராஜன்’, ‘சதி லீலாவதி’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலா காதலா’, ‘பஞ்ச தந்திரம்’ போன்ற பல படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியிருக்கிறார். தவிர, ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ படத்திலும் பணியாற்றியிருக்கிறார். இவரின் நாடகங்களில் நடித்து, சினிமாவுக்குள் வந்தவர்தான் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிரமான சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அதன் பின் சரியாக மதியம் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி இவரது உயிர் பிரிந்தது. திரைத் துறையைச் சேர்ந்த பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“காமெடியில்கூட டீட்டெயிலிங்!” – ’கிரேஸி’ மோகன் எனும் ஹ்யூமர் ஜீனியஸ்

 

தமிழ் சினிமாவுக்கு இன்று கறுப்பு தினம். நடிகரும், எழுத்தாளுருமான கிரிஷ் கர்னாட் மறைவைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞரான கிரேஸி மோகனும் இன்று காலமாகியிருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு இது ஒரு பேரிழப்பு.

தமிழ் சினிமாவில் நகமும் சதையுமாக ஒட்டித் திரிந்து வலம் வந்த கலைஞர்கள், கிரேஸி மோகன் – கமல் ஹாசன். இவர்களது கூட்டணியில் உருவான சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது. இதை, இந்தக் கூட்டணி தொடர்ந்து சாத்தியப்படுத்திக்கொண்டே இருந்தது. இவ்வளவு ஏன் டி.வி-யில் சேனலை மாற்றும்போது ஒரு ஃப்ரேமைப் பார்த்தே சிரிக்கலாம் என்றால், அது இவர்களது காம்போவில் உருவான காட்சிகளால்தான் சாத்தியம். சில எவர்கிரீன் பாடல்களை ரிப்பீட் மோடில் கேட்பது சகஜம்.

இதே ஒரு முழுநீளப் படத்தை ரீப்பீட் மோடில் பார்க்கலாமா என்றால், கோரஸாக ‘ஆம்’ என்று சொல்வார்கள் இவர்கள். வடிவேலு அவர் வந்துபோகும் இடங்களில் காமெடி செய்து சிரிக்க வைப்பதுண்டு. சில மொக்கைப் படங்களை வடிவேலுவின் காமெடிகள் காப்பாற்றியும் இருக்கிறது. ஆனால், எல்லா ட்ரெண்டையும் உடைத்து, படம் முழுவதுமே சிரிக்க வைக்க முடியும் என்பதைச் சாத்தியப்படுத்தியது, ‘கமல் ஹாசன் – கிரேஸி மோகன்’ கூட்டணியில் உருவான படங்கள்தான். இப்படி சுவாரஸ்யம் நிறைந்த பல காமெடிகளுக்குப் பின்னால் இருக்கும் கதைகளைப் பற்றி பலமுறை அவர் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

கிரேஸி மோகனுக்குத் தமிழில் மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் சாவி, மௌலி மற்றும் சோ. அதேபோல் ப்ரிட்டிஷ் எழுத்தாளரான பி.ஜி.வோட்ஹவுஸ் என்பவரும் கிரேஸிக்குப் பிடித்தமானவர். பொதுவாகவே, தமிழ் சினிமாவில் காமெடிக்கென்று தனி டிராக் ஒவ்வொரு படத்திலும் இடம்பெறும். அதைப் பின்பற்றாது, தனித்துத் தெரியவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் களமிறங்கியவர்கள் கிரேஸி மோகன் – கமல்ஹாசன்.

அதனால்தான், பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் இடம்பெறும் காமெடி தனி – காட்சிகள் தனி என்ற அடிப்படையைத் தகர்த்து, படத்தின் தன்மையோடு இயல்பாகப் பயணிக்கும் காமெடி டெம்ப்ளேட்டை உருவாக்கினார்கள். வடிவேலு, கவுண்டமணி, செந்தில் என இவர்கள் பேசிய வசனங்களை நம் அன்றாட வாழ்க்கையில் கலாய் கவுன்டர்களாகப் பயன்படுத்துவோம். அதேபோல, கிரேஸி மோகனின் வசனங்களை எடுத்துப் பார்த்தால், அது அனைத்துமே நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் இயல்பான விஷயங்களாகவே இருக்கும்.

