Viji (Kozhikoovuthu Viji)

விஜி [கோழி கூவுது விஜி]

கங்கை அமரனின் கோழி கூவுது என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜி. கதாநாயகியாக சுமார் 30 படங்களில் இவர் நடித்துள்ளார். திடீரென இவருக்கு கதாநாயகி வாய்ப்பு மங்கியது.இதனால் சிறிது காலம் படவுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், மீண்டும் சரத்குமாரின் சூரியன் படத்தில் பிரபு தேவாவுடன் ஒத்தப் பாட்டுக்கு ஆடினார். இதன் பிறகு ரஜினியின் உழைப்பாளி, விஜய்யின் பூவே உனக்காக ஆகிய படங்களிலும் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டுப் போனார்.பின்னர் திடீரென இவர் நோய்வாய்ப்பட்டார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு மூலம் விஜியின் ஒரு கால் செயல் இழந்தது.தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமானார்.இதன் பிறகு டிவி தொடர்களில் நடித்து வந்த விஜி, டைரக்டர் ரமேஷ் என்பவரை காதலித்தார். ரமேஷுக்கு சுமதி என்ற மனைவியும், குழந்தைகளும் உண்டு. ஆனாலும் விஜி, ரமேஷை தீவிரமாக காதலித்தார்.ஆனால் விஜியின் காதல் கைகூடவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜி, கடந்த 27.11.2000 அன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொய்க்கால் குதிரை (1983) படத்தில் விஜி தனித்தும் ராமகிருஷ்ணாவுடனும்ImageImageImageImageImageImage

“தேன் கூடு” [1984] படத்தில் விஜிViji-Thenkoodu 1984- Viji-Thenkoodu 1984-1 Viji-Thenkoodu 1984-2 Viji-Thenkoodu 1984-3

“தேன் கூடு” [1984] படத்தில் விஜியுடன் சுரேஷ் Viji-Suresh-Thenkoodu 1984- Suresh-Viji-Thenkoodu 1984-

“நவக்கிரக நாயகி” [1985] படத்தில் ஸ்ரீகாந்துடன் விஜி Viji-Navagraha Nayagi 1985-Viji-Navagraha Nayagi 1985-2Viji-Navagraha Nayagi 1985-1Viji-Sreekanth-Navagraha Nayagi 1985-

‘’ராஜா வீட்டுக் கன்னுகுட்டி’’ 1984 படத்தில் எஸ்.வி.சேகருடன் விஜி.Kozhi Koovuthu Viji-Raja Veetu Kannu Kutti 1984-3Kozhi Koovuthu Viji-Raja Veetu Kannu Kutti 1984-2Kozhi Koovuthu Viji-Raja Veetu Kannu Kutti 1984-1Kozhi Koovuthu Viji-Raja Veetu Kannu Kutti 1984-Kozhi Koovuthu Viji-SV.Sekar-Raja Veetu Kannu Kutti 1984-

‘’ராஜா வீட்டுக் கன்னுகுட்டி’’ 1984 படத்தில் விஜி.பிரபுவுடன் காத்தாடி ராமமூர்த்திKaathadi Ramamurthy-Kozhi Koovuthu Viji-Prabhu-Raja Veetu Kannu Kutti 1984-

“புது யுகம்” 1985 படத்தில் விஜியுடன் சிவகுமார்Viji-Puthu Yugam 1985-2Viji-Puthu Yugam 1985-Viji-Puthu Yugam 1985-4Viji-Puthu Yugam 1985-1Viji-Sivakumar-Puthu Yugam 1985-Sivakumar-Viji-Puthu Yugam 1985-

”ஆவதெல்லாம் பெண்ணாலே” 1990 படத்தில் விஜியுடன் எஸ்.வி.சேகர்Viji-Avathellam Pennalae 1990-2Viji-Avathellam Pennalae 1990-Viji-Avathellam Pennalae 1990-1Viji-SV.Sekar-Avathellam Pennalae 1990-SV.Sekar-Viji-Avathellam Pennalae 1990-

”ஆவதெல்லாம் பெண்ணாலே” 1990 படத்தில் திலக்குடன் விஜிThilak-Viji-Avathellam Pennalae 1990-

”ஆவதெல்லாம் பெண்ணாலே” 1990 படத்தில் விஜியுடன் எம்.ஆர்.கே.MRK-Viji-Avathellam Pennalae 1990-

”ஆவதெல்லாம் பெண்ணாலே” 1990 படத்தில் விஜியுடன் கோகிலாKohila-Viji-Avathellam Pennalae 1990-2Kohila-Viji-Avathellam Pennalae 1990-1Kohila-Viji-Avathellam Pennalae 1990-

