The Artists Association building was constructed; The Madras High Court yesterday ordered removal of the interim ban

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 26, 2017, 03:45 AM

சென்னை,

சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி சாலையை ஆக்கிரமித்து தென்னிந்திய நடிகர் சங்கம், கட்டிடம் கட்டுவதாக தியாகராயநகரை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த மே மாதம் நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் ஆணையராக இளங்கோவன் என்ற வக்கீலை ஐகோர்ட்டு நியமித்தது. அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, நடிகர் சங்கம் எந்த ஆக்கிரமிப்பிலும் ஈடுபடவில்லை எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆனால், மனுதாரர்கள் சார்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தபால் நிலையம் இருந்ததாக மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக தலைமை தபால் அதிகாரியும், மாநகராட்சியும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாநகராட்சி சார்பில் 1940 மற்றும் 1970 ஆகிய இரண்டு காலகட்டங்களில் தியாகராயநகர் அபிபுல்லா சாலையின் வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல தபால்துறை சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘நடிகர் சங்கம் பொது சாலையை ஆக்கிரமித்துவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க மனுதாரர்களுக்கு பலமுறை சந்தர்ப்பம் வழங்கியும் அவர்கள் நிரூபிக்கவில்லை. எனவே, நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

http://www.dailythanthi.com/News/State/2017/07/26001849/Actor-association-banning-to-build-building.vpf

நடிகர் சங்க கட்டிட கட்டுமானத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:    சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.நகர் வித்யோதயா காலனியைச்  சேர்ந்த ரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் தாக்கல் செய்த  மனுவில், ‘தி.நகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப்பாதையை நடிகர் சங்கத்தினர் மறித்து, பிரமாண்ட  கட்டிடங்களைக் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதிகள், நடிகர் சங்க கட்டிடப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், கட்டிடம் கட்டும் இடம் குறித்த தகவல்களை சேகரித்து  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அட்வகேட் கமிஷனரையும் நீதிமன்றம் நியமித்தது.

  இந்நிலையில், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி நடிகர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்  செய்யப்பட்டது. 
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சங்க  கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் விரிவான உத்தரவை நீதிமன்றம் வழங்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=322084 

நடிகர் சங்க கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்படுவதாக தி.நகர் வித்யோதயா காலனியைச் சேர்ந்த ரங்கன் மற்றும் அண்ணா மலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த மே மாதம் நடிகர் சங்க கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையராக இளங் கோவன் நியமிக்கப்பட்டார். அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, நடிகர் சங்கம் எந்த ஆக்கிரமிப்பிலும் ஈடுபடவில்லை எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் அந்த இடத் தில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக தபால் நிலையம் இருந்ததாக மனு தாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக தலைமை தபால் அதிகாரியும். மாநகராட்சியும் பதி லளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாநகராட்சி சார்பில் 1940 மற்றும் 1970 ஆகிய இரண்டு காலகட்டங்களில் தி.நகர் அபிபுல்லா சாலையின் வரை படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல தபால்துறை சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. நடிகர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்தர் ஆகியோர் வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள், ‘‘ நடிகர் சங்கம் பொது சாலையை ஆக்கிர மித்துவிட்டதாக கூறப்படும் குற்றச் சாட்டை நிரூபிக்க மனுதாரர்களுக்கு பலமுறை சந்தர்ப்பம் வழங்கியும் அவர்கள் நிரூபிக்கவில்லை. எனவே நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீ்க்கப்படுகிறது’’ என உத்தர விட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

அடுத்த ஆண்டு திறக்கப்படும்:

விஷால் நம்பிக்கை நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திறக்கப்படும் என்று நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மாலை நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது விஷால் கூறியதாவது: நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு மேலும் ஊக்கத்தையும், நம்பிக்கையும் கொடுத் திருக்கிறது. நாளை (இன்று) முதல் கட்டிடத்தை எழுப்புவதற்கான வேலையில் இறங்க வுள்ளோம். நடிகர் சங்கம் எந்த விதத் தில் தப்பு செய்யும், ஊழல் செய்யும் என்று நினைப்பவர்கள் தேவையில் லாமல் நேரத்தை செலவழிக்க வேண் டாம். நாங்கள் திறந்த புத்தகம் மாதிரி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டும் பணியை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் முடிக்கும் முனைப் போடு செயல்பட உள்ளோம். நேர்மையாக செயல்பட்டால் எதிலும் வெற்றி காண முடியும் என்பதற்கான பலனாகத்தான் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பார்க்கிறோம். எங்களுக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இவ்வாறு விஷால் கூறினார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19362707.ece

images

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s