S.P.Balasubramoniam

S.P.பாலசுப்பிரமணியம்

நல்ல உயரம், உயரத்தோடு போட்டி போட்டு ஜெயித்துவிட்ட மாதிரி நல்ல பருமன்! ஷட்டில் காக், கிரிக்கெட்டெல்லாம் விளையாடியதால் சின்ன வயதில் மெலிதாகத்தான் இருந்துள்ளார். பின்னணிப் பாடகராக பிசியானதும் வேறு எதற்குமே நேரம் கிடைக்காமல் உடம்பு அதன் விருப்பத்துக்கு வளர்ந்துவிட்டது.

அகில இந்திய அளவில் சிறந்த பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1979-இல் வெளிவந்த ‘சங்கராபரணம்’ தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்தது. ‘ஏக் துஜே கே லியே’ இவருடைய பெருமையை மேலும் அதிகப்படுத்தியது.

S.P.பாலசுப்பிரமணியம் தெலுங்கு தேசத்துக்காரர். காளகஸ்தியில் எஸ்.எஸ்.எல்.சி-யும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி-யையும் முடித்தவர் அனந்தபூரில் பி.ஈ. படிக்கச் சேர்ந்தவர் உடல் நிலைப் பாதிப்பால் முதல் வருடத் தேர்வு எழுத முடியாமல் போக, அனந்தபூர் படிப்பை அதோடு நிறுத்திவிட்டு மீதியைத் தொடர சென்னைக்கு வந்தார். சென்னை பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காமல் திண்டாடிவிட்டு ஏ.எம்.ஐ.ஈ. பிரிவில் சேர்ந்தார்.

S.P.பாலசுப்பிரமணியத்தின் தந்தை சாம்பமூர்த்தி கதாகாலட்சேபம் செய்பவர். S.P.பாலசுப்பிரமணியத்தின் 17 வயதில் விஜயராகவாச்சேரி சாலையில் இருந்த ஆந்திரா கிளப் நடத்திய ஒரு லைட் மியூசிக் போட்டியில் பாடிக்கொண்டிருந்த போது காலஞ்சென்ற இசையமைப்பாளர் கோதண்டபாணி இவரை பார்த்து சினிமாவில் பாட விருப்பமா என்று கேட்க, தான் இப்போது படித்துக்கொண்டிருப்பதாகவும் படிப்பு பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதனால் நான்கு வருடங்கள் கழித்து மறுபடியும் கோதண்டபாணி அழைத்து தெலுங்கு நகைச்சுவை நடிகர் பத்மனாபம் அப்போது தயாரித்துக் கொண்டிருந்த ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா’ படத்தில் அப்படத்தின் கதாநாயகனான ஷோபன்பாபுவுக்கு பின்னணி பாடவைத்தார்.

1968-இல் ஒரு நாள் அனைத்துக் கல்லூரி போட்டிக்காக இவர் தியாகராஜா கல்லூரியில் பாடிக்கொண்டிருந்தபோது இவரது பாட்டைக் கேட்ட மறைந்த ஓவியர் பரணி குமார் (பாலசந்தரின் படங்களுக்கு டிசைனராக இருந்தவர்) இவரை இயக்குநர் ஸ்ரீதரிடம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைக்க அவருக்குப் பிடித்துப்போக மறுநாள் மெல்லிசை மன்னரிடம் பாடிக்காட்டச் சொல்ல இவரும் மெல்லிசை மன்னரைச் சந்தித்து சில இந்திப் பாடல்களைப் பாடிக்காட்ட, தமிழ் தெரியுமா என்று கேட்க; தனக்கு தமிழிலே பாட வரும், ஒழுங்கா பேசவும், படிக்கவும் வராது என கூறியுள்ளார். ‘காதலிக்க நேரமில்லை’, ராமு படங்களின் பாட்டுப் புத்தகங்களைக் கொடுத்து எம்.எஸ்.வி. பாடச்சொன்னார். இவர் அதனை தெலுங்கில் எழுதி வைத்து பாடிக்காண்பித்தார். மெல்லிசை மன்னர் உனக்கு பாடுவதற்கு நான் நிறைய வாய்ப்புத் தருகிறேன். நீ அதற்குள் தமிழை மேம்படுத்திக் கொள் என்று கூறியுள்ளார். இவரும் அது போலவே தமிழை நன்கு படிக்கக் கற்றுக்கொண்டார். இந்த விஷயத்தில் இவருக்கு சென்னை நகர சுவரொட்டிகள் தான் குரு.

