Master Vishweshwar Rao

மாஸ்டர் விஸ்வேசுவர் ராவ்

ஏ.சி.திருலோகசந்தர் இயக்கி நடிகர் திலகம், கலைச்செல்வி, சோ, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை நிர்மலா, கே.பாலாஜி போன்ற பலர் நடித்த எங்க மாமா படத்தைப் பார்த்திருக்கும் அன்றைய ரசிகர்கள் நிச்சயமாக அப்படத்தில் நடித்த இச்சிறுவனை மறந்திருக்கமாட்டார்கள். நடிகர் திலகம் எடுத்து வளர்க்கும் அனாதைக் குழந்தைகளாக ஜெய கௌசல்யா, ரோஜாரமணி, லட்சுமி ஸ்ரீ, ஜின்டா, ரஜனிஸ்ரீ, சுமதி, மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் சேகர், மாஸ்டர் சுரேந்திரகுமார், மாஸ்டர் ராமு, மாஸ்டர் ரமேஷ் போன்ற மழலைப்பட்டாளங்களுடன் வித்தியாசமாக நடித்திருந்த சிறுவன் தான் இந்தச் சிறுவன் விஸ்வேசுவர் ராவ்.

ஏனைய சிறுவர்களிடத்திலிருந்து இவர் வேறுபட்டிருந்தது இவரது கால்சட்டை ஒரு நேரமும் இவரது இடுப்பில் இருப்பதில்லை. ஒரு காக்கி வண்ணத்திலான கால்சட்டையுமாகவே பெரும்பாலும் வரும் இவர் நழுவி நழுவிச் செல்லும் கால்சட்டையை இரு கைகளாலும் மேலே மேலே இழுத்திழுத்து வைத்துக்கொண்டு திக்கித் திக்கிப் பேசிக் கொண்டே தோன்றுவார். பேச்சு வராமல் நாக்கை வலது வாயில் வெளிப்புறமாக தள்ளிக்கொண்டே வருவார்; அப்போது இவர் சிலவேளைகளில் சொல்ல வந்ததைச் சொல்லமுடியாது திணறும்போது நடிகர் திலகம் இச்சிறுவனின் தலையில் லேசாக ஒரு தட்டு தட்டிவிட்டு அவ்வார்த்தையைச் சொல்லிமுடிப்பார். புதிதாக ஒரு குழந்தையைக் கண்டெடுத்து கொண்டு வரும் நடிகர் திலகம் மேற்கண்ட குழந்தைகளைக் கூட்டி “புதிதாக நமது இல்லத்திற்கு ஒருவர் வருகை புரிந்துள்ளார்”, அவருக்கு என்ன பெயர் வைக்கலாமென்பதை அங்கத்தினர்கள் தெரிவிக்கலாம் என வேண்டுகோள் வைக்கும் காட்சியில் ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு பெயரைச் சொல்லிக் கொண்டே வரும், அந்த வரிசையில் இவர் அக்குழந்தைக்கு ஒரு பெயரைச் சொல்லும் போதே திரையரங்கே சிரிப்பினால் அதிரும். அப்படியொரு மறக்கமுடியாத பால்ய நடிகர் மாஸ்டர் விஸ்வேசுவர் ராவ்.

இவர் தமிழில் நடிகை சாவித்திரியின் சொந்தப்படமான குழந்தை உள்ளம் [1969] தெலுங்கில் பட்டின்டில்லா பங்காரம் [1967], நானென்றே நானே [1968], மூக நோமு [1969], இண்டி கௌரவம் [1970]  பெட்டாலு மாரல்லி [1974],கண்ணா நலமா [1972], அன்னை அபிராமி [1972],  போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

’எங்க மாமா’ [1969] படத்தில் மாஸ்டர் விஸ்வேசுவர் ராவ் தனித்தும் மாஸ்டர் பிரபாகருடனும்

Master Vishweshwar Rao-Enga Mama Master Vishweshwar Rao-Enga Mama-1 Master Vishweshwar Rao-Enga Mama-2 Master Vishweshwar Rao-Enga Mama-3 Master Vishweshwar Rao-Enga Mama-4 Master Vishweshwar Rao-Enga Mama-5 Master Vishweshwar Rao-Enga Mama-6 Master Vishweshwar Rao-Prabhagar-Enga Mama

