Actress Jayanti bags Saroja Devi National Award for her lifetime achievement

வாழ்நாள் சாதனைக்காக நடிகை ஜெயந்திக்கு பி.சரோஜாதேவி தேசிய விருதை நடிகை சரோஜாதேவி வழங்கினார்.

ஏப்ரல் 17, 03:00 AM

பெங்களூரு,

வாழ்நாள் சாதனைக்காக நடிகை ஜெயந்திக்கு பி.சரோஜாதேவி தேசிய விருதை நடிகை சரோஜாதேவி வழங்கினார்.201704162349058045_For-Lifetime-AchievementThe-actress-JayanthiB-Saroja_SECVPF

நடிகை ஜெயந்திக்கு…பாரதிய வித்யா பவன் மற்றும் நடிகை சரோஜாதேவி ஆகியோர் சார்பில் திரையுலகில் வாழ்நாள் சாதனைக்காக ‘பத்மபூ‌ஷண் டாக்டர் பி.சரோஜாதேவி தேசிய விருது–2017“ வழங்கும் விழா பெங்களூரு சாளுக்கிய சர்க்கிளில் உள்ள பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல நடிகை சரோஜாதேவி கலந்து கொண்டு, வாழ்நாள் சாதனைக்காக பிரபல நடிகை ஜெயந்திக்கு அந்த விருதை வழங்கினார். மேலும் சரோஜாதேவி, அவருக்கு விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார். விழாவில் நடிகை சரோஜாதேவி பேசியதாவது:–

நானும், நடிகை ஜெயந்தியும் நெருங்கிய தோழிகள். நாங்கள் திரைப்படங்களில் ஒன்றாக நடித்தபோது அதிகமாக பேசி சிரித்தபடி படப்பிடிப்பு தளங்களில் பொழுதைக் கழிப்போம். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் என் மனதில் நிழலாடுகிறது. தமிழில் பாலும், பழமும் படத்தில் நான் நடித்தேன். கன்னடத்திலும் அதே பாத்திரத்தில் நான் நடித்தேன்.

திறமையாக நடித்துள்ளார்என்னுடைய பிறந்த நாள் ஜனவரி 7–ந் தேதி. ஜெயந்தியின் பிறந்த நாள் ஜனவரி 6–ந் தேதி. பாருங்கள், எங்களுக்குள் உள்ள ஒற்றுமையை. ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் நான் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிப்பேன். மறுநாள் அவர் எனக்கு வாழ்த்து கூறுவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்துப் பேசுகிறார்.

“மசனத ஹூவு“ என்ற கன்னட படத்தில் ஜெயந்தி நடித்த கதாபாத்திரத்தில் ஒரு காட்சி வரும். அதில் அவர் அற்புதமாக நடித்துள்ளார். அந்த காட்சியில் வேறு யாராலும் நடிக்க முடியாது. ஏன் என்னாலும் அது சாத்தியம் இல்லை. அவ்வளவு திறமையாக அவர் நடித்துள்ளார். ஜெயந்திக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.

இவ்வாறு சரோஜாதேவி பேசினார்.

அம்பரீஷ்இந்த விழாவில் முன்னாள் மந்திரியும், பிரபல நடிகருமான அம்பரீஷ், கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் ராஜேந்திரசிங்பாபு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாரதிய வித்யா பவன் தலைவர் ராமானுஜா அனைவரையும் வரவேற்றார். விழாவில் நடிகைகள் சரோஜாதேவி, ஜெயந்தி ஆகியோர் நடித்த பல்வேறு படங்களில் இருந்து சில காட்சிகள் பார்வையாளர்களுக்குத் திரையிடப்பட்டது.

http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2017/04/16234943/For-Lifetime-AchievementThe-actress-JayanthiB-Saroja.vpf

 

Actress Jayanti bags Saroja Devi National Award for her lifetime achievement

Veteran multi-lingual actress Jayanti was awarded prestigious Padmabhushan Dr B Saroja Devi National Award in recognition of her lifetime achievement in the field of performing arts.

The award instituted in 2010, carries a purse of Rs one lakh besides a citation and will be given away at a function to be held at Bharatiya Vidya Bhavan on April 16, according to a release by Bhavan Director H N Suresh.

Veteran Carnatic vocalist K J Yesudas, Parvathamma Rajkumar, Vyjayanathimala Bali, Dr Geetapriya, Anjali Devi, Jamuna Raman Rao, S Shivaram, K S L Swamy and Harini N Rao are the previous recipients of the award.

One of the longest standing stars on the film scene, Jayanthi’s presence in Kannada cinema, spanning over six decades, has moved from that of a young heroine to a highly bankable star and that of a mature character actor who brings centrality to her role and the film itself.

Jayanthi, who has acted in more than 500 films including in Marathi and Hindi, has won many awards including President’s award for Best Actress, State Award five times for best actress, Dr Raj Kumar award, two Film fare awards, and one best supporting actress award.

Jayanthi has been paired with top southern stars such as M G Ramachandran, Gemini Ganesan, and N. T. Rama Rao, but her screen chemistry and rapport with Raj Kumar saw her doing about 45 films with him, the maximum that any heroine has acted with the mega star.

http://www.civicnews.in/actress-jayanti-bags-saroja-devi-national-award-for-her-lifetime-achievement/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s