Popular Tamil Actor Vinuchakravarthy Passes Away

கதை, வசனகர்த்தா, குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் 1003 படங்களில் நடித்த வினுச்சக்கரவர்த்தி 27.4.2017 (நேற்று) அன்று தனது 72 ஆவது வயதில் உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை, சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலேயே இரவு 07.00 மணியளவில் காலமானார். இறுதிச் சடங்குகள் லண்டனிருக்கும் அவரது மகன் சரவணன் வருகைக்குப் பின் இன்று (28.4.2017) மாலை 4 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

திரைப்பட நடிகர் வினுச்சக்கரவர்த்தி சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.201704280038220256_Veteran-actor-Vinu-Chakravarthy-passes-away_SECVPF
ஏப்ரல் 27, 09:17 PM
சென்னை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 1945–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15–ந் தேதி வினு சக்ரவர்த்தி பிறந்தார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்குமொழி படங்களில் 1000–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வில்லன், நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.  கோபுரங்கள் சாய்வதில்லை, ராஜாத்தி ராஜா, குரு சிஷ்யன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர்.  வண்டி சக்கரம் படத்தில் நடிகை சில்க்சுமிதாவை அறிமுகப்படுத்தியவர். இறுதியாக 2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தில் நடித்து இருந்தார்.  பள்ளி, கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி, இயக்கி நடித்துள்ளார். பின்னர் ரெயில்வேயில் துணை ஆய்வாளராக 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.இவர் கன்னட இயக்குனர் புட்டண்ணாகனகலிடம் கதையாசிரியராக சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இவர் கதை எழுதிய பரசக்கே கண்டதின்மா என்ற படம் ரோசாப்பு ரவிக்கைகாரி என்று தமிழில் எடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வினுசக்ரவர்த்தி நேற்று மரணம் அடைந்தார்.

அவருடைய மனைவி பெயர் கர்ணபூ. இவருடைய மகள் சண்முகபிரியா, அமெரிக்காவில் பேராசிரியையாக உள்ளார். மகன் சரவணபிரியன், லண்டனில் டாக்டராக உள்ளார்.

உடல் நலக்குறைவால் காலமான அவருடைய உடல் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்

Published: April 27, 2017 21:15 IST   Updated: April 27, 2017 21:47 IST

vinu_3158988h

நடிகர் வினு சக்கரவர்த்தி உடல் நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1002 படங்களில் நடித்தவர் வினு சக்கரவர்த்தி. இவர் நடிப்பில் வெளியான ‘குருசிஷ்யன்’, ‘அண்ணாமலை’, ‘அருணாசலம்’, ‘நாட்டாமை’, ‘மாப்பிளை கவுண்டர்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஜெமினி’, ‘முனி’, ‘தேசிங்கு ராஜா’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

வினு சக்கரவர்த்தி நடித்த முதல் படம் ‘கரும்பு வில்’, 500வது படம் ‘சின்னத்தாயி’. ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘முனி’ ஆயிரமாவது படம்.

கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய ‘பரசக்கே கண்ட தின்மா’ என்ற படம் வெற்றிபெற்றது. அதுதான் பின்பு ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ என்ற தலைப்பில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார்.

சுமார் 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்து வந்த வினு சக்கரவர்த்தி புதன்கிழமை சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் காலமானார்.

வினு சக்கர வர்த்தியின் மனைவி பெயர் கர்ணப்பூ. இவர்களுக்கு சரவணன் என்கிற மகனும், சண்முகப்பிரியா என்கிற மகளும் உள்ளனர்.

வினு சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Source: The Hindu Tamil

Vandichakkaram actor Vinu Chakravarthy passed away

IndiaGlitz [Thursday, April 27, 2017]

vinusakkravarthi_2704cVeteran actor Vinu Chakravarthy (74) has passed away at his home at 7 PM this evening (April 27, 2017). He had been suffering from a age related ailments for the past three years.

Vinu Chakravarthy has been acting in Tamil films since 1980s in character, villain and comic roles. He has acted in a total of 1002 films which includes 900 in Tamil, 30 in Malayalam and five in Telugu. He has worked with almost all the leading stars of Tamil film industry starting from Nadigar Thilagam Sivaji Ganesan, Superstar Rajinikanth, Kamal Haasan, Vijayakanth, Sathyaraj, Ramarajan,Vijay, Ajith and others. . Especially he is considered as a lucky actor for Rajinikanth with whom he has acted in 25 films.

Before donning the greasepaint he worked as a script writer with Kannada director Puttanna Kanagal. He made his acting debut through the Kannada film ‘Parasangada Gendetimma’. He has written story screenplay for a few Tamil films including ‘Vandichakkaram’ starring Sivakumar and Saritha. This film marked the debut of Silk Smitha.

Vinu Chakravarthy is survived by wife Karnappoo,son Saravanan and daughter Shanmugapriya. The mortal remains of the actor has been kept at his home at No.63, Abusali Street, Saligramam, Chennai.

IndiaGlitz mourns the death of the veteran actor and we convey our condolences to the bereaved family, friends and fans of the departed soul.

http://www.indiaglitz.com/vinu-chakravarthy-passes-away-tamil-news-184349.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s