Thillai Rajan [Stage-Silver Screen Actor]

தில்லை ராஜன் [நாடக, திரைப்பட நடிகர்]

தில்லை ராஜன் .. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் [LIC] பணிபுரிந்து வந்தார்.திரைத்துறையிலும் அநேக நண்பர்களைப் பெற்றிருந்த அவர், நாடகமந்திர் என்ற குழுவை ஆரம்பித்து நாடகங்களை நடத்த ஆரம்பித்தார். நகைச்சுவை நடிகர்கள் சுருளி ராஜன், ஓமகுச்சி நரசிம்மன் ஆகியோர் இவரது நாடகங்களில் இவருடன் நடித்தனர்.
சுருளிராஜன் நடித்த “சக்கைப் போடு போடு ராஜா” பரவலாக அந்த நாளில் பேசப்பட்ட நாடகமாகும்.பின்னர், “நாரதரும் நான்கு திருடர்களும்” என்ற நாடகத்தில் ஓமகுச்சி என்ற பாத்திரத்தில் நடித்ததால் நரசிம்மன் , ஓமகுச்சி நரசிம்மன் ஆனார்.

தில்லைராஜனுக்கு, கஜேந்திர குமார், கிரேசி மோகன் மற்றும் ராது ஆகியோர் நாடகம் எழுதித் தந்துள்ளனர்.திரைப்பட நடிகை சுமித்ரா இவரது பெரும்பாலான நாடகங்களில் பங்கேற்றார்.
திரைப்பட இயக்குநர் ஷங்கர் இவரது நாடகக் குழுவில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நீ நாளை  நான், பாவ மன்னிப்பு, பணம் பின் பாசம் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

அவள் ஒரு காவியம் [1975], ராஜ ராஜேஸ்வரி [1979], சுமை [1981], மனைவி ஒரு மாணிக்கம் [1990], வாங்க பார்ட்னர் வாங்க [1994], வாட்ச்மேன் வடிவேலு [1994], சக்கரவர்த்தி [1995] பல திரைப்படங்களில் தில்லை ராஜன் நடித்திருந்தாலும்…தன்னை ஒரு நாடக நடிகன் என்று சொல்லிக் கொள்ளவே விரும்பியவர். 

http://tamizhnatakavaralaru.blogspot.in/2016/04/26.html வலைத்தளத்திலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

“மனைவி ஒரு மாணிக்கம்” 1990 படத்தில் தில்லை ராஜன்

”ராஜ ராஜேஸ்வரி” 1979 படத்தில் முத்துராமனுடன் தில்லை ராஜன்

“சுமை” 1981 படத்தில் சந்திரசேகருடன் தில்லை ராஜன்

”வாங்க பார்ட்னர் வாங்க” 1994 படத்தில் எம்.ஆர்.ராதாரவியுடன் தில்லை ராஜன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s