Vinu Chakravarthi [Story,Screenplay Writer,Actor]

வினுச்சக்கரவர்த்தி [கதை,வசனகர்த்தா,நடிகர்]

கதாசிரியராக அறிமுகமாகி நடிகராக பிரபலமானவர் வினுச்சக்கரவர்த்தி. இவர் கதாசிரியராகவும், நடிகராகவும் வருவதற்கு முன் இந்திய தொடர்வண்டித் துறையில் பணிபுரிந்தவர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம் போன்ற படங்கள் இவரது கைவண்ணத்தில் உருவாகி வெற்றி வாகை சூடியவை. இவரது நடிப்பாற்றலை அறிந்தபோது நடிகராக அங்கீகரிக்கப்பட்டவர். ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் நடித்ததிலிருந்து இவருக்கு நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புக் கிடைத்தபோது, ஒரே நேரத்தில் நடிப்பையும், எழுத்தையும் குழப்பிக்கொள்ளக்கூடாது என்ற நோக்கத்தில் எழுத்தை ஒதுக்கி வைத்துவிட்டார்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இவரை ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் திருப்பூர் மணியும், சிவகுமாரும் வண்டிச்சக்கரம் படத்தில் இவரை ஒரு நடிகராகவும் அறிமுகப்படுத்தினார்கள்.

வண்டிச்சக்கரம் படத்தில் சிவகுமார் கூடவே வந்து, ‘அண்ணாத்தே அண்ணாத்தே’ என்றும் சரிதாவை ‘தாயி தாயி’ என்றும் அழைத்து அவர்களது கஷ்ட நஷ்டங்களில் பங்குகொள்ளும் வண்டிக்காரனாகி ‘செயற்கைத்தனமே’ இல்லாமல் சிறப்பாக நடித்திருந்தார்.

‘வண்டிச்சக்கரம்’ நூறு நாட்களைத் தாண்டியது. தமிழக அரசு சிறந்த படமாக தேர்ந்தெடுத்து கௌரவித்தது. வினுச்சக்கரவர்த்தி கதை, வசனம் முதல் படமே அரசின் விருது பெற்றது பெருமைக்குரிய விடயம்.

காக்கி நாடா ‘விஜயமாலா’ வை ‘சிலுக்கு ஸ்மிதா’ வாக அறிமுகப்பத்தியவர் இவர்தான்.

‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் கலைமணியும், மணிவண்ணனும் இவருக்கேற்ற கதாபாத்திரத்தை அளித்திருந்தனர். முரட்டுத்தனமான அப்பாவாக நேர்த்தியாக நடித்திருந்தார். ‘பல பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்களில் ‘’தமிழ்த் திரையுலகுக்கு ஓர் அப்பா நடிகர் கிடைத்துவிட்டார்!’’ என்று குறிப்பிடப்பட்டதிலிருந்தே, வினுச்சக்கரவர்த்தி எப்படி நடித்திருப்பார் என்பதை யூகித்துக் கொள்ளலாம். ‘மண் வாசனை’ படத்தில் மலைச்சாமித் தேவராக நடித்தார். ஏவி.எம்.மின் ‘’தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் நவநாகரீக வில்லனாக நடித்தவர் பஞ்சு அருணாசலத்தின் ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரவிச்சந்திரன், சோ ஆகியோர்களோடு மாறுபட்ட வில்லனாக நடித்திருந்தார். ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் மாதவியின் அப்பாவாக நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ‘கிழக்கு வீதி’ என்ற படத்தில் ரஞ்சிதாவின் தந்தையாக வடிவுக்கரசியின் பயந்த சுபாவமுள்ள கணவராகவும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

வினுச்சக்கரவர்த்தி திரைக்கதை, வசனம் எழுதிய ‘கோயில் புறா’, இமைகள் ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறாதபோதும், இவரது கூர்மையான வசனத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இவரது ராசியோ, என்னவோ இவர் சம்பந்தப்பட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் வெற்றியையே தேடித்தந்தது.

