Nalina

நளினா [எல்.நளினி] – தமிழ்ப்படவுலகின் பழம்பெரும் நடிகை.

இவர் கல்யாணப்பரிசு படத்தில் ஸ்ரீதரால் 1957-இல் அறிமுகப்படுத்தப்பட்டார். தெய்வத்திருமகள் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். விஜயபுரி வீரன், காஞ்சித்தலைவன், நாளை நமதே, வா ராஜா வா, திருமலைத் தென்குமரி, தோடி ராகம், கருப்புப்பணம் உட்பட  தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பெயர் லூயிஸ். இவரும் மறைந்துவிட்டார். இவர்களுக்கு உமா மஹேஸ்வரி என்ற ஒரேயொரு மகள் மட்டும் உள்ளார். இவர் நளினாவின் தம்பி அனந்த ராம் சிங் என்பவரை மணந்துள்ளார். நீரிழிவு நோயால் அவதிப்பட்ட நளினா பெங்களூருவில் கே.ஆர்.புரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பலனின்றி 21.02.2002 அன்று தனது 64-ஆவது வயதில் மரணமடைந்தார்.

Source:- Daily Thanthi 22.02.2002

நளினா நடித்துள்ள மேலும் சில படங்கள்:

ஆயிரம் ரூபாய் [1964], பாலூட்டி வளர்த்த கிளி [1976], தலைவன் [1970],  லாட்டரி டிக்கட் [1982], நாளை நமதே [1975], எனக்கு நானே நீதிபதி [1986], ஆயிரம் முத்தங்கள் [1982], இதோ எந்தன் தெய்வம் [1972], அகத்தியர் [1972], ”மச்சானப் பாத்தீங்களா” [1978], விஜயபுரி வீரன் [1960], நினைப்பதற்கு நேரமில்லை” [1963]

காயங்குளம் கொச்சுண்ணி [1967] படத்தில் நளினா

Nalina-Kayamkulam Kochunni 1967- Nalina-Kayamkulam Kochunni 1967-1 Nalina-Kayamkulam Kochunni 1967-2 Nalina-Kayamkulam Kochunni 1967-3 Nalina-Kayamkulam Kochunni 1967-4 Nalina-Kayamkulam Kochunni 1967-5 Nalina-Kayamkulam Kochunni 1967-6

திருமலை-தென்குமரி [1970] படத்தில் நளினா சசிகுமாருடன்Nalina-Sasikumar-Thirumalai Thenkumari-Sasikumar-Nalina-Thirumalai Thenkumari-2Sasikumar-Nalina-Thirumalai Thenkumari-1

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் வீரராகவனுடன் நளினாNalina-Paalooti Valartha Kili 1976-Nalina-Paalooti Valartha Kili 1976-1Nalina-Paalooti Valartha Kili 1976-2Nalina-SR.Veeraraghavan-Paalooti Valartha Kili 1976-

லாட்டரி டிக்கட் [1982] படத்தில் நளினா [எல்.நளினி]  L.Nalina-Lottery Ticket 1982-L.Nalina-Lottery Ticket 1982-1L.Nalina-Lottery Ticket 1982-2L.Nalina-Lottery Ticket 1982-3

லாட்டரி டிக்கட் [1982] படத்தில் நளினா [எல்.நளினி]யுடன் மோகன்  L.Nalina-Mohan-Lottery Ticket 1982-

லாட்டரி டிக்கட் [1982] படத்தில் நளினா [எல்.நளினி]  சுகாசினியுடன் L.Nalina-Subashini-Lottery Ticket 1982-1L.Nalina-Subashini-Lottery Ticket 1982-2L.Nalina-Suhashini-Lottery Ticket 1982-

”தலைவன்” [1970] படத்தில் நளினா Nalina-Thalaivan 1970-

”ஆயிரம் ரூபாய்” [1964] படத்தில் கரிக்கோல் ராஜ், சாவித்திரியுடன் நளினி

Nalina-Karikol Raj-Savithri-Aayiram Rupai 1964-Karikol Raj-Nalina-Savithri-Aayiram Rupai 1964-

“அக்கரைப்பச்சை” [1974] படத்தில் ரவிச்சந்திரனுடன்  நளினி Nalina-AKKARAIPACHAI 1974-Nalina-AKKARAIPACHAI 1974-1Nalina-Ravichandran-AKKARAIPACHAI 1974-

“நாளை நமதே” 1975 படத்தில் நளினா nalina-naalai-namadhe-1975-1nalina-naalai-namadhe-1975nalina-naalai-namadhe-1975-3nalina-naalai-namadhe-1975-2

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் செந்திலுடன் நளினா nalina-enakku-nane-neethipathi-1986-2nalina-enakku-nane-neethipathi-1986-1nalina-enakku-nane-neethipathi-1986nalina-senthil-enakku-nane-neethipathi-1986

“ஆயிரம் முத்தங்கள்” 1982 படத்தில் சாருஹாசனுடன் நளினா nalina-ayiram-muthangal-1982nalina-saruhassan-ayiram-muthangal-1982nalina-saruhassan-ayiram-muthangal-1982-1nalina-saruhassan-ayiram-muthangal-1982-2

“இதோ எந்தன் தெய்வம்” 1972 படத்தில் எஸ்.வி.ராமதாஸ், மேஜர் சுந்தரராஜனுடன் நளினி  nalini-itho-enthan-deivam-1972-5nalini-itho-enthan-deivam-1972-1nalini-itho-enthan-deivam-1972-2nalini-itho-enthan-deivam-1972nalini-itho-enthan-deivam-1972-4nalini-itho-enthan-deivam-1972-3nalini-major-svr-itho-enthan-deivam-1972

