Parthiban

சி.ஆர்.பார்த்திபன் 

பழம்பெரும் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர். அன்று கண்ட முகம், உங்க வீட்டுக் கல்யாணம், தேடி வந்த திருமகள், மல்லிகைப்பூ, கோழி கூவுது, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மோட்டார் சுந்தரம் பிள்ளை, சுவரில்லாத சித்திரங்கள் போன்ற 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

’வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ’வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் கும்பினி அதிகாரி துரைக்குமிடையே ஏற்படும் சந்திப்பு மிக முக்கியமானது. ‘கிஸ்தி’, திரை, வரி, வட்டி, வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி” என்று தொடங்கி மாமனா மச்சானா மானங்கெட்டவனே என்பது வரை நீளும் மிகப் பிரபலமான வசனம் இடம்பெறுவது இந்தக் காட்சியில் தான். வார்த்தை வெடிகளோடு நில்லாமல் கைகலப்பிலும் துப்பாக்கிச் சூட்டிலும் விறுவிறுப்பாகச் செல்லும் கட்டம். சிவாஜிகணேசனின் கம்பீரமும் வீராவேசமும் வெளிப்படும் இந்தக் காட்சியில் அவருடன் மோதும் ஜாக்‌ஷன் துரையாக நடித்தவர்தான் சி.ஆர்.பார்த்திபன்.

40 வருடங்கள் திரைத்துறையில் நீடித்தவர் நடித்த மொத்த படங்கள் 120 மட்டுமே.  

திரையுலகத்துடன் தொடர்புடைய 5 முதல்வர்கள் கோலோச்சிய புனித ஜார்ஜ் கோட்டையில், அத்தகைய புள்ளிகள் எட்டியும் பார்க்காத 1952-இல் பார்த்திபன் தற்காலிக குமாஸ்தாவாக பணியாற்றியுள்ளார். அவர் சுமார் ஆறடி உயரம். களையான முகம். வாலிப முறுக்கு. தேர்வாணையத் தேர்வெழுதி, அவர் நிரந்தர ஊழியராகவும் தேர்வு பெற்றார். ஆனால் அவ்வேலையை உதறித்தள்ளினார்.

ஜெமினியின் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதாநாயகன் ஜெமினிகணேசனை மெச்சி வரவேற்கும் ஒரு நாட்டுப்புறக் கூட்டத்தின் தலைவராக, பார்த்திபன் நடித்தார். ஜெமினி ஸ்டூடியோவில் பி.கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் எடுத்த ‘நாக பஞ்சமி’ யில் பார்த்திபன் சிவன் வேடமேற்றார். இதுதான் அவர் நடித்து வெளிவந்த முதல் படம்.

பிறகு எம்.ஜி.ஆருடன் அறிமுகம் ஏற்பட்டது. 1957-இல் ‘புதுமைப் பித்தன்’ என்ற படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரியின் அண்ணன் நல்லண்ணனாக நடித்தார்.

கட்டபொம்மன் எடுத்த பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தில் சி.ஆர்.பார்த்திபனுக்கு யாரையும் தெரியாது. ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ கதாபாத்திரங்கள் குறித்தும், விவாதம் நடந்தபோது தன்னுடன் இல்லறமே நல்லறம் படத்தில் ஒரு வாட்டசாட்டமான வாலிபர் நடித்ததாகவும், அவரை ஜாக்‌ஷன் துரை வேடத்தில் போடலாமே என்றும் நடிகை எம்.வி.ராஜம்மா தெரிவித்திருக்கிறார்.

அவர் பெயர்தான் பார்த்திபன். என்னுடன் ‘அன்னையின் ஆணை’ படத்தில் நடித்தார். ஜாக்‌ஷன் துரை வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று சிவாஜிகணேசனும் ஆமோதித்தார். ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெற்றியடைந்து பல நகரங்களில் விழாக்கள் நடந்தன. ஒவ்வொரு மேடையிலும் பார்த்திபனை தன் தம்பி என்றழைத்து, சிவாஜி பாராட்டினார்.

