Rekha

ரேகா

1986-ஆம் ஆண்டில் திரைக்கு வந்த “கடலோரக் கவிதைகள்” என்ற படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் ரேகா. இவரது இயற்பெயர் ஜோஸ்பின். பாரதிராஜாவின் படங்களில் அறிமுகம் செய்யப்படும் நடிகைகளுக்கு ‘ர’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் வைப்பது பாரதிராஜாவின் சென்டிமென்ட். அந்த வகையில் இவரது பெயரை ரேகா என மாற்றினார் பாரதிராஜா. ரேகாவும் தமிழ், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக பல வருடங்கள் நீடித்தார்.

தமிழில் கே.பாலசந்தரின் ’புன்னகை மன்னன்’ படத்தில் கமலஹாசனுக்கு இணையாக நடித்தார். அப்படத்தில் இவர் இறந்துவிடும் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி இவரது திரையுல வாழ்க்கையில் ஏறுமுகத்திற்கு வித்திட்டது. தொடர்ந்து ராமராஜனுடன் “செண்பகமே செண்பகமே”, “எங்க ஊரு பாட்டுக்காரன்” போன்ற படங்களிலும் விஜயகாந்துடன் காலையும் நீயே மாலையும் நீயே, நினைவே ஒரு சங்கீதம், ’தம்பி தங்க கம்பி” போன்ற பல படங்களிலும் இணை சேர்ந்தார்.

இயக்குநர் விசுவின் “காவலன் அவன் கோவலன்”, “வேடிக்கை என் வாடிக்கை”, “திருமதி பழனிச்சாமி”, “மாப்பிள்ளை சார்”, ”வரவு நல்ல உறவு” போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு கேரளாவில் மீன் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஹரீஷ் என்பவருக்கும் 1996-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். மகள் இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்.

மலையாளத்தில் இவர் மோகன்லால்-சித்திக் இணைந்து நடித்த “ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்” என்ற படத்தின் மூலம் 1989-ஆம் ஆண்டில் அறிமுகமானார். தொடர்ந்து மோகன்லாலுடன் ‘தசரதம்’ படத்தில் நடித்தார். இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கப்பெற்றது.

1970-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதி பிறந்த ரேகாவுக்கு வயது 48. ரேகா தற்போது திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும், சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நன்றி:- விக்கிப்பீடியா

மாப்பிள்ளை சார் 1988 படத்தில் மோகனுடன் ரேகா

மாப்பிள்ளை சார் 1988 படத்தில் விசுவுடன் ரேகா

மாப்பிள்ளை சார் 1988 படத்தில் ஜெயந்தியுடன் ரேகா

மாப்பிள்ளை சார் 1988 படத்தில் விசு, ஜெயந்தியுடன் ரேகா

”புன்னகை மன்னன்” 1986 படத்தில் ஏ.சகுந்தலாவுடன் ரேகாRekha-Punnagai Mannan 1986-Rekha-A.Sagunthala-Punnagai Mannan 1986-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s