ஷீலா– மலையாளப் படவுலகின் பிரபல நடிகை. 1945-இல் கனிமங்கலம் அந்தோணி மற்றும் கிரேஸி தம்பதியருக்கு மகளாக பிறந்தவர். இவர் தமிழிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் 475-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சூப்பர் ஸ்ராராக விளங்கிய ரவிச்சந்திரன் அவர்களைக் காதலித்து மணந்து அவர் மூலம் விஷ்ணு என்ற மகன் உள்ளார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
மறைந்த எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு கொண்டு வரப்பட்டவர் ஷீலா. அவர் நடித்த பாசம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் ஷீலா. அப்போது அவருக்கு வயது 19 தான். அதன் பின்னர் அவர் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிரேம் நசீருடன் இணைந்து 107 படங்களில் ஜோடியாக நடித்து உலக சாதனை படைத்தவர். இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை. இவர் நடித்த செம்மீன் படம் மிகவும் புகழ் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு இவர் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்படலானார். தமிழில் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். மலையாள ரசிகர்களை ஒரு காலத்தில் தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கவர்ந்த ஷீலாவுக்கு தற்போது வயது 70 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ஃபோடனம் என்ற மலையாளத்திரைப்படத்துடன் 1980-களில் மையாளத் திரையுலகிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தவர் 2003-இல் மனசினக்கரே என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்து தற்போதும் நடித்து வருகிறார்.இவரது மகன் விஷ்ணு என்ற ஜார்ஜ் திரைப்படங்களிலும் தமிழ், மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
Sheela is an Indian film actress best known for her work in Malayalam cinema. She, along with Prem Nazir, holds the world record for acting in the largest number of films (107) together as heroine and hero. In 2005 she won the National Film Award for Best Supporting Actress for her role in the Malayalam film Akale.
Sheela was born in a Syrian Christian family to Railway officer Kanimangalam Antony and Gracy in 1945 at Thrissur, Kerala. Sheela married twice. Firstly she married Tamil actor Ravichandranand have a son George(Vishnu). Later she divorced him and married movie producer Xavier.
Sheela made her debut in Paasam. Her first film in Malayalam was Bhagyajathakom. The next two decades saw her essay roles in more than 475 films totally in various languages such as Tamil, Telugu and Kannada and Malayalam. Films included Chemmeen, Kallichellamma, Velutha Kathreena and Vazhve Mayam. She has won awards such as Kerala State Film Awards, the Lux award and the Filmfare Lifetime Achievement award. In Kannapanunni she plays the role of a powerful yet humane princess forced to marry a poor woodcutter. In another movie, Kadathanattu Makkam, she plays the role of a princess who is cheated by her sisters in law and false allegations of being in love with a boatman are leveled against her. She and the boatman are both charged with the death sentence. She and Prem Nazir hold the Guinness Book of World Records for acting together consecutively in 107 films. In the 70s and 80s, she directed two films, Yakshaganomand Shikarangal. She wrote the story, script, and screenplay for Shikharangaland Yakshagaanam, which was also remade in Tamil. Besides films, she has directed a tele-film Ninaivukale neengividu in which Jayabharathi acted. She in films including Vishnu Vijayam and Eeta as heroine. She acted as Akhilandeswary in the 2005 Chandramukhi. She has also authored a book, titledKuilinte Kooduand many short stories. She is a painter.
Sheela returned to acting, playing main role in Sathyan Anthikkad‘s Manassinakkare. Sheela received the Kerala State Film Award for best supporting actress in the film Akale.
