Sivaji Ganesan Manimandapam will be opened on July 21

 

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் ஜூலை 21ம் தேதி திறக்க அரசு முடிவு செய்துள்ளது என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என

கடந்த 2015ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். இதற்காக, சென்னை, அடையாறு, சத்யா ஸ்டூடியோ அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது.  இதற்காக கடந்த நவம்பரில் ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  

சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் நான்கு நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுவர் மற்றும் படிக்கட்டுகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தற்போது மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி கணேசன் முழு உருவ சிலை மணிமண்டபத்தின் நடுவில் வைக்கப்படுகிறது. இந்த சிலையை மணிமண்டபத்தில் வைப்பதற்காக பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து அனுமதி கிடைத்தவுடன் அங்கிருந்து சிலைகள் மணிமண்டபத்தில் வைக்கப்படும். இந்த நிலையில் சிவாஜி கணேசன் நினைவு நாளான வரும் ஜூலை 21ம் தேதி மணிமண்டபத்தை திறக்க அரசு முடிவு செய்துள்ள என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இது குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சுமார் 2,124 சதுர அடியில் ரூ.2.80 கோடி செலவில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது திராவிடர் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான சிற்ப கலை வேலை பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டப நடுவில் சிவாஜி கணேசன் சிலை, உட்புறத்தில் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையிலான புகைப்பட கண்காட்சிகள் இடம் பெறுகிறது. தற்போது, மணிமண்டபம் அமைக்கும் பணி  95 சதவீதம் முடிவடைந்து விட்டது. சிவாஜி கணேசனின் நினைவு நாளான வரும் ஜூலை 21ம் தேதி மணிமண்டபத்தை திறக்க அரசு முடிவு செய்துள்ளது’ என்றார். 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=315902

Daily_News_1914440393448Daily_News_191444039344Daily_News_19144403934

Advertisements