T.R.Rajakumari

ரி.ஆர்.ராஜகுமாரி
“கனவுக்கன்னி” ரி.ஆர்.ராஜகுமாரி 5 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தார்.
தமிழ்நாட்டின் ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் பெருமை பெற்றவர், ரி.ஆர்.ராஜகுமாரி.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோரை அடுத்து மூன்றாவது சூப்பர் ஸ்டாராக உருவானவர் ரி.ஆர்.மகாலிங்கம். அவர் நடித்த ஸ்ரீவள்ளி, நாம் இருவர், ஞானசவுந்தரி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்று, அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தின.
எனவே, மகாலிங்கத்தையும், ரி.ஆர்.ராஜகுமாரியையும் ஜோடியாக நடிக்க வைத்து “இதய கீதம்” என்ற படத்தை ஜோசப் தளியத் தயாரித்தார். (மகாலிங்கத்தைவிட ரி.ஆர்.ராஜகுமாரி மூத்தவர்).
இந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமையவில்லை என்றாலும் ஓரளவு வெற்றிப்படமே. பிறகு கே.ஆர்.ராமசாமியுடன் “விஜயகுமாரி” (1950) என்ற படத்திலும், சின்னப்பாவுடன் “வனசுந்தரி” (1951) என்ற படத்திலும் ராஜகுமாரி நடித்தார்.
பாகவதர் விடுதலையாகி வெளிவந்தபின், நடித்த “அமர கவி” (1952) என்ற படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரி ஜோடியாக நடித்தார். விடுதலையான பிறகு பாகவதர் நடித்த ஐந்து படங்களில் ஓரளவு நன்றாக அமைந்தது இந்த படம் தான்.
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ரி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ரி.ஆர்.ராஜகுமாரி தான். இதை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார்.
இவரது தம்பி நீ, நான், மூன்றெழுத்து, குமரிப்பெண் போன்ற படங்களை இயக்கிய மாபெரும் இயக்குநர் ரி.ஆர்.ராமண்ணாவுடன் சேர்ந்து “ஆர்.ஆர். பிக்சர்ஸ்” என்ற படக் கம்பெனியை ரி.ஆர்.ராஜகுமாரி தொடங்கினார். இந்த கம்பெனியின் முதல் படம் “வாழப்பிறந்தவள்”. அதில் ரி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். ரி.ஆர்.ராமண்ணா டைரக்ட் செய்தார். படம் சுமார் ரகம்.
1954_ல் எம்.ஜி.ஆரையும், சிவாஜி கணேசனையும் ஒன்றாக நடிக்கச் செய்து, “கூண்டுக்கிளி” என்ற படத்தைத் தயாரித்தார். இதில் தனக்குப் பொருத்தமான வேடம் இல்லை என்ற காரணத்தால் பி.எஸ்.சரோஜாவையும், குசல குமாரியையும் நடிக்க வைத்தார். ரி.ஆர்.ராமண்ணா டைரக்ட் செய்தார்.
இரு மாபெரும் நடிகர்கள் நடித்த இப்படம் படுதோல்வி அடைந்தது. தோல்வியைக் கண்டுத் துவண்டு விடாது ரி.ஆர்.ராஜகுமாரி, அடுத்த படத்தை வெற்றிகரமாகத் தயாரிக்க, தனது தம்பியுடன் தீவிரமாக ஆலோசித்தார். “குலேபகாவலி” கதையை மசாலாப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர். எம்.ஜி.ஆர். கதாநாயகன். அவருக்கு மூன்று ஜோடிகள். அவர்களில் ஒருவராக ராஜகுமாரி நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது.
பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம்.ஜி.ஆர். என்ற நான்கு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ரி.ஆர்.ராஜகுமாரி, சிவாஜி கணேசனுடன் “தங்கப்பதுமை”யில் சேர்ந்து நடித்தார்.
ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர் என்ற பெருமை முதன் முதலாக ரி.ஆர்.ராஜகுமாரிக்குக் கிடைத்தது. பின்னர் இந்த பெருமையை பி.பானுமதி பெற்றார்.
1963_ல் “வானம்பாடி” படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். அதுவே அவருடைய கடைசி படம். அதன்பின் படங்களில் நடிக்கவில்லை. தியாகராயநகரில் உள்ள தன் வீட்டில் ரி.ஆர்.ராஜகுமாரி தன் வாழ்க்கையின் பின்பகுதியை அமைதியாகக் கழித்தார். எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை.

