Nellikode Bhaskaran

நெல்லிக்கோடு பாஸ்கரன் – பாஸ்கர மேனோன் என்ற நெல்லிக்கோடு பாஸ்கரன். மலையாளத் திரையுலகில் கோழிக்கோடு பிரதேசத்தின் பெருமைகளை அறியத்தந்த சிறந்ததொரு நகைச்சுவை நடிகர்களுள் இவரும் ஒருவர்.

40 வருடங்களுக்கு மேல் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைக் கட்டியாண்ட பெருமைக்குரியவர். நல்ல நல்ல கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர்.  1988 ஆகஸ்ட் 11 அன்று இவர் காலமானார். Continue reading

Galatta Kalyanam 1968 Full Movie

Galatta Kalyanam is a 1968 Indian Tamil-language film starring Sivaji Ganesan, Jayalalitha, K. A. Thangavelu, Cho Ramaswamy, A. V. M. Rajan, Nagesh, V. Gopalakrishnan, VS Raghavan, Senthamarai, Sachu, Jyothi Lakshmi,Maali, R.Packirisami, Rajeswari, M.S.Sundaribhai, Seethalakshmi, SA.Kannan, Devamanohari, Jambu, Typist Gopu, KV.Sreenivasan, Pandian, Master Balaji and Manorama.

இது ஒரு முழு நீள நகைச்சுவைச் சித்திரம். இப்படம் பெரும் வெற்றி பெற்றதனால் இதே யூனிட்டைக் கொண்டு மற்றொரு படமெடுக்கவேண்டும் என்று சிவாஜி பிலிம்ஸ் எடுத்த படம்தான் “சுமதி என் சுந்தரி”. Continue reading

Philomina

பிலோமினா

1960-களில் நாடகங்களில் நடிக்கத் துவங்கிய பிலோமினா முதன்முதலாக திரையில் நடித்தது டி.இ.வாசுவாவனின் தயாரிப்பில் என்.கிருஷ்ணன் நாயர் இயக்கிய குட்டிக்குப்பாயம் என்ற படத்தில் ஆகும். இவர் இறுதியாக நடித்த படம் ‘மீரயுடெ துக்கவும் ஸ்வப்னமும்’ என்ற படமாகும். 750 திரைப்படத்தில் பிலோமினா நடித்துள்ளார்.

காட் ஃபாதர், மாலா யோகம், கிரீடம், அங்கிள் பண், ஹரிஹர் நகர், விறுத்தன்மார் சூட்சிக்குக, துறக்காத்த வாதில், சாட்டா, இந்நலே, வெங்கலம், சுரம், வியட்நாம் கோளணி, கோளேஜ் கேர்ள், தனியாவர்த்தனம், குட்டிக்குப்பாயம், சுபைதா, பிராதேசிக வார்த்தைகள், ஆறடி மண்ணின்றே ஜன்மி என்பவை இவரது பிரதானப்பட்ட திரைப்படங்கள். Continue reading

Actor T.S.Balaiah’s 100-th Year Celebration

திருநெல்வேலி, சுண்டங்கோட்டை பாலையா என்ற அமரத்துவமற்ற திரைச்சிற்பி, ’நடிப்புச் செல்வர்’ ரி.எஸ்.பாலையா அவர்களின் நூற்றாண்டு தினம் இன்று (22.08.2014). ரி.எஸ்.பாலையா அவர்களின் பல பார்த்து அவரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டவன் நான். அவரது வில்லத்தனமான நடிப்பையும் ரசித்ததுண்டு. குணச்சித்திர நடிப்பையும் நான் ரசித்ததுண்டு. இவ்விரண்டையும் விட நான் அதிகமாக நேசித்தது அவரது நகைச்சுவை வேடங்களையே. நடிகர் சங்கம் ‘ரி.எஸ்.பாலையா’ அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருப்பதாக அறிவித்துள்ளது. இன்று (22.8.2014) சூரியன் தொலைக்காட்சியில் ‘சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியில் ரி.எஸ்.பாலையாவின் மகனும் கலை வாரிசுமான ஜூனியர் பாலையாவும் இயக்குநர் சித்ராலயா கோபு அவர்களும் ரி.எஸ்.பாலையாவின் அருமை பெருமைகளை அள்ளி வழங்கினார்கள். Continue reading

Thillaanaa Mohanambal Movie-1968

’தில்லானா மோகனாம்பாள்’ – கொத்தமங்கலம் சுப்புவின் மூலக்கதையுடன் இறையருள் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கிய ஓர் வரலாற்றுக் காவியம். ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடர் கதையாக வெளிவந்து பிரபலமானது. 1968-ஆம் ஆண்டு வெளிவந்து சக்கைப் போடு போட்டது இப்படம். கதைச் சுருக்கத்துடன் முழு விவரம். Continue reading

Ambika Sukumaran

அம்பிகா சுகுமாரன் – பழம்பெரும் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகை.

1950-1960 களில் மலையாள ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் நடிகை. 1974 ஆம் ஆண்டு வரையில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சுகுமாரன் என்பவரைத் திருமணம் தற்போது தமது இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். ’எதிர்பாராதது’ , தில்லானா மோகனாம்பாள், ‘ரம்பையின் காதல்’ உள்ளிட்ட மூன்று தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் லலிதா,பத்மினி,ராகினி சகோதரியர்களின் நெருங்கிய உறவினர்.  இம்மூவருடனும் நடன நிகழ்ச்சிகள் பலவற்றிலும் இணைந்து நடனமாடியுள்ளார். லலிதா,பத்மினி,ராகினி ஆகியோர் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிய போது இவரும் அவர்கள் வழி நடிகையாக நுழைந்தார். இவரது முதல் படம் உதயா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் குஞ்ஞாகோ இயக்கி வெளியான ‘விசப்பின்றே விழி’. இப்படம் 1952-ஆம் ஆண்டு வெளியாகியது. Continue reading

Kottarakkara Sreedharan Nair

கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர்- மலையாளத் திரையுலகில் 1960-1970-களில் வில்லன் வேடங்களில் கொடிகட்டிப் பறந்தவர். இவரது மகன் பல மலையாள மற்றும் தமிழ்ப் படங்களில் முன்னணி நடிகராகவுள்ள சாய்குமார். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரா-வில் படிஞ்ஞாற்றின்கரா கொரற்றியோடு, நாராயணபிள்ளை, உம்மினி அம்மாவின் புதல்வராக 11.09.1922 அன்று பிறந்தவர். Continue reading

Miss Kumari

மிஸ் குமாரி என்ற திரேசியம்மா தோமஸ்.ஆரம்ப கால மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை. ’பெற்றவள் கண்ட பெருவாழ்வு’, காஞ்சனா உட்பட சில தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். கேரளாவிலுள்ள, கோட்டயம் மாவட்டம், பரணங்ஙானம் என்ற ஊரில் 1.6.1932 இல் தோமஸ், எலியம்மா தம்பதியரின் மகளாகப் பிறந்தார். 1940 முதல் 1960 வரையிலான கால கட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர். Continue reading

Kannamba (Pasupuleti Kannamba)

ப. கண்ணாம்பா

பி. கண்ணாம்பா (பசுப்புலேட்டி கண்ணாம்பா, தெலுங்கு:அக்டோபர் 5, 1910 – மே 7, 1964) பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகை. தலைவர் கலைஞரின் மனோகரா திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களைத் தயாரித்தும் உள்ளார். Continue reading

Leelavathi

லீலாவதி- வயது-76. கர்நாடக மாநிலம், பெல்தங்காடியில் 1938-இல் பிறந்தவர். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரைப்பட பழம்பெரும் நடிகை. நடிகை மட்டுமல்லாது தயாரிப்பாளர், எழுத்தாளர், கொடையாளி. இவர் பிரபலமான நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், எம்.ஜி.ஆர்., என்.ரி.ராமராவ், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சங்கர் நாக், கமலஹாசன், சிரஞ்சீவி, வி.ரவிச்சந்திரன், சுதீப் ஆகியோருடன் நடித்துள்ளார். இவரது முதல் தமிழ்ப் படம் பட்டினத்தார். Continue reading