Mohanlal and Viji in Uyarangalil 1984-Malayalam MovieVIJI-Uyarangalil 1984-1VIJI-Uyarangalil 1984-Viji-Rahman-Mohanlal-Uyarangalil 1984-1

Mohanlal, Rahman and Viji in Uyarangalil 1984-Malayalam MovieViji-Rahman-Mohanlal-Uyarangalil 1984-

’வளர்த்த கடா’ 1983 படத்தில் சுரேஷுடன் விஜிViji-Valartha Kada 1983-Viji-Suresh-Valartha Kada 1983-

’வளர்த்த கடா’ 1983 படத்தில் கராத்தே மணி, ராக்கெட் ராமநாதனுடன் விஜிViji-Karate Mani-Rocket Ramanathan-Valartha Kada 1983-

‘மூக்கணாங்கயிறு’ 1985 படத்தில் கார்த்திக், விஜியுடன்Viji-Mookkanan Kayiru 1985-Viji-Mookkanan Kayiru 1985-02AViji-Karthick-Mookkanan Kayiru 1985-

‘மூக்கணாங்கயிறு’ 1985 படத்தில் விஜியுடன் எஸ்.என்.லட்சுமிViji-SN.Lakshmi-Mookkanan Kayiru 1985-

‘மூக்கணாங்கயிறு’ 1985 படத்தில் விஜியுடன் கார்த்திக்,வெண்ணிற ஆடை மூர்த்தி, ஆர்.வாணி, குள்ளமணிKullamani-Viji-Karthick-R.Vani-VA.Moorthy-Vanitha-Mookkanan Kayiru 1985-

நன்றி:http://tamil.oneindia.in

11 comments on “Viji (Kozhikoovuthu Viji)

 1. Ivarai Irandaam FATAAFUT Jeyalakshmi endru sollalaam. Manathil ninaitha kaathalan thanakku kidaikkaathathaal FATAAFUT seithathu polave, vijiyum sucide seithu kondaar. Aanaal Fadafut thookkam. (Pills). Ivar thookku.. Thaan virumbiya kaathalan thanakku kidaikkaathathaal ivar thookkil thonginaar. Fadafut same period Artist oruvarum thaan virumbiya thannai vida vayathil ilaiyavarana antha nadigar thanakku kidaikkathathaal poison saapittu sucide attempt panninaar. Aanaal veettaaral kappatrapattu, manam Mari indru nalla kanavar kuzhanthaigal endru nal vaazhvu vaazhgiraar. Antha vaaippu mela sonna 2 perukkum kittathathu avargalin athirshtaminmaiye.

  • Vijiudaiya appaavum viji irantha Konja kalathileye iranthu ponaar. (Tharkolai seithu kondaar??)… Aanaal ivar Thiruvannamalaiyil Viji peyaril kattiya allathu kattikkondiruntha Thirumana mandapam Enna aanathu?

 2. It is wrong for Viji to have fallen in love with a married man. Revathi had met her when the Apollo fiasco happened. But then I think Revathi was disgusted to learn that Viji committed suicide. She acted with Vijaykant in “Saatchi”. Her mother tongue was Kannada.

  Senthil anna – the actress that you referred is Sri Priya. Right? She was in love with Karthik Muthuraman. I read that she was 2 months pregnant when Karthik married Ragini, a tribal woman from Ooty. Karthik had tried to seduce Ragini and escape. But Ragini’s relatives threatened him with dire consequences – so similar to the role in “Ninavellam Nidhya” directed by C V Sridhar.

  At least Phatafat Jayalakshmi fell in love with an unmarried man – sadly the man just wanted to use her for his lust! MGR sir – wish you had intervened because Latha, Saroja Devi, Ratna, K R Vijaya, Manjula have all sung your praises! If MGR had wanted, Phatafat could have married Sukumar and led a happy life.

  Look at Karthik – he also seduced Ragini’s sister.

  Hard to believe that a saint like Muthuraman had a womaniser son like Karthik.

 3. மீண்டும் கிருஷ்ணா பரசுராம்!….. வேலைப் பளு காரணமாக சில மாதங்கள் இல் வலைதளத்திற்கு வருகை தராமல் விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்… மறுபடியும் உங்கள் வரவு நல்வரவாகட்டும்…..
  .அனபுடன் உங்கள் செந்தில் அண்ணா.

