Paalaivana Solai 1981 Tamil Movie Full Details

பாலைவனச் சோலை [1981] படம் முழு விவரம்

சந்திரசேகர், தியாகு, ராஜீவ், தும்பு கைலாஷ் நாத் , ஜனகராஜ், சுகாசினி, எஸ்.என்.பார்வதி, கலைவாணி, குமரி முத்து, ஈ.சந்தானம், ஷண்முகம் பிள்ளை, மணி பாரதி, சிங்காரம், காளையன், முருகேசன் ஆகியோர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம். 1981-இல் இளைஞர்களைக் கவர்ந்த படம்.

நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் எல்லாமே வர்த்தக ரீதியான வெற்றியைப் பெறும் என்று உத்திரவாதமாக சொல்லமுடியாது. புதுமுக நடிகர்-நடிகைகளோ, வளர்ந்து வரும் கலைஞர்களோ நடித்தால் கூட கதை வலுவானதாக இருந்தால் அந்தப் படம் வெற்றிப் படமாகும் என்பது ஏற்கெனவே பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களை வைத்து நல்ல கதையம்சத்துடன் 1981-ஆம் ஆண்டில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘பாலைவனச் சோலை’.

இதற்கு கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருந்தார்கள் ராபர்ட்-ராஜசேகர்.

படம் பற்றி பார்ப்போம்……

ரமணா, யுவன், ஆதி, பிரபு, இனியன் ஆகிய ஐந்து பேரும் நெருக்கமான நண்பர்கள். வெவ்வேறு விதமான கனவுகள். யுவன் வசதியான வீட்டுப் பையன். ரமணா தன் தங்கைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க கடுமையாக உழைக்கிறான். இனியன் வழக்கறிஞர் தொழிலில் போராடிக் கொண்டிருக்கிறான். ஆதிக்கு சினிமாவில் பிரபலமாகவேண்டும் என்ற ஆசை. பிரபு எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ஜாலியான பேர்வழி.

இந்த நண்பர்கள் குழு அரட்டையடிக்கும் இடத்துக்கு அருகில் புதிதாக பிரியா என்ற இளம்பெண் குடிவருகிறாள். பாலைவனமாக வறண்டு கிடந்த நண்பர்கள் வாழ்வில் இந்த இளம் பெண்ணின் வருகை சோலைவனமாக மாறுகிறது. எல்லோருக்கும் உதவி செய்வதையே இயல்பாகக் கொண்ட அந்தப் பெண், நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையூட்டுகிறாள். அவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையைப் போக்கி அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற உதவுகிறாள்.

திடீரென அந்த அதிர்ச்சி தரும் செய்தி நண்பர்கள் எல்லோருக்கும் தெரிய வருகிறது. அதாவது ப்ரியா ஒரு இதய நோயாளியென்றும், அதிக நாட்கள் உயிரோடு இருக்கமாட்டால் என்றும் தெரிய வருகிறது.

மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பிரியாவை நண்பர்கள் எப்படி கனத்த மனதுடன் எதிர்கொள்கிறார்கள் என்பதை நெஞ்சைத் தொடும் வகையில் சொன்ன படம் பாலைவனச் சோலை.

வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் ஆகியோரின் இசையமைத்திருந்தனர். ‘மேகமே மேகமே பால்நிலா தேயுதே’, ‘பௌர்ணமி நேரம் பாவையொருத்தி மின்னல் போலே முன்னால் சென்றாள்’, ’ஆளானாலும் ஆளு இவ அளுத்தமான ஆளு’, ‘எங்கள் கதை’ போன்ற அருமையான பாடல்கள் இப்படத்தில் உண்டு.

Source:- Dhinamalar

கலைவாணி

குமரி முத்து

எஸ்.என்.பார்வதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s