இவர் ’மேலப்பறம்பில் ஆண் வீடு’ என்ற படம் உட்பட முப்பது மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். படத்தில் பவிளம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஷோபனாவின் தந்தையாக வீரமுத்துக் கவுண்டர் என்ற வேடத்தில் தமிழ்ப் பேசுபவராகவே நடித்திருந்தார். ‘தென்காசிப்பட்டணம்’ என்ற படத்தில் சுரேஷ் கோபி, லால் இருவரின் வளர்ப்புத் தந்தையாக பெரும் பணக்காரராக தமிழ்ப் பேசுபவராகவே நடித்திருப்பார்.

தமிழ், மலையாளம் தவிர தெலுங்கில் ஐந்து படங்களிலும், கன்னடத்தில் சில படங்களிலுமாக ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

வினுச்சக்கரவர்த்தியின் நடிப்பில் வெளிவந்த சில படங்களின் பட்டியல்.

 1. காவல்
 2. குரு சிஷ்யன்
 3. எங்க ராஜா
 4. ஆண்டவன் சொத்து
 5. மனைவி சொல்லே மந்திரம்
 6. குவா குவா வாத்துக்கள்
 7. மடிப்பிச்சை
 8. ராஜகோபுரம்
 9. மண்ணுக்கேத்த பொண்ணு
 10. என்னுயிர் நீதானே
 11. தம்பிக்கு எந்த ஊரு
 12. ராஜாதி ராஜா
 13. அம்மன் கோவில் கிழக்காலே
 14. கரிமேடு கரிவாயன்
 15. மனிதன்
 16. மாப்பிள்ளை
 17. பணக்காரன்
 18. அண்ணாமலை
 19. சிவா
 20. வரவு எட்டணா செலவு பத்தணா
 21. நீதியின் மறுபக்கம்
 22. குவா குவா வாத்துக்கள்
 23. தங்கமான ராசா
 24. பொண்ணுக்கேத்த புருஷன்
 25. தாலாட்டு
 26. மெல்லப்பேசுங்கள்

நவம்பர் 1983 மற்றும் பிப்ரவரி 1985 பேசும் படம் இதழ்களிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

மண் வாசனைக் கலைஞன்: வினுசக்கரவர்த்தி அஞ்சலி

பிரதீப் மாதவன்

Published: May 5, 2017 10:18 IST   Updated: May 5, 2017 10:18 ISTvinu_3_3161158a

படிப்பறிவில்லாத கிராமத்துத் தலைவர், ஆணவம், ஆணாதிக்கம் தெறிக்கும் தீர்ப்புகளைச் சொல்லும் மரத்தடி நாட்டாமை, கழுத்தில் புலிநக டாலர் அணிந்து, நீண்ட குழல் துப்பாக்கியை தூக்கிப் பிடித்து மிரட்டும் கிராமத்து வில்லன், கோபமும் பாசமும் மிக்க தமிழ் கிராமத்தின் அப்பா, நடப்பு அரசியலை நகலெடுத்ததுபோன்ற ஊழல் எம்.எல்.ஏ., கடுகடுக்கும் காவல் அதிகாரி.

இப்படி வினுசக்ரவர்த்தி ஏற்ற அடுக்கடுக்கான குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் யதார்த்த நகைச்சுவை வழிந்தோடும். கேட்ட மாத்திரத்தில் சிரிப்பையும் பயத்தையும் ஒருசேர வரவழைக்கும் கரகரப்பான குரல், அதன்வழி வெளிப்படும் கதாபாத்திரத்துக்குத் தகுந்த கச்சிதம் குறையாத வசன உச்சரிப்பு, ஆகிருதிக்கு ஏற்ற உடல்மொழி இவை எல்லாம் சேர்ந்த, மண்ணின் வாசம் கடைசி வரை மங்காத திரைக்கலைஞராக மிளிர்ந்தவர்தான் வினுசக்கரவர்த்தி,