  • பொதுவாக நடிகையர்கள் தங்களது மார்க்கெட் நன்றாக இருக்கும் வரை மட்டுமே சம்பாதிக்க முடியும்..இதன்படி 1982ல் அறிமுகமான விஜி ஒரு ரவுண்டு வந்தார்…1987 வரை தாக்குப் பிடித்தார்.. குறுகிய காலமே என்றாலும் தன் வாழ்நாள் முழுதும் சிரமமில்லாமல் இருக்க முடியும் என்கிற அளவுக்கு நிச்சயம் சம்பாதித்திருப்பார்.
   மார்க்கெட் டல் ஆன போது சரியான கல்யாண வயது தாண்டி விட்டது..போதாக்குறைக்கு ஒரு பெரிய மருத்துவ மனையில் இவர் குதிகால் எலும்பு பிரச்சினைக்காக செய்து கொண்ட ஆபரேஷனால் நிரந்தரமாக நடக்க முடியாத நிலைக்கு ஆளானார். பிறகு தன்னுடைய விடா முயற்சியால் பழையபடி நடந்தார். சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்..பின்பு அந்த விளிம்பு நிலை வயதில் தனக்கு ஆறுதலாகவோ பிடிக்கின்ற வகையிலோ பேசிய அந்த சீரியல் இயக்குநர் AR ரமேஷை விஜிக்குப் பிடித்துப் போகிறது…அப்புறம் விசாரித்துப் பார்த்தால் அவர் ஏற்கனவே மணமானவர்…. ஆனால் அதற்குள் பாழாய் போன மனது அந்த நபரிடம் போய் ஒட்டிக் கொண்டு திரும்ப வர மாட்டேன் என்கிறது… விஜி என்ன செய்வார்…?. சரி…. இரண்டாம் மனைவி என்கிற பெயருடனாவது அந்த நபருடன் வாழ ஆசைப்பட்டார்….. ஆனால் அந்த நபர் விஜியை ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்….ஏமாற்றம்தான் விஜியை இந்த விபரீத முடிவை எடுக்க வைத்தது….2000ஆம் ஆண்டில் தூக்கில் தொங்கி தன் உயிரை விட்டார். விஜயகாந்த் அவர்களுடன் சாட்சி, ஈட்டி, நல்ல நாள் ஆகிய படங்களில் நடித்தார் விஜி…கடைசியில் விஜி பட வாய்ப்புகள் இல்லாமலிருந்தால் போது தனது சொந்த படமான சிம்மாசனம் என்கிற படத்தில் தனக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த்…இப்படம்தான் இவர் கடைசியாக நடித்த தமிழ்த் திரைப்படம். இப்படம் வெளியான கொஞ்ச காலத்திற்குள்ளேயே இவர் இந்த துயர முடிவைத் தேடிக் கொண்டார்…படாபட் போலவே காதலனைக் கைபிடிக்க முடியாமல் போன ஏமாற்றம் காரணமாக இவரும் தற்கொலை செய்து கொண்டார்..அதனால்தான் இவரை இரண்டாம் படாபட் ஜெயலட்சுமி என்று கூறினேன் கிருஷ்ணா பரசுராம்…

 4. அன்புச் சகோதரர் வெங்கடேஷ் ராஜேந்திரன் அவர்களே!… தம்பி கிருஷ்ணா பரசுராம் வந்து விட்டார்….. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்.?…. நலமா….?

 5. ஆம் பரசுராம் கிருஷ்ணா! நான் குறிப்பிட்டது சிரீ பிரியா அவர்களைத்தான்.. இவர் நினைவுகள் என்கிற படத்தில் கார்த்திக்குடன் அவருடைய அண்ணியாக நடித்தார் என நினைக்கிறேன்…நட்பு என்கிற படத்திலும் இரண்டு பேரும் நடித்தனர்…( ஜோடியாக அல்ல)..படம் வளர வளர காதல் வளர்ந்தது..‌‌‌சிரீ பிரியாவை விட கார்த்திக் மூன்று வயது சிறியவர்…இருந்தபோதும் கார்த்திக் மேல் காதல் கொண்டார் பிரியா. கார்த்திக் சரியான ஜொள்ளுப் பார்ட்டி‌.‌ சோலைக்குயில் படத்தில் கோத்தகிரியைச் சேர்ந்த ராகினி என்பவர் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்…படம் வளர வளர ராகினியைத் தன் வலையில் விழ வைத்தார் கார்த்திக்… நீங்கள் சொன்னது போல கம்பி நீட்டி விட முயற்சி செய்தார் கார்த்திக்.. ஆனால் சிரீ பிரியா விடம் பலித்த பாச்சா ராகினியிடம் பலிக்கவில்லை…ராகினி க்ரூப் இவரை வசமாகப் பிடித்து அவரது கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டது.. இப்படித்தான் ராகினி கார்த்திக் மனைவியானார்.‌..ஆனால் ராகினி நல்ல வசதியானவர்……இத்திருமணத்தால் மனமுடைந்து போன சிரீ பிரியா விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.. ஆனால் எப்படியோ வீட்டார் கவனித்து மருத்துவமனையில் சேர்த்து சிரி பிரியாவைக் காப்பாற்றி விட்டனர்.. பிரியாவுக்கு கடவுள் அருளால் உயிர் தப்ப ஒரு வாய்ப்பு கிடைத்ததால் அவரால் இன்று ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடிந்திருக்கிறது…நல்ல கணவர் குழந்தைகள் என ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறார்.. பிரியா கடவுள் ஆசியினாலும் தனது நல்ல நடிகையர் தோழிகளின் ஆலோசனையாலும் தற்போது நல்ல வாழ்வு வாழ்கிறார். வாழ்க…வாழ்க…