“அகத்தியர்” 1972 படத்தில் தேவகியுடன் நளினி  nalina-agathiyar-1972-1nalina-agathiyar-1972nalina-agathiyar-1972-2

“அகத்தியர்” 1972 படத்தில் ரி.ஆர்.மகாலிங்கத்துடன் நளினி, தேவகி, ராஜ்கோகிலா nalina-rajkohila-lakshmi-trm-agathiyar-197251

“குமரிப்பெண்ணின் உள்ளத்திலே” 1980 படத்தில் கே.பாக்யராஜ், எம்.ஆர்.ராதிகாவுடன் நளினிNalina-K.Bhagyaraj-Radhika-Kumari Pennin Ullathile 1980-

”மச்சானப் பாத்தீங்களா” 1978 படத்தில் சுமித்ராவுடன் நளினிNalini-Machanai Patheengala 1978-Nalini-Sumithra-Machanai Patheengala 1978-

”மச்சானப் பாத்தீங்களா” 1978 படத்தில் வி.கோபாலகிருஷ்ணன், சுமித்ராவுடன் நளினி

Nalini-V.Gopalakrishnan-Sridevai-Machanai Patheengala 1978-55

”விஜயபுரி வீரன்” 1960 படத்தில் காமினியுடன் நளினி Nalini-Vijayapuri Veeran 1960-Nalini-Kamini-Vijayapuri Veeran 1960-57

”நினைப்பதற்கு நேரமில்லை” 1963 படத்தில் நளினிNalini-Ninaippatharkku Neramillai 1963-1Nalini-Ninaippatharkku Neramillai 1963-59

4 comments on “Nalina

 1. சகாதேவன் விஜயகுமார் சார்
  என் இனிய நண்பர் வாசுதேவன் அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல் நடிகை நளினா பற்றி . தங்களுக்கு தெரிவிக்க ஆசைபடுகிறேன்

  நடிகை நளினா பற்றி இன்னொரு தகவல். இவர் ஆரம்ப காலம் கொண்டே தமிழ்ப் படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் சில படங்களில் வில்லியாகவும் நடித்திருப்பது நினைவுக்கு வருகிறது. காலேஜ் பிரின்சிபல், டீச்சர் போன்ற வேடங்களும் பண்ணியவர்.

  இவர் ஒரு நடன நடிகையும் கூட. நடிகர் திலகத்தின் அருமையான படமான கே.எஸ்.ஜியின் இயக்கத்தில் வெளிவந்த ‘குலமா குணமா’ படத்தில் இவருக்கு ஒரு நடனப் பட்டு ஒன்று உண்டு. இவருடன் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘வாழையடி வாழை’யில் அறிமுகப்படுத்திய பி.ஆர்.வரலஷ்மி ஆடுவார். இவருக்குக் குரல் ஜானகி. இருவருமே அழகாக ஆடுவார்கள். உடன் கோஷ்டியினரும் உண்டு. இந்த நடன மாதர் கோஷ்ட்டியில் ‘மன்மத லீலை’ நடிகை ஹலமும் ஒரு ஓரமாக ஆடுவதை நீங்கள் பார்க்கலாம்.

  சுசீலாம்மா இவருக்காக குரல் தந்திருப்பார். பாடலும் அருமையான பாடல். ரகளை மியூசிக். இந்தப் பாடலில் இன்னொரு விசேஷம். பாடலுக்கு ஆடும் நளினாவும், பி.ஆர்.வரலஷ்மியும் பாடல் முழுதும் ஒருத்தரையொருத்தர் ‘அக்கா’ என்றே அழைத்துக் கொள்வார்கள்.

  ‘மாத்தூரு ராமக்கா
  மாப்பிள்ளை யாரக்கா
  ஆத்துக்கு பக்கமா
  அலைஞ்சது ஏனக்கா’

  ‘குலமா குணமா’ பட டைட்டிலில் நடனம் ஆடும் நளினா, பி.ஆர்.வரலஷ்மி பெயர்கள் தனித்தனியே.

 2. அசத்தல் கணபதி கிருஷ்ணன். நல்ல அருமையான தகவல்கள். நளினா குலமா குணமா படத்தில் நடித்திருந்தாரா என்பதே என் நினைவில் இல்லை. காரணம் அப்படத்தைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தப் பாடல். பொதுவாகவே கே.வி.மகாதேவ ஐயரின் இசையில் நான் லயித்துவிடுவதுண்டு. அதிலும் குறிப்பாக துள்ளாட்டம் போடும் பாடலகள் எனக்கு மிகவும் பிடித்தமானது. பல ரசிகர்கள் [ஏன் பாடிய பாடகர்களும் கூட] டப்பாங்குத்து என்றும் தெருக்கூத்துப் பாடலென்றும் கேட்காமல் விடும் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. இவ்வலைப்பூவின் மேன்மைக்காக பாடலின் காணொளியையும் தேடிப்பிடித்தெடுத்து சான்றோடு அதனை இங்கே பகிர்ந்துகொண்டுமிருப்பது தங்களது பெருந்தன்மையையும் இவ்வலைப்பூவின் மீது தாங்கள் கொண்டுள்ள அபிமானத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. காணொளியும் நல்லத் தெளிவாகயிருந்தது. உங்கள் ஆதரவிற்கும் உற்சாகத்திற்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினைத் [வழமைபோல்] தெரிவித்துக் கொள்கிறேன்.

 3. இவர் கருப்பு பணம் திரைப்படத்தில் நடிகையாக வருவார் இவருக்கு அப்படத்தில் ஒரு பாடல் “கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி”. மேலும் கருந்தேள் கண்ணாயிரம் திரைப்படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக வருவார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s