Kerala Actor Dileep Arrested Over Kidnapping, Sexual Assault Of Actress

நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கு; மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா.  தமிழில் ‘சித்திரம் பேசுதடி,’ ‘தீபாவளி,’ ‘அசல்,’ ‘ஜெயம்கொண்டான்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பாவனா நடித்து வரும் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூர் அருகில் பிப்ரவரி 17ந்தேதி நடந்தது. படப்பிடிப்பை முடித்து விட்டு இரவில் அவரது கார் நெடும்பச்சேரி அருகில் உள்ள அதானி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அவரது காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு வாகனம், அவரது காரின் பின்பகுதியை இடித்தது. அப்போது கார் நின்றது. அதனை அடுத்து அந்த வாகனத்தில் இருந்தவர்கள், பாவனாவின் காருக்குள் வலுக்கட்டாயமாக ஏறிக்கொண்டனர்.

நடிகை பாவனாவுடன் அமர்ந்த அவர்கள் டிரைவரை மிரட்டி காரை கொச்சிக்கு கடத்தினார்கள்.

கார் கொச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அந்த மர்ம ஆசாமிகள் பாவனாவிடம் அத்துமீறி நடந்தனர். பாலியல் தொல்லை தந்தனர். அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துக்கொண்டனர்.

கிட்டத்தட்ட 2 மணி நேர பயணத்துக்கு பின்னர் கார், பலாரிவட்டம் என்ற இடத்தை நெருங்கியது. அப்போது அந்த மர்ம ஆசாமிகள் காரில் இருந்து இறங்கி தப்பி சென்று விட்டார்கள்.

அதை தொடர்ந்து நடிகை பாவனா, காரில் அந்த பகுதியில் திரிக்ககரா என்ற இடத்தில் உள்ள சினிமா டைரக்டர் லால் வீட்டுக்கு சென்றார். அவரிடம் தனக்கு நேர்ந்த கதியை சொல்லி அழுதார். அதையடுத்து டைரக்டர் லால், பலாரிவட்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கடத்தல் விவகாரத்தில் திடீர் திருப்பமாக, கைது செய்யப்பட்ட பலசர் சுனியின் கூட்டாளி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் திலீப் போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமீபத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  மேலும் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட போது எடுத்த வீடியோ பதிவை திலீப்பின் 2–வது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனின் கடையில் பணியாற்றும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனி, கடிதம் ஒன்றில் கூறியிருந்தான்.

அதன்பேரில் போலீசார் காவ்யா மாதவனின் கடையில் அதிரடி சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர்.

இதைப்போல திலீப்புக்கு பல்சர் சுனியுடன் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அவரது படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனி நிற்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகின. இந்த புகைப்படங்களை கைப்பற்றிய போலீசார், அது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் திலீப்பிடம் இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவரை ஆலுவா போலீசார் கைது செய்தனர்.

http://www.dailythanthi.com/News/TopNews/2017/07/10194829/Actress-Pavana-smuggling-and-sex-case-Malayalam-actor.vpf

THIRUVANANTHAPURAM:
After many rounds of questioning, Malayalam star Dileep was arrested on Monday for the kidnapping and sexual assault of an actress in February.

“Actor Dileep has been arrested for his prima facie role in a conspiracy and to facilitate further investigation as well as evidence collections”, Kerala’s Director General of Police Loknath Behera said. He will be presented before a magistrate today.

Mr Dileep was questioned last month for over 12 hours after he claimed he and a director were being blackmailed for 1.5 crores by the kidnappers, including the actress’ driver Pulsar Suni, the main accused.

He was interrogated again on Monday and then arrested. Late on Monday night, Mr Dileep’s restaurant Dhe Puttu was vandalised by ab angry mob in Kerala’s Kozhikode District.

On February 17, the actress, while travelling by road to Kochi for work, was held captive in a moving car for nearly two hours while four men molested her and also took photos on their cellphones. She was dumped near the house of a director, who called the police.

Six people, including Pulsar Suni, the driver she had sacked, were arrested.

 

On June 29, the police took statements of Mr Dileep and the director who had filed the blackmail complaint.

“I have given all details about my complaint to the police,” Mr Dileep, who appeared calm, told reporters as he left the police camp after the questioning.

The actress had recently talked about legal action “against an actor” who she said had falsely suggested that she was friends with her former driver.

In a statement to the press, she responded, “It’s been brought to my knowledge that an actor has said that the accused in this case – Pulsar Suni and I were friends and that one should be careful while befriending people. This has pained me. If such baseless allegations are made against me, I am even willing to take legal action, if required.”

Though she didn’t take names, there was little doubt about the actor she was referring to. Her co-star Dileep, in an interview to a local TV channel, appeared to suggest that the actress should have been more cautious about who she befriended.

Women in Cinema Collective issued a statement on Monday night on Facebook saying, “We want justice for our woman colleague…Let the investigation progress, evidence be collected and let the truth come out.”

http://www.ndtv.com/kerala-news/kerala-superstar-dileep-in-custody-over-kidnapping-sexual-assault-of-actress-1723018

Advertisements

2 comments on “Kerala Actor Dileep Arrested Over Kidnapping, Sexual Assault Of Actress

  1. ஆமாம் . அவர் தமிழில் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். தகவலுக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s