உசிலம்பட்டியிலிருந்து சாலிகிராமம் வரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆதிமூலத்தேவர், மஞ்சுவாணி அம்மாள் தம்பதிக்கு மூன்று பிள்ளைகளில் மூத்த மகனாக 1945-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி வினுசக்ரவர்த்தி பிறந்தார். அவருக்கு ஐந்து வயதானபோது தெருக்கூத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. உசிலம்பட்டியில் தெருக்கூத்தையே நம்பிப் பிழைத்த செய்த பல குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. சித்திரை, வைகாசி, பங்குனித் திருவிழாக்களில் உசிலம்பட்டியிலும் சுற்றுவட்டாரக் கோவில்களிலும் 15 நாட்கள் வரை தெருக்கூத்து களைகட்டும்.

கூத்து இல்லாத நாட்களில் நடிகர்கள் நாடகப் பயிற்சியில் ஈடுபடுவதைக் கண்ட சிறுவன் வினுசக்கரவர்த்தியைத் தன்பால் ஈர்த்துக்கொண்டது அந்தக் கலை. அப்பாவின் எதிர்ப்பையும் மீறி கூத்துப் பாடல்களைக் கற்றுக்கொண்டு 8 வயதில் லோகிதாசன் வேடம், பாலமுருகன் வேடங்களில் நடித்தார். இப்படியே விட்டால் மகன் கூத்தாடியாகிவிடுவான் என்று கருதிய அவரது அப்பா, மகனைச் சென்னைக்கு மூட்டை கட்டி அனுப்பிவைத்தார்.

பத்து வயதில் சென்னை வந்த வினுசக்கர வர்த்தி ராயப்பேட்டைவெஸ்லி பள்ளியில் சேர்ந்து படித்தார். ஆனால் நாடக ஆர்வம் அவரை விட்டுக் கொஞ்சமும் அகலவில்லை. பள்ளி நாடகங்களில் முதல் ஆளாக நிற்பார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் சென்னை ஜெயின் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். இறுதியாண்டு படித்தபோது கல்லூரி ஆண்டு விழா நாடகத்தை எழுதி, இயக்கிய வினுசக்கரவர்த்தி, அதற்குத் தலைமையேற்க அன்றைய தமிழகத் தலைமைக் காவல் அதிகாரியான அருளை (டிஜிபி) அழைத்து வந்தார்.

எமதர்ம ராஜா வேடத்தில் வாட்டசாட்டமாக நடித்த வினுசக்கரவர்த்தியை தன் அருகே அழைத்த காவல் அதிகாரி அருள், “ நீ போலீஸ் வேலைக்காகவே பிறந்தவன், பரிட்சை முடிந்ததும் என்னை வந்து பார்” என்று கூறிவிட்டுச்சென்றார். அவரது பரிந்துரையில் உதவி ஆய்வாளராகத் தேர்வான வினுசக்கரவர்த்தி, வேலூரில் போலீஸ் பயிற்சியை முடித்துக்கொண்டபின் சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் ஆறு மாத காலம் உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார். ஆனால் நாடகம், சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம், அவரைத் துரத்திக்கொண்டேயிருந்தது. இதனால் போலீஸ் வேலை அவருக்குப் பிடிக்காமல் போனது. அதை உதறிவிட்டு ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தார்.

மைசூருக்கு மாற்றலாகி வந்த வினுசக்கரவர்த்தி, அங்கே ‘கன்னட சினிமாவின் பிரம்மா’ என்று கொண்டாடப்படும் இயக்குநர் புட்டண்ணா கனகலின் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அவரைச் சென்று சந்தித்து சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கேட்டார். வினுசக்கரவர்த்திக்கு அப்போதே கன்னடம் தெரிந்திருந்தது. கன்னடத்தில் பேசிய தமிழ் இளைஞரான வினுசக்கரவர்த்தியைப் பார்த்து வியந்த புட்டண்ணா கனகல், “ உன்னிடம் நல்ல கதை அறிவு இருக்கிறது.