திலீப்குமார் நடித்த இன்சாட் என்ற   படத்தில் ஜெமினியில் மாதச்சம்பளத்தில் நடித்தார். தொடர்ந்து கண்ணாம்பா நடித்த நாகபஞ்சமி, அன்னையின் ஆணை [இப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக], ரி.எம்.சௌந்தரராஜன் கதாநாயகனாக நடித்த ‘அருணகிரி நாதர்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

சினிமா உலகம் தன்னைப் பயன்படுத்திக் கொண்டது போல் அதனுடனான தொடர்பைப் பயன்படுத்தி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வாயிலாகவும் கொஞ்சம் சம்பாதித்தார்.

இவருக்கு வனஜா என்ற மனைவியும் ராமானுஜன் என்ற மகனும் உள்ளனர்.

 தினமலர் பல்சுவை மலரிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

இவர் நடித்த மேலும் சில படங்கள்:

பணமா பாசமா [1968], தெய்வீக உறவு [1968], மனசாட்சி [1969], தங்கைக்காக [1972], சங்கே முழங்கு [1972], சுகமான ராகங்கள் [1985], தேடி வந்த திருமகள் [1966], நல்லவன் வாழ்வான் [1962], பந்தாட்டம் [1974], சக்கரம் [1968]

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் W.C.ஜாக்ஸன் என்ற வெள்ளைக்கார துரையாக பார்த்திபன்

Parthipan-Veerapandiya Kattabomman-1959-1 Parthipan-Veerapandiya Kattabomman-1959-2 Parthipan-Veerapandiya Kattabomman-1959-Parthipan-Veerapandiya Kattabomman-1959-3 Parthipan-Veerapandiya Kattabomman-1959-4

வீரபாண்டிய கட்டபொம்மனாக சரித்திரம் படைத்த நடிகர் திலகத்துடன் வாதாடும் காட்சியில் பார்த்திபன்

Parthipan-Sivaji-Veerapandiya Kattabomman-1959-1 Parthipan-Sivaji-Veerapandiya Kattabomman-1959-

மல்லிகைப்பூ (1973) படத்தில் பார்த்திபன் தனித்தும் கே.ஆர்.விஜயாவுடனும்

ImageImageImageImage

கோழி கூவுது [1983] படத்தில் பார்த்திபன் தனித்தும் பிரபுவுடனும்

Parthiban- Parthiban-1 Parthiban-Prabhu-

சுவரில்லாத சித்திரங்கள் [1979] படத்தில் பார்த்திபன் Parthiban-Suvarillatha Chithirangal 1979-

சுவரில்லாத சித்திரங்கள் [1979] படத்தில் சுதாகருடன்  பார்த்திபன் Parthiban- CR.Saraswathy-Sudhagar-Suvarillatha Chithirangal 1979-

சுவரில்லாத சித்திரங்கள் [1979] படத்தில் சுதாகர், எஸ்.வரலக்ஷ்மி, சி.ஆர்.சரசுவதியுடன் பார்த்திபன்  Parthiban- S.Varalaxmi-CR.Saraswathy-Sudhagar-Suvarillatha Chithirangal 1979-

உற்ற நண்பர் ஜெமினிகணேசனுடன் சி.ஆர்.பார்த்திபன்C.R.Parthiban -Gemini-Virunthinar Pakkam 27.10.2014-2

கப்பலோட்டிய தமிழன் [1958] படத்தில் சி.ஆர்.பார்த்திபன்C.R.Parthiban -Kappalottiya Tamilan-Virunthinar Pakkam 27.10.2014--a

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் சி.ஆர்.பார்த்திபன்CR Parthipan-Motor Sundaram Pillai 1966-

மோட்டார் சுந்தரம் பிள்ளை [1966] படத்தில் நாகேஷ் மற்றும் கல்லாப்பெட்டி சிங்காரத்துடன் சி.ஆர்.பார்த்திபன்

CR Parthipan-Kallappetti Singaram-Motor Sundaram Pillai 1966- CR Parthipan-Kallappetti Singaram-Nagesh-Motor Sundaram Pillai 1966- CR Parthipan-Motor Sundaram Pillai 1966-1

சி.ஆர்.பார்த்திபன் 27.10.2014 அன்று சன் ரி.வி-யில் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது

C.R.Parthiban -Virunthinar Pakkam 27.10.2014-3C.R.Parthiban -Virunthinar Pakkam 27.10.2014-4C.R.Parthiban -Virunthinar Pakkam 27.10.2014-5

‘விருத்தன் சங்கு’ [1972] என்ற மலையாளப் படத்தில் பிராமணர் வேடத்தில் சி.ஆர். பார்த்திபன்

CR.Parthiban-Viruthan Shanku 1972-CR.Parthiban-Viruthan Shanku 1972-1CR.Parthiban-Viruthan Shanku 1972-2

‘விருத்தன் சங்கு’ [1972] என்ற மலையாளப் படத்தில் அடூர் பாஸியுடன் சி.ஆர். பார்த்திபன்

CR.Parthiban-Adoor Bhasi-Viruthan Shanku 1972-

‘விருத்தன் சங்கு’ [1972] என்ற மலையாளப் படத்தில் ரி.கே.பாலச்சந்திரனுடன் சி.ஆர். பார்த்திபன்

CR.Parthiban-T. K. Balachandran-Viruthan Shanku 1972-

“மனசாட்சி” [1969] படத்தில் சி.ஆர்.பார்த்திபன்CR.Parthipan-Manasatchi 1969-CR.Parthipan-Manasatchi 1969-1CR.Parthipan-Manasatchi 1969-3CR.Parthipan-Manasatchi 1969-2

“மனசாட்சி” [1969] படத்தில் நாகேஷுடன் சி.ஆர்.பார்த்திபன்CR.Parthipan-Nagesh-Manasatchi 1969-CR.Parthipan-Nagesh-Manasatchi 1969-1

தங்கைக்காக [1972] படத்தில் ஆர்.முத்துராமனுடன் பார்த்திபன் CR.Parthiban-Muthuraman-Thangaikkaga 1970-

தங்கைக்காக [1972] படத்தில் எஸ்.வி.ராமதாஸுடன் பார்த்திபன்

CR.Parthiban-Thangaikkaga 1970-

“சங்கே முழங்கு” [1972] படத்தில்  பார்த்திபன்CR.Parthiban-Sangae Muzhangu 1972-1ACR.Parthiban-Sangae Muzhangu 1972-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் ரி.கே.பகவதி மற்றும் பார்த்திபன்

CR.Parthiban-TK.Bhagavathi-Sangae Muzhangu 1972-

“சங்கே முழங்கு” [1972] படத்தில் எம்.ஜி.ஆர்.மற்றும் பார்த்திபன்CR.Parthiban-MGR-Sangae Muzhangu 1972-

“பணமா பாசமா” [1968] படத்தில் பார்த்திபன் CR.Parthiban-Panama Pasama 1968-2CR.Parthiban-Panama Pasama 1968-

“பணமா பாசமா” [1968] படத்தில் ஜெமினிகணேசனுடன்  பார்த்திபன் CR.Parthiban-Gemini-Panama Pasama 1968-1CR.Parthiban-Gemini-Panama Pasama 1968-

“பணமா பாசமா” [1968] படத்தில் காதல் மன்னன், பி.சரோஜாதேவி, பார்த்திபன்

CR.Parthiban-Gemini-Sarojadevi-Panama Pasama 1968-

”தெய்வீக உறவு” 1968 படத்தில் பேபி ராஜியுடன் சி.ஆர். பார்த்திபன்CR.Parthiban-Baby Raji-Deiviga Uravu 1968-

”தெய்வீக உறவு” 1968 படத்தில் ஜெய்சங்கருடன் சி.ஆர். பார்த்திபன்CR.Parthiban-Jaisangar-Deiviga Uravu 1968-CR.Parthiban-Jaisangar-Deiviga Uravu 1968-1CR.Parthiban-Jaisangar-Deiviga Uravu 1968-2

”தெய்வீக உறவு” 1968 படத்தில் மாஸ்டர் ஸ்ரீதருடன் சி.ஆர். பார்த்திபன்CR.Parthiban-Master Sreedhar-Deiviga Uravu 1968-

”தெய்வீக உறவு” 1968 படத்தில் பேபி ராஜி, ஜெய்சங்கர், மாஸ்டர் ஸ்ரீதருடன் சி.ஆர். பார்த்திபன்CR.Parthiban-Baby Raji-Master Sreedhar-Jaisangar-Deiviga Uravu 1968-54