 6. Dear Senthil,

  Thanks for recalling those days of VIJI and SRIPRIYA.

  நீங்கள் படாபட் ஜெயலட்சுமி மட்டுமல்லாது பல நடிகைகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அவையனைத்தையும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்துள்ளீர்கள்.. மிகுந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்…!!!!.

  Sethuraman

 7. வில்லன் நடிகர் நளினி காந்த் அவர்களும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நடிகை படாபட் ஜெயலட்சுமியும் ஜோடியாக நடிக்க கல்லூர் சுப்பையா என்ற இயக்குனர் இயக்கத்தில் தயாராக இருந்தது மூக்கணாங்கயிறு tamil padam. 1982 ஜுன் வாக்கில் படப்பிடிப்பு துவங்க இருந்த சமயத்தில் நடிகை படாபட் தற்கொலை செய்து கொண்டார்…. பிறகு ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு அப்ப பிரபலமாக இருந்த கோழி கூவுது விஜியையும் நம்ம கார்த்திக் முத்துராமனையும் ஜோடி சேர்ந்து அதே இயக்குனர் கல்லூர் சுப்பையா அதே கதையை படமாக எடுத்து முடித்து படத்தை வெளியிட்டார்…முதலுக்கு மோசமில்லாமல் இப் படம் ஓடியது…இதே படத்தில் நடிகை வனிதா இரண்டாம் கதாநாயகியாக நடித்தார்..இவருக்கும் கார்த்திக்கிற்கும் ஒரு நெருக்கமான பாடல் காட்சி படத்தில் உண்டு….அதைப் படமாக்கும் போது நிஜமாகவே கார்த்திக் விளையாட ஆரம்பித்து விட்டாராம்…… வனிதாவிடம், …அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை வனிதா, இயக்குனர் வசம் புகார் தெரிவித்து அதன் பிறகு கார்த்திக்கை கொஞ்சம் அ…ட….க்….கி…வாசிக்கும்படி இயக்குனர் கார்த்திக்கிடம் கேட்டுக் கொண்டாராம்…..அதன் பிறகு அப்பாடல் காட்சி நல்லபடியாக படமாக்கப்பட்டதாம்….6380250112.

 8. 80களில் குமுதம் இதழை சில நடிகர்களை தயாரிக்க சொன்னார்கள். அப்படி ஒருவாரம் நடிகை விஜி ஒரு இதழை தயாரித்தார். ‘கோழி கூவுது’ படத்தில் விஜி அறிமுகமானாலும் ‘சாட்சி’ படம் மூலம் விஜி முன்னணி நடிகையானார்.

  அந்த குமுதம் இதழில் விஜியிடம் கேள்வி கேட்டு அனுப்பவேண்டும். நாங்கள் அப்போது புத்தகத்துக்குவாசகர் கடிதம் எழுதி பிரசுரமானால் அப்படி ஒரு மகிழ்ச்சி. மூன்று நண்பர்கள் புத்தகப்புழுக்களாய் இருந்தோம். விஜியிடம் நண்பன் கேட்ட கேள்வி பிரசுரித்து வந்துவிட்டது.