நடிப்பு என்று திசைமாறிப்போய் அதை வீணாக்கிவிடாதே என்னோடு உதவியாளனாக வந்துவிடு” என்று கூறினார். அப்போது அவரிடம் உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்த இன்னொரு மதுரைத் தமிழ் இளைஞர் பாரதிராஜா. புட்டண்ணா கனகல் இயக்கிய ஐந்து படங்களுக்கு ‘ஸ்ரிப்ட் அசிஸ்டெண்ட்’ ஆக வேலைசெய்த வினுசக்கரவர்த்தியைத் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் படத் தயாரிப்பாளர் திருப்பூர் மணி.

விரும்பி வந்தது… கையில் விழுந்தது

புட்டண்ணா கனகலின் உதவியாளர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய ’பரசக்கதே கண்டதிம்மா’ (Barasnkathae Kandathimma) என்ற கன்னடப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் திரைக்கதையில் வினுசக்கரவர்த்தியின் பங்களிப்பு இருந்தது. நடிகர் சிவகுமார் தனது 100-வது படம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நல்ல கதையைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இந்தக் கன்னடப் படத்தை பரிந்துரைத்தார் தயாரிப்பாளர் திருப்பூர் மணி. உலக மகா கோழை கதாபாத்திரத்தில் சிவகுமார் நடிக்க, அந்தப் படத்தின் தமிழ்த் திரைக்கதையில் பணியாற்றுவதற்காக சென்னைக்கு வந்தார் வினுசக்கரவர்த்தி.

‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’ படத்தின் இயக்குநர் தேவராஜ் மோகன், தயாரிப்பாளர் திருப்பூர் மணி, கதாசிரியர் கல்தூண் கிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து திரைக்கதை, வசனத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தில் இடம்பெற்ற கிராமத்துப் பெரியவர் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வான நடிகர், வசனங்களை ராகம் போட்டு இழுத்துப் பேசியதில் எரிச்சலடைந்தார் இயக்குநர். திரைக்கதை, வசனத்தில் பங்காற்றிய வினுசக்கரவர்த்தி நடிகர்களுக்கு வசனம் சொல்லித்தரும் முக்கிய வேலையை அவரிடம் கொடுத்திருந்தார்.

ராகம் போட்டு வசனங்களைப் பாடும் நடிகரின் கிராமத்துப் பெரியவர் கதாபாத்திரத்தில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தினார் தேவராஜ் மோகன். சிவகுமாரும் அதை வழிமொழிந்தார். நடிப்பை நேசித்து சினிமாவுக்குள் நுழைந்து கதாசிரியர் ஆன வினுசக்கரவர்த்தி, எதை விரும்பி வந்தரோ அது ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தின் மூலம் அவரது கைகளில் விழுந்தது.

1003 படங்கள்

1977-ல் வெளியான ‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’ யில் தொடங்கிய வினுசக்கரவர்த்தியின் பயணம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, நீலகிரியில் வாழும் படுகா மக்களின் படுகா மொழியில் ஒரு படம் என 1003 படங்களுக்கு நீடித்தது. வினுசக்கரவர்த்தியின் சினிமா வாழ்வைத் தொடங்கி வைத்த கன்னட சினிமாவில் கடைசிவரை அவர் நடிக்கவேயில்லை. தமிழில் அவர் கடைசியாக ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் நடித்திருந்தார். ரஜினி, கமல் போன்ற முன்னணிக் கதாநாயர்களுடன் இணைந்தாலும் கவுண்டமணி, செந்தில் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்தாலும் வினுசக்கரவர்த்தி தனக்கேயுரிய நகைச்சுவை முத்திரையைத் தனது கதாபாத்திரம் வழியே பதித்துச்சென்றுவிடும் ஆற்றல்மிக்க நடிகராக விளங்கினார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘மண்வாசணை’, மணிவண்ணன் இயக்கிய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ ஆகிய இரண்டு படங்களும் வினுசக்கரவர்த்திக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தன. பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதிய வினுசக்கரவர்த்தி, ‘வண்டிச் சக்கரம்’ படத்தில் சில்க் ஸ்மிதாவைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி’, நடிகர் சங்கத்தின் ‘கலைச்செல்வம்’ உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். சினிமாவில் நடித்துக்கொண்டே நாடகங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்த வினுசக்கரவர்த்தி சிறந்த ஆன்மிகப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