“சுகமான ராகங்கள்” 1985 படத்தில் சி.ஆர்.பார்த்திபன்CR.Parthiban-Sugamana Raagangal 1985-1CR.Parthiban-Sugamana Raagangal 1985-56

“தேடி வந்த திருநாள்” 1966 படத்தில் பி.எஸ்.ரவிச்சந்திரன், கே.கே.சௌந்தர், சி.ஆர்.பார்த்திபன்

parthiban-kk-sounder-thedi-vantha-thirumagal-1966parthiban-bs-ravichandran-thedi-vantha-thirumagal-196658

“நல்லவன் வாழ்வான்” 1962 படத்தில் எம்.என்.நம்பியாருடன் பார்த்திபன்parthiban-mn-nambiar-nallavan-vazhvan-196259

“நீலமலைத் திருடன்” 1957 படத்தில் சி.ஆர்.பார்த்திபன்Parthiban-Neelamalai Thirudan 1957-

“நீலமலைத் திருடன்” 1957 படத்தில் சாண்டோ சின்னப்பா தேவருடன் சி.ஆர்.பார்த்திபன்

Parthiban-Thevar-Neelamalai Thirudan 1957-

“நீலமலைத் திருடன்” 1957 படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன் சி.ஆர்.பார்த்திபன்Parthiban-PS.Veerappa-Neelamalai Thirudan 1957-1Parthiban-PS.Veerappa-Neelamalai Thirudan 1957-63

“கல்யாண மண்டபம்” 1965 படத்தில் சி.ஆர்.பார்த்திபனுடன் சி.எல்.ஆனந்தன்Parthiban-Kalyana Mandapam 1965-Parthiban-Kalyana Mandapam 1965-1Parthiban-CL.Anandan-Kalyana Mandapam 1965-66

”பந்தாட்டம்” 1974 படத்தில் கே.ஏ.தங்கவேலுவுடன் சி.ஆர்.பார்த்திபன்CR.Parthiban-KA.Thangavelu-Pandhattam 1974-

”பந்தாட்டம்” 1974 படத்தில் எம்.ஆர்.ஆர்.வாசுவுடன் சி.ஆர்.பார்த்திபன்CR.Parthiban-MRR.Vasu-Pandhattam 1974-

”பந்தாட்டம்” 1974 படத்தில் ஜெய்சங்கர், கே.ஏ.தங்கவேலுவுடன் சி.ஆர்.பார்த்திபன்CR.Parthiban-KA.Thangavelu-Jaysangar-Pandhattam 1974-69

”சக்கரம்” 1968 படத்தில் பார்த்திபன்Parthiban-Chakkaram 1968-70

‘எனக்கொரு மகன் பிறப்பான்’ 1975 படத்தில் ஏவி.எம்.ராஜன், எம்.ஆர்.ஆர்.வாசு, கே.ஏ.தங்கவேலுவுடன் சி.ஆர்.பார்த்திபன்

CR.Parthiban--AVM.Rajan-KA.Thangavelu-MRR.Vasu-Enakkoru Magan Priappan 1975-

‘எனக்கொரு மகன் பிறப்பான்’ 1975 படத்தில் கே.கே.சௌந்தருடன் சி.ஆர்.பார்த்திபன்CR.Parthiban-KK.Sounder-Enakkoru Magan Priappan 1975-72

Advertisements

19 comments on “Parthiban

 1. i think so he was acted with prabhu in the song of annae annae sippai annae namma oru nalla ooru ippo romba kettupochunaae …..is it pls confirm …..

 2. சாட்சாத் இதே பார்த்திபன் அவர்கள் தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் காட்சியில் நடித்துள்ளார். இளையராஜா இசையில் கங்கை அமரன் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளிவந்த “கோழி கூவுது” படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் காட்சியில் பார்த்திபனுடன் பிரபு, குமரி முத்து மற்றும் சில துணை நடிகர்களும் நடித்துள்ளனர். காலஞ்சென்ற நடிகை விஜியும் சுரேஷும் கதாநாயகன் – கதாநாயகியாக நடித்தனர். இது ஒரு வெற்றிப்படம். இப்படத்தின் காட்சி தற்போது இணைக்கப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் வினாவைத் தொடுத்த கிருபாகரன் உங்களுக்கு எனது நன்றி.

