Andha Naal [1954]Tamil Movie Full Details

அந்த நாள் [1954] தமிழ்த் திரைப்படம்

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி.டி.சம்பந்தம், ரி.கே.பாலசந்திரன், சூர்யகலா, ஏ.எல்.ராகவன், பொட்டை கிருஷ்ணமூர்த்தி, எஸ்.மேனகா, ஜெயகொடி கே.நடராஜ ஐயர், எஸ்.வி.வெங்கட்ராமன், சட்டாம்பிள்ளை கே.என். வெங்கட்ராமன், சி.பி.கிட்டான், கே.ராமராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். 

இத்திரைப்படம் அகிர குரோசவாவின் “ரசோமன்” என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது.மூலக்கதையை எஸ்.பாலசந்தர் எழுதியுள்ளார். ஜாவர் சீதாராமன்  திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.

https://ta.wikipedia.org/wiki/  

அந்த  நாள்’  படத்தில்  சிவாஜி  நடித்ததன்  பின்னணி

வாசன் ‘ஞானசவுந்தரி’ படத்தை எரித்தது போன்றதொரு சம்பவம்  ஏவி.எம்.மிலும் நிகழ இருந்தது. 1954–ல் கொல்கத்தாவில்  மேடை  நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் என்பவரை கதாநாயகனாக வைத்து, பாடல், நடனம் இரண்டும் இல்லாமல் முதன் முதலாக  ஏவி.எம்.மில்  எஸ்.பாலசந்தர்  ஒரு படத்தை இயக்கினார். பாதி வரையில் வளர்ந்த நிலையில்  அதைப்பார்த்த  செட்டியார்  திருப்தி  இல்லாமல் சிவாஜிகணேசனை  வைத்து  மீண்டும் ‘ரீ ஷூட்’ பண்ண வேண்டும் என்று விரும்பினார். 

டைரக்டர் மறுத்தார். உடனே செட்டியார், தயாரிப்பு  நிர்வாகியான வாசுமேனனிடம் பாலசந்தருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கிச் சம்பளப்பணத்தைக் கொடுத்துக் கணக்கை முடித்துவிட்டு அதுவரையில் எடுத்திருந்த  மொத்த ரீல்களையும் கொண்டு வந்து தனக்கு எதிரே வைத்துக் கொளுத்திவிடும்படிக் கூறினார். 

இதைக் கேட்ட எஸ். பாலசந்தர்  வெலவெலத்துப்போய், ‘‘வேண்டாம், நான் எடுத்த படத்தை என் கண் முன்னே கொளுத்தவேண்டாம். உங்கள் விருப்பப்படியே சிவாஜிகணேசனை  வைத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளையும்  மீண்டும் எடுக்கிறேன்’’ என்று கேட்டுக்கொண்டார். இதன் பேரில் அந்த நெருப்பு  நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டு மறுப்படப்பிடிப்பு  நடைபெற்றது.

அந்தப்படம்தான்  சிவாஜிகணேசன்  நடித்து  ஜாவர்சீதாராமன்  வசனம் எழுதி, எஸ்.பாலசந்தர் கதை எழுதி இயக்கி 1954 தமிழ்ப்புத்தாண்டு நாளில் (13.4.1954) வெளிவந்த முற்றிலும் மாறுபட்ட ‘‘அந்த நாள்!’’

https://web.archive.org/web/20160722041135/http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/10/24161209/The-other-side-of-the-theater-Cettinattu-wealth–AVM.vpf

Andha Naal 1954

December 12, 2008

Sivaji Ganesan, Pandari Bai, Javert Seetharaman, P. D. Sambandham, Suryakala and T. K. Balachandran

Andha Naal created history in Tamil cinema as the first movie sans song, dance or stunt sequence and is still being talked about. It is impossible for any producer to even dream of making such a movie today! The emerging Indian movie mogul AV. Meyyappan created history when he produced Andha Naal, which was less than 12,500 feet long, while most Tamil films of that day were 15,000 feet and above. The film was written and directed by the multi-faceted S. Balachandar who later attained fame as a veena player. The dialogue was written by Javert Seetharaman and the film was photographed by talented lensman Maruthi Rao.

