Chinnalapatti Sakthivel [Stage-Silver Screen Actor]

சின்னாளப்பட்டி சக்திவேல் [நாடக-திரைப்பட நடிகர்]

சின்னாளப்பட்டியில் வெள்ளையத் தேவரின் மகன் இவர். 15 வயதிலேயே அரிதாரம் பூசிக்கொண்டவர். கலைஞர் மு.கருணாநிதியின் ‘நச்சுக் கோப்பை’ நாடகத்திலியேயிருந்து நடிக்கத் துவங்கியவர்.

‘நெற்றிக்கண்’ நாடகத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் உடையப்பத் தேவரோடு சேர்ந்து நடித்தவர். ‘கடமையும் நட்பும்’ என்ற நாடகத்தில் இவரோது சங்கிலி முருகன், கல்லாபெட்டி சிங்காரம்’, வாகை சந்திரசேகர், செந்தில் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் பட்டி,தொட்டிகளிலெல்லாம் நாடகங்கள் நடத்தியிருக்கின்றார். முக்கால்வாசி நாடகங்களுக்கு கதை, வசனம், பாட்டு, இசை எல்லாம் இவர்தான். இவர் 1978-ஆம் ஆண்டு ‘ராக்கால பறவைகள்’ என்ற படத்தை கூட்டாகச் சேர்ந்து சொந்தமாக தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சக்கரவர்த்தி, சுமன், பிரவீணா, வி.கே.ராமசாமி, உசிலை மணி, அம்ஜத் குமார் முதலானோருடன் இவரும் நடித்திருந்தார். அப்படம் படுதோல்வியடைந்ததால் பல லட்ச ரூபாய் நஷ்டம்.

‘குவா குவா வாத்துக்கள்’, ஜி.கே.ரங்கராஜனின் ‘இதயம் தேடும் உதயம்’, ‘ஆத்தோர ஆத்தா’, மணிவண்ணனின் இயக்கத்தில் 24 மணி நேரம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

1.6.1984 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

“குவா குவா வாத்துக்கள்’’ 1984 படத்தின் டைற்றில் கார்டில் சக்திவேல் பெயர்

Advertisements

One comment on “Chinnalapatti Sakthivel [Stage-Silver Screen Actor]

  1. I believe the photo is none other villain nambirajan… Acted in aranmanai kilo, en rasavin manasiley… Plz confirm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s