 3. சார் அந்த பாடல் காட்சியை பார்க்ிறபோதெல்லாம் எனக்கு மனம் வருத்தமடையும். எம். ஜி. ஆர் சிவாஜி படங்களில் நடித்த திறமையான நடிகர் ஒருவர் இப்படி நாலாந்தர துணை நடிகராய் நடித்ததே அதற்கு காரணம். சினிமா கொஞ்சம் பேரை மட்டுமே வெளிச்சம் பாய்ச்சி அடையாளம் காட்டியிருக்கிறது பலரை அது கொன்றிருக்கிறது. காலம் முழுவதும் அங்கீகாரத்திற்கு போராடி வெல்லமுடியாமல் போகும்பொது அந்த துயரம் ஒரு மனிதனின் மரணத்திற்கு ஒப்பானதாகும். துரதிர்ஸ்டவசமாய் அது சினிமாவில் சகஜமான ஒன்று. 90 களில் நான் சந்தித்த பல துணை நடிகர்கள் எனக்கு சினிமா பற்றிய பிரமையை உடைத்துப்போட்டனர் நன்றி உங்கள் தகவலுக்கு!

 4. நூற்றுக்கு நூறு உண்மை கிருபாகரன். இவ்வலைப்பூவைப் பொறுத்தமட்டில் பிரபலங்களுக்கு முன்னுரிமை அளிப்பதைக் காட்டிலும் துணை நடிகர்/நடிகைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டுமென்றே துவங்கப்பெற்றதாகும் என்பதை “ எம்மைப்பற்றி “ பக்கத்தைத் திறந்தாலே தெரியவரும். எத்தனையோ திறமையான கலைஞர்களைத் திரையுலகமும் புறந்தள்ளியிருக்கிறது. திரையுலகம் மாத்திரமல்லாது அதில் ரசிகர்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. ரசிகர்களும் துணை நடிகர்களைக் கண்டுவதில்லை. இவ்வலைப்பூவில் பதிவு செய்துள்ள மிகத் திறமையான துணை நடிகர்களைக் குறித்து தங்களைத் தவிர வேறு எந்தவொரு ரசிகரும் இதுவரை ஒரு கேள்வி கூட கேட்டதில்லை. ஆனால் அவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் பல நூற்றுக்கணக்கான பிரபலங்களுக்கு அவர்கள் ஆசான்களாகவோ, அவர்களுக்கு முன்னரே நாடகவுலகில் நுழைந்து கொடிகட்டிப் பறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் பி.டி.சம்பந்தம். இவரைப்பற்றிய மேலும் விவரங்கள் அறிய அவரது பக்கத்தைத் திறந்து பாருங்கள். நன்றி.

 5. நன்றி சார்….அது ரசிகர்களின் குறையல்ல என்பது என் கருத்து. படாதிபதிகள் திறமையை முன்னிறுத்தி நடிகர்களை தேர்வு செய்து நடிக்கவைத்தால் நிச்சயம் அந்த துணைநடிகர்களும் காலம் கடந்து நடித்திருப்பார்கள் , வாழ்ந்திருப்பார்கள். ……..சந்திரன் பாபு பற்றி தகவல் ஏதாவது உண்டா…..? திருமலை தென்குமரி உள்பட ஏ.பி நாகராஜன் படங்களில் பெரும்பாலும் நடித்தவர்….நல்ல திறமையுள்ள நடிகர். சிவகுமாருடன் இணையாக நடித்த அவர் சில வருடங்களிலேயெ வயதான தோற்றத்தில் துணை நடிகராகிப்போனார். தகவல் இருந்தால் தாருங்கள்……உங்களுக்கு தெரியுமா.. நான் அந்த கால பேசும் படம் ஒன்றில் பி.டி சம்பந்தம் மரண செய்தியை படித்தேன். …மூன்றே வரிகளில் . அநேகமாக வழுக்கி இறந்ததாக ஞாபகம்…..நினைவில்லை சரியாக.பெண் படத்தில் வைஜெயந்தி மாலாவின் வேலையாளாக வருவார்.அருமையான நடிப்பு
  …தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி நன்றி சார்!

