ஜெயா – பிரபல தமிழ் நடிகை. இவரது பூர்வீகம் இலங்கை. முருகன் அடிமை,கிரஹப்பிரவேசம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், மிஸ்ரர் சம்பத், நல்ல பெண்மணி, மகளுக்காக, நவரத்தினம், பெத்த மனம் பித்து, தெய்வம் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குநர் வி.சி.குகநாதனின் மனைவியாவார்.
ஏவி.எம். சித்ரமாலா கம்பைன்ஸ் என்ற பேனரில், 1970-ம் ஆண்டு ‘சுடரும் சூறாவளி’யும் என்ற படத்தை வி.சி.குகநாதன் தயாரித்தார். படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தையும் குகநாதன் எழுதினார். பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணா கனகல் இந்தப் படத்தை டைரக்ட் செய்தார். படத்தில் ஜெமினிகணேசன், முத்துராமன் ஆகியோர் நடித்தனர்.எஸ்.ஐ.ஏ.டி. கல்லூரியில் ‘பி.யு.சி’ படித்து வந்த மாணவி ஜெயாவை, கதாநாயகியாக வி.சி.குகநாதன் அறிமுகப்படுத்தினார்.
ஜெயாவுக்கும், குகநாதனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இப்படத்திற்குப் பின் 1972-ஆம் ஆண்டு வெளிவந்த “ராணி யார் குழந்தை” படத்தில் ஒரு சிறு வேடத்தில் இவர் நடித்தார். அப்படத்தின் தலைப்பில் புதுமுகம் ஜெயா என இவரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.
படம் வளர வளர குகநாதனுக்கும், ஜெயாவுக்கும் இடையே காதலும் வளர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
படம் வெளிவந்த நேரத்தில், குகநாதன், ஜெயாவை திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து வாழ்க்கை துணைவியாக ஏற்றார்.
திருமணத்திற்குப் பிறகும் ஜெயா படங்களில் நடித்தார். `ராஜபார்ட் ரங்கதுரை’யில், சிவாஜியின் தங்கையாகவும், ‘பெத்தமனம் பித்து’ படத்தில் கதாநாயகியாகவும், ‘கனிமுத்துபாப்பா’, ‘தெய்வம்’, ‘திருவருள்’, ‘ஆறிலிருந்து 60 வரை’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘காசி யாத்திரை’, ‘தெய்வக் குழந்தைகள்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.
1973-ம் ஆண்டு, ‘நாம் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம்’ என்று குகநாதனிடம் சிவாஜி கூறினார். அதன்படி ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தை குகநாதன் தயாரித்தார். கதையையும் அவரே எழுதினார்.
நாடக நடிகராக இருக்கும் சிவாஜி, தனது தம்பியை பட்டணத்தில் படிக்க வைப்பார். ஆனால் சிவாஜியின் தம்பியோ, தான் ஒரு பணக்காரன் என்று பொய் சொல்லி, ஒரு பெண்ணை மணந்து கொள்வதுதான் கதை. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
”கனிமுத்து பாப்பா” 1972 படத்தில் ஜெயாவுடன் முத்துராமன்
ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் பி.ஜெயா
ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் எல்.ஐ.சி.நரசிம்மனுடன் பி.ஜெயா
ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் சக்கரவர்த்தி, எல்.ஐ.சி.நரசிம்மனுடன் பி.ஜெயா
ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் ரஜனிகாந்துடன் பி.ஜெயா
ஆறிலிருந்து அறுபது வரை [1979] படத்தில் சக்கரவர்த்தி, ரஜனிகாந்துடன் பி.ஜெயா
முருகன் அடிமை [1977] படத்தில் ஜெயா
வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1973-இல் வெளிவந்த ‘தெய்வக்குழந்தைகள்’ படத்தில் குமாரி பத்மினியுடன்
வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1973-இல் வெளிவந்த ‘தெய்வக்குழந்தைகள்’ படத்தில் முத்துராமனுடன் ஜெயா
“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் ஜெயா
“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் பேபி ராணியுடன் ஜெயா
“ராணி யார் குழந்தை” [1972] படத்தில் சசிகுமாருடன் ஜெயா
“அன்னை அபிராமி” 1972 படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் ஜெயா
“அன்னை அபிராமி” 1972 படத்தில் சிவகுமாருடன் ஜெயா
“அன்னை அபிராமி” 1972 படத்தில் எஸ்.என்.லட்சுமி, கே.ஆர்.விஜயாவுடன் ஜெயா
”ஒரு பெண்ணின்றே கதா” 1971 மலையாளப் படத்தில் கவியூர் பொன்னம்மாவுடன் ஜெயா
”ஒரு பெண்ணின்றே கதா” 1971 மலையாளப் படத்தில் ஷீலாவுடன் ஜெயா
Sathyan, Sheela with Jaya in ‘Thettru’ 1971 Malayalam Movie
”காசி யாத்திரை” 1973 படத்தில் ஸ்ரீகாந்துடன் ஜெயா
”காசி யாத்திரை” 1973 படத்தில் சோ, ஸ்ரீகாந்துடன் ஜெயா
”காசி யாத்திரை” 1973 படத்தில் லட்சுமி நாராயணன், மனோரமா, சோவுடன் ஜெயா
Sopurce:- http://cinema.maalaimalar.com/2013/12/20223707/gurunathan-cinema-history.html
A t-elle joué en 1977, dans NAVARATHINAM, d’A.P.Nagarajan, avec MGR…?
