Suchitra [Actress, Administrator, Dancer, Television presenter]

சுசித்ரா [நடிகை|நிர்வாகி|நடனதாரகை|தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குநர்]

1990-இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மோகன்லாலின் ‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுசித்ரா. தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கோபுர வாசலிலே’ மற்றும் ஏர்போர்ட், ஸ்நேகிதியே, காசி உட்பட சில படங்களில் நடித்துள்ளார் இவர்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் கருணாகரன் – உஷா தம்பதியராவர். இவருடன் பிறந்தவர்கள் சுமித்ரா என்ற சகோதரியும், தீபு கருணாகரன் என்ற சகோதரனும் ஆவர். இவர் முரளி என்பவரை 2002-ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நேகா என்ற ஒரு மகள் உள்ளார். இவர்கள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அங்கு நாட்டிய கிரகா நாட்டிய அகதமி என்ற நாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார். கேரள மாநிலத்தின் ‘அம்மா’வில் 1997-2000 மற்றும் 2000-2003 களில் இவர் இணைச் செயலாளராகப் பதவி வகித்துள்ளார். இவர் 38 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சூர்யா மலையாளத் தொலைக்காட்சியில் ‘சம்பவாமி யுகே யுகே’ உள்ளிட்ட சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

நன்றி;- விக்கிப்பீடியா

‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்’ 1990 படத்தில் அசோகனுடன் சுசித்ரா

‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்’ 1990 படத்தில் ஜெயபாரதியுடன் சுசித்ரா

‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்’ 1990 படத்தில் மோகன்லாலுடன் சுசித்ரா

‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்’ 1990 படத்தில் சுமலதாவுடன் சுசித்ரா

கணவர் முரளி, குழந்தை நேகாவுடன் சுசித்ரா [படங்கள்:_ செலிபிரிட்டி இன்ஃபோ]

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s