A.L.S.Kannappan [Producer-Distributer]

ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் [தயாரிப்பாளர்-விநியோகஸ்தர்]

மறைந்த ஏ.எல்.ஸ்ரீநிவாசன் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் 48 படங்களைத் தயாரித்தவர். கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரர். ஏ.எல்.ஸ்ரீநிவாசன் இன்று இல்லை. அதுபோல் அவரது மகனான ஏ.எல்.எஸ். கண்ணப்பனும் இன்றில்லை. கடந்த 17 ஜனவரி 2017 அன்று காலமாகிவிட்டார்.

ஏ.எல்.ஸ்ரீநிவாசனின் வாரிசு ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் தன் தந்தையைப் போலவே படவுலகில் பல்வேறு துறைகளில் பொறுப்பேற்று பணியாற்றி வந்தவர். சென்னை, கோபாலபுரம், ரத்னா செட்டி தெருவில் ஏ.எல்.ஸ்ரீநிவாசன் வாழ்ந்த அதே வீட்டில்தான் இவரும் வாழ்ந்தார்.

தன் தந்தையைப் போலவே பொதுச் சேவையில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன். தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளராகவும், தென்னிந்திய வெளிப்புறப் படப்பிடிப்பு அதிபர்கள் சங்கச் செயலாளராகவும், தென்னிந்திய ஒருங்கிணைந்த திரைப்பட ஊழியர்களின் சம்மேளத்தின் துணைத் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றியவர்.

ஏ.எல்.எஸ்.புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை 1953-களில் தொடங்கி அதன் சார்பில் சாரதா, சாந்தி, ஆனந்தி, லட்சுமி கல்யாணம், கந்தன் கருணை, நீலகிரி எக்ஸ்பிரஸ், மணி ஓசை, திருடாதே, சினிமா பைத்தியம் உள்ளிட்ட 48 படங்களை இவரது தந்தை தயாரித்துள்ளார்.

ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளியில் படித்தார். பின்னர் சென்னை வந்து, லயோலா கல்லூரியில் பி.காம். படித்தார். இவரது தந்தை மறைவுக்குப் பின்னர் ஏ.எல்.எஸ்.எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி “கனவுகள் கற்பனைகள்” என்ற படத்தை திரைக்கதை எழுதி, தயாரித்து, இவரே இயக்கினார்.

1975-களில் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட போது அதில் அறிவிப்பாளராக இருந்தவர். சுமார் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு நடத்தியவர். ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி நண்பர்களின் உதவியோடு கலப்புத் திருமணம் செய்துகொண்டவர். காலஞ்சென்ற ஏ.எல்.எஸ்.கண்ணப்பனுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், லாவண்யா, டாக்டர் யாமினி, ஐஸ்வர்யா என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Tmt.Jayanthi W/O A.L.S.Kannappan

Advertisements

2 comments on “A.L.S.Kannappan [Producer-Distributer]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s