Did she play in 1977, in NAVARATHINAM directed by A.P.Nagarajan, with MGR ?
Sahadevanvijayakumar Sir, did she (“Jaya (Jaya Guganathan)”) play in 1977, in NAVARATHINAM directed by A.P.Nagarajan, with MGR ?
ஜெயா குகநாதன் எம்.ஜி.ஆருடன் ‘நவரத்தினம்’ படத்தில் நடித்திருக்கிறார். கேரளத்துப் பெண்மணியின் மகளாக இவர் நடித்திருப்பார் திரு. Ferdinand LACOUR.
திருமதி ஜெயா குகநாதன் அவர்கள் இதுவரை நடித்ததில் கடைசியாக வந்த படம் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ என்று நினைக்கிறன். அதற்கு பிறகு வேறு ஏதாவது திரைபடத்தில் நடித்தார்களா என்பதில் நினைவு இல்லை
Sahadevanvijayakumar Sir and Krish Sir, thanks both for your precious answers !
Naan theevira rasiganaaga irunthathu muthal muthal ivarukkuthaan. En 6aavathu vayathil, en ammaa ennai theatrukku ahaithukkondu poai naan paartha padam “Kanimuthu Pappa”. Intha padathil idam Petra “Rdahiyin Nenjame” endra paadal watching appadiyea en manathil ottikkondathu. Antha katchiyil idam Petra nadigai Jaya avargalin vatta mugamum antha paadalum intru varai en ninaivil thangi vittana. Ippothum intha paadalai engu kettaalum suseela ammavin kural inimaiyai thaandi Jaya avargalin mugam ninaivil nizhalaadum.
Dear Senthil,
On seeing your comments,I remember this nice song ‘காலம் நமக்கு தோழன்’ in the film “Petha Manam Pithu” released in the year 1973. Muthuraman and Jaya were the actors.
சின்ன வயதில் ரசித்த இனிய பாடல்களில் இது மிகவும் பிடித்த ஒன்று.
Thankyou, Sethuraman sir….. Intha paadal enakkum migavum piditha paadalay….Naanum en sisterum siru vayathil Mettupalayam KMS theatrela intha padathai kandu rasithoam……Thanks once again…..
இவரது நடிப்பில் வெளியான கனிமுத்துப் பாப்பா படத்தில் வரும் ராதையின் நெஞ்சமே பாடலும், திருவருள் படத்தில்
” மாலை வண்ண மாலை” என்ற பாடலும் எனக்கு பிடித்த மிகவும் பிரபலமான பாடல்களாகும்! நன்றி!
K.P. Bro, நடிகை ஜெயா குகநாதன் அவர்கள் பற்றி இந்த பக்கத்தில் நம்ம SVK Sir பதிவிட்டிருக்கிறார்…. படித்து பாருங்கள்….. எனக்கு விபரம் தெரிந்த பிறகு என் அபிமானத்திற்குரிய நடிகையாக முதல் முதல் திகழ்ந்தது இந்த ஜெயா அவர்கள்தான்.. . பிறகு ராஜநாகம் சுபா....பிறகுதான் படாபட் ஜெயலட்சுமி….ஆனால் என் மனதில் நிரந்தர அபிமானத்திற்குரிய நடிகையாக தங்கி விட்டவர் நம்ம ஜெயலட்சுமிதான்.. தற்போதைய டிரிபிள் ஜெயா அவர்களின் நிலைமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது…ஒருவேளை நம்ம SVK சாருக்கு எதுவும் தெரியுமோ என்னவோ….அது சரி உங்கள் மனதை பாதித்த குகநாதன் பற்றிய வதந்திகள் என்னவோ?
....
jaya (she looks half face cut of nirmala and mgr latha) – she died due to her health issues.
Dear Mr, Venkatesh,
I think the actress JAYA is still alive,peacefully living with her husband Mr.Guganathan.
Dear Sahadevan sir,…..Please confirm
VR Sir, ஜெயா அவர்கள் உயிருடன் இல்லை என்று தாங்கள் தெரிவித்துள்ளது சரியான உறுதியான தகவல்தானா….?
திருமதி.ஜெயா அவர்களைக் குறித்து எந்தத் தகவலுமே சமீபகாலமாக கண்ணில் படவில்லை திரு.சேதுராமன்.