Sangeetha [Sangeetha Madhavan Nair]

சங்கீதா [சங்கீதா மாதவன் நாயர்]

1978-களில் சிநேகிக்கான் ஒரு பெண்ணு என்ற படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 1989-இல் வெளிவந்த ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற தமிழ்ப் படம் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1976-ஜூன் 25-ஆம் திகதி கேரளாவில் பிறந்தவர் சங்கீதா. இவரது தந்தை மாதவன் நாயர் மலப்புரம், கோட்டக்கல்லைச் சேர்ந்தவர். தாயார் பத்மா பாலக்காடு, குழல் மன்னம் என்ற ஊரைச் சார்ந்தவர்.

இவரது தந்தை வியாபாரக் காரணங்களுக்காக குடும்பத்துடன் சென்னையில் வந்து குடியேறினார். சங்கீதாவுக்கு மல்லிகா, ராஜ் என்ற இரண்டு அக்காமார் உள்ளனர். நித்தீஷ் என்ற ஒரு அண்ணன். சென்னை, குஜராத்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

எல்லாமே என் ராசாதான் என்ற படத்தில் ராஜ்கிரணுடன் முதல் முதலாக கதாநாயகியானார். இப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதிலிருந்து இவரது நடிப்புப் பயணம் ஆரம்பமானது. 1995-இல் வெளி வந்த பூவே உனக்காக என்ற படத்தில் விஜயுடன் நடித்தது இவருக்குப் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. தமிழில் கேப்டன், என் ராஜாங்கம், சரிகமபதநி, ராஜபாண்டி, ராவணன், எல்லாமே என் ராசா தான், புள்ளக்குட்டிக்காரன், சீதனம் அம்மன் கோவில் வாசலிலே உள்ளிட்ட தமிழ், மலையாளப் படங்களில் ஏறத்தாழ 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் இவர். இவர் திருமணத்திற்கு முன் தமிழில் கடைசியாக நடித்த படம் மேரி ஆல்பட்.

2003-இல் ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். சிலம்பரசன் நடித்த ‘சிலம்பாட்டம்’ என்ற படத்தை சரவணன் இயக்கியுள்ளார். இப்படம் 2008-இல் வெளியானது. இத்தம்பதிக்கு சாய் தேஜஸ்விதி என்றொரு மகள்.

திருமணத்திற்குப் பின் இவர் நடித்த ஒரே படம் ‘நகரவாரிதி நடுவில் ஞான்’ என்ற மலையாளப் படம். இது 2014-இல் திரைக்கு வந்தது. இப்படத்தில் பிரபல இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான ஸ்ரீநிவாசனுடன் இணைந்து நடித்தார்.

நன்றி:-விக்கிப்பீடியா

Sangita Madhavan Nair -AllCineGallery 2017-

Photo: AllCineGallery 2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s