Na.Kamarasan [Poet-Lyricist]

நா.காமராசன் [கவிஞர்-பாடலாசிரியர்]

தேனி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் லட்சுமியம்மாள்…… நாச்சிமுத்து கவுடர் தம்பதிக்கு மகனாக 1942-ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று பிறந்தவர். ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பேச்சிலும், நாடகத்திலும் இவருக்குத் தமிழ் உணர்வூட்டி வளர்த்தவர் இவரது குருநாதர் நாராயணசாமி என்ற ஆசிரியர்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இவரை மேடையேற்றி பி.அம்மாப்பட்டி ஊர்ச்சாவடியில் பேசவைத்தார்கள். ‘கல்வி’ என்ற தலைப்பில் பேசி பேனா பரிசு பெற்றவர். பத்தாவது படிக்கும்போது மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் ‘சுதந்திரப் போரில் தமிழகத்தின் பங்கு’ என்ற தலைப்பில் பேசி முதல் பரிசு பெற்றவர்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் எம்.ஏ., தமிழ் பட்டப்படிப்பு பயின்றார். இரா.செழியனின் ‘நம் நாடு’ நாளிதழில் இரண்டு ஆண்டுகள் துணையாசிரியராகப் பணியாற்றினார். இவர் படித்த மதுரை தியாகராசர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1969-இல் சென்னை வந்தார். இவரைப் பற்றி கேள்விப்பட்ட 1969-இல் முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி மொழி பெயர்ப்புத் துறையில் அதிகாரியாக்கினார். அன்றிலிருந்து நிரந்தர சென்னை வாசியானார்.

1970-களில் இவருடைய கவிதைப் புத்தகங்கள் வெளிவரத் துவங்கி ‘கருப்பு மலர்கள் காமராசன்’ என்ற பெரும்புகழை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர். இவரைப் பற்றி அறிந்து அவரது படங்களுக்குப் பாடல்கள் எழுத வாய்ப்பளித்தார். ‘நீதிக்குத் தலை வணங்கு’ படத்தில் ‘கனவுகளே ஆயிரம் கனவுகளே’ என்ற பாடலை முதன் முதலாக எம்.ஜி.ஆருக்காக எழுதினார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பத்து படங்களுக்கு பாடல் எழுதினார்.

கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியிருக்கிறார். இவரது பாடல்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவை. 1984-இல் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் இவர் எழுதிய ‘விளக்கு வச்ச நேரத்திலே’ பாடல் வெளிவந்த நேரம் இவருடைய மகள் தைப்பாவையின் திருமணம் நடந்தேறியது. அப்போது ரஜினிகாந்த் படமான நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ‘சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு சிறகு முளைத்தது’ என்ற பாடலை எழுதினார். இப்படி எத்தனையோ பாடல்கள்.

கமலஹாசனுக்காக ‘வானிலா தேனிலா ஆடுதே பாடுதே’ என்ற பிரபலமான பாடலை எழுதினார். பாலு மகேந்திரா படத்தில் ‘கண்ணன் வந்து பாடுகிறான் காலமெல்லாம்’, முக்தா வி.சீனிவாசனின் படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ‘மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ’ இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ’போய் வா நதியலையே இதழ் பூச்சூடும் நாள் பார்த்து வா’ என்றும் ‘இரவுப் பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்’ என்றும் வித்தியாசமான பல்லவிகளையும், கற்பனைகளையும் அள்ளிக்கொடுத்த பாடல்கள் இவருடையவை.

‘குமுதம்’ ‘லைஃப்’ இதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

நா.காமராசன் பாடல்கள் எழுதிய மேலும் சில படங்கள்:

கோழி கூவுது [1982], ஆகாய கங்கை [1982], சின்ன வீடு [1985], ஊர்க்காவலன் [1987], எங்க ஊரு காவல்காரன் [1988], மருது பாண்டி [1990,  புது மனிதன் [1991], இளவரசன் [1992], வண்டிச்சோலை சின்னராசு [1994], பாட்டு வாத்தியார் [1995], அன்புள்ள ரஜனிகாந்த், இதயக்கோயில், ரெட்டை வால் குருவி, சகலகலா வல்லவன்.

மனைவியுடன் நா.காமராசன்Na.Kamarasan Poet-Lyricist (2)Na.Kamarasan Poet-Lyricist (1)

தாயாருடன் நா.காமராசன்Na.Kamarasan Poet-Lyricist (3)

குடும்பத்தாருடன் நா.காமராசன்Na.Kamarasan Poet-Lyricist (4)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s