அதற்குப் பின்னரும் ஒரு வருடம் வரையில் எந்த சான்ஸும் தமிழில் இவருக்குக் கிடைக்கவில்லை. அதன் பின்னர் எம்.எஸ்.வி. சொன்னபடியே ‘ஹோட்டல் ரம்பா’ என்ற படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் டூயட் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். ஆனால் அந்தப்படம் வெளிவரவேயில்லை. பிறகு ‘சாந்தி நிலையம்’, ‘எஸ்.பி.கோதண்டபாணியின் இசையில் ‘குழந்தை உள்ளம்’ படங்களில் பாடினார். அதற்கடுத்து ‘அடிமைப் பெண்’ படத்தில்தான் பிரபல்யமானார். அடுத்து படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேரப் பாடகரானார். சுமார் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பாடிவிட்டார்.

பத்துக்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்களுக்கும், துடிக்கும் கரங்கள் போன்ற சில தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 1987-ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கேளடி கண்மணி, சிகரம், குணா, காதலன், தலைவாசல், மூணே மூணு வார்த்தை உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்தார். சில படங்களைத் தயாரித்துள்ளார்.

இவரது மனைவி பெயர் சாவித்திரி. மகள் பல்லவி. மகன் கல்யாண் சரண். இவரது தங்கை எஸ்.பி.ஷைலஜா பிரபல பாடகி என்பது அனைவரும் அறிந்ததே.

Daily Thanthi 15.12.2015

Untitled-1

‘மனதில் உறுதி வேண்டும்’ [1987] படத்தில் கற்பனை மனைவியைப் போற்றிப் புகழ்பாடும் அசல் மருத்துவராகவே மாறி ரசிகர்களைக் குதூலிக்கச் செய்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பலவித தோற்றங்களில்.

SPB-Manadhil Urudhi Vendam-1984- SPB-Manadhil Urudhi Vendam-1984-1 SPB-Manadhil Urudhi Vendam-1984-2 SPB-Manadhil Urudhi Vendam-1984-3 SPB-Manadhil Urudhi Vendam-1984-4 SPB-Manadhil Urudhi Vendam-1984-5SPB-Manathil Uruthi Vendum 1987-SPB-Manathil Uruthi Vendum 1987-1SPB-Manathil Uruthi Vendum 1987-2

மனதில் உறுதி வேண்டும் [1987] படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் சுகாசினிSuhasini-SPB-Manathil Uruthi Vendum 1987-

Chandra Mohan with Rajashekar in ”Chennapatnam Chinnollu “1989-Telugu MovieS P Balasubrahmnayam-Chennapatnam Chinnollu 1989-S P Balasubrahmnayam-Chennapatnam Chinnollu 1989-1S P Balasubrahmnayam-Chandra Mohan-Chennapatnam Chinnollu 1989-

நெஞ்சமெல்லாம் நீயே’ 1983 படத்தில் ராதா, மோகனுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்SPB-Radha-Nenjamellam Neeye 1983-SPB-Radha-Mohan-Nenjamellam Neeye 1983-

5 comments on “S.P.Balasubramoniam

 1. manathil uruthi vendum film released 1987.MGR booked him during 1968 and waited for nearly 6 months to record his song due to his illness because MGR doesnot want to disappoint new singer from his film should be ousted.