  “விஜி…கன்னம் தான் உங்கள் ஸ்பெஷாலிட்டி…அதற்கு என்ன செய்கிறீர்கள்?”
  “எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பேன். வேறு ஸ்பெஷலாக ஒன்றுமில்லை”

  இதை படித்தது முதல் விஜி மனதுக்கு நெருக்கமாகிவிட்டார். நம் நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறாரே. விஜியின் கேரியரில் விஜய்காந்தை பாராட்டியே ஆகவேண்டும். அவர் நான்கைந்து படங்களுக்கு விஜிக்கு சான்ஸ் தந்திருக்கிறார். தினந்தோறும் தீபாவளி என்கிற படம். எஸ்.வி.சேகருடன் அவர் நடித்தது. டிவிக்களில் மட்டும் நூறு முறைக்கு மேல் அப்போது ஒளிபரப்பட்டது. தங்கவேலு-சேகர் காமெடி..தமிழ் சினிமாவில் பேபிடால் அமைப்பு சிலருக்கு மட்டுமே…அதில் விஜி ஒருவரும் உண்டு….

  விஜியின் ஸ்பெஷாலிட்டி குழந்தைத்தனமான சிரிப்பும், உயரமும் தான்..கோழி கூவுது படத்தில் பிந்துகோஷூடன் அவர் அடிக்கும் லூட்டி. சாட்சி படத்தில் இவர் பாத்ரூமுக்கு ஓட்டை போட்டு விஜய்காந்த் கை விடுவதும் அங்கு வரும் விஜியின் அம்மா மாட்டிக்கொள்வதும்…விஜி அதைப்பார்த்து சிரிப்பதும்…பிரபு தேவாவின் முதல் ஹீரோயின் விஜி தான். லாலாக்கு லோல் டப்பிமா….இதற்கு பிறகே சின்னராசாவே வந்தது.

  ரஜினியுடன் மிஸ்டர்.பாரத் படத்தில் விஜி நடித்திருக்கிறார். ஆனாலும் சிறிய படங்களில் சிறிய ரோல்களிலேயே தொடர்ந்து நடித்து வந்ததால் சான்ஸ் குறைந்து போனது. சூரியன் (லாலாக்கு டோல்டப்பிமா), உழைப்பாளி, பூவே உனக்காக போன்ற படங்களில் நடனம் மட்டும் ஆடினார். முன்பே ராஜேந்தரின் உறவை காத்த கிளி படத்தில் ‘இந்த மல்லிகை மனச’ பாடலில் ஆடி இருக்கிறார்…

  இடுப்பில் வலி எடுக்க அப்போலோவுக்கு ட்ரீட்மெண்ட்டுக்கு போனவரை அங்கு நடந்த ஏதோ குழப்பத்தால் பாராலிஸிஸ் வந்து படுத்த படுக்கையானார். அப்போது அரசு தரப்பில் பேசி அவரது சிகிச்சைக்கு உதவி செய்ய எழுந்து நடக்க ஆரம்பித்தார்.

  மீண்டும் நடிக்க வந்த போது விஜய்காந்த் பட இயக்குனரும் அவரும் நெருக்கமானார்கள். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் இருந்தது…விஷயம் வெளியே வர டைரக்டரின் மனைவி லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டார். விஜியின் அப்பா பேச டைரக்டரை அழைக்க டைரக்டர் மனைவியோடு விஜியும் பேச ஹோட்டலில் கூடினர். அங்கு டைரக்டர் விஜியை தரக்குறைவாக வார்த்தைகள் விட விஜி எழுந்து வந்துவிட்டார்..

  அடுத்த நாள் கோவிலுக்கு போய்விட்டு வந்து தந்தையை பாங்கில் பணம் எடுக்க அனுப்பிவிட்டு டைரக்டரோடு பேசி இருக்கிறார். பேசிய அத்தனையும் ரெக்கார்ட் செய்து வைத்துவிட்டு தன் சாவுக்கு காரணம் அவர் தான் என எழுதிவிட்டு தூக்கில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். வார்த்தைகள்…லவ்வை கன்டினியூ பண்றேன். ஆனா திருமணம் செய்ய முடியாது…இந்த வார்த்தைகள் தைத்திருக்கலாம்….

  வீனி இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் இந்த விஷயம் விஜயகாந்துக்கு போக அவரோ அன்று வாஞ்சி நாதன் ஷூட்டிங் பிஸியால் இதை கவனிக்கவில்லையென அதிர்ந்து போய் சொன்னார். தன் சிம்மாசனம் படத்தில் விஜிக்கு ஒரு ரோல் கொடுத்து இருந்ததாக சொன்னார்.

  கைது செய்யப்பட்ட டைரக்டர் பின் கேஸ் நடந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் கெரியரும் போய் விட்டது. விஜியின் சொத்துக்களை விற்ற அவர் தந்தை திருவண்ணாமலையில் விஜியின் பெயரால் இலவச திருமணமண்டபம் கட்டுவதாக செய்தி வந்தது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s