“Sandow” M.M.A.Chinnappa Devar

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் (Sandow M. M. A. Chinnappa Thevar) என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆரை நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். எம். ஜி. ராமச்சந்திரன் இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னா என்பவரை வைத்து ’’ஆத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 – 1971இல் கலைமாமணி விருது பெற்றவர்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில், இதே கருதுகோள்களோடு தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தவர்; அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, திரை உலகை வியக்க வைத்தவர் எம் எம் ஏ சின்னப்பா தேவர்.

சின்னப்பா தேவர் கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவுத்தேவர்- ராமாக்காள். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான்’ சுப்பையா தேவர். நடராஜதேவர், ஆறுமுகம், மாரியப்பன் என்று மூன்று தம்பிகள். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆகும். இதில் மருதமலை மருதால மூர்த்தி என்பது மருதமலை முருகனின் பெயராகும்.

இவர்களில் ஆறுமுகம்தான் பிற்காலத்தில் திரைப்படத்துறையில் எடிட்டராகி, எம்.ஏ.திருமுகம் என்ற பெயரில் இயக்குநராக விளங்கினார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சின்னப்பா தேவர் ஐந்தாவது வகுப்பு வரைதான் படித்தார். பின்னர்,கோவை பங்கஜா மில்லில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்தில் சம்மட்டியால் இரும்பு அடிக்கும் வேலையில் வாழ்க்கையைத் தொடங்கினார். அக்காலத்தில் கோவையில் புகழ்பெற்று விளங்கிய நிறுவனமாக “ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி”யில் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்தார்.

அதன் பின் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டார். சோடா தயாரித்து விற்பனை செய்தார். சின்னப்பா தேவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து, “வீரமாருதி தேகப் பயிற்சி சாலை” என்ற உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார்கள்.