 http://tamil.thehindu.com/cinema/cinema-others/

“ஒரு கை பார்ப்போம்” 1982 படத்தில் விசுவுடன் வினுச்சக்கரவர்த்தி

Vinuchakkravarthi-Oru Kai Parpom 1982- Vinuchakkravarthi-Oru Kai Parpom 1982-1 Vinuchakkravarthi-Visu-Oru Kai Parpom 1982-

“ஒரு கை பார்ப்போம்” 1982 படத்தில் ராதா, ஸ்ரீலேகாவுடன் வினுச்சக்கரவர்த்தி

Vinuchakkravarthi-Radha-Sreelekha-Oru Kai Parpom 1982-

“ஒரு கை பார்ப்போம்” 1982 படத்தில் கார்த்திக்,  விசுவுடன் வினுச்சக்கரவர்த்திVinuchakkravarthi-Visu-Karthick-Oru Kai Parpom 1982-

”வாழ்க்கைச் சக்கரம்” 1982 படத்தில் ஜனகராஜுடன் வினுச்சக்கரவர்த்திVinuchakkravarthy-Vairagyam 1982- Vinuchakkravarthy-Vairagyam 1982-1 Vinuchakkravarthy-Janagaraj-Vairagyam 1982-

”வாழ்க்கைச் சக்கரம்” 1982 படத்தில் பிரபுவுடன் வினுச்சக்கரவர்த்திVinuchakkravarthy-Prabhu-Vairagyam 1982-

”வாழ்க்கைச் சக்கரம்” 1982 படத்தில் சௌகார் ஜானகியுடன் வினுச்சக்கரவர்த்தி

Vinuchakkravarthy-Sowkar-Vairagyam 1982-

‘திராவிடன்’ 1989 படத்தில் சத்யராஜுடன் வினுச்சக்கரவர்த்தி  Vinu Chakravarthy-Dravidan 1989-1Vinu Chakravarthy-Dravidan 1989-Vinu Chakravarthy-Dravidan 1989-2Vinu Chakravarthy-Sathyaraj-Dravidan 1989-Vinu Chakravarthy-Sathyaraj-Dravidan 1989-1Vinu Chakravarthy-Sathyaraj-Dravidan 1989-2

“ஒருத்தி மட்டும் கரையினிலே” 1981 படத்தில் சரிதாவுடன்  வினுச்சக்கரவர்த்திVinuchakkravarthy-Oruthi Mattum Karaiyinile-1981-Vinuchakkravarthy-Oruthi Mattum Karaiyinile-1981-1Vinuchakkravarthy-Saritha-Oruthi Mattum Karaiyinile-1981-

“ஒருத்தி மட்டும் கரையினிலே” படத்தில் சுதாகர் பேத்தா, சரிதாவுடன்  வினுச்சக்கரவர்த்திVinuchakkravarthy-Saritha-Sudhagar-Oruthi Mattum Karaiyinile-1981-

“ஒருத்தி மட்டும் கரையினிலே” படத்தில் எஸ்.என்.பார்வதியுடன்  வினுச்சக்கரவர்த்திSN.Parvathi-Vinuchakkravarthy-Oruthi Mattum Karaiyinile-1981-SN.Parvathi-Vinuchakkravarthy-Oruthi Mattum Karaiyinile-1981-1

“ஒருத்தி மட்டும் கரையினிலே” 1981 படத்தில் கிருஷ்ணமூர்த்தியுடன்  வினுச்சக்கரவர்த்திKrishnamurthy-Vinuchakkravarthy-Oruthi Mattum Karaiyinile-1981-1

