K.M.Nambirajan [Villain]

கே.எம்.நம்பிராஜன்

வில்லன் நடிகர். இவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கிமீ தூரத்திலுள்ள காட்டுப்புதூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இவரது உடன் பிறந்த தம்பி தான் குமரி முத்து. இவரது உறவினர்கள் தான் பழம்பெரும் நடிகை தாம்பரம் லலிதா மற்றும் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா.

ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் திரைத்துறையில் கால் பதித்தார். வில்லனாக இருந்தாலும், நகைச்சுவையாக இருந்தாலும் ஜொலிப்பவர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவரும் ஒவ்வொரு படத்திலும் இவருக்கு கதாபாத்திரங்கள் நிச்சயம் உண்டு. ‘வந்தாளே மகராசி’ படத்தில் பேய் விரட்டும் பூசாரியாக ‘எத்தனையோ பேயிருக்கு நாட்டுக்குள்ளே, நீ என்னையாடா விரட்ட வந்த வீட்டுக்குள்ளே’ என்ற பாடலில் ஜெயலலிதாவை அடித்து அவர் கொடுக்கும் அடிகளை வாங்கிக்கொண்டு ஓடும் காட்சியில் அமர்க்களப் படுத்தியிருப்பார். அதே போல் ரம்பையின் காதல் படத்திலும் பூசாரி வேடம்.

‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தில் கள்ளபார்ட் நடராஜனின் குழுவினருடன் இணைந்து காஞ்சனாவை மிரட்டுவதில் வில்லத்தனத்தைக் காட்டியிருப்பார். பராசக்தி படத்தில் வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனம் காட்டினார். பாகப்பிரிவினை படத்தில் எம்.ஆர்.ராதாவின் கூட்டாளிகளுள் ஒருவர்.

’அமர தீபம்’ [1956], “ஆரவல்லி” [1957], ‘நாலு வேலி நிலம்’ [1959], ‘பனித்திரை’ [1961], ’அன்னை’ [1962], ‘படித்தால் மட்டும் போதுமா’ [1962], ‘புதுமைப் பித்தன் [1962], ’ஆயிரம் ரூபாய்’ [1964], ‘சர்வர் சுந்தரம்’ 1964], ’வழி பிறந்தது’ [1964], “என்னதான் முடிவு” [1965], ’சின்னஞ்சிறு உலகம்’ [1966], ’தெய்வீக உறவு’ [1968], ‘அடிமைப் பெண்’ [1969], ‘அன்னை அபிராமி’ [1972], ‘பிள்ளையோ பிள்ளை’ [1972], ‘வாழையடி வாழை’ [1972], ”பொன்னூஞ்சல்” [1973], ’ஸ்ரீ கிருஷ்ண லீலா [1977] போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

‘பராசக்தி’ 1952 படத்தில் ரி.கே.ராமச்சந்திரனுடன் கே.எம்.நம்பிராஜன்

‘பராசக்தி’ 1952 படத்தில் ஸ்ரீ ரஞ்சனி, எஸ்.ராமராவ், ரி.கே.ராமச்சந்திரனுடன் கே.எம்.நம்பிராஜன்

‘ரம்பையின் காதல்’ 1956 படத்தில் குழுவினருடன் கே.எம்.நம்பிராஜன்

’பாகப்பிரிவினை’ 1959 படத்தில் எம்.என்.நம்பியாருடன் கே.எம்.நம்பிராஜன்

’பாகப்பிரிவினை’ 1959 படத்தில் எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியாருடன் கே.எம்.நம்பிராஜன்

’பாகப்பிரிவினை’ 1959 படத்தில் எம்.ஆர்.ராதா, எஸ்.ராமராவுடன் கே.எம்.நம்பிராஜன்

’பாகப்பிரிவினை’ 1959 படத்தில் எம்.ஆர்.ராதா, சிவாஜி கணேசனுடன் கே.எம்.நம்பிராஜன்

‘ஸ்ரீ கிருஷ்ண லீலா’ 1977 படத்தில் எஸ்.என்.பார்வதியுடன் கே.எம்.நம்பிராஜன்

‘அன்னை அபிராமி’ 1972 படத்தில் குலதெய்வம் ராஜகோபால், ஏ.வீரப்பனுடன் கே.எம்.நம்பிராஜன்

‘அன்னை அபிராமி’ 1972 படத்தில் கே.ஆர்.விஜயா, குலதெய்வம் ராஜகோபால், ஏ.வீரப்பனுடன் கே.எம்.நம்பிராஜன்

‘பிள்ளையோ பிள்ளை’ 1972 படத்தில் மு.க.முத்துவுடன் கே.எம்.நம்பிராஜன்

‘பிள்ளையோ பிள்ளை’ 1972 படத்தில் சி.ஆர்.விஜயகுமாரி, மு.க.முத்துவுடன் கே.எம்.நம்பிராஜன்

Advertisements

4 comments on “K.M.Nambirajan [Villain]

  1. ஏற்கெனவே இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவரைக் குறித்த விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. பெயரைக் குறிப்பிட்டு தேடினால் கிடைக்கும். தேடுவதற்கு முன்பே கேட்டால் எப்படி?

  2. Thangavelu+Nambirajan oru padathil seettu vilayadumpothu ivar Tamil-ai kadithu kadithu pesuvathu kollai azhagu !

  3. ஆமாம். அது ‘தெய்வப் பிறவி’ படத்தில். நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s