Bigg Boss Tamil: Oviya tries to commit suicide on Kamal Haasan’s show? Here’s the truth

கமலஹாசன் நடத்திவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கெடுத்து வரும் நடிகர் ஆரவ்-நடிகை ஓவியாவிற்கிடையே காதல் அரும்பியதாகவும் அக்காதல் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாகவும் காட்சிகள் அரங்கேறியது அந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தவர்களுக்குத் தெரியும். இந்நிலையில் அது காதல் இல்லையெனவும், நட்பு எனவும் ஆரவ் அறிவித்ததால் நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

ஆகஸ்ட் 05, 2017, 03:45 AM

சென்னை

ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை நடத்தினர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வீடு போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்கில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள திரைப்பட நடிகை ஓவியா நேற்று மாலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு பூந்தமல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆல்பர்ட் வில்சன், நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை, அவர் சற்று மனஅழுத்தத்தில் உள்ளதாகவும், அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஓவியா உள்ளே இருக்கிறாரா என்று பார்க்க முடியுமா? என்று போலீசார் கேட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, நடிகை ஓவியா படப்பிடிப்பு தளத்தில் உள்ளாரா? அல்லது வெளியில் உள்ளாரா? என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு புகார் ஏதும் வரவில்லை. ஆனாலும் தங்களுக்கு வந்த தகவலின் பேரிலேயே விசாரணை செய்துவிட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஆரவ் என்பவர் ஓவியாவை காதலிக்கவில்லை என்றும், நட்புடனேயே பழகியதாகவும் கூறியுள்ளார். இதனால் சில நாட்களாக ஓவியா மன அழுத்தத்தில் இருப்பது போலவும், அவருடன் மற்றவர்கள் பேச மறுத்துவருவது போலவும் காட்சிகள் வெளியிடப்பட்டது.

எனவே இந்த மன உளைச்சலில் அவர் ஏதாவது தற்கொலை முயற்சி செய்தாரா? அல்லது ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக ரகளை ஏதும் செய்தாரா? அல்லது யாராவது வதந்தியை பரப்பினார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே இதுகுறித்து உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த தகவலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Kamal Haasan’s popular reality show Bigg Boss Tamil, which has become the new house of controversies these days, is once again in the headlines, however, for a rather shocking incident.

According to the recent media reports, Oviya Helen, who is one of the celebrity contestants of Bigg Boss Tamil, has tried to commit suicide on the show. The reports suggested that the diva was upset with Aarav, one of the housemates, for ditching her and hence chose to take the adverse step.

The media reports further suggested the police too had visited the Bigg Boss house to investigate the matter. Indeed, the reports spread like fire in the forest. Adding fuel to the fire, a fake Twitter handle of actor Robo Shankar made similar claims on the micro blogging site. “Heard that #Oviya leaves BigBoss house And police investigating in house,” the imposter of the actor posted.

However, Robo later took it to micro-blogging site Twitter to clarified that it was a fake account. Later, ‘The Hindu’ reporter revealed that the reports about Oviya’s suicide attempts are mere hoax. However he did assert that the lady aaparently wants to be out of the show asap. He said, “Star Vijay representative told me that Oviya hasn’t attempted suicide, but apparently wants to leave the show asap.”

Notably, Oviya has been nominated for elimination along with Julie and Vaiyapuri this week. This is the fourth time, she has been nominated for elimination and each time she stayed safe from elimination, thanks to her huge fan following. We wonder, if she’ll able to escape the eliminations this time.

http://www.newsnation.in/photos/entertainment/bigg-boss-tamil-oviya-tries-to-commit-suicide-on-kamal-haasan-show-truth-2287/slide1#ph-22874

Advertisements

2 comments on “Bigg Boss Tamil: Oviya tries to commit suicide on Kamal Haasan’s show? Here’s the truth

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s