‘Cinema Express Magazine’ – 18.4.2013
Source:-Wikipedia and oneindia.in
காவிய மேளா படத்தில் G.K.பிள்ளையுடன் ஷீலா
மஞ்சள் குங்குமம் படத்தில் ரவிச்சந்திரனுடன் ஷீலா
Film: Kallichellamma [1969]
பலே மாஸ்ராரு [1969] தெலுங்குப் படத்தில் ஷீலா
பலே மாஸ்ராரு [1969] தெலுங்குப் படத்தில் அஞ்சலி தேவி, காஞ்சனாவுடன் ஷீலா
பலே மாஸ்ராரு [1969] தெலுங்குப் படத்தில் காஞ்சனா, ராஜாபாபுவுடன் ஷீலா
வாழ்வே மாயம் [1970] படத்தில் ஷீலாவுடன் பிலோமினா
வாழ்வே மாயம் [1970] படத்தில் ஷீலாவுடன் கே.பி.ஏ.சி.லளிதா
வாழ்வே மாயம் [1970] படத்தில் ஷீலாவுடன் சத்யன்
அர நாழிக நேரம் [1970] படத்தில் ஷீலா தனித்தும் பிரேம் நசீர் மற்றும் பிலோமினாவுடனும்
கைரளி ரி.வி. ஜே.பி.ஜங்ஷன் இன்ரெர்வியூவில் ஷீலா [2014]
கைரளி ரி.வி. ஜே.பி.ஜங்ஷன் இன்ரெர்வியூவில் ஷீலா [ஜனவரி-2014]
சரஸய்யா [1971] படத்தில் ஜெயபாரதியுடன் ஷீலா
சரஸய்யா [1971] படத்தில் மதுவுடன் ஷீலா
சரஸய்யா [1971] படத்தில் ஷீலா மற்றும் சத்யன்
சரஸய்யா [1971] படத்தில் ஷீலா மற்றும் கே.பி.ஏ.சி.லலிதா, சத்யன்
’விருந்நுகாரி’ [1969] படத்தில் ராதா என்ற கதாபாத்திரத்தில் ஷீலா
’விருந்நுகாரி’ [1969] படத்தில் எம்.எஸ்.நம்பூதிரியுடன் ஷீலா
’விருந்நுகாரி’ [1969] படத்தில் ஷீலாவுடன் அம்பிகா
’விருந்நுகாரி’ [1969] படத்தில் ஷீலாவுடன் உம்மர்
“செம்மீன்” [1965] படத்தில் ’கருத்தம்மாவாக’ ஷீலா
“செம்மீன்” [1965] படத்தில் ஷீலாவுடன் அடூர் பங்கஜம்
“செம்மீன்” [1965] படத்தில் சத்யனுடன் ஷீலா
“செம்மீன்” [1965] படத்தில் பிலோமினாவுடன் ஷீலா
”மூடல் மஞ்ஞு” [1970] படத்தில் பிரேம்நசீருடன் ஷீலா
”மூடல் மஞ்ஞு” [1970] படத்தில் வின்செண்டுடன் ஷீலா
”மூடல் மஞ்ஞு” [1970] படத்தில் ரி.ஆர்.ஓமனாவுடன் ஷீலா
”மூடல் மஞ்ஞு” [1970] படத்தில் ஜி.கே.பிள்ளையுடன் ஷீலா
”ஜீவித யாத்ரா”[1965] படத்தில் ஷீலா
”ஜீவித யாத்ரா”[1965] படத்தில் பிரேம்நசீருடன் ஷீலா
”ஜீவித யாத்ரா”[1965] படத்தில் பகதூர், எஸ்.பி.பிள்ளையுடன் ஷீலா
“அக்னி ம்ருகம்” [1971] படத்தில் ஷீலா
“அக்னி ம்ருகம்” [1971] படத்தில் ரவிச்சந்திரனுடன் ஷீலா
“அக்னி ம்ருகம்” [1971] படத்தில் சத்தியனுடன் ஷீலா
“விவாஹ சன்மானம்” 1971 படத்தில் ஷீலா
“விவாஹ சன்மானம்” 1971 படத்தில் பிரேம் நசீருடன் ஷீலா
“குட்டி குப்பாயம்” 1964 படத்தில் ஷீலா
குட்டிக்குப்பாயம் 1964 படத்தில் கோழிக்கோடு சாந்தா தேவியுடன் ஷீலா
குட்டிக்குப்பாயம் 1964 படத்தில் பிலோமினாளுடன் ஷீலா
“ஸ்தானார்த்தி சாராம்மா” 1966 படத்தில் பிரேம் நசீருடன் மீனா
“ஸ்தானார்த்தி சாராம்மா” 1966 படத்தில் ஷீலாவுடன் மீனா
“ஓராள்கூடி கள்ளனாயி” 1964 படத்தில் பிரேம் நசீருடன் ஷீலா
Sheela with Prem Nazir in Cochin Express [Tamil:-Neelagiri Express] 1967 Malayalam Movie
KPAC.Lalitha with Sheela in Jayikkanai Janichavan 1978-Malayalam Movie
Manavalan Joseph with Sheela in Jayikkanai Janichavan 1978-Malayalam Movie
Prem Nazir with Sheela in Jayikkanai Janichavan 1978-Malayalam Movie
Adoor Bhasi with Sheela in Jayikkanai Janichavan 1978-Malayalam Movie
Philomina, Sheela,KPAC.Lalitha with Mallika Sukumaran in Jayikkanai Janichavan 1978-Malayalam Movie112
Pingback: വൃത്തി രാക്ഷസനും മാഷും പിന്നെ എന്റെ സുന്ദരിയും….!!! | divyarajdivakaran2013
Ravichandran-sheela’s son’s name was Murali Raj Sathish. Later he was renamed as Vishnu which was again after separation fromRavi, it was changed as George. Combining the names of Murali, Ravi and Sheela (Murali Raj Sathis), Ravi started a production company in the name of M.R.S. Productions and the company produced a picture namely., “Kathalikka 90 Nal”. But the movie was not released due the separation of Sheela from Ravi.