திரை உலகில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய ‘சாண்டோ’ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர், தமது 63-வது வயதில் மாரடைப்பால் காலமானார். சின்னப்பா தேவருக்கு அவருடைய 21-வது வயதிலேயே (1936-ல்) திருமணம் நடந்துவிட்டது. மனைவி பெயர் மாரிமுத்தம்மாள்.
இந்தத் தம்பதிகளுக்கு தண்டாயுதபாணி என்ற ஒரு மகன், சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று இரண்டு மகள்கள். தண்டாயுதபாணி ‘பி.காம்’ பட்டதாரி.   தேவர் தயாரித்த பெரும்பாலான படங்களை தேவரின் தம்பியும், புகழ் பெற்ற எடிட்டருமான எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார். படக்கம்பெனி நிர்வாகத்தை மற்றொரு தம்பியான மாரியப்பன் கவனித்துக்கொண்டார்.
தேவரின் மூத்த மகள் சுப்புலட்சுமியை மணந்தவர் ஆர்.தியாகராஜன். இவரும் பிறகு டைரக்டர் ஆனார். இவர் டைரக்ட் செய்த முதல் படம் ‘வெள்ளிக்கிழமை விரதம்’ 1974 தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று வெளிவந்து வெள்ளி விழா கண்டது. இதில் சிவகுமார், ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோர் நடித்தனர். வசனம்: ஆரூர்தாஸ். இசை: சங்கர்கணேஷ். 1977-ல் தியாகராஜன் டைரக்ஷனில் வெளிவந்த ‘ஆட்டுக்கார அலமேலு’வும் 25 வாரம் ஓடியது. இதில் சிவகுமார், ஸ்ரீபிரியா நடித்தனர்.
தூயவன் வசனம் எழுத, சங்கர் கணேஷ் இசை அமைத்தனர். இதில் நடித்த ஒரு ஆடு, அதிசய வேலைகள் செய்து சபாஷ் பெற்றது. தேவர், ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரிப்பார். ஒரு பங்கு முருகனுக்கு! அதாவது முருகக் கடவுளுக்கு. முருகன் அருளால்தான் தனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டுவதாக தேவர் எண்ணினார். அதனால், லாபத்தில் கால் பகுதியை, முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார்.
பழனி கோவில், மருதமலை முருகன் கோவில் உள்பட பல கோவில்கள் இதனால் பலன் அடைந்தன.   ஒரு பங்கை தனக்கு வைத்துக் கொண்டார். மற்றொரு பங்கை, தனக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று பணம் கொடுத்து, சினிமாப் படம் எடுக்க 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு அனுப்பி வைத்த பழைய நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். மற்றொரு பங்கை நன்கொடைகளாக வழங்கினார்.
தேவர், காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கிவிட்டு வேலை தொடங்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு ‘இல்லை’ என்று கூறாமல் உதவி செய்வார். இதற்கிடையே, தேவரின் மணி விழாவை 29-6-1975-ல் சென்னை கலைவாணர் அரங்கில் நடத்த தேவர் சமூகத்தினர் ஏற்பாடு செய்தனர். தேவரின் ஒரு படத்தில் கூட நடித்திராத சிவாஜிகணேசன், மணி விழாக்குழுவின் தலைவராக இருந்து, விழாவை முன்நின்று நடத்தினார்.
விழா நாளன்று மாலை அவர் சின்னப்பா தேவர் வீட்டுக்கு சென்று, தேவரையும், அவர் மனைவியையும் காரில் கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து வந்தார். பொதுவாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாத சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர், நுழைவாயிலில் நின்று சின்னப்பா தேவருக்கு மாலை அணிவித்து வரவேற்றார். அவர் காலைத் தொட்டு வணங்கினார் தேவர்.
பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியார் தலைமையில், விழா சிறப்பாக நடைபெற்றது. தேவரின் சேவைகளைப் பாராட்டி கிருபானந்தவாரியார், ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.மலைச்சாமி, பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவிஞர் கண்ணதாசன், நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அசோகன், முத்துராமன், டைரக்டர்கள் பஞ்சு, பி.மாதவன் மற்றும் பலர் பேசினர். தேவருக்கு சிவாஜிகணேசன் நினைவுப் பரிசு வழங்கினார்.   (பின்னொரு சமயம் தேவரிடம் நிருபர்கள் ‘நீங்கள் ஏன் சிவாஜிகணேசனை வைத்து படம் தயாரிக்கவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘அவருக்கு ஏற்ற கதை என்னிடம் இல்லை’ என்று தேவர் பதில் அளித்தார்.)
1977-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனபின், படங்களில் நடிக்கவில்லை. எனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். ‘தாய் மீது சத்தியம்’ என்ற கதையை படமாக்க தீர்மானிக்கப்பட்டது. வசனங்களை தூயவன் எழுதினார். ரஜினிகாந்த்தின் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார். தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார். இசை: சங்கர் கணேஷ்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. 6-9-1978-ல் தேவர் ஊட்டி சென்றார். வழக்கமான சுறுசுறுப்புடன் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டார். பகல் வரை படப்பிடிப்பை கவனித்துவிட்டு, தங்கும் விடுதிக்குத் திரும்பினார். பகல் உணவுக்குப் பிறகு, ஓய்வு எடுக்க படுக்கைக்குச் சென்றார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தமும் அதிகமாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.
ஊட்டியில் கடும் குளிர் இருந்ததால், கோவைக்கு சென்று சிகிச்சை பெறுவது நல்லது என்று கருதப்பட்டது. எனவே, தேவர் கார் மூலம் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைகள் தொடர்ந்தன. 7-9-1978 அன்று இரவு வரை அவர் எல்லோருடனும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘நான் நன்றாக இருக்கிறேன். எல்லோரும் போய் படுங்கள். நாளை படப்பிடிப்புக்குக் கிளம்புவோம்’ என்று கூறி விட்டுப் படுக்கச் சென்றார். மறுநாள் காலை எழுந்த போதுகூட அவர் நன்றாக இருந்தார்.
ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, காலை 10 மணி அளவில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 63. தேவரின் உடல், ஆஸ்பத்திரியில் இருந்து கோவை ராமநாதபுரத்தில் உள்ள வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு சினிமா உலகப் பிரமுகர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.
சின்னப்பா தேவர் மறைவையொட்டி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வெளியிட்ட அனுதாப செய்தி வருமாறு:-
‘சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர். நாணயமானவர். அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை – கிடைக்கப்போவதும் இல்லை.’ இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.
சின்னப்பா தேவரின் உடல் அடக்கம் கோவையிலேயே நடந்தது. இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். நடந்து சென்று கலந்து கொண்டார். ஜெய்சங்கர் உள்பட திரை உலக பிரமுகர்கள் பலரும் சென்றனர். தேவர் மறைந்த பிறகும் அவர் குடும்பத்தினர் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் நடித்த ‘தாய் மீது சத்தியம்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ரங்கா’, ‘தர்மத்தின் தலைவன்’ உள்பட பல படங்களை எடுத்தனர். அவை வெற்றிகரமாகவே ஓடின. இந்த சமயத்தில், ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ என்ற கனபரிமான (‘3 டி’) படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, தமிழ் உள்பட பல மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு சக்கை போடு போட்டது. அதனால், தேவர் பிலிம்ஸ் உள்பட பல பட நிறுவனங்கள் ‘3 டி’ படங்கள் எடுத்தன.
ஆனால், குட்டிச்சாத்தான் தவிர மற்ற எல்லா ‘3 டி’ படங்களும் தோல்வியைத் தழுவின. இதனால் தேவர் பிலிம்ஸ் நிறுவனம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. தேவர் குடும்பத்தினர் பல திசைகளில் பிரிந்தனர். சாண்டோ சின்னப்பா தேவர் என்ற மகத்தான மனிதரால் உருவாக்கப்பட்ட நிறுவனம், படத்தொழிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேவரின் தம்பியும், டைரக்டருமான எம்.ஏ.திருமுகம், 2004 டிசம்பரில் மரணம் அடைந்தார்.
வெள்ளிக்கிழமை விரதம் (1974) படத்தில்  ‘சாண்டோ’ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் தனித்தும் மேஜர் சுந்தர்ராஜனுடனும்
Image
ImageImage
தேவரின் தயாரிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற பெண் தெய்வம் படத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் சின்னப்பா தேவர்.
Sandow MMA.Chinnappa Devar-Jaisangar-Penn Deivam-8
குலேபகாவலி [1955] படத்தில் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்Sandow MMA.Chinnappa Devar-Gulebakavali 1955-
MMA.Chinnappa-SARVATHIKARI 1951-MMA.Chinnappa-SARVATHIKARI 1951-1MMA.Chinnappa-MGR-SARVATHIKARI 1951-MMA.Chinnappa-SARVATHIKARI 1951-2
“நீலமலைத் திருடன்” 1957 படத்தில் எம்.எம்.ஏ.சின்னப்பா தேவருடன் ஜெமினி பாலு
Sandow M.M.A.Chinnappa Thevar-Neelamalai Thirudan 1957-Sandow M.M.A.Chinnappa Thevar-Gemini Balu-Neelamalai Thirudan 1957-Gemini Balu-Sandow M.M.A.Chinnappa Thevar-Neelamalai Thirudan 1957-
Sandow M.M.A.Chinnappa Thevar-PS.Veerappa-Neelamalai Thirudan 1957-1Sandow M.M.A.Chinnappa Thevar-PS.Veerappa-Neelamalai Thirudan 1957-
”வாழ வைத்த தெய்வம்” 1959 படத்தில் எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்
Sandow M.M.A.Chinnappa Thevar-Vazha Vaitha Deivam 1959-1Sandow M.M.A.Chinnappa Thevar-Vazha Vaitha Deivam 1959-
”வாழ வைத்த தெய்வம்” 1959 படத்தில் வி.கே.ராமசாமியுடன் எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்
Sandow M.M.A.Chinnappa Thevar-V.K.Ramaswamy-Vazha Vaitha Deivam 1959-
”வாழ வைத்த தெய்வம்” 1959 படத்தில் ரி.எஸ்.பாலையா, வி. .கே.ராமசாமியுடன் எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்
Sandow M.M.A.Chinnappa Thevar-V.K.Ramaswamy-T.S.Balaiah-Vazha Vaitha Deivam 1959-
”வாழ வைத்த தெய்வம்” 1959 படத்தில் வி.கே.ராமசாமி, ஜெமினி கணேசனுடன் எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்
Sandow M.M.A.Chinnappa Thevar-V.K.Ramaswamy-Gemini-Vazha Vaitha Deivam 1959-
தேவரின் “யானைப் பாகன்” 1960 படத்தில் சின்னப்பா தேவருடன் பி.எஸ்.வீரப்பா
Sandow M.M.A.Chinnappa Thevar-Yaanaippaagan 1960-Sandow M.M.A.Chinnappa Thevar-PS.Veerappa-Yaanaippaagan 1960-1Sandow M.M.A.Chinnappa Thevar-PS.Veerappa-Yaanaippaagan 1960-
“மாங்கல்யம்” 1954 படத்தில் பி.எஸ்.சரோஜாவுடன் சின்னப்பா தேவர்
Sandow MMA.C.Devar-Maangalyam 1954-1Sandow MMA.C.Devar-Maangalyam 1954-Sandow MMA.C.Devar-BS.Saroja-Maangalyam 1954-
Sandow MMA.Chinnappa Devar-Sivakumar in Sorgam Naragam 1977 Tamil Movie
Sandow MMA.Chinnappa Devar-Sorgam Naragam 1975-Sandow MMA.Chinnappa Devar-Sivakumar-Sorgam Naragam 1975-
”தொழிலாளி” 1964 படத்தில் நாகேஷுடன் தேவர்
sandow m.m.a.chinnappa -thozhilali 1964-sandow m.m.a.chinnappa -nagesh-thozhilali 1964-
”தொழிலாளி” 1964 படத்தில் எம்.என்.நம்பியாருடன் தேவர்sandow m.m.a.chinnappa -m.n.nambiar-thozhilali 1964-sandow m.m.a.chinnappa -m. n. nambiar-thozhilali 1964-
நன்றி: விக்கிப்பீடியா மற்றும்
logo
Advertisements

One comment on ““Sandow” M.M.A.Chinnappa Devar

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s