காலப்போக்கில், தன்னுடைய “ராஜகுமாரி” தியேட்டரை விலைக்கு விற்று விட்டார். இந்த திரையரங்கு மிகவும் கலைநயத்துடன் கட்டப்பட்டதாகும். ஆங்காங்கே சிலைகள் அழகுற காட்சியளித்தன. அது பலருடைய கை மாறி, பின்னர் இடிக்கப்பட்டு, இப்போது வணிக வளாகமாகக் காட்சி அளிக்கிறது.

 திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ராஜகுமாரி 20.9.1999_இல் தமது 77_வது வயதில் காலமானார்.
தங்கமலை ரகசியம் படத்தின் காட்சிகள்
ImageImageImageImageImageImageImageTR.Rajakumari-Thangamalai Ragasiyam-
எம்.என்.நம்பியாருடன் ரி.ஆர்.ராஜகுமாரி
TR.Rajakumari-MN.Nambiyar-Thangamalai Ragasiyam-
எம்.வி.ராஜம்மாவுடன்  ரி.ஆர்.ராஜகுமாரி
TR.Rajakumari-MV.Rajamma-Thangamalai Ragasiyam-
 பி.எஸ்.வீரப்பாவுடன் ரி.ஆர்.ராஜகுமாரி
TR.Rajakumari-PS.Veerappa-Thangamalai Ragasiyam-
 ரி.ஆர்.ராமச்சந்திரனுடன் ரி.ஆர்.ராஜகுமாரிTR.Rajakumari-TR.Ramachandran-Thangamalai Ragasiyam- TR.Rajkumari-Thangamalai Ragasiyam-
குலேபகாவலி [1955] படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரிTR.Rajakumari-Gulebakavali 1955-1TR.Rajakumari-Gulebakavali 1955-2
TR.Rajakumari as Manonmani-A.Sagunthala-Manonmani 1942-3
P.U.Chinnappa-TR.Rajakumari-Manonmani 1942-
‘சந்திரலேகா’ [1948] படத்தில் வீரசிம்மனாக எம்.கே.ராதாவுடன் சந்திரலேகாவாக ரி.ஆர்.ராஜகுமாரிTR.Rajakumari-MK.Radha-Chandralekha 1948-MK.Radha-TR.Rajakumari-Chandralekha 1948-MK.Radha-TR.Rajakumari-Chandralekha 1948-2
‘சந்திரலேகா’ [1948] படத்தில் தந்தையாக நடித்த பி.ஏ.சுப்பையாவுடன் ரி.ஆர்.ராஜகுமாரி
PA.Subbaiah Pillai-TRR-Chandralekha 1948-PA.Subbaiah Pillai-TRR-Chandralekha 1948-2
TA.Madhuram-S.Varalakshmi-TRR-Vanasundari 1951-1S.Varalakshmi-TRR-TA.Madhuram-Vanasundari 1951-
”இதயகீதம்” 1950 படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரி, ரி.ஆர்.மகாலிங்கத்துடன்
TR.Rajakumari-Ithaya Geetham 1950-02TR.Rajakumari-Ithaya Geetham 1950-TR.Rajakumari-TR.Mahalingam -Ithaya Geetham 1950-1TR.Rajakumari-TR.Mahalingam -Ithaya Geetham 1950-
”இதயகீதம்” 1950 படத்தில் கே.சாரங்கபாணி ரி.ஆர்.மகாலிங்கத்துடன் ரி.ஆர்.ராஜகுமாரி,
K.Sarangkapani-TR.Rajakumari-TR.Mahalingam -Ithaya Geetham 1950-1K.Sarangkapani-TR.Rajakumari-TR.Mahalingam -Ithaya Geetham 1950-60
”கிருஷ்ண பக்தி” 1948 படத்தில் ரி.ஆர். ராஜகுமாரியுடன் பி.யு.சின்னப்பா
TR.Rajakumari-Krishna Bakthi 1948-2TR.Rajakumari-Krishna Bakthi 1948-1TR.Rajakumari-Krishna Bakthi 1948-TR.Rajakumari-PU.Chinnappa-Krishna Bakthi 1948-PU.Chinnappa-TR.Rajakumari-Krishna Bakthi 1948-
”கிருஷ்ண பக்தி” 1948 படத்தில் ரி.ஆர். ராஜகுமாரியுடன் டி.பாலசுப்பிரமணியம்
D.Balasubramaniam-TR.Rajakumari-Krishna Bakthi 1948-
”கிருஷ்ண பக்தி” 1948 படத்தில் ரி.ஆர். ராஜகுமாரியுடன் சி.ரி.ராஜகாந்தம், சி.எஸ்.பாண்டியன்
CT.Rajakantham-TR.Rajakumari-Krishna Bakthi 1948-1CT.Rajakantham-TR.Rajakumari-Krishna Bakthi 1948-CS.Pandian-CT.Rajakantham-TR.Rajakumari-Krishna Bakthi 1948-69
நன்றி:- மாலை மலர்
logo
Advertisements

2 comments on “T.R.Rajakumari

  1. (குமுதம் லைஃப் தீபாவளி மலரில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.)

