Mounika

மௌனிகா

இயக்குநர் பாலுமகேந்திராவினால் 1985-ஆம் ஆண்டில் `உன் கண்ணில் நீர் வழிந்தால்..’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக (நேரடியாக அல்ல) தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் மௌனிகா, ஆனால் மௌனிகா என்ற பெயர் படத்தின் தலைப்பில் காட்டப்படவில்லை. ‘’ரஞ்சிதா’ அறிமுகம் என்றுதான் காட்டப்பட்டது. உருட்டு வண்டியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் உடல் ஊனமுள்ள ஒரு கதாபாத்திரத்தில் அதில் இவர் நடித்திருப்பார்.

தொடர்ந்து ‘தாலாட்டு கேட்குதம்மா’ ’வண்ண வண்ண பூக்கள்’ (கதாநாயகியாக), ’ராசுகுட்டி’, ‘அமராவதி’, ‘மே மாதம்’, சுபாஷ், ’முகம்’, ‘மனசு’ போன்ற பல படங்களில் நடித்திருக்கும் இவர் சின்னத்திரையில் ’சொந்தம்’ [1999-2000], ’டேக் இட் ஈஸி வாழ்க்கை’[2000], ‘சொர்க்கம்’, பாலு மகேந்திராவின் ‘கதை நேரம்’, ’சாரதா’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’, ஏவி.எம்மின் ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’, ’கலாட்டா குடும்பம்’ [1997-1999] ஆகிய தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவர் பாலு மகேந்திராவைத் திருமணம் [மூன்றாவது மனைவியாக] செய்து கொண்டார். 2014 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா காலமான பின்னர் சில காலம் திரைப்படங்களிலும், நெடுந்தொடர்களிலும் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். மீண்டும் அடுத்த இரண்டாவது சுற்றில் வலம் வரத்தொடங்கிய இவர் ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கி வரும் ‘ஓம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

நன்றி;- விக்கிப்பீடியா

`உன் கண்ணில் நீர் வழிந்தால்..’ படத்தில் ஆர்.வாணி, பூர்ணம் விஸ்வநாதனுடன் மௌனிகா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s