பதட்டமான ஒரு சூழலில் நம் வாய் குழருவதைக் கவனித்திருப்பீர்கள். அதை அப்படியே திரையில் கொண்டு வந்து சிரிக்க வைத்தவர், கிரேஸி. ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தில் வரும் க்ளைமாக்ஸ் காட்சியைச் சொல்லலாம். வையாபுரி அதில், ‘சம்பந்தம் அண்ணே… நம்ம ஆனந்த் பையன சாவடிச்சிட்டாங்க அண்ணே’ எனப் பதட்டத்தோடு பேசுவார். அதற்குக் கமல், ‘ஏன்டா மெய்யாலுமே சாவடிச்சிட்டாங்களாடா?’ எனப் பயத்தோடு கேட்பார். ‘சாவடிக்கலண்ணே… சாவடி அடிச்சிட்டாங்கனு சொன்னேன்’ என்று வையாபுரி சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்வார்.

அதேபோல் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் பஞ்ச நாயகர்களும் பார்ட்டி கொண்டாடிவிட்டு சிம்ரனின் வீட்டுக்கு கமலை அழைத்துச் செல்வார்கள். போதையில் இருக்கும் கமல், ‘நான் உள்ளே போய் அவளைப் பார்க்கும்போது, பழசெல்லாம் ஞாபகம் வந்து அவபாட்டுக்கு ‘தூ’ன்னு துப்பீல மூஞ்சிட்டான்னா’ என்பார். இதை ஒரு சிலரே கவனித்திருப்பார்கள். வார்த்தைகளின் இடத்தை மாற்றிப்போட்டால் அந்த வசனத்துக்கான அர்த்தம் (மூஞ்சில துப்பிட்டான்னா) புரியும்.

கமல் – கிரேஸி காம்போவில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் இதுபோன்ற `ஜம்பிங் வேர்ட்’ காமெடிகளைப் பார்க்கலாம். `வசூல்ராஜா’ படத்தில் இடம்பெறும் ‘தொட்டிலையும் கிள்ளிவிட்டு, புள்ளையையும் ஆட்டிவிடுவீங்களே!’ (மறுபடி ஒருமுறை பழமொழியை வாசிக்கவும்!), `அவ்வை சண்முகி’ படத்தில் `நான் மானகி ஜம்பா வீட்டுக்குப் போறேன் (ஜானகி அம்மா)’ இவையெல்லாம் கிரேஸியின் மாஸ்டர் பீஸ் காமெடிகள். இப்படியாக, மைக்ரோ செகண்ட்டில் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பது கிரேஸியின் வசனங்கள்.

Courtesy:- https://cinema.vikatan.com/tamil-cinema/crazy-mohan-special-article

Veteran Tamil writer and actor ‘Crazy’ Mohan dies at 67

‘Crazy’ Mohan had written dialogue and screenplays for numerous films.

Actor-writer ‘Crazy’ Mohan died in Chennai, Tamil Nadu, on Monday after he suffered an acute heart attack, The Hindu reported. He was 67.

The actor was declared dead at 2 pm at Kauvery Hospital in the city.

Born in 1952 as Mohan Rangachari, his play Crazy Thieves in Palavakkambecame an instant hit and gave Rangachari a new name, one he has been known by ever since – Crazy Mohan.

He has appeared in almost 1,000 productions of the immensely popular Chocolate Krishna apart from headlining Return of Crazy Thieves, a sequelto Crazy Thieves in Palavakkam. Mohan’s troupe Crazy Creations, created along with his brother R Balaji in 1979, has staged numerous plays as well as tapped into the Crazy Mohan brand of comedy for television through the serials Here is Crazy and Siri Siri Crazy.

Introduced by Kamal Haasan to the big screen, Rangachari had written dialogue and screenplays for numerous films, including Apoorva Sagodhargal (1989),Michael Madana Kama Rajan (1990), Sathi Leelavathi(1995), Avvai Shanmughi (1996), Kaathala Kaathala (1998) and Vasool Raja MBBS (2004).

In an interview to Scroll.in in 2017, he had said: “Usually you lose your life in an accident, but I got my life in this accident” and called writing “an accident”.

His dialogues are known to provide wisecracking commentary on daily life. He had said that he wanted to pursue engineering initially and never thought he would become a writer.

Several actors expressed their condolences. “#CrazyMohan sir is no more,” said actor Siddharth on Twitter. “What a sad day for cinema, theatre, laughter and life. There will never be another like him. Prayers for his soul. Deepest condolences to the family. He was a huge part of our collective #Tamil consciousness and our ability to make or laugh at a joke.”

Actor-turned politician Khushbu Sundar also mourned Rangachari’s death. “News just coming in about the demise of #CrazyMohan .. they could not revive him very unfortunately.. a genius has left behind a legacy.. deepest condolences to his family.. may his soul rest in peace..,” she tweeted.

https://scroll.in/latest/926548/veteran-tamil-writer-and-actor-crazy-mohan-dies-at-67

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s