    எஸ்.பி.எல்.தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமண்யம் (பத்மா சுப்ரமண்யத்தின் அப்பா) அங்கே துரு,துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். Visibly Smart ! ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார்.

    இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய ஜோதிலட்சுமி, ஜெயமாலினி இருவரின் தாயார்.

    ராஜகுமாரியின் தாயாருக்கு தனலட்சுமி சகோதரி.

    தமிழ் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக்கன்னி டி.ஆர் ராஜகுமாரி. Vamp role என்றால் அதற்கு Role model ராஜகுமாரி தான். முதன் முதலான Item Dancer.

    ’மன்மதலீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்’

    என்று ’ஹரிதாஸ்’(1944) படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் இவரைப்பார்த்துத் தான்.

    ’சந்திரலேகா’ படத்தில் எம்.கே.ராதாவுடனும் ரஞ்சனுடனும்,

    ’குலேபகாவலி’(1955)யில் எம்.ஜி.ஆரின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் டி.ஆர்.ராஜகுமாரி.

    ”வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே!”

    இவரிடம் ஒரு விஷேச நளினம் இருந்தது. சல்லடை போட்டுத் தேடினாலும் அதை வேறு எந்த ஒரு நடிகையிடமும் காணவே முடியாது.

    அவர் பார்க்கும் ’பார்வை’ மிடுக்குடன் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. அதற்கு அந்த அற்புதமான கண்கள் தான் மூலதனம். வாள் விழி வீச்சு!

    (Give a big hand! Clap your hands together! தட்றா.. தட்றா..தட்றா….தட்றா!)

    வில்லியாக வரும்போது அந்தக்கண்களில் கொப்பளிக்கும் ’குயுக்தி’, கதாநாயகியாக வரும்போது அதே கண்களில் தெறிக்கும் ’குறும்பு’.

    ’குலேபகாவலி’யின் இயக்குனரான தன் தம்பி ராமண்ணாவின் ’பெரிய இடத்துப் பெண்’(1963)ணில் எம்.ஜி.ஆருக்கு அக்காவாக நடித்தவர். தன்னை கற்பழித்த எம்.ஆர்.ராதாவை நள்ளிரவில் கொல்ல வருவார். அந்த காட்சிகள் திகிலாக இருக்கும்.

    நடிகை ராஜகுமாரி தன் பெயரிலேயே கட்டிய தியேட்டர் தி. நகர் பாண்டி பஜாரில் அந்தக்காலத்தில் ஒரு லேண்ட் மார்க்.

    ராஜகுமாரி பஸ் ஸ்டாப்!

    சினிமா இயக்குனர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பதற்றமாக படபடப்பாக, கோபமும், ஆவேசமுமாக பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால் ராமண்ணா செட்டில் இருப்பதே தெரியாது. அவ்வளவு அமெரிக்கையானவர். சாந்த சொரூபி. இடி போன்ற பிரச்னைக்கும் கலங்கவே மாட்டார். அப்படிப்பட்டவரின் தமக்கை என்பதும் ராஜகுமாரிக்கு பெருமை சேர்க்கிற விஷயம் தான்.

    தன் தம்பி ராமண்ணாவின் மூன்று மனைவிகளையும் அரவணைத்து, குடும்பத்தில் சிக்கல் இல்லாத நிம்மதி நிலவ, நேர்த்தியான திறமையுடன் செயல் பட்டவர்.

    சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை அவர் ஒரு புண்ணியவதி.

    தன் குடும்பத்திற்காக, தம்பிகளுக்காக அவர் தன்னை தியாகம் செய்த மெழுகுவர்த்தி. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். கடைசிக் காலத்தில் முழுக்க ஆன்மீக ஈடுபாட்டில் இருந்தவர். Sage-ing while age-ing.

    மரம் முத்துனா வைரம்! மனுஷப்பிறவி முத்துனா புத்தி! ஞானம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s