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன் செந்தாமரைvinuchakkaravarthi-enakku-nane-neethipathi-1986vinuchakkaravarthi-enakku-nane-neethipathi-1986-2vinuchakkaravarthi-enakku-nane-neethipathi-1986-1vinuchakkaravarthi-senthamarai-enakku-nane-neethipathi-1986senthamarai-vinuchakkaravarthi-enakku-nane-neethipathi-1986

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் வினுச்சக்கரவர்த்தி, விஜயகாந்துடன் ஜீவிதா vinuchakkaravarthi-jeevitha-vijayakanth-enakku-nane-neethipathi-1986jeevitha-vijayakanth-vinuchakkaravarthi-enakku-nane-neethipathi-1986

“நீதியின் மறுபக்கம்” 1985 படத்தில் வினுச்சக்கரவர்த்தி, ஒய்.விஜயாvinuchakravarthi-neethiyin-marupakkam-1985-2vinuchakravarthi-neethiyin-marupakkam-1985vinuchakravarthi-neethiyin-marupakkam-1985-1vinuchakravarthi-neethiyin-marupakkam-1985-3vinuchakravarthi-y-vijaya-neethiyin-marupakkam-1985

“நீதியின் மறுபக்கம்” 1985 படத்தில் எம்.ஆர்.ராதாரவி, வி.கே.ராமசாமியுடன் வினுச்சக்கரவர்த்திvinuchakravarthi-radharavi-vkr-neethiyin-marupakkam-1985

“குவா குவா வாத்துக்கள்” 1984 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன் லூஸ் மோகன் vinuchakkaravarthi-kuva-kuva-vathukkal-1984loose-mohan-vinuchakkaravarthi-kuva-kuva-vathukkal-1984loose-mohan-vinuchakkaravarthi-kuva-kuva-vathukkal-1984-1

“அதிசயப்பிறவி” 1990 படத்தில்  வினுச்சக்கரவர்த்தியுடன் வி.கே.ராமசாமிvinu-chakravarthy-adhisaya-piravi-1990-1vinu-chakravarthy-adhisaya-piravi-1990-2vinu-chakravarthy-adhisaya-piravi-1990vinu-chakravarthy-as-yamadharma-raja-adhisaya-piravi-1990vinu-chakravarthy-vk-ramasamy-adhisaya-piravi-1990

“அதிசயப்பிறவி” 1990 படத்தில் ரஜனிகாந்துடன் வினுச்சக்கரவர்த்திvinu-chakravarthy-rajinikanth-adhisaya-piravi-1990

“அதிசயப்பிறவி” 1990 படத்தில்  வினுச்சக்கரவர்த்தியுடன் சோ, வி.கே.ராமசாமிvinu-chakravarthy-cho-vk-ramasamy-adhisaya-piravi-1990

“அதிசயப்பிறவி” 1990 படத்தில்  வினுச்சக்கரவர்த்தியுடன் சோ, ரஜனிகாந்த்,  வி.கே.ராமசாமிvinu-chakravarthy-rajinikanth-cho-vk-ramasamy-adhisaya-piravi-1990

“குரு சிஷ்யன்” 1988 படத்தில் ரஜனிக்காந்துடன் வினுச்சக்கரவர்த்திvinu-chakravarthy-guru-sishyan-1988vinu-chakravarthy-guru-sishyan-1988-1vinu-chakravarthy-guru-sishyan-1988-250vinu-chakravarthy-rajinikanth-guru-sishyan-1988

“குரு சிஷ்யன்” 1988 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன் ரவிச்சந்திரன்ravichandran-vinu-chakravarthy-guru-sishyan-1988

“குரு சிஷ்யன்” 1988 படத்தில் மனோரமா, ரஜனிக்காந்துடன் வினுச்சக்கரவர்த்திvinu-chakravarthy-rajinikanth-manorama-guru-sishyan-1988