Many people to this day are under the impression that the film was an adaptation of the Akira Kurosawa classic Rashomon. Interestingly, the Japanese film was released in theatres in India soon after it created history in the international movie circuit and in the first international film festival held in India in 1952, thanks to the efforts of Pandit Nehru. The Japanese film was a brilliant narration of a single event seen through the eyes of the protagonists, each at variance with the other about what was the truth. However, Andha Naal, though bearing thematic resemblance to the Kurosawa classic, was actually an intelligent adaptation of a British movie Woman in Question made by Anthony Asquith (son of the British Prime Minister Lord Asquith), one of the three British movie maestros, the other two being Carol Reed and David Lean. Asquiths film was a flashback on the murder of a woman with several people claiming to be the killer. Andha Naal was about the killing of Sivaji Ganesan by his wife (Pandari Bai, revealed to the audience) and many people claiming to be the killer. This film won a Central Government Award, and critical and public acclaim.

However, it did not fill the coffers of Meyyappan who understandably never thought of making a similar film later. Balachandar had an assistant in the directorial department, young and talented who later emerged as a successful filmmaker, Muktha V. Srinivasan.

The cast consisted of Sivaji Ganesan as a traitor, leaking secrets to the Japanese during the Second World War, Pandari Bai as his patriotic wife, Javert Seetharaman, T. K. Balachandran, Suryakala, Menaka and P. D. Sambandam. Even today after five decades and more, this film sustains interest.

Balachandar, a brilliant technician had acquired vast knowledge of the art of cinema by watching movies from abroad, mostly from Hollywood. He put to good use his acquired skills and talents in this film, especially in the lighting to create mood and character. Sample this: in a sequence the anti-hero (Sivaji Ganesan) is totally in the dark while his abandoned sweetheart is brightly lit to bring about the contrast in the mood and the characters. In Hollywood lingo, it is known as painting with light.

Remembered for being the first Tamil film which had no dance, song or stunt sequence and for Balachandars impressive direction and fine performances by Sivaji Ganesan and Pandari Bai.

RANDOR GUY

https://web.archive.org/web/20150221165217/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/andha-naal-1954/article3023659.ece

தமிழின் டிரெண்ட் செட்டர் படங்கள்.. ஒரு பார்வை!

’ஊர் எப்படிப் போகுதோ அதே வழில நாமளும் போகலாம்’ என்று படமெடுப்பது ஒருவகை என்றால், வணிக ரீதியான வெற்றி தோல்வியைப் பற்றி பயப்படாமல் பரீட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்டு ட்ரெண்ட் செட் செய்யும் படங்கள் வேறொரு வகை. இரண்டாம் வகையிலான படங்கள் குறைவே எனினும் காலாகாலத்துக்கும் நின்று நிலைத்து, ‘அந்தக் காலத்துலயே..’ என்று எந்தக் காலத்திலும் பேசப்படும். அப்படியான சில படங்கள்;

அந்த நாள்:

பாட்டுகள் இல்லாமல் சண்டை காட்சிகள் இல்லாத ஒரு தமிழ் சினிமாவை கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால் எந்த வித தொழில்நுட்ப வசதிகளும் வளர்ச்சிடையாத 1954 லேயே அப்படியான ஒரு தமிழ் சினிமா வந்துள்ளது என்றால் நம்புவீர்களா. அதுதான் “அந்தநாள்”. ‘வீணை’ எஸ். பாலசந்தரால் இயக்கப்பட்டது. கதாநாயகனாக வளர்ந்து வந்த சிவாஜிக்கு இந்த படம் சரியாக இருக்குமா என பலரும் கேள்வியெழுப்பிய நிலையில் வில்லனாய் நடிக்க ஒப்புக்கொண்டார் சிவாஜி கணேசன் . முதல் காட்சியிலேயே ஹீரோ சுடப்பட்டு இறப்பது போன்ற காட்சியை பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் ரகளை செய்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

https://web.archive.org/web/20160718173348/http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/66113-trend-setting-movies-in-tamil.art

ஜாவர் சீதாராமன்

ஜெயகொடி கே.நடராஜ ஐயர்

லட்சுமி நாராயணன்

பண்டரிபாய்

பி.டி.சம்பந்தம்

பொட்டை கிருஷ்ணமூர்த்தி

எஸ்.மேனகா

’சட்டாம்பிள்ளை’ கே.என்.வெங்கட்ராமன்

சூர்யகலா

ரி.கே.பாலச்சந்திரன்

ரி.கே.பாலச்சந்திரன் – சிவாஜிகணேசன் 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s