Sathyan

மலையாளத் திரையுலகில் தனி முத்திரை பதித்த மாபெரும் நடிகர்களுள் ஒருவர். அலட்டல், ஆர்ப்பாட்டமில்லாத, சினிமாத்தனமில்லாத, யதார்த்த நடிப்பிற்குப் பெயர் பெற்றவர் சத்யன். இவருக்கு நிகர் இவர் மட்டுமே. தமிழ்த்திரையுலகிற்கு ஒரு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்றால் மலையாளத் திரையுலகிற்கொரு நடிகர் திலகம் சத்யன். இவர் நடித்த சில படங்கள் தமிழில் தழுவி எடுக்கப்பட்ட போது தமிழில் நடிகர் திலகம் மிகையான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்ததுண்டு. உதாரணமாக ‘பாபு’ படத்தை சொல்லலாம். Continue reading