ASWATHAMMA K [Actress | Singer]

அஸ்வத்தம்மா [நடிகை மற்றும் பாடகி]

கே. அசுவத்தம்மா (K. Aswathamma, 1910 – 1944) பழம்பெரும் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பாடகியும் ஆவார்.

அன்றைய மைசூர் இராஜ்ஜியம், பெங்களூரைச் சேர்ந்த கன்னட நடிகையான அசுவத்தம்மா, 1934 ஆம் ஆண்டில் முகம்மது பீரின் “மீனலோசனி நாடக சபாவில்” இணைந்து நாடக நடிகையாக அறிமுகமானார். பின்னர் 1935 இல் ராஜா சந்திரசேகர் இயக்கி, குப்பி வீரண்ணாவின் தயாரிப்பில் வெளியான சாதரமே என்ற கன்னடத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். நன்றாகப் பின்னணிப் பாடக் கூடியவர். இவரது தனிப் பாடல்கள் பல இசைத்தட்டுகளில் வெளியாகியுள்ளன. மன்மத விஜயா என்ற நாடகத்தில் இவர் பாடிய ஹா பிரியா பிரசாந்த இருதயா என்ற பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் முதல் தடவையாக 1937 ஆம் ஆண்டில் தியாகராஜபாகவதரின் சிந்தாமணி திரைப்படத்தில் சிந்தாமணி பாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படம் ஓராண்டு காலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.

ஈழகேசரி 1938 ஆண்டு மலரில் புதுமைப்பித்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை வெளிவந்துள்ள சுமார் 80 தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் முதன்மையானதாகக் கருதப்பட்டது சிந்தாமணி ஆகும்…. படத்தின் கதாநாயகியாக வரும் ஸ்ரீமதி அசுவத்தம்மா பெங்களூர் வாசி. கன்னட பாஷைக்காரர். ஆனால் சிந்தாமணியாக நடிக்கும் போது அவர் பேசிய மழலைத் தமிழ் தமிழர் யாவராலும் விரும்பி அனுபவிக்கப்பட்டது.

சிந்தாமணியை அடுத்து அசுவத்தம்மா 1939 இல் வெளியான சாந்த சக்குபாய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுவே இவர் நடித்த கடைசித் தமிழ்ப் படம் ஆகும். இத்திரைப்படம் தயாரிக்கப்படும் போதே அசுவத்தம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் பாட வேண்டிய ஒரு பாடலை வி. ஆர். தனம் என்ற பாடகியைக் கொண்டு பாடவும் பேசவும் வைத்துப் படத்தில் இணைத்தனர். இதன் மூலம் தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணி பாடகி என்ற பெயரை வி. ஆர். தனம் பெற்றார்.

அஸ்வத்தம்மா பித்துப் பிடித்த ரசிகர் ஒருவர் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அந்த நடிகையைப் பார்க்க வேண்டும் என்று அலைந்தார். அஸ்வத்தம்மாவின் பெரிய காந்தக் கண்கள் இரவும் பகலும் பலரைப் புலம்பச் செய்தன.

1944 ஆம் ஆண்டில் இவர் காசநோயால் பீடிக்கப்பட்டு இளம் வயதிலேயே காலமானார்.

நடித்த திரைப்படங்கள்

சாதாரமே (கன்னடம், 1935)
சிந்தாமணி (தமிழ், 1937)
சாந்த சக்குபாய் (தமிழ், 1939)
பாடல்கள்
கிருஷ்ணா கிருஷ்ணா…” (சிந்தாமணி)[5]
திவ்ய தரிசனம்.. (சிந்தாமணி)
மாயா பிரபஞ்சம்.. (சிந்தாமணி)

நன்றி;- https://nakarajan.blogspot.com/2018/03/kaswathamma-singer-actress-born-1910.html

’சாந்த சக்குபாய்’ 1939 படத்தில் சக்கு பாயாக கே.சாரங்கபாணியுடன் கே. அசுவத்தம்மா

Aswaththamma-Sarangkapani-Santha Sakkubai 1939-03

’சாந்த சக்குபாய்’ 1939 படத்தில் M.A.கணபதி பட்டுடன் கே. அசுவத்தம்மாAswaththamma-KMA.Ganapathy Butt-Santha Sakkubai 1939-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s