Radhika Abte

ராதிகா ஆப்தே

முதல் வட இந்தியக் கதாநாயகி

வட இந்தியாவிலிருந்து தமிழுக்கு நடிக்க வரும் போக்கிற்க்குப் பிள்ளையார் சுழி போட்ட முதல் நடிகை இவர். 1930-களின் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், வெள்ளிவிழா கண்ட பல மராத்தி, இந்திப் படங்களில் நடித்து வட இந்தியாவில் பெரும்புகழுடன் ஜொலித்துக் கொண்டிருந்தபோதே அவரைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர் முதுபெரும் இயக்குநர் ஒய்.வி.ராவ். 1941-ஆம் ஆண்டில் வெளியான ‘சாவித்திரி’படத்தை இயக்கி, சத்தியவானாக நடித்தவர். அந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சாந்தா ஆப்தேவைத் தேர்வு செய்தார். Continue reading

Advertisements

Baby Shalini

பேபி ஷாலினி

கேரளத்தை மயக்கிய மழலை. 1980-களில் கேரளம் முழுவதும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வாஞ்சையால் உச்சரிக்க வைத்த பெயர் ஷாலினி. “ என்றெ மாமாட்டி குட்டி அம்மைக்கு “ என்ற படத்தில் பரத் கோபிக்கு மகளாக நடித்தார். இந்தப் படத்தின் மூலம் கேரளத்தில் வி.ஐ.பி. அந்தஸ்து பெற்றுவிட்டார். அபோது இவரது வயது மூன்றரை. Continue reading