“குரு சிஷ்யன்” 1988 படத்தில் பிரபு, ரஜனிக்காந்துடன் வினுச்சக்கரவர்த்திvinu-chakravarthy-rajinikanth-prabhu-guru-sishyan-1988

“குரு சிஷ்யன்” 1988 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன் சோ, ரவிச்சந்திரன்vinu-chakravarthy-ravichandran-cho-guru-sishyan-1988ravichandran-cho-vinu-chakravarthy-guru-sishyan-1988

“பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது” 1993 படத்தில் ஐஸ்வர்யாவுடன்  வினுச்சக்கரவர்த்தி

vinu-chakkaravarthi-poranthalum-amblaiya-porakka-koodaadhu-1993vinu-chakkaravarthi-poranthalum-amblaiya-porakka-koodaadhu-1993-1vinu-chakkaravarthi-poranthalum-amblaiya-porakka-koodaadhu-1993-2vinu-chakkaravarthi-aishwarya-poranthalum-amblaiya-porakka-koodaadhu-1993-1vinu-chakkaravarthi-aishwarya-poranthalum-amblaiya-porakka-koodaadhu-1993

“பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது” 1993 படத்தில் ஐஸ்வர்யாவுடன்  வினுச்சக்கரவர்த்தியுடன் ஆர்.சுந்தரராஜன்vinu-chakkaravarthi-r-sundararajan-poranthalum-amblaiya-porakka-koodaadhu-199362

”பொழுது விடிஞ்சாச்சு” 1984 படத்தில் தங்கராஜுடன் வினுச்சக்கரவர்த்திVinuchakkravarthi-Pozhuthu Vidinchachu 1984-Vinuchakkravarthi-MLA.Thangaraj-Pozhuthu Vidinchachu 1984-64

மனைவி சொல்லே மந்திரம் [1993] படத்தில்  நளினியுடன் வினுச்சக்ரவர்த்திVinu Chakravarthy-Manavi Solle Manthiram 1993-2Vinu Chakravarthy-Manavi Solle Manthiram 1993-1Vinu Chakravarthy-Manavi Solle Manthiram 1993-Vinu Chakravarthy-Nalini-Manavi Solle Manthiram 1993-

மனைவி சொல்லே மந்திரம் [1993] படத்தில் ராஜசுலோச்சனா, வெண்ணிறாடை மூர்த்தியுடன் வினுச்சக்ரவர்த்தி

Vinu Chakravarthy-Venniradai Moorthy-Manavi Solle Manthiram 1993-Vinu Chakravarthy-Rajasulochana-Venniradai Moorthy-Manavi Solle Manthiram 1993-70

“தங்கமான ராசா” 1989 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன் கே.ஆர்.சாவித்திரிVinu Chakravarthy-Thangamana Rasa 1989-2Vinu Chakravarthy-Thangamana Rasa 1989-1Vinu Chakravarthy-Thangamana Rasa 1989-KR.Savithri-Vinu Chakravarthy-Thangamana Rasa 1989-74

”பொண்ணுக்கேத்த புருஷன்” 1992 படத்தில் ராஜுவுடன் வினுச்சக்கரவர்த்திVinu Chakravarthi-Ponnukethapurusan 1992-2Vinu Chakravarthi-Ponnukethapurusan 1992-1Vinu Chakravarthi-Ponnukethapurusan 1992-Vinu Chakravarthi-Rajeev-Ponnukethapurusan 1992-

”பொண்ணுக்கேத்த புருஷன்” 1992 படத்தில் ராமராஜனுடன் வினுச்சக்கரவர்த்திVinu Chakravarthi-Ramarajan-Ponnukethapurusan 1992-79

“கரிமேடு கரிவாயன்” 1985 படத்தில் கௌண்டமணியுடன் வினுச்சக்கரவர்த்திVinu Chakravarthi-Karimedu Karuvayan 1985-2Vinu Chakravarthi-Karimedu Karuvayan 1985-Vinu Chakravarthi-Karimedu Karuvayan 1985-1Vinu Chakravarthi-Karimedu Karuvayan 1985-3Vinu Chakravarthi-Goundamani-Karimedu Karuvayan 1985-84