 2. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சிவசுப்பிரமணியம் அவர்களே. படம் வெளியான ஆண்டு என்பது திருத்தம் செய்யப்பட்டுவிட்டது.

 3. டிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்! விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்!

  கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!

  லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.

  சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.

  ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.

  ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!

  சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.

  தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.

  கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.

  தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…

  பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’

  சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.

  ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?

  கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.

  தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.

  தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.

  லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

  கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?

  கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!

  ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

  கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.

  சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

 4. 1969- ல் வெளி வந்த ” அடிமைப் பெண் ” படத்தை தயாரிக்க எம்ஜிஆர் 1966 – லேயே திட்டமிட்டார் !

  எனவேதான் 1966 – ல் வெளி வந்த ” நான் ஆணையிட்டால் ” படத்தில் இந்த படத்தைப் பற்றி ஒரு விளம்பரம் கொடுத்தார் !

  ஆனால் எதிர்பாராத விதமாக எம்ஜிஆர் அவர்கள் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கி குண்டடிபட்டு, பின்னர் சிறிது காலம் கழித்து குணம் அடைந்து மறுபடியும் “அடிமைப் பெண்” படத்தை தொடங்கினார் !

  எம்ஜிஆர் குண்டடிபடுவதற்கு முன்பே எடுத்த அடிமைப் பெண்ணில் கே.ஆர். விஜயா, சரோஜா தேவி ஆகியோர் நடித்தனர் !

  கே.ஆர். விஜயா 1966 -ல் எடுத்த ” அடிமைப் பெண்ணில் ஒரு பாத்திரத்தில் நாயகியாகவும் , இன்னொரு பாத்திரத்தில் வில்லியாகவும்
  நடித்தார் !

  அந்த படம் சில ஆயிரம் அடிகள் வளர்ந்த பின்னர், அடிமைப் பெண்ணை எம்.ஆர்.ராதா சுட்டுவிட்டதால்………….
  மன்னிக்கவும்– எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா சுட்டதால் ….. அந்த “அடிமைப் பெண்” நிறுத்தப்பட்டது !

  பின்னர் எம்ஜிஆர் குணம் அடைந்து மீண்டும் “அடிமைப் பெண்” எடுக்க நினைக்க , ஏற்கெனவே அவர் எடுத்தது அவருக்கு திருப்தி
  தராததால் அந்த “அடிமைப் பெண்” படச்சுருளை எரித்து விட்டார்!

  பின்னர் , கே.ஆர். விஜயா, சரோஜா தேவியை நீக்கி விட்டு ஜெயலலிதாவை இரு வேடங்களில் நடிக்க வைத்து, கே.ஆர்.விஜயா நடித்த வேடத்தில் ராஜஸ்ரீ நடித்து 01/05/1969 அன்று புதிய “அடிமைப் பெண்” வந்து சக்கை போடு
  போட்டது ! முன்னர் பிரம்மாண்டமான ” செட் ” களைப் போட்டு கே.ஆர்.விஜயா நடித்து எடுத்த காட்சிகளை தீயிட்டு கொளுத்த எம்ஜிஆரைத் தவிர வேறு யாருக்கு துணிவு இருக்கும் ?

  உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ?

  சென்னை- ‘” மிட்லண்ட் ” திரை அரங்கில் ” அடிமைப் பெண் ” முதல் 100 காட்சிகளுக்கு, அதாவது சுமார் 33 நாட்களுக்கு “ரிசர்வேஷன்” ஆகி படம் வெளி வராத முன்பே ” ஹவுஸ்புல்”
  ஆனது !

 5. Congratulations to Mr. Sahadevan Vijayakumar…… for his blog reaches 800000+ views today.

  Also… Congratulations to the regular readers of this blog Mr.Senthil, Mrs.K, and others for keeping this blog always active and dynamic.

  Sethuraman
  One of the regular readers.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s