எஸ்.தக்ஷிணாமூர்த்தி [இசை அமைப்பாளர்-பாடகர்-தயாரிப்பாளர்]
1946 தொடங்கி 1984 வரை 135 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் மற்றும் இந்திப் படங்களுக்கு இசையமைத்தவர் எஸ்.தக்ஷிணாமூர்த்தி.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பெடேகல்லேப்பட்டி என்ற இடத்தில் 11.11.1921 அன்று கிருஷ்ணபிரம்ம சாஸ்திரி, அன்னபூர்ணம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர். லைலா மஜ்னு, சம்சாரம், நர்த்தனசாலா போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்தவர் இவர்.
1938-இல் எச்.எம்.வி. நிறுவனத்தில் ஆர்மோனியம் வாசிப்பவராக பணியாற்றினார். அகில இந்திய வானொலிகளின் பல வானொலிகளிலும் இவர் இசைப்பிரிவில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்த இவர் பிரபல இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனிடம் உதவியாளராக சேர்ந்தார். 1946-ஆம் ஆண்டு நாரதா நாரதி என்ற படத்திற்கு இசையமைப்பாளராக ஆனார். 1949-ஆம் ஆண்டு பி.பானுமதியின் பரணி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்படம் ‘லைலா மஜ்னு’ வில் சி.ஆர்.சுப்பராமனின் இசையில் ஒரு பாடலைப் பாடினார். அதுபோல் லட்சுமாம்மா கதா, பரமானந்தயா சிஷ்யலு கதா, சர்வாதிகாரி, சந்தானம் போன்ற படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.
தமிழில் ஜெமினி ஸ்டூடியோவின் மாபெரும் வெற்றிச்சித்திரமான ‘சம்சாரம்’ [1950], மாடர்ன் தியேட்டர்ஸின் ‘சர்வாதிகாரி’ [1951], ’வளையாபதி’ [1952], ’கல்யாணி’ [இராமனாதனுடன் இணைந்து] [1952], ’அலிபாபாவும் 40 திருடர்களும்’ [1956] போன்ற படங்களுக்கும்; ராஜ்யம் பிக்சர்ஸ் வேலைக்காரி மகள் [1953] படத்திற்கு சி.ஆர்.சுப்பராமனுடன் இணைந்தும் இசையமைத்த இவர் 1955-இல் ‘மங்கையர் திலகம்’, விஜயா-வாஹினி தயாரித்த ‘யார் பையன்’ [1957], ‘பாக்யவதி’ [1957], ’உலகம் சிரிக்கிறது’ [1959], ’பங்காளிகள்’ [1961], போன்ற பல படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
இவர் சென்னையிலுள்ள தனது வீட்டில் 90-ஆவது வயதில் காலமானார்.
விக்கிப்பீடியாவிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.
அவரது மறைவின்போது ‘கிரேட் ஆந்திரா’ வலைத்தளத்தில் வெளியான செய்தி:-
http://www.greatandhra.com/viewnews.php?id=35670&cat=1&scat=4
Susarla Dakshina Murthy Passed Away
February 10 , 2012 | UPDATED 01:03 IST
Senior music director Susarla Dakshina Murthy passed away. He is 91 year old and was famous for his unbeatable music score for NTR’s Nartanashala way back in 60s.
He debuted with Narada Naradi in 1949 and eventually scored music for films like Samsaram, Santanam, Ilavelpu, Annapurna, Krishna Leelalu, Srimad Virata Parvam, Nartanashala, Sreemad Virat Veerabrahmendra Swamy Charitra etc.
Dakshina Murthy has been suffering from age related illness from quite some time and passed away in Chennai a few hours ago. He scored music for about 135 films in his career. Greatandhra.com extends condolences for the family of the fallen music legend.