LIC-Narasimhan

எல்.ஐ.சி. நரசிம்மன்- நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்.

ஆறிலிருந்து அறுபது வரை’, மாநகரக்காவல், பாலூட்டி வளர்த்த கிளி உள்ளிட்ட  400-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, நீதிபதி, வக்கீல் போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் எல்.ஐ.சி. நரசிம்மன்(வயது-71). எல்.ஐ.சியில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் சினிமா ஆசையால் விருப்ப ஓய்வு பெற்று நடிக்க வந்தார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் படங்கள் அனைத்திலும் இவர் நடித்துள்ளார்.1980-களில் சென்னைத் தொலைக்காட்சியில் பல தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடித்தார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகளும் பேசப்பட்டன. வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்றுக் கொள்ள வருவார் ‘நின்னுக்கோரி வரணும்… வரணும்…’ என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லி கொடுப்பார்.

இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியைப் பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.

எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர்.

இவர் நடித்த மேலும் சில படங்கள் விவரம்:

அந்தரங்கம் [1975], பாலூட்டி வளர்த்த கிளி [1976], வெற்றி விநாயகர் [1996], தந்துவிட்டேன் என்னை [1991], ஓசை [1984], நான் மகான் அல்ல [1984], எனக்கு நானே நீதிபதி [1986], நீதியின் மறுபக்கம் [1985], அதிசயப்பிறவி [1990], குரு சிஷ்யன் [1988], மெல்லப்பேசுங்கள் [1983]

ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் எல்.ஐ.சி.நரசிம்மன் 

LIC.Narasinhan-Aarilirunthu Arubathu Varai 1979-1 LIC.Narasinhan-Aarilirunthu Arubathu Varai 1979-2

ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் எல்.ஐ.சி.நரசிம்மனுடன் பி.ஜெயா B.Jaya-LIC.Narasinhan-Aarilirunthu Arubathu Varai 1979-

ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் சக்கரவர்த்தி, எல்.ஐ.சி.நரசிம்மன் ,பி.ஜெயா

B.Jaya-LIC.Narasinhan-Chackravarthy-Aarilirunthu Arubathu Varai 1979- B.Jaya-LIC.Narasinhan-Chackravarthy-Aarilirunthu Arubathu Varai 1979-2

ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் ரஜனிகாந்த், சக்கரவர்த்தி, எல்.ஐ.சி.நரசிம்மன் 

LIC.Narasinhan-Chackravarthy-Rajanikanth-Aarilirunthu Arubathu Varai 1979-

பிரபல குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் காலமானார் என்ற தலைப்பிட்டு 28.10.2011 அன்று ‘விகடன்’ செய்திகள் பகுதியில் வந்திருந்த மரணச்செய்தி.

பிரபல குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன். இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘ஆறில் இருந்து அறுபது வரை’ படத்தில் ரஜினி தம்பியாக நடித்தார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகளும் பேசப்பட்டன. வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ள வருவார் ‘நின்னுக்கோரி வரணும்… வரணும்…’ என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லி கொடுப்பார்.

இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை(அக்டோபர் 29) காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

http://cinema.dinamalar.com/tamil-news/5480/cinema/Kollywood/Actor-LIC-Narasimhan-died.htm மற்றும்

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=4616 -லிருந்து எடுக்கப்பட்டது.

‘ஸ்ரீதரின்’ ‘தந்துவிட்டேன் என்னை’ [1991] படத்தில் எல்.ஐ.சி.நரசிம்மன்

LIC Narasimhan-Thanthu Vitten Ennai 1991- LIC Narasimhan-Thanthu Vitten Ennai 1991-1

‘பெண்மணி அவள் கண்மணி’ [1988] படத்தில் எல்.ஐ.சி.நரசிம்மன், விசுவுடன் குட்டி பத்மினி

LIC Narasimhan-Penmani Aval Kanmani 1988-LIC Narasimhan-Kutti Padmini-Visu-Penmani Aval Kanmani 1988-

‘வெற்றி விநாயகர்’ [1996] படத்தில் சிவனாக எல்.ஐ.சி.நரசிம்மன் சக்தியாக கே.ஆர்.விஜயா

LIC Narasimhan as Siva-Vetri Vinayagar 1996-LIC Narasimhan as Siva-KR.Vijaya-Vetri Vinayagar 1996-1LIC Narasimhan as Siva-KR.Vijaya-Vetri Vinayagar 1996-2LIC Narasimhan as Siva-KR.Vijaya-Vetri Vinayagar 1996-

‘ஓசை’ [1984] படத்தில் மோகனுடன் எல்.ஐ.சி.நரசிம்மன்LIC Narasimhan-Mohan-Osai 1984-

’பாலூட்டி வளர்த்த கிளி’ [1976] படத்தில் எல்.ஐ.சி.நரசிம்மன் LIC.Narasimhan-Paalooti Valartha Kili 1976-

“நான் மகான் அல்ல” [1984] ரஜினிகாந்துடன் எல்.ஐ.சி.நரசிம்மன்LIC Narasimhan-Rajinikanth-Naan Mahan Alla 1984-

“நான் மகான் அல்ல” [1984] சோ மற்றும் ரஜினிகாந்துடன் எல்.ஐ.சி.நரசிம்மன்LIC Narasimhan-Cho-Rajinikanth-Naan Mahan Alla 1984-LIC Narasimhan-Cho-Rajinikanth-Naan Mahan Alla 1984-1

”அந்தரங்கம்” [1975] படத்தில்  நரசிம்மன்  LIC Narasimhan-Antharangam 1975-LIC Narasimhan-Antharangam 1975-1

“தீர்ப்புகள் திருத்தப்படலாம்” [1982] படத்தில் அம்பிகா, சிவகுமாருடன் நரசிம்மன்

LIC.Narasimhan-Theerppukal Thiruthapadalam 1982-1LIC.Narasimhan-Theerppukal Thiruthapadalam 1982-LIC.Narasimhan-Sivakumar-Theerppukal Thiruthapadalam 1982-

‘எனக்கு நானே நீதிபதி’ 1986 படத்தில் விஜயகாந்துடன் நரசிம்மன் lic-narasimhan-enakku-nane-neethipathi-1986lic-narasimhan-enakku-nane-neethipathi-1986-1lic-narasimhan-vijayakanth-enakku-nane-neethipathi-1986

“நீதியின் மறுபக்கம்” 1985 படத்தில் விஜயகாந்துடன் நரசிம்மன்lic-narasimhan-neethiyin-marupakkam-1985lic-narasimhan-vijayakanth-neethiyin-marupakkam-1985

“அதிசயப்பிறவி” 1990 படத்தில் செந்தாமரையுடன் நரசிம்மன்   lic-narasimhan-adhisaya-piravi-1990lic-narasimhan-senthaamarai-adhisaya-piravi-1990

“குரு சிஷ்யன்” 1988 படத்தில் வினுச்சக்கரவர்த்தி, செந்தாமரையுடன் எல்.ஐ.சி.நரசிம்மன்  lic-narasimhan-guru-sishyan-1988lic-narasimhan-guru-sishyan-1988-1lic-narasimhan-vinu-chakravarthy-senthamarai-guru-sishyan-1988

”காலமெல்லாம் காத்திருப்பேன்” 1997 படத்தில் ஜெய்சங்கர், விஜயுடன் நரசிம்மன்LIC.Narasimhan-Vijay-Jaisankar-Kaalamellam Kaathiruppen 1997-

”மெல்லப்பேசுங்கள்” 1983 படத்தில் எல்.ஐ.சி.நரசிம்மனுடன் வசந்த்LIC.Narasimhan-Mella Pesungal 1983-LIC.Narasimhan-Mella Pesungal 1983-1LIC.Narasimhan-Vasanth-Mella Pesungal 1983-

Advertisements

One comment on “LIC-Narasimhan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s