Sreelatha Namboothiri

ஸ்ரீலதா நம்பூதிரி-கேரளாவில் உதயா ஸ்டூடியோவின் வடக்குப்பாட்டுக் காலம் முதல் மலையாளத் திரையுலகில் திடகாத்திரமாக வலம் வருகின்ற ஓர் நகைச்சுவை நடிகை; மட்டுமல்லாது சிறந்த நகைச்சுவைப் பாடகி. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகையாக இருந்துவரும் ஒரு சாதனையாளர். 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். ஜனங்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்வதோடு, சோகமான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கண்கலங்கச் செய்யவும் தெரிந்த ஆற்றலுள்ளவர். இவரது தாயார் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்ற ஓர் மேடைப் பாடகியாதலால் அவரிடமிருந்தே இவரும் சாஸ்திரீய சங்கீதத்தை முறையாக கற்று தேர்ந்தவர். Continue reading

Advertisements