பட்டின்டில்லா பங்காரம் [1967] படத்தில் தனித்தும் பேபி ஸ்ரீதேவியுடனும் மாஸ்டர் விஸ்வேசுவர் ராவ்

Master Vishweshwar Rao-Pattindalla Bangaram 1967- Master Vishweshwar Rao-Sridevi-Pattindalla Bangaram 1967-

நானென்றே நானே [1968] படத்தில் மாஸ்டர் விஸ்வேசுவர் ராவ்Master VISWESAWARA Rao-Nenante Nene 1968 - Master VISWESAWARA Rao-Nenante Nene 1968 -1

‘மூக நோமு’ [1969] படத்தில் மாஸ்டர் விஸ்வேசுவர் ராவ்

Master Visweshvar Rao-Mooga Nomu 1969-Master Visweshvar Rao-Mooga Nomu 1969-1

‘மூக நோமு’ [1969] படத்தில் பேபி பிரமாஜியுடன் மாஸ்டர் விஸ்வேசுவர் ராவ்

Master Visweshvar Rao-Baby Brahmaji -Mooga Nomu 1969-2

‘மூக நோமு’ [1969] படத்தில் சித்தூர் வி.நாகையாவுடன் மாஸ்டர் விஸ்வேசுவர் ராவ்

Master Visweshvar Rao-V.Nagaiah-Mooga Nomu 1969-

‘குழந்தை உள்ளம்’ [1969] படத்தில் சி.கே.சரசுவதியுடன் மாஸ்டர் விஸ்வேஸ்வர் ராவ்

Master Visweshwar Rao--C K Saraswathi-KUZHANTHAI ULLAM 1969-Master Visweshwar Rao--C K Saraswathi-KUZHANTHAI ULLAM 1969-1

“பிள்ளை செல்வம்” [1974] படத்தில் மாஸ்டர் விக்னேஸ்வர் ராவ்  

Master Visveswar Rao-Pillai Selvam 1974-Master Visveswar Rao-Pillai Selvam 1974-1

கண்ணா நலமா” [1972] படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் மாஸ்டர் விஸ்வேஸ்வர் ராவ்

Master Viswesvara Rao-Kanna Nalama 1972-Master Viswesvara Rao-MRR.Vasu-Kanna Nalama 1972-

பெட்டாலு மாரல்லி 1974 தெலுங்குப் படத்தில் ஜமுனாவுடன் மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்

master-visweshwara-rao-peddalu-marali-1974-2master-visweshwara-rao-peddalu-marali-1974master-visweshwara-rao-peddalu-marali-1974-1master-visweshwara-rao-jamuna-peddalu-marali-1974

“அன்னை அபிராமி” 1972 படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்

master-visweswar-rao-annai-abirami-1972master-visweswar-rao-annai-abirami-1972-1master-visweswar-rao-kr-vijaya-annai-abirami-1972-1

அன்னை அபிராமி” 1972 படத்தில் கரிக்கோல் ராஜுடன் மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்

master-visweswar-rao-karikol-raj-annai-abirami-1972

“அன்னை அபிராமி” 1972 படத்தில் நாஞ்சில் நளினி, ஜி.தனபால், வெள்ளை சுப்பையா, கரிக்கோல் ராஜுடன் மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்

master-visweswar-rao-nanjil-nalini-g-dhanapal-karikol-raj-subbiah-annai-abirami-1972

Master Vishweshwar Rao with Nagabhushanam in “Inti Gowravam” 1970 Telugu MovieMaster Visweswara Rao-Inti Gowravam 1970-2Master Visweswara Rao-Inti Gowravam 1970-3Master Visweswara Rao-Inti Gowravam 1970-Master Visweswara Rao-Inti Gowravam 1970-1Master Visweswara Rao-Nagabhushanam-Inti Gowravam 1970-Master Visweswara Rao-Nagabhushanam-Inti Gowravam 1970-1

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s