R.P.ராஜநாயஹம்
என் பெரியப்பா மகன் எனக்கு ஒரு தடவை சர்ப்ரைஸ் கொடுப்பதாக நினைத்து திருச்சி யானைக்கட்டி மைதானத்தில் ஒரு வீட்டுக்கு கூட்டிபோய் “ பாலாஜி!” என்று குரல் கொடுத்தான். ஒரு அம்மாள் வெளியே வந்து அன்போடு ‘பாலாஜி இல்லயேப்பா. உள்ள வா’ என்றார். ‘இருக்கட்டும்மா.அப்புறம் வர்றேன்’ என்று அவன் சொல்லி விட்டு நாங்கள் திரும்பும்போது தான் சொன்னான். ‘இந்தம்மா நடிகர் ரவிச்சந்திரன் மனைவி விமலா. ரவிச்சந்திரன் மூத்த மகன் பாலாஜி கேம்பியன் ஸ்கூலில் என்னோடு படித்தான்.’
நேற்று ஒரு சானலில் ‘இதயக்கமலம்’ ஒரு பட பாடல்கள். ஆஹா.. பி.பி.எஸ் “ தோள் கண்டேன்,தோளே கண்டேன்,” “ நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன், போ,போ,போ”, சுசிலாவின் “மலர்கள் நனைந்தன பனியாலே”,“உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல”., கே.ஆர்.விஜயா அந்தக்காலத்தில் தான் நடித்துப்பிடித்த படமாக இதயக்கமலத்தை தான் பேட்டிகளில் குறிப்பிடுவார். சுசிலாவுக்கு பிடித்த பாடல் “உன்னைக் காணாத கண்ணும் கண் அல்ல.”
இதயக்கமலம் ஒரு படப்பாடல்களில் கடைசியாக “ என்ன தான் ரகசியமோ இதயத்திலே, நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே” உற்சாகமாக ஷீலா ஆடிப்பாடும்போது ஒட்டாமல் ரவிச்சந்திரன் ‘உர்’ என்று அவரை முகம் சுண்டிப் பார்ப்பார். கே.ஆர் விஜயா தான் வேண்டும்.சரணங்களில் ‘ மலர் பஞ்சனை மேலே உடல் பள்ளி கொள்ளாது’ ‘ முதல் இரவு வந்தது. இன்ப உறவு வந்தது. நீ அருகில் வந்ததும், நான் உருகி நின்றதும்’ – கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும்போது முகம் மலர்ந்து விடும்.
கௌரி கல்யாணத்தில் கூட ரவிச்சந்திரனுக்கு ஷீலா ஜோடி கிடையாது.ஜெயலலிதா தான் ஜோடி.
நான் அனேகமாக பல பழைய படங்களை நூற்றுக்கணக்கில் மதுரை தத்தனேரி மாருதி, விளாங்குடி ரத்னாவில் தரை டிக்கட்டில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். அப்படி ‘மூன்றெழுத்து’ ஜெயலலிதா,ரவிச்சந்திரன் நடித்த படம் பார்த்த போது அந்த பட த்தில் வரும் ஷீலா ஒரு காட்சியில் ரவிச்சந்திரனைப்பார்த்து “அண்ணா” என்று சொல்லும்போது தரை டிக்கட் ரசிகர்கள்
“ என்னம்மா! அத்தான பாத்து அண்ணங்கிறே!” என்று கத்தினார்கள்.
Passage of time! இந்தப்படங்களில் நடித்த காலங்களில் ரவிச்சந்திரனுக்கு இரண்டாவது மனைவியாக ஷீலா ஆகியிருக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன் ஒரு டி.வி. ரியாலிட்டி ஷோவில் டி.வி நடிகர் ஒருவர் தன் தகப்பனாரைப்பற்றி பேசி தேம்பி அழுத போது அவரைத் தேற்றும் ஜார்ஜும் (நடிகை ஷீலா மகன்) அழுததைப்பார்க்க நேர்ந்தது. தன் தாயையும் தன்னையும் எப்போதோ பிரிந்து விட்ட தகப்பன் ரவிச்சந்திரனை நினைத்துத் தான் அழுதிருக்கவேண்டும்.
………..
R.P.ராஜநாயஹம்