”நிலாவே வா” 1998 படத்தில் விஜயசந்திரிகாவுடன் வினுசக்கரவர்த்திVinu Chakravarthy-Nilave Vaa 1998-Vinu Chakravarthy-Vijayachandrika-Nilave Vaa 1998-

”நிலாவே வா” 1998 படத்தில் ஜெய்கணேஷ். செல்லத்துரையுடன் வினுசக்கரவர்த்திVinu Chakravarthy-Chellathurai-Jaiganesh-Nilave Vaa 1998-Vinu Chakravarthy-Jaiganesh-Nilave Vaa 1998-88

’தாலாட்டு” 1993 படத்தில் அரவிந்தசாமியுடன் வினுச்சக்கரவர்த்திVinu Chakravarthy-Thalattu 1993-Vinu Chakravarthy-Arvind Swamy-Thalattu 1993-

தாலாட்டு” 1993 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன் கவுண்டமணி, கமலா காமேஷ்Kamala Kamesh-Vinu Chakravarthy-Goundamani-Thalattu 1993-

’தாலாட்டு” 1993 படத்தில் அரவிந்தசாமி, கமலா காமேஷ் சுகன்யாவுடன் வினுச்சக்கரவர்த்திKamala Kamesh-Vinu Chakravarthy-Sukanya-Arvind Swamy-Thalattu 1993-92

”மரகத வீணை” 1986 படத்தில் வரலட்சுமியுடன் வினுச்சக்கரவர்த்திVinu Chakravarthy-Maragatha Veenai 1986-Vinu Chakravarthy-Varalakshmi-Maragatha Veenai 1986-94

”மெல்லப்பேசுங்கள்” 1983 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன்  ஒய்.ஜி.மகேந்திரன்

Vinu Chakravarthi-Mella Pesungal 1983-1Vinu Chakravarthi-Mella Pesungal 1983-Vinu Chakravarthi-YGM-Mella Pesungal 1983-Vinu Chakravarthi-YGM-Mella Pesungal 1983-1

”மெல்லப்பேசுங்கள்” 1983 படத்தில் வினுச்சக்கரவர்த்தியுடன்  குண்டு கல்யாணம்

Vinu Chakravarthi-Gundu Kalyanam-Mella Pesungal 1983-99

”உன்னைத்தேடி” 1999 படத்தில்  வினுச்சக்கரவர்த்திVinu Chakravarthy-Unnaithedi 1999-100

 

2 comments on “Vinu Chakravarthi [Story,Screenplay Writer,Actor]

 1. இடம் scottesdale phoniex az usa நேரம் காலை 7:03 காலம் : August 25

  நல்ல நடிகர்! தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் நடிகர்கள் வெற்றிபெறுவர்! செயற்கைத்தனம் இல்லா இயற்க்கை நடிப்பு என்றும் நிலைபெறும். நடிகர்திலகம் சிவாஜிகனேசன் போன்றோர் மட்டும் இதற்க்கு விதிவிலக்கு.over acting என்ற வட்டத்திற்குள் இவர் சிலநேரம் வந்தாலும் இவரின் அந்த traits இவருக்கு கைகொடுத்து மிகைநடிப்பு என்பது தெரியாமல் செய்துவிடும். இது நடிகர்திலகத்தின் தனித்துவம்.

 2. வினுச்சக்கரவர்த்தி, டெல்லி கணேஷ் போன்றோர் அன்றைய எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா போன்று யதார்த்த நடிப்பை வழங்குபவர்கள். அது நகைச்சுவையானாலும், வில்லன் கதாபாத்திரங்களாக இருந்தாலும், குணச்சித்திர கதாபாத்திரங்களாக இருந்தாலும் அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s