 6. சகாதேவன் சார்
  சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் சுதாகர் தந்தை வேடத்தில் இவர் தானா . நினைவில் இருந்து எழும் கேள்வி

  • பார்த்திபனே தான். சந்தேகமேயில்லை. உங்களுக்காக அவரின் பக்கத்தில் சுவரில்லாத சித்திரங்கள் படத்திலிருந்து மேலும் 3 புகைப்படங்களினை இணைத்துள்ளேன்.பார்க்கவும்.

 7. அன்பு நண்பர் சகாதேவன் விஜயகுமார் அவர்களுக்கு
  பழம் பெரும் நடிகர் திரு பார்த்திபன் அவர்கள் 1/10/2014 திரு சிவாஜி கணேசன் அவர்களின் 86 வது பிறந்த நாள் நடைபெற்ற சிவாஜி பிரபு சரிடி டிரஸ்ட் மூலமாக பாராட்டப்பட்டார் .
  நடிகர் திலகத்தால் அன்புடன் அண்ணன் என்று அழைக்கபட்டவர்.இளைய திலகத்துடனும் இணைந்து நடித்து உள்ளார் . மூன்றாவது தலைமுறை இளவல் திலகம் விக்ரம் பிரபு அவர்களுடனும் இணைந்து நடிப்பார் என்று இளைய திலகம் அவர்களால் அன்றைய பாராட்டு நிகழ்ச்சியில் பாராட்டபட்டார்.

 8. திரு.கணபதி கிருஷ்ணன் அவர்களே! தங்கள் தகவலுக்கும் புகைப்பட பகிர்வுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இத்தனை வருடங்களாக முதுபெரும் நடிகர் பார்த்திபன் அவர்கள் இருந்துகொண்டிருப்பதே நான் அறியாத தகவல். ஒரு நடிகர் உயிரோடிருக்கும் வரை அவரைப்பற்றிய செய்திகளுக்குப் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இறப்பிற்குப் பின்னர்தான் ஒரு வேளை அச்செய்தி வெளிவரும்.சில வேளைகளில் வராமலே போவதுண்டு. நான் இது வரை முதுபெரும் நடிகர்களாக வி.எஸ்.ராகவனும், எஸ்.எஸ்.ஆரும் மட்டுமே இருந்துவருவதாக அறிந்துள்ளேன். இன்னும் ஸ்ரீகாந்த் போன்ற பலரும் வெளியில் தெரியாமல் இருக்கலாம். பார்த்திபனுக்கு சுமார் 85 வயதிருக்கலாம் என்று தோன்றுகிறது.ஆதலால் பழம்பெரும் நடிகர் பார்த்திபனைக் குறித்து தகவல் அளித்தமைக்கும் முதன்மையாக நிழற்படத்தைப் பிரசுரித்ததற்கும் மீண்டும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 9. சகாதேவன் விஜயகுமார் சார்
  எந்த பலனும் இல்லாமல் நீங்கள் செய்யும் சேவை முன் இது கால் தூசு சார் .வேறு எந்த பழம்பெரும் நடிகர்கள் பற்றி தகவல் கிடைத்தாலும் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்

  • இத இதத்தான் நான் இவ்வளவு நாளும் எதிர்பார்த்தேன் விஜய். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

 10. Friends, very nice to spot this article today, thanks for your efforts & remembering the senior artiste like Mr.C.R.Parthibhan. He is forturnate to have worked with 6-Chief Ministers & a Union Minister. Done about 120 films with many lead actors.

  Request you to visit an exclusive page in Facebook ” Artist Jackson Durai # C.R.Parthibhan ” & if you really like, then inviting you to view few rare pics & video clips of his in tamil cinema.

  He is now 85+yrs, jus recieved an Award from SIAA for Tamil Cinema 100th year during 63rd annual meet held on Nov.27, 2016.

  Thanks again & regards

  Ramanujan
  (Humbly to share – i am his son)
  My email id is: cprramanujan@rediffmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s