பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் [வயது 58] நேற்று [14.3.2017] மும்பையிலுள்ள தனது குடியிருப்புப் பகுதியின் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை
பதிவு: மார்ச் 15, 2017 03:01
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நிதின் மன அழுத்தம் காரணமாக கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
58 வயதான நிதின் மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள அந்தேரி குடியிறுப்புப் பகுதியின் 6 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து நேற்று மதியம் தற்கொலை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிதின், அவரது தங்கையின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நிதினுக்கு 18 வருடங்களாக வேலை இல்லை என்றும், அவரது குடும்பம் ஐதராபாத்தில் வாழ்ந்து வருவதாகவும், நிதின் மட்டும் மும்பையில் வாழ்ந்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உயிரிழப்பு ஒரு விபத்தாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Telugu actress Jayasudha’s producer husband Nitin Kapoor found dead, suicide suspected
By Express News Service | Published: 14th March 2017 09:24 PM |
Last Updated: 14th March 2017 09:45 PM |
HYDERABAD: Nitin Kapoor, Bollywood producer and husband of Telugu actress Jayasudha, was found dead at his office on Tuesday. While there isn’t any clarity yet on the reasons for his sudden death, there seems to be a shadow of doubt hanging over the incident, with reports suggesting that he may have committed suicide.
A cousin of veteran actor Jeetendra, Nitin Kapoor was married to Jayasudha for the past 30 years and has produced films featuring the actress. Nitin, who was aged 58, is survived by two sons — Nihar and Shreyan.
The reasons for his alleged suicide are not yet known, with some sources suggesting that he had poisoned himself. Jayasudha has rushed to Mumbai, where police are investigating the death. More details are awaited.
Nitin Kapoor has produced two Telugu movies, Hands Up (2000) featuring Jayasudha and Kalikalam (2012), and a Hindi film Mera Pati Sirf Mera Hai (1990), starring Bollywood fame Rekha, Balaji Telefilms chairman Jeetendra and theatre artiste and Bollywood actor Anupam Kher.