Comedy Actor “Thavakkalai” Chittibabu Passes Away

முந்தானை முடிச்சு படம் மூலம் புகழ் பெற்ற நடிகர் தவக்களை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 42. தொடர்ந்து ஓசை, என் இரத்தத்தின் இரத்தமே,  நீங்கள் கேட்டவை, தங்கமடி தங்கம், நாலு பேருக்கு நன்றி, பொண்ணு பிடிச்சிருக்கு, நேரம் நல்ல நேரம், ஆத்தோர ஆத்தா, மணந்தால் மஹாதேவன் போன்ற தமிழ்ப் படங்கள் உள்ளிட்ட 496 படங்களில் நடித்தவர் தவக்களை சிட்டிபாபு. தவக்களையின் இறுதிச்சடங்கு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வடபழனி ஏ.வி.எம். மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading

Advertisements

Kambathasan [Stage Actor-Silver Screen Actor-Poet-Harmonist-Singer-Story-Screenplay Writer-Short Story Writer]

கம்பதாசன் [மேடை-திரைப்பட நடிகர்-கவிஞர்-ஹார்மோனிஸ்ட்-பின்னணிப் பாடகர்-கதை-திரைக்கதை எழுத்தாளர்-சிறுகதை எழுத்தாளர்] 

பாரதியாருக்குப் பின் வந்த மரபு வழிப் பாவலர்களின் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டிய ஆனால் இலகுவாக மறக்கடிக்கப்பட்டுவிட்ட அற்புதமான ஒரு படைப்பாளி கவிஞர் கம்பதாசன்.தன்னைக் கவிஞனாக நிலை நிறுத்திக் கொண்டவர். Continue reading

K.R.Savithri

கே.ஆர்.சாவித்திரி

துணை நடிகை. இவர் பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் உடன் பிறந்த சகோதரி. இவருக்கு அடுத்த தங்கை கே.ஆர்.வத்சலா. இவர் கேரள மாநிலம், திருச்சூரில் 24.5.1948 அன்று பிறந்தவர். அங்குள்ள தூய இருதய கன்னியர் இல்ல மேல் நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். Continue reading

K.P.Kamatchi [Villain Actor-Poet]

கே.பி.காமாட்சி [வில்லன் நடிகர் மற்றும் கவிஞர்]

கண்ணதாசனுடைய முந்தைய தலைமுறைப் பாடலாசிரியர் கவிஞர் கே.பி.காமாட்சி. இவருடைய முழு பெயர் கே.பி.காமாட்சி சுந்தரம். ஏழு வயதிலேயே நாடகக் குழுவான பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து, 22 வயதிற்குள் ஆயிரம் நாடக மேடைகளில் நடிக்கும் சாதனையைப் புரிந்தவர் கே.பி.காமாட்சி. Continue reading

S.S.Vedha [Music Composer]

எஸ்.எஸ்.வேதா [இசையமைப்பாளர்]

இவரது இயற்பெயர் எஸ்.எஸ்.வேதாச்சலம். இலங்கையைச் சேர்ந்தவர். இவருக்கு ‘திகில் மன்னன்’ என்ற பட்டமும் ரசிகர்களால் வழங்கப்பட்டிருந்தது. 1950- ஆரம்ப காலங்களில் சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இவரது இசையமைப்பில் முதன்முதலாக வெளிவந்த தமிழ்ப் படம் நடிகர் ஸ்ரீராம் தயாரித்த ‘மர்ம வீரன்’. இப்படம் 1956-இல் வெளிவந்தது. ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர். Continue reading

Aishwarya

ஐஸ்வர்யா

இவரது இயற்பெயர் சாந்த மீனா பாஸ்கர். இவர் நடிகை லட்சுமியின் முதலாவது கணவர் பாஸ்கர் என்பவரது மகளாவார். இவரது தகப்பனார் கொல்லம் என்ற ஊரைச் சேர்ந்த கே.பாஸ்கர். நியூ இந்தியா ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றியவர். 20-ஆவது வயதில் தனது தந்தையைக் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து அதன்பின் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தந்தையைச் சென்னைக்கு வரவழைத்து அவர் மரணமடைந்தது வரை அவரைக் கவனித்துக் கொண்டது ஐஸ்வர்யாதான். லட்சுமியின் இரண்டாவது கணவர் மலையாள நடிகர் மோகன் சர்மா தான் ஐஸ்வர்யாவை வளர்த்தது. Continue reading

Rangachari.P.B.

பி.பி.ரங்காச்சாரி

தமிழ்த் திரைப்பட உலகுக்குப் பெருமை சேர்த்த பழம்பெரும் கலைஞர்களில் மறைந்த பி.பி.ரங்காச்சாரி குறிப்பிடத்தக்க ஒருவர். Continue reading

Jayadevi [Director/Producer/Actress]

ஜெயதேவி [இயக்குநர்-தயாரிப்பாளர்-நடிகை]

”மற்றவை நேரில்”, “வா இந்தப் பக்கம்” உள்ளிட்ட நான்கு படங்களைத் தயாரித்தவர். இதில் இரண்டு படங்களை இயக்கியவர். இவரது படங்களில் மட்டுமே நடித்தவர். வெளிப் படங்களில் நடித்ததில்லை. Continue reading

By sahadevanvijayakumar Posted in Directors

G.K [G.Krishnamoorthy] [Story-Screenplay-Dialogue Writer-Stage Actor-Silver Screen Actor-Director]

ஜி.கே. [ஜி.கிருஷ்ணமூர்த்தி] [கதை, திரைக்கதை, வசனகர்த்தா, நாடக நடிகர், வெள்ளித்திரை நடிகர், இயக்குநர்]

எஸ்.வி.சேகர் குழுவினர் நடித்த “மகாபாரதத்தில் மங்காத்தா”, “காதுல பூ” என்ற இரு 200 முறைக்கு மேல் மேடையேறிய நாடகங்களின் கதை, வசனம் இவர் எழுதியவை. Continue reading

Pournami

பௌர்ணமி

1988-ஆம் ஆண்டு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இயக்குநர் ரி.பி.கஜேந்திரன் அவர்களால் இயக்கப்பட்ட “வீடு மனைவி மக்கள்” என்ற படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